திராவிட இயக்க வரலாறு பகுதி 2
அண்ணாவின் மறைவுக்கு பின் திராவிட இயக்கங்களின் வரலாற்றை சுருக்கமாக விளக்குகிறது இந்த நூல். பல்வேறு பிரச்சனைகளால், கட்சி பிளவு வரலாறு முழுமைக்கும் நிகழ்ந்து உள்ளது, அஇஅதிமுக பெயர் வந்த காரணம், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்க்கு திராவிட இயக்கங்கள் பங்களிப்பு, கூட்டணிகள்,தேர்தல் களம், திராவிட இயக்கங்கள் செய்த நன்மைகள் என பல சுவாரசியமான தகவல்கள் இதில் அடங்கும்.
வரலாறு முழுமைக்கும் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது திமுக பெரியாரும், அண்ணாவும் வகுத்து தந்த அடிப்படை கொள்கைகளில் இருந்து சிறிது அளவு கூட மாறுபடாமல் இருந்ததற்கு கருணாநிதி மிக பெரிய பங்காற்றி உள்ளார். கட்சி பிளவுகள் தவிர்க்க முடியாதவை என்றாலும் அவை நிகழாமல் இருந்திருந்தால் தமிழகம் இன்னும் முன்னேறிய மாநிலமாக இருந்திருக்கும் என தோன்றுகிறது.
கலைஞர் அவர்களின் அரசியில் அணுகுமுறையை அதிமுக முற்றிலும் சிதைத்து "போட்டி போடும்" கலாச்சாரமாக மாற்றியது இன்றும் தொடர்கிறது.
இருந்தாலும் மக்கள் நலன்களில் எவ்வித சமரசமும் இன்றி இரண்டு கழகங்களும் நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர்.
இன்று உள்ள சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு பின்னால் உள்ள வரலாறு பிரம்மிக்க வைக்கிறது.
மிக எளிமையாக புத்தகத்தை எழுதிய ஆர். முத்துக்குமார் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
தமிழக வரலாறு படிக்க விரும்புவர்களும், திராவிட இயக்க ஆதரவாளர்கள் அனைவரும் இந்த நூலை வாசிக்கலாம்.
Book: திராவிட இயக்கம் வரலாறு- பாகம் 2
Author: ஆர். முத்துக்குமார்