எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ள நாவல் உப பாண்டவம். இது மகாபாரத கதையல்ல , எனினும் மகாபாரதக் கதையில் வரும் பெரிதும் அறியப்படாத நபர்கள் , சம்பவங்கள் பற்றி 18 தலைப்புகளில் எழுதப்பட்டவை. இதை படிப்பதற்கு முன்பு சிறிதளவேணும் , மகாபாரதம் பற்றி தெரிந்திருத்தல் அவசியம்.
பீடிகை :
கதையாசிரியர் துரியோதனன் படுகளம் காணக் காஞ்சிபுரம் செல்கிறார். துரியோதனன் படுகளம் என்பது வட மாவட்டங்களில் நடக்கும் ஒரு வைபவம் , இதில் பீமன் துரியோதனனை கொல்லும் காட்சி இடம்பெறும் , இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் , அந்த மண்ணை எடுத்து விளை நிலங்களில் தூவுவர்.
செல்லும் வழியில் ஒரு குடுகுடுப்பைக்காரனை சந்திக்கிறார், அவன் யாரும் இல்லா நீர்நிலையில் அஸ்வத்தாமா இருப்பதாக கூறிச் செல்கின்றான்.
பின் பயணி ஒரு நதியை கடந்து , அஸ்தினாபுரம் செல்கிறார் , அங்கு மகாபாரதக் கதையை விளக்கும் இரு சூதர்களைச் சந்திக்கிறார் , அதில் ஒருவர் பார்வையற்றவர் , மற்றவர் செவித்திறனற்றவர்.
1. சூல்
சூல் என்றால் கர்பம் தரித்தல் , இதில் மகாபாரத கதையில் வரும் பல்வேறு சூல் கதைகள் இடம்பெற்றுள்ளன.
மகர சூல்
சூதர்கள் மச்சகந்தி என்னும் சத்யவதி பிறந்த கதையை கூறுகின்றனர். வகவன் என்னும் அரசன் நீரில் குளிக்கும்போது , மீன் ஒன்று கர்பம் தரித்து அதில் பிறந்தவள் மச்சகந்தி. பின்னாளில் பராசகர் என்னும் முனிவர் அவரை சத்யவதியாக மாற்றுகிறார்.
பராசகர் மற்றும் சத்யாவதிக்கு பிறந்தவர் வியாசர் .சாந்தனு மற்றும் சத்யாவதிக்கு பிறந்தவர்கள் சித்ரகந்தன் , விசித்திரவிரியன் .
ஜாலவதி
கௌத்தமரின் மகன் சரத்வான் , இவர் தவம் புரியும்போது , தவத்தை கலைக்க , இந்திரன் ஜாலவதியை அனுப்பிகிறான். தவம் களைந்து , வீரியம் வெளிப்பட்டு , அதனால் நாணல் ஒன்று கர்பம் தரித்து , அதன் மூலம் பிறந்தவர்கள் கிருபன் ,கிருபை . சாந்தனு அவர்களை அரண்மனையில் வளர்க்கிறன் , பின்னாளில் சரத்வான் அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கிறார் , பின்பு கிருபை துரோணரை மணக்கிறாள். அவர்களுக்கு பிறந்தவன் அஸ்வத்தாமன்.
துரோணர்
இவர் துரோணம் என்னும் மரக்கலத்தில் ரிஷியின் வீரியம் செலுத்தப்பட்டு வளர்ந்தவர்.
நியோக சூல்
சத்யாவதி தன் இரு பிள்ளைகளும் நலிவுற்று இருப்பதால் தன் முதல் மகனான வியாசரை அழைக்கிறாள்.
வியாசர் , அம்பா , அம்பாலிகா மற்றும் பணிப்பெண் இவர்களுக்கு முறையே பிறந்தவர்கள் பாண்டு , திருதிராஷ்ட்ரன் மற்றும் விதுரன். உறவின் பொது அம்பாலிகா கண் மூடியதால் திருதிராஷ்ட்ரன் அந்தகனாகிறான்.
சிகண்டி
முற்பிறவி அம்பிகா சிகண்டியாக துருபத தேசத்தில் பிறக்கிறாள். ஆண் , பெண் இரு உடலாளர்.
கர்ணன்
குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் .
பஞ்ச பாண்டவர்கள்
பாண்டு சொன்னமந்திரத்தை குந்தி , மாத்ரி இருவரும் சொல்வதன் மூலம் பிறந்தவர்கள்
கௌரவர்கள்
காந்தாரி கஜக்கர்பம் தரித்து நூறு கலசங்களில் வளர்ந்தவர்கள்.
2. பால்ய விருட்சம்
இது மகாபாரத கதை மாந்தர்களின் குழந்தை பருவத்தை சொல்வது.
பீஷ்மன்
தனக்கு முன்பிறந்த ஏழு குழந்தைகளும் இறந்துவிட தனிமையில் வளர்கிறான் பீஷ்மன் .
திருதராஷ்டிரன் :
யாரும் துணையின்றி தனிமையில் பால்யத்தை கழிக்கிறான் ஓசைகளின் துணையோடு.
பாண்டவர்கள் துரோணரின் ஆஸ்ரமத்தில் வில்வித்தை கற்றுக்கொள்கின்றனர். அப்போது துரோணர் அனைவரையும் தண்ணீர் எடுத்து வரச்சொல்கிறார். அஸ்வத்தாமனுக்கு தனிமையில் மந்திரம் கற்று தர வாயகன்ற பாத்திரத்தை தருகிறார் , எனினும் அர்ஜுனனும் உடன் வந்து கற்கிறான்.
யுயுத்சு
திருதிராஷ்டிரனுக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்தவன் , 102வது கௌரவர்.
கடோத்கஜன்
பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவன் , இடும்பி பீமனை காண அஸ்தினாபுரம் வருகிறாள் எனினும் குந்தி ,இடும்பி பீமனை சந்திக்க மறுத்து விடுகிறாள்.
3. உதிரவாசிகள்
இதில் பிள்ளைகள் தன் தாய் , தந்தைகளின் ஆசைக்கும் , உறவுக்கும் உதவி செய்வது பற்றி வருகின்றது.
யயாதி
இவன் அஸ்தினாபுரத்து பண்டைக்கால அரசன் , இவன் மனைவிகள் தேவயானி மற்றும் சர்மிஷ்டை .
தேவயானி யயாதி இவர்களுக்கு பிறந்தவர்கள் யது , இவன் வழிவந்தவர்கள் யது வம்சத்தினர் மற்றும் துர்வசு ,இவன் வழி வந்தவர்கள் துர்வம்சத்தினர் .
சர்மிஷ்டை மற்றும் யயாதிக்கு பிறந்தவர்கள் புரு , துருயு மற்றும் அனு .
புரு : இவன் தன் தந்தை யயாதிக்காக தன் இளமையை விட்டுவிட்டு முதுமை அடைகிறான்.
யுதிஷ்டிரன்
பாண்டு யாருடன் உறவு கொண்டாலும் உடல் வெளிரி இறந்து விடுவான் , இருந்தும் யுதிஷ்டிரன் பாண்டு , மாத்ரி இணைவதை பொறுத்து கொள்கிறான் , இதில் பாண்டு இறந்து மாத்ரி உடன்கட்டை எரிகிறாள்.
பரத்வாஜர்
பிரகஸ்பதி தன் அண்ணன் மனைவி மம்தாவுடன் கள்ள உறவில் இருக்கிறான் , அப்போது அவள் வயிற்றில் வளரும் சிசு அதனை அறிந்து கொள்கின்றது , அசரீரி மூலமாக தடுக்கும்போது , பிரகஸ்பதி சாபம் விடுகிறான் , இதனால் அந்த குழந்தை உடம்பில் காயங்களுடன் பிறக்கின்றது , அதுவே பரத்வாஜர் , இவரே துரோணர் பிறக்கக் காரணமாயிருப்பவர்.
4. நகரங்களின் உரையாடல்
இதில் மகாபாரத கதையில் வரும் நகரங்களை பற்றியது.
அஸ்தினாபுரம் : பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் தலைநகரம் , மீரட் அருகில் உள்ளது.
இந்திரப்பிரஸ்தம் : காண்டவவனம் என்னும் ஊரை இந்திரப்ரஸ்தமாக மாற்றி பாண்டவர்கள் ஆண்டனர்.
விராடதேசம் : இங்கே தான் பாண்டவர்கள் தங்களின் 13-ஆம் ஆண்டின் வனவாசத்தை கழித்தனர்.
பாஞ்சாலம் : பாஞ்சாலி என்னும் திரௌபதியின் நாடு
துவாரகை : கிருஷ்ணனின் நாடு.
5 . இரு உடலாளர்கள்
பிறப்பின் காரணத்திலும் , சூழ்நிலையின் காரணமாகவும் இரு உடலளர்களாக வாழ்பவர்களை பற்றியது.
சிகண்டி : பிறப்பில் பெண் பிறகு ஆணாக மாறி பீஷ்மரை கொள்கிறாள். பாஞ்சால நாட்டு மன்னனின் மகன் , பாஞ்சாலியின் சகோதரன்.
பஞ்ச பாண்டவர்கள் விராட தேசத்தில் கடைசி ஆண்டு உருமாறி வாழ்கின்றனர், இதில்
யுதிஷ்டிரன் : பகடை உருட்டுபவன்
பீமன் : மடப்பள்ளி பாரிசாரகர்
நகுலன் , சகாதேவன் : பசு , குதிரை மேய்ப்பவர்கள்.
பாஞ்சாலி : ஒப்பனை செய்பவள்.
அர்ச்சுனன்: பிருக்கன்னளை என்னும் பெண்ணாக மாறி , உத்ரா என்னும் இளவரசியுடன் பணி புரிகிறான்.
துரியோதனன் : காந்தாரியின் கண்களில் தேக்கி வைத்த சக்தி பட்டு மேல் உடல் வலிமையாகவும் , கீழ் உடல் மென்மையாகவும் மாறுகிறான்.
6. மாயசபை
பாண்டவர்கள் காந்தர்வவனம் என்னும் காட்டை அழித்து இந்திரப்பிரஸ்த்தை உருவாக்குகிறார்கள். அந்த காடு அழிக்கப்பட்டபோது பல உயிர்கள் இறக்கின்றன.அதில் தப்பித்த மயன் பாண்டவர்களை பழிவாங்க மாய மண்டபம் ஒன்றை கட்டி தருகின்றான் . அந்த மண்டபம் பார்ப்பவரை அவமானம் கொள்ளச் செய்யும் . அதில் துரியோதனனும் வீழ்கிறான்.
7. விடுபட்ட குரல்கள்
ஒரு குயவன் குந்தி காமம் தன் பிள்ளைகளை பிரித்து விடக்கூடாது என தெரிந்தே தான் பாஞ்சாலியை பகிர்ந்துகொள்ளுங்கள் என குறியாதாக கூறுகின்றான்.
பாண்டவர்கள் ஒரு வனத்தில் தங்குகிறார்கள் , அப்போது அவர்கள் இருந்த மாளிகைக்கு துரியோதனன் தீ வைக்கிறான் , பாண்டவர்கள் அதில் தப்பித்து அவர்களை போலவே ஐந்து பிள்ளைகள் கொண்ட வேடுவ பெண் இறந்து போகிறாள்.
ஏகலைவன் ஒரு நாய் குரைப்பதை நிறுத்த அம்பு எய்துகிறான் , அதனால் வனவாசி ஒருவன் அவனுக்கு சாபம் அளிக்கிறான் , பின்னர்தான் ஏகலைவன் தன் கட்டைவிரலை இழக்கிறான்.
பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்த்தை காக்க , அருகிலுள்ள வனத்தை எரிகின்றனர் , அதில் நாகர்கள் அழிந்து போகின்றனர்.
8. கதா ஸ்த்ரீகள்
இது மகாபாரதத்தில் உள்ள பெண்களை பற்றியது
சத்யாவதி : மச்சகந்தியாக பிறந்தவள் , பீஷ்மர் தான் இவளை முதலில் விரும்பினார் , பின் தந்தைக்காக அதை வெளிப்படுத்தவில்லை.மாத்ரி மதுர நாட்டை சேர்ந்தவள் , பாண்டுவுடன் உடன்கட்டை ஏரியவள் , பிள்ளைகள் , நகுலன் , சகாதேவன் .
காந்தாரி : தருதராஷ்டிரனின் மனைவி , போரில் கௌரவர்கள் இறந்துவிட இருவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
பாஞ்சாலி : ஐவருக்கும் மனைவி ஆகிகிறாள் , இவள்தான் அஸ்வத்தாமாவை சாவாநிலைக்கு தள்ளினாள்.
துச்சலை : கௌரவர்களின் சகோதரி , குரு வம்சத்தின் ஒரே பெண் வாரிசு.
பானுமதி : துரியோதனின் மனைவி , இவளின் மகன் லட்சுமணன்
சகுனி : காந்தாரியின் சகோதரன் , அந்தகர்களான தன் மாப்பிளை , சகோதரிக்காக அஸ்தினாபுரத்தில் தங்குகிறான் .
சஞ்சயன் : திருதிராஸ்ட்ரானுக்கு மகாபாரத போரை சொன்னவன்.
சாம்பன் : கிருஷ்ணனின் மகன் , சாபத்தால் தொழுநோய் பெற்றான்.
விகர்ணன் : கௌரவர்களிள் ஒருவன் சத்ரிய கலையில் நாட்டமில்லாமல் அறிவு செயல்களில் ஈடுபாடு கொண்டவன்.
ஜரா : கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் , இறுதியில் இவன்தான் பாதத்தில் அம்பெய்தி கிருஷ்ணனை கொள்கின்றான்.
9. உபபாண்டவர்கள் தேடி
பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கு பிறந்தவர்கள் உப பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர்.
யுதிஷ்டிரன் : பிரதிவிந்தன்
பீமன் : சுதசோமன்
அர்ச்சுனன் : சுருத கீர்த்தி
நகுலன் : ஸ்தானிகன்
சகாதேவன் : சுருத சர்மா
இவர்கள் பாண்டவர்கள் சாயலில்லாமல் திரௌபதியின் சாயலில் இருந்தனர். வில்வித்தை மட்டும் அறிந்தவர்கள் , போர் முடிந்த பிறகு , இவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது , இவர்களை அஸ்வத்தாமா கொள்கிறான். அஸ்வத்தாமாவை கொன்றால் பிரம்மகத்தி தோஷம் வருமென அவனை சாகாமல் இருக்க செய்கின்றனர் பாண்டவர்கள்.
அர்ச்சுனன் சுபத்திரா இருவருக்கும் பிறந்தவன் அபிமன்யு , அபிமன்யுவின் மகன் பரிக்ஷத்
10. வெண்பசு வேண்டியவன்
அஸ்தினாபுரத்துக்கு நூறு பசுக்கள் வேண்டி ஒருவன் வருகின்றான் , அவன் அதை யுதிஷ்டிரனிடமும் , துரியோதனனிடமும் சூதில் வெல்கிறான் , எனினும் சகுனியிடம் தோற்று அனைத்தையும் இழக்கிறான்.
சூதின் மூலம் பாண்டவர்களை அழிக்கலாம் என்ற யோசனை இதன் மூலம் தோன்ற , அவனுக்கு அதை பரிசாக அளிக்கிறான் சகுனி . இதுவே பாண்டவர்களுக்கும் , கௌரவர்களுக்கும் சூதாட்டம் தொடங்க காரணமாக அமைந்தது.
11. யுத்த துவக்கம்
இதில் மகாபாரத யுத்த துவக்கம் அதற்கான ஏற்பாடுகள் , படை தளபதிகள் நியமித்தல் பற்றி வருகின்றது.
விதுரன் போர் செய்ய மறுத்து விடுகின்றான் , பீஷமர், துரோணர் , அஸ்வத்தாமா ஆகியோர் கௌரவர்களின் பக்கம் போர் செய்கின்றனர்.
12. யுத்த பட்சிகள்
யுத்த காட்சிகள், யுத்த நிகழ்வுகள் , அதற்கான தயாரிப்புகள் பற்றி.
13. சரதல்பம்
சரதல்பம் என்பது அம்புப்படுக்கை , சிகண்டியின் அம்பு பட்டு பீஷ்மர் அதில் விழுகிறார் . பீஷ்மர் தான் நினைத்த நேரத்தில் உயிரை விட முடியும் என்பதால் , பலருடன் கேள்வியாடல்கள் இருகின்றன.
14. நீருக்குள் ஒளிந்தவன்
நீருக்குள் ஒளிந்தவன் துரியோதனன் , இரு வேடுவர்கள் அவனை பாண்டவர்களிடம் காட்டி கொடுக்கின்றனர். பின் பீமன் அவனை கொல்கின்றான்.
15. வெறுமையின் சித்திரம்
அனைத்தையும் இழந்த திருதிராஷ்டனும் , காந்தாரியும் நினைவுகளின் வழி நாட்களை கடத்துகின்றனர். முதுமையும் , புத்ரசோகமும் அவர்களை வாட்டுகிறது.
16. சப்திக்கும் நீருற்று
யுதிஷ்டிரனிடம் சார்வாகன் என்னும் பண்டிதன் தர்க்க ரீதியாக கேள்வி கேட்கிறான். அவனை ஊர் மக்கள் கொன்றுவிடுகின்றனர் , அவன் நினைவாக ஒரு நீரூற்றை அமைக்கிறான் யுதிஷ்டிரன்.
17. முதுபர்வம்
திருதிராஷ்ட்ரனும் , காந்தாரியும் வனத்தில் சென்று சிறுது காலம் வாழ்ந்து பின் கானக தீயில் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
18. நினைவில் வாழ்பவர்கள்
விதுரன் திகம்பரனாக மாறி காட்டில் அலைகிறான். திருதிராஷ்டனை பார்க்க அவன் தந்தை வியாசர் வருகின்றார். யுதிஷ்டிரன் அஸ்வமேத யாகம் நடத்துகிறான் , இதில் அஸ்வமேதயாகம் பற்றி குறிப்புகள் உள்ளன , பெரிதும் ஆபாசமாக உள்ளதால் விளக்கி எழுதவில்லை.
கிருஷ்ணன் துர்வாச முனிவரிடம் சாபம் பெறுகின்றான். உடலில் பாயாசத்துடன் ஊரை சுற்றி வரவேண்டுமென்று , அப்போது அவன் பாதத்தில் அது சரியாக படாததால் , கிருஷ்ணனை பாதத்தில் மட்டுமே கொல்ல முடியும் என்றாகிறது , பின்னர் ஜரா கிருஷ்ணனை அம்பெய்யதி கொல்கிறான்.
பாண்டவர்கள் அனைத்தையும் துறந்து பனிமலைக்கு செல்கின்றனர் , உடன் ஒரு நாய் மட்டும் செல்கின்றது. அனைவரும் வழியில் விழுந்து விட இறுதியில் யுதிஷ்டிரனை பனி கொள்கின்றது.
நிறைவு!