எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத்தைப்போல கதைகளும் நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் கதைகளின் கைகளைப் பிடித்து நடை பழகியவர்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. பாரதியாரிலிருந்து தமயந்தி வரை தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானது, காலம் எவ்வளவு விசித்திரமானது, மனிதர்கள்தான் எத்தனைவிதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என ஏராளமான ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
தமிழில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த ஐம்பது முன்னணி எழுத்தாளர்களின் அறிமுகக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பே இந்நூல். வாழ்வின் பல பரிணாமங்களையும் விசித்திரங்களையும் அவலங்களையும் அபத்தங்களையும் சிறு மகிழ்ச்சிகளையும் ஆராய்வதன் மூலம் ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குகிறது. அந்த ஆராய்வுக்கு சம்பந்தப்பட்ட ஒரு சிறுகதைக்கு முன்னேறி அந்த சிறுகதைச் சான்றின் மூலம் அந்த எழுத்தாளரின் ஆளுமை உணர்த்தப்படுகிறது. அப்படியே அந்த எழுத்தாளரைப் பற்றிய சிறு குறிப்பும் இடம் பெறுகிறது. (முக்கியமான நூல்கள், பிறப்பு, இறப்பு, உத்தியோகம், குடும்பம், இவற்றைப் போல் தகவல்கள்)
வெகுஜன வாசிப்புக்காகவே எழுதப்பட்ட கதாவிலாசம் முற்றிலும் இலக்கியப் பரிச்சியமே இல்லாத பொதுமக்களுக்கு (ஓரளவு )நவீன தமிழ் இலக்கிய இலக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே முக்கியமாக எழுதப்பட்டிருப்பதால், தீவிர இலக்கிய வாசகர்கள் எதிர்பார்க்கும் அளவு தகவல்களைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.
தீவிர இலக்கியத் தாகம் கொண்டவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய “நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்” போன்ற மிகச்சில நூல்களே உதவிக்கு உள்ளன. ஆனால் அப்படிப்பட்ட நூல்களும் குறைந்தது 20 வருடங்களாவது பின்தங்கி உள்ளன.
இப்போது, இந்த காலத்தில், 2017-இல் தரமான தமிழ் இலக்கியம் மீது பற்று கொண்டு இந்த வாசிப்புலகில் நுழைய விழைபவர்கள் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஒரு solid, comprehensive, reliable guide to contemporary Tamil Literature இல்லாமல் தவித்து, தடுமாறி, பல நீண்ட இணைய தேடல்களுக்குப் பின் சில அரிய பயனுள்ள இலக்கிய தளங்களை serendipitous ஆக கண்டுபிடித்து, மூச்சுத் திணறி கரையேற வேண்டி இருக்கிறது.
இவர்களின் (என்) தேவை – ஒவ்வொரு முக்கியமான எழுத்தாளனின் தனித்துவம், எழுத்து, உத்திகள், அவனுடைய எழுத்தின் முக்கியமான, தொடர்ந்து தென்படும் மையக்கருத்துகள் போன்றவைகளைப் பற்றிய அலசல். அவனுடைய மொத்த oeuvre, அல்லது முடிந்த மட்டில் அவனுடைய முக்கியமான படைப்புகளின் ரசனை மற்றும் கோட்பாடு விமர்சனங்கள். இரு வருடங்களாகத் தேடி இத்தகைய ஒரு தொகுப்பைத் தொகுக்க யாரும் தமிழில் பெருமுயற்சி செய்யவில்லை என அறிந்து சோர்ந்து, இப்போது நானே ஒரு வலைத்தளத்தில் தொகுக்கலாம் என முடிவு செய்துள்ளேன். (விமர்சனங்கள் கண்டிப்பாக உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால் அவை பல்வேறு இடங்களில் சிதறியுள்ளன. புதிதாக தமிழ் இலக்கியத்தை அணுகும் ஒருவனுக்கு அதனை மிகவும் approachable ஆக ஆக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். உங்களுக்குத் தெரிந்து இப்படி ஒரு முயற்சி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தால், தயவுசெய்து அடியேனிடம் தெரிவிக்கவும்! :P) கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இத்தொகுப்பில் சில தற்கால முக்கியமான எழுத்தாளர்களும் ( சு.வெங்கடசன், பா. வெங்கடசன், ஜோ டி குரூஸ்,etc.), ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் கடந்த பத்து வருடங்களில் எழுதிய முக்கியமான நூல்களும் விடுபட்டிருப்பதால் (அஞ்ஞாடி, ஒரு சிறு இசை, த, etc.) இதனைப் புதுப்பித்தல் அவசியமாகிறது.
இந்நூலைப் படிக்கும் போது தமிழில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களே இல்லையா, அல்லது அவர்கள் இங்கே குறிப்பிடப்படவில்லையா என்ற அச்சம் எழுகிறது. பழம்பெரும் எழுத்தாளர்களில் பாரதியார் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளார் என்றாலும் அவரைப் பற்றிய இறுதி அத்தியாயம் இத்தொகுப்பின் மறக்க முடியாத, மிகச் சிறந்த அத்தியாயங்களில் ஒன்று. பாரதியின் நூல்களை இப்போதே தேடிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் எழுந்துள்ளது. இருந்தாலும் 50 என்ற வரையறை வைக்காமல் நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் போன்ற முக்கியமானவர்களை சேர்த்திருக்கலாம். இந்த தொகுப்பைப் போலவே சாரு நிவேதிதா எழுதியுள்ள “பழுப்பு நிறப் பக்கங்கள்” என்ற நூலும் குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் அதை வாசிக்கலாம்.
பி.கு.
1. தொடர்ந்து இந்த நூலையே வாசித்துக் கொண்டிருந்தால் எஸ்ராவின் நடை சலிப்பு தட்டி விடும். பிற நூல்களை வாசிக்கும் பொழுது இதை parallel ஆக வாசித்தல் உசிதம்.
2. மற்ற அனைத்து எழுத்தாளர்களின் இறப்பைக் குறிப்பிடும் போதும் அவர்கள் இறந்த ஊரை குறிப்பிட வேண்டிய அவசியத்தைக் கொள்ளாமல் சுந்தர ராமசாமி மட்டும் “அமெரிக்காவில் இறந்தார்” என்பது ஏதோ ஒரு பெருமை போலக் குறிப்பிடப்படுகிறது. இங்கு மட்டுமில்லாமல் பெரும்பாலான இடங்களில் சுந்தர ராமசாமியைப் பற்றி எங்கு பேச்சு எழுந்தாலும் யாரும் இதைக் குறிப்பிட மறப்பதில்லை. மற்ற எழுத்தாளர்கள் சென்னையிலோ மதுரையிலோ தவறியதைக் குறிப்பிடத்தகுந்ததாகக் கருதாதவர்கள் இதை மட்டும் ஏன் மறப்பதில்லை?
Re-read after so many years, it certainly did influence in my reading preferences when it came out in Vikatan. I do not agree with all his interpretations and some of the essays are too romanticised or sentimental, but I am just nitpicking, the point is the book is still very wonderful. Nostalgic, celebratory and utterly necessary. S.Ra has an indelible impact on my readings in Tamizh. So read this and then read some more, ad infinitum...
My first book of s.r. Sir and 50 other tamil authors of ages!!! Could xperience 'experience' from short stories!! Narration was awesome and he is one of ma favvv author in Tamil literature!! Love u sir!! A Must readd piece for beginners!!!
வாழ்வின் அரிய தருணங்களை, பொதுவில் பேச தயங்குகிற விஷயங்களை, மனித வாழ்வின் மெல்லிய உணர்வுகளை பேசிவிட்டு அந்த உணர்வுகளை, நிகழ்ச்சிகளை தன் கதைகளின் பேசுபொருளாக ஆக்கிக் கொண்ட எழுத்தாளரையும் அவரின் சிறுகதையினையும் அறிமுகம் செய்திடும் புத்தகம் தான் கதாவிலாசம்.
எஸ்.ராவின் புனைவெழுத்தை விடவும் அவரது அபுனைவு எழுத்தினை மிகவும் விரும்புபவன் நான். காரணம் எஸ்.ரா நேரடியாக பேசுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை எனக்கு ஏற்படுத்துவது அவருடைய அபுனைவு எழுத்து. அவருடைய "துணையெழுத்து" என் விருப்பமான புத்தகங்களில் ஒன்று.
கிட்டத்தட்ட "துணையெழுத்து" போன்ற அனுபவக்கட்டுரைகளின் தொகுதித்தான் இதுவும். ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு எழுத்தாளரையும் அவருடைய எழுத்து குறித்தான ஒரு அறிமுகத்தையும் செய்வது ஒன்றே வித்தியாசம்.
50 வயதிற்கு மேலும் தன் மனைவியின் மேல் எழும் காம உணர்வை பகிர்ந்து கொள்ளும் வைத்தியர், அடிதடி - திருட்டு - கொலை - கொள்ளை என்றே தினம் பார்த்து பார்த்து நொந்து போய் கோவில் திருவிழா பாதுகாப்பில் சிறு குழந்தையின் உற்சாகத்தோடு வலம் வரும் கான்ஸ்டபிள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களைப் போன்று ஏமாற்றி முருகனுக்கு அழகு குத்தி சிக்னலில் பிச்சை எடுக்கும் போது உயர்ரக கார் ஒன்றில் அடிப்பட்டு தவிக்கும் நாயை வாஞ்சையோடு எடுத்துக் கொண்டு செல்லும் நால்வர், 50 வயதில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து வரவேற்பு நாளில் 8 பேர் மட்டுமே வந்திட கோபத்தில் கொந்தளித்து முடிவில் அந்த திருமணமும் தோல்வியில் முடிய மீண்டும் மேன்சனுக்கே வந்து சக மேன்ஷன் வாசிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் மனிதர், ஏஸ்.ரா தன்னோடு பள்ளியில் படித்தவர் என நினைத்துக் கொண்டு நேரில் வந்து தன் பெண்ணின் திருமண பத்திரிகையை கொடுத்து திருமணத்திற்கு உரிமையோடு பணம் கேட்டு கடைசியில் பள்ளியில் தன்னோடு படித்த ராமகிருஷ்ணன் இவர் இல்லை என தெரிந்து கொண்டு பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு செல்லும் பெண் என புத்தகம் முழுக்க வித்தியாசமான மனிதர்களையும் அவர்களை அலைகழிக்கும் அல்லது மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ரகசியங்களையயும் நம் முன் விரித்துக் கொண்டே போகிறார் எஸ்.ரா.
எஸ்.ராவின் எழுத்தினை மிக மென்மையான எழுத்தாகவே நான் உணர்வேன். வாசித்து முடித்திடும் போது ஒரு மன நிறைவும் சக மனிதர்கள் மீது பிடிப்பினையும் ஏற்படுத்தக் கூடியது அவருடைய எழுத்து. எஸ்.ராவின் எழுத்தை நேசிக்கும் அதே அளவிற்கு அவருடைய பேச்சினையும் ரசிப்பவன் நான். அவர் வழியே நிறைய ரஷ்ய எழுத்தாளர்களையும் வேறு மொழிகளில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறந்த நூல்களையும் தெரிந்து கொண்டேன்.
நிறைய மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கைப்பாடுகளையும் அதன் வழியே தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்தினையும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த புத்தகத்தை நிச்சயம் வாசித்துப் பாருங்கள்.
ஒரு சிறந்த எழுத்தாளன் என்பதற்கு அறிகுறி அவன் ஆக்கங்களுக்காக கருப்பொருள் தேடி எதுவும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை எஸ் ரா இந்த கட்டுரைத்தொகுதியின் மூலம் நிரூபித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அதற்கு மேலும் ஒருபடி சென்று அன்றிலிருந்து இன்றுவரை உள்ள எழுத்தாளர்களின் எழுத்துக்களை கௌரவித்து அவர்கள் எழுதிய படைப்புகளை நம் போன்ற வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பாணி மிகவும் பெருமைப்படவேண்டியதொன்று.
இந்த அற்புத மனிதரின் எழுத்துக்கள் நம்மை அறியாமல் எப்படி நம் இதயங்களை வருடிக்கொள்கின்றன என்பது ஒரு புரியாத புதிர். இவரின் ஒவ்வொரு கலை சார்ந்த படைப்பும் இயற்கைக்கும் இவருக்கும் உள்ள சொந்தத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த கட்டுரைத்தொகுதியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஒவ்வோர் அத்தியாயங்களையும் வாசிக்கும்போது ஏற்படும் அனுபவம் இவருக்குண்டான கலைநயம் இயற்கையின் கொடை போல் நம்மை பிரமிக்க வைக்கின்றது. அவ்வப்போது நமது அனுபவங்களையும் ஏதோ ஒரு வகையில் நினைவூட்டுகின்றன.
- முதல் நாள் பள்ளி அனுபவம் எல்லோருக்கும் உண்டு. ஒரு விஜயதசமி தினத்தன்று என் அம்மா என் கையை பிடித்து ஆனா ஆவன்னா அரிசியில் எழுதியது இன்னும் என் இளமைக்கால ஞாபகங்களின் மூலையில் ஒளிந்து நின்று எட்டிப்பார்ப்பதை என்னால் இந்தக்கணம் உணரமுடிகிறது. எங்கள் சுவாமி அறையில் உள்ள அலமாரித்தட்டில் வரிசைக்கிரமமாக அடுக்கிவைத்திருக்கும் சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி அம்மன் படங்களும் சரஸ்வதி பூஜை நாட்களும் அன்றன்று சுவாமிக்கு முன்னால் படைப்புக்கு வைத்திருக்கும் பட்சணங்களும் மீண்டும் மனத்திரையில் ஒவ்வொன்றாக வலம் வருகின்றன.
- கீ.ராவின் "கதவு" கதையை முன்பே படித்துள்ளேன் ஆனால் அப்போது தோன்றாத எங்கள் வீட்டு பழையகட்டில் ஏன் ஐம்பது வருடங்களின் பின்னால் இதை வாசிக்கும்போது இப்போது ஞாபகம் வருகிறது? குழந்தைப்பருவத்தில் அதில் ஏறி உள்ளே இருந்து கொண்டு இருபக்கம் இருக்கும் பாதுகாப்பு சட்டங்களை உயர்த்தி விட்டுக்கொண்டு பஸ் ஓடி விளையாடியது பளிச்சென்று வெட்டி மின்னியது. அந்தக்கட்டில் இப்போதும் எங்காவது யார் வீட்டிலோ இருக்குமா? என்று எண்ணத்தூண்டுகிறது. இதுபோல் எத்தனையோ ஞாபகத்தில் வருகின்றன.
ஆக மொத்தத்தில் பி.எஸ்.ராமையாவின் (அத்தியாயம் 11) "நட்சத்திரகுழந்தைகள்" கதையில் வருவது போலல்லாது எஸ்.ராவின் இந்த படைப்புக்கு நான் வழங்கும் நட்சத்திரங்கள் ஓராயிரம்...ஆனால் உங்கள் கண்களுக்கு தெரிவது ஐந்தே ஐந்து மட்டுமே... நான் பொய் சொல்லவில்லை, நம்பினால் நம்புங்கள்!! :)
சில புத்தகம் எல்லாம் வாசிக்க வாசிக்க முடிவடையவே கூடாது என்று தோன்றும்.அதில் ஒன்றுதான் எனக்கு இது. மொத்தம் 50 episodes 50 தமிழ் எழுத்தாளர்கள், ஒவ்வொரு episode - ம் ஒரு எழுத்தாளர் மற்றும் அவர்களது ஒரு சிறுகதையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சிறுகதையை எஸ் ராமகிருஷ்ணன் அவருடைய வாழ்க்கையோடு நடந்த சம்பவத்தோடு பிணைத்து கூறியதுதான் சிறப்பு.
Thanks to the author for this wonderful book through which I am now able to identify a list of short stories authors from which I can select my favorite ones. Well written.