Jump to ratings and reviews
Rate this book

தேசாந்திரி [Desanthiri]

Rate this book
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.

272 pages, Paperback

First published October 1, 2006

188 people are currently reading
1875 people want to read

About the author

S. Ramakrishnan

163 books664 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
468 (48%)
4 stars
379 (39%)
3 stars
98 (10%)
2 stars
18 (1%)
1 star
8 (<1%)
Displaying 1 - 30 of 128 reviews
Profile Image for Prabhu R.
22 reviews32 followers
June 11, 2013
272 பக்கங்கள் - 2 வாரம் ஆனது படித்து முடிக்க‌

ரொம்ப நாளா தேடி இப்ப தான் எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்தது.எஸ்.ராவின் சிறிது வெளிச்சம் படித்ததை போல என்னால் ஒரே நாளில் படித்து முடிக்க முடியவில்லை.தினமும் 20-30 பக்கங்கள் படித்தேன்...எஸ்.ரா வின் பயண அனுபவங்கள்,அவரது மனநிலை.அவர் சந்தித்த மனிதர்கள்,அவருக்கு தக்க நேரத்தில் கிடைத்த உதவி என்று செல்கிறது இந்த புத்தகம்.

என்ன வளம் இல்லை இந்த ... ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்?

என்ற பாடல் வரி தான் இந்த புத்தகம் படிக்கும் போது எனக்கு ஞாபகம் வந்தது...நம்மை சுற்றி ஆயிரம் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களும்,இயற்கை சார்ந்த இடங்களும் இருக்கிறது..அதனை நாம் ஏன் கண்டுக்கொள்வதில்லை..?ஆசிரியரின் இந்த கேள்வி நியாமான கேள்வியாக படுகிறது....

நான் பிறந்து , வளர்ந்ததெல்லாம் தஞ்சையில் தான்..ஆனால் இன்னும் கங்கை கொண்ட சோழபுரத்தினை பார்த்த‌தில்லை....2-3 வருடத்திற்கு முன்பு தான் தாராசுரத்தினை பார்த்தேன்..சிற்ப கலையின் உச்சம் என்றே சொல்ல‌லாம்.ஆனால் இன்னும் என் பெற்றோர் அந்த இடத்திற்கு சென்றதில்லை...ஊர் சுற்றுவது ஓர் அடம்பர செயலாகவே கருதுவதால் இந்த நிலை என்றே எனக்கு தோனுகிறது...

வீரபாண்டியனை தூக்கிலிட்ட இடம் ,காந்தியின் தண்டி யாத்திரை நட‌ந்த இடம், மரங்கள் கற்களாய் மாறிய இடம் நமது திண்டிவனம் அருகே (திருவக்கரை) தான் உள்ளது,கூத்தாண்டவர் பற்றியும்,சென்னை பரங்கிமலை பற்றியும் , புதுக்கோட்டை சித்தனவாசல் பற்றியும் தஞ்சை சரஸ்வதி மஹால் பற்றியும் அறிய தகவல்கள் இருந்தது...

சில அறிய சரித்திர முக்கியதுவம் வாய்ந்த‌ மலைகள் , கல் உடைக்கும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை பற்றியும்,சரித்திரம் ஒரு தேர்வு பாடம் என்பதை தாண்டி நம் மன்நிலை வரும் வரை இதுப் போல் தான் நடக்கும் , வெளி நாடுகளில் அருங்காட்சியங்களின் பராமரிப்பு பற்றி அவர் சொல்லும் போது ..நமது நிலை வருத்தப்படவே செய்கிறது

கடல் மண்னை அவர் சிறுவயதில் தனது சட்டை பையில் நிறப்பிய அனுபங்கள்,சங்க இலக்கிய பாடலில் வரும் மல‌ரினை தேடி அவர் செல்லும் பயணம்..நம்மை இயந்திர வாழ்வினை விட்டு சற்று வெளியே செல்ல கண்டிப்பாக தூண்டும்

ஒவ்வொரு கட்டுரையும் அழகிய கவிதையுடன் துவங்குகிறது (எஸ்.ரா விற்கு பிடித்த கவிதைகள் என்று சொல்ல்லாம்).அதில் எனக்கு பிடித்த கவிதை

சமுத்திர கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே
- நா.விச்வநாதன்

எனது ஊர் சுத்தும் பட்டியலில் நிறைய புது இடங்களும் சேர்ந்துக்கொண்டது இந்தப் புத்தகத்தால்....
Profile Image for Sugan.
144 reviews38 followers
July 16, 2020
This book was on my to read list for a long time. I liked the title of the book, and the author once
mentioned in an interview how he travels. Just get on to a bus and get down in the last stop of the bus and then next get on to another bus. Thats something I would like to do. Since the time I listened to this interview this book is on my to read list.

This book doesn't speak about a single trip but the lifetime of the authors travels. If someday I write a book, it will be similar to this book.
Profile Image for Vivek KuRa.
279 reviews51 followers
February 11, 2019
நான் வாசிக்கும் முதல் எஸ்.ராவின் படைப்பு தேசாந்திரி . அவரின் பயண அனுபவங்களின் தொகுப்பாகமட்டுமே இருக்கும் என்று நான் எண்ணியது தவறு என்பது முதல் கட்டுரையிலேயே புரிந்துவிட்டது. இது அவரின் எண்ணச்சிதறல்களின் குவிப்பு. ரசித்து ருசித்து படிக்க வேண்டியதிருக்கிறது. என் சொந்தஊர் பக்கத்துக்கு ஊர்க்காரர் என்பதாலோ என்னவோ, அவர் அனுபவித்த பல விஷயங்களை என்னால் பொருத்திப்பார்க்கமுடிகிறது. அவர்சென்ற பல இடங்களுக்கு நானும் சென்றிருக்கிறேன், உணர்ந்து இருக்கிறேன். எஸ்.ரா வின் படைப்புகளை கண்டிப்பாக தேடி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏதேனும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பரிந்துரை இருக்கா?
Profile Image for Elankumaran.
140 reviews25 followers
March 9, 2024
தேசாந்திரி ❤️

தேடலின் பயணங்களில் பரந்தது இவ்வுலகம். பயணங்களின் தேடலில் விரிந்தது நம்வாழ்வு. சாதாரண மனிதனுக்கு சிறகு விரிக்க பழக்கிக்கொடுத்தது இந்த பயணப்படுதல். ஒருமுறை விரிந்த சிறகுகள் மறுமுறை அடங்குவதே இல்லை, காலம் முழுவதும் பறக்கவே துடிக்குது மனிதமனம்.

இவ்வாறாக எஸ்.இராமகிருஷ்ணன் தனது இலக்கற்ற பயணங்களின் அனுபவங்களை கட்டுரைகளாக கண்முன் காட்டுகிறார். அவரின் பயணங்கள் விநோதமானவை, ஐன்னல் தாண்டிய சூரிய ஒளியில் தொடங்கி, சிறுவயதில் கேட்ட கதைகள், அக்கதைகளின் கதைகள், பேரூந்து நிலையங்கள், கோயில் சிற்பங்கள், ஒளிந்திருக்கும் ஓவியங்கள், பறவைகள், அவை விதைத்த விருட்சங்கள், விருட்சங்களின் கீழ் நடக்கும் கூத்துகள், கலையின் அழகியல், அடுத்த தெருவில் மறைந்திருக்கும் வரலாற்று சிதைவுகள், கால ஓட்டத்தில் கரைந்துபோன சுவடுகள், மலைகள், மலை உச்சிகள், உச்சி தொடும் மேகங்கள், மேகம் கொண்ட வானம், வானம் கொட்டும் மழை, மழை கிளப்பும் மண்வாசம், மண் தொட்ட மழையின் அருவியோட்டம், அருவி அடையும் கடலும் கடற்கரையும், அங்கே கரை ஒதுங்கும் கிழிசல்களும், அதை இரசிக்கும் குழந்தைகளும் என நீள்கிறது அவரின் பயணக் கட்டுரைகள்.

பயணம் என்றால் எங்கோ தூரதேசம் செல்லவேண்டும் என்றெல்லாம் இல்லை. பயணம் என்பது தூரத்தில் அல்ல அனுபவத்தில்தான். ஒவ்வொரு இடத்திற்கும் தனி இயல்புகள் இருக்கின்றன, அது நீங்கள் பயணம் செய்யும் நேரம், காலம், உங்கள் மனநிலை, உடன்வரும் நபர்கள் என்பவற்றிற்கேற்ப வெவ்வேறு விம்பங்களை காட்டக்கூடியது. பயணப்படுங்கள், பலருடன் பழகுங்கள், சிறகுகளை விரியுங்கள், சிந்தனையில் அலையுங்கள், இயற்கையுடன் இணையுங்கள், அனைத்தையும் ரசியுங்கள், அன்பில் திளையுங்கள், வாழ்க்கை வாழ்வதற்கே.
Profile Image for Sharavanan Kb.
35 reviews26 followers
June 4, 2021
புத்தகங்கள் போலவே மனிதனை பக்குவபடுத்துபவை பயணங்கள்.

இந்த நூலில் எஸ்.ரா தன்னுடைய பயண அனுபவங்களை பகிர்ந்து கொன்டிருக்கிறார் , புத்தகத்தை படிக்க துவங்கும்போது ஒரு சாதரண பயண அனுபவ நூலாகத்தான் நினைத்தேன் ஆனால் ஒவ்வொரு கட்டுரையிலும் நம்மை நோக்கி அவர் கேட்கும் கேள்விகள் முகத்தில் அறைகிறது.

இந்நூலில் அயல்நாட்டு அனுபவம் எதையும் அவர் பகிரவில்லை அனைத்தும் இந்திய பயணங்கள் அதிலும் பெரும்பாலும் தமிழக பயணங்கள். தமிழகத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் இவ்வளவு உள்ளதா என ஆச்சரியம் ஏற்படும் அதே வேளையில் அவர் குறிப்பிட்ட பல இடங்கள் நமக்கு அருகிலும் நாம் பலமுறை கடந்து சென்ற இடங்களாகவும் இருந்தும் அறியவில்லையே என்ற எண்ணம் என்னை போல் உங்களுக்கும் ஏற்படகூடும்.

வரலாற்றை பாடபுத்தகத்தோடு மறந்து விடுகிறோம் என தனது மணியாச்சி பயண கட்டுரையில் குறிபிடுவது என்னளவில் உண்மையே , வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை சுட்டு கொன்றதை பள்ளியில் படித்திருக்கிறேன் , எனது குல தெய்வ கோவிலுக்கு ரயிலில் இதே ரயில் நிலையத்தை கடந்து ஒரு தடவை சென்றிருக்கிறேன் ஆனால் இந்த சம்பவம் எதுவும் என் நினைவிற்கு வரவில்லை, ஆனால் அந்த சம்பவத்தை நினைவு படுத்தி பார்க்கவே எஸ். ரா அந்த ரயில்நிலையத்திற்கு செல்கிறார் !

இதுபோல் பல புராதனமிக்க இடங்கள், பல நூற்றாண்டு வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் கோட்டைகள் , கோவில்கள்,மலைகள்,ஆறுகள், நினைவிடங்கள், நூலகங்கள் நம்மை சுற்றி எத்தனையோ உள்ளது ஆனால் அதை நாம் நினைப்பதும் இல்லை மதிப்பதும் இல்லை என்ற அவரின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.

மறைந்த பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டாடும் நம்மில் எத்தனை பேர் அவர்கள் வசித்த இடத்திற்கு சென்று , அவர்கள் வாழ்ந்த அறையில் நின்று , அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் ?

லண்டனில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிடுகின்றனர் ஆனால் தமிழகத்தில் உள்ள பாரதி, கம்பர், வ.உ.சி பிறந்த இடங்களுக்கு எத்தனை பேர் சென்றிருக்கிறோம்?

பயண அனுபங்களை பகிர்ந்ததோடல்லாமல் இதுபோன்ற கேள்விகளை கேட்டு பயணம் பற்றிய நமது பார்வையை மாற்றுகிறார் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.
Profile Image for Praveen (பிரவீண்) KR.
228 reviews33 followers
January 29, 2023
Visit my blog for review @ https://kalaikoodam.blogspot.com/2023...

பயணங்கள்! யாருக்கு தான் பயணங்கள் பிடிக்காது. நண்பர்களுடன் போகும் சில பேர், தனிமையில் பயணம் செல்லும் சில பேர். அப்படி பயணங்கள்என்று தனியாக போகாவிட்டால் கூட வாழ்க்கை நம்மை பல நேரங்களில் பயணங்களுக்கு இட்டு செல்லும். அப்படி சில பயன்களில் வாயிலாக என்ன சொல்ல உள்ளார் என்பதை அறிவதற்க்கே இந்த வாசிப்பை இந்த வருடம் எடுத்தேன். இரண்டு வருடங்களாக புத்தக அறையில் என் தீண்டலுக்காக இருக்கும் இந்த புத்தகம் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
ஒரு சாதாரணமான பயண குறிப்பு அல்லாமல் வாழ்க்கையின் பல நுணுக்கமான விஷயங்களையும் சேர்த்து சொல்லியுள்ளார் எஸ்.ரா. தனது வீட்டின் ஜன்னல் வழியாக உலகத்தை பார்க்க ஆரம்பித்ததை பற்றி எழுதும் அவர் இந்த புத்தகத்தின் முடிவில் எல்லா பயணங்களும் முடிவது நம் வீட்டை நோக்கி என்று சொல்லியுள்ளது அவ்வளவு அழகாக இருந்தது. இந்த உலகத்தில் நாம் சிறு சிறு விஷயங்களில் கூட சந்தோஷத்தை காணலாம் என்றும் நம்மை வியப்புக்கு உள்ளாக்க நம் நாட்டிலே எத்தனையோ இடங்கள் உண்டு இதற்காக கண்டம் விட்டு கண்டம் சுற்றி அலையவேண்டிய அவசியம் இல்லை என்ற உண்மையை அருமையாக சொல்லியுள்ளார். அவர் போன பல இடங்கள் நான் காண ஆசை பட்ட இடங்கள் தான் - சரஸ்வதி மஹால், கங்கை கொண்ட சோழபுரம், காசி என்று பல இடங்கள். சென்னையில் நான் வசித்த 9 வருடங்களும் பரங்கிமலை என்ற ஒரு ரயில் நிலையத்தை கடந்து சென்றிருக்கிறேன் பலமுறை. ஆனால் அந்த இடத்தின் பெருமையை அவர் சொல்லி தான் அறிகிறேன்.அடுத்த முறை சென்னை செல்களில் கண்டிப்பாக அந்த மலையை சென்று காணவேண்டும். இது போன்று எத்தனை எத்தனை அனுபவங்களால் நம்மை சுற்றி இருக்கும் விசாலத்தையும் நாம் அதற்குள் ஒரு சிறு புள்ளி தான் என்பதையும் உணர்த்துகிறார். மிக அழகான எளிமையான நடை. ஒவ்வொரு பகுதிக்கும் ஆரம்பத்தில் ஒரு அழகிய கவிதை கூட இருந்தது.
ஒரு தனிமை விரும்பியான நான் பயணங்கள் செல்வது மிகவும் கம்மி. சென்றால் கூட தனியாகவோ அல்லது நெருங்கிய நண்பன் ஒருவனுடனோ மட்டும் தான். அப்படியே சென்றாலும் எல்லோரும் செல்வது போல முக்கியமான பொழுதுபோக்கு இடங்களை நாடி செல்வதில்லை. கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், காடு, மலை, ஊர் தெருக்கள் என்று சுற்றி திரிவது வழக்கம். அதே போல் மண், கற்று, மழை, மரங்கள், நீர்நிலைகள் என்று செல்லும் எனக்கு இது ஒரு சிறந்த புத்தகமாக பட்டது. என்னை போல் யோசிக்கும் ஒருவரின் அனுபவங்கள் எனக்கு மிக பெரிய ஊக்கமாக உள்ளது. இது போல் பயணங்கள் மேலு மேலும் மேற்கொள்ளவும் அதே போல் நம்மை சுற்றி உள்ள சிறு சிறு சந்தோஷங்களை கண்டறியவும்.

வாசிப்போம்! நேசிப்போம்!!
Profile Image for Dinesh.
128 reviews9 followers
April 7, 2022
படிப்பும் பயணமுமே ஒரு மனிதனை முழுமையாக்கும்!

நான் படிக்கும் எஸ்.ரா.வின் முதற்புத்தகம். எஸ்.ரா. தனது இந்தியப் பயண அனுபவங்களை கட்டுரை தொகுப்பாக விவரித்திருக்கும் இக்கட்டுரைகளில் சில நம்மை குழந்தை பருவத்திற்கு இட்டுச்செல்லும் அதேவேளையில் சில கட்டுரைகள் நம் செவுளில் அறைகின்றன.

கண்கள் நமக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். நம்மில் பெரும்பாலானோர் செல் போன் கேமரா வழியாகத்தான் உலகைப் பார்க்கின்றனர். பயணம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்திய புத்தகம் இது.

ஒரு பொருள் நூறு ஆண்டுகள் பழைமையாகிவிட்டாலே அதை பொக்கிஷமாக பாவித்து பேணும் நாடுகள் பல இருக்க, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சுவரோவியங்கள் கற்றளிகள் ஆகியவற்றின் பெருமையை நாம் உணராமல் ரசிப்புத்தன்மையும் இல்லாமல் சரியான பராமரிப்பின்றி சிதிலமடைய விட்டது நாம் வருங்கால சந்ததியினருக்கு செய்த மாபெரும் துரோகம்!

எஸ்.ரா. பயணம் செய்த இவ்விடங்களுக்கு நானும் பயணப்படவேண்டும் என்ற ஆவல் பெருகிவிட்டது.
22 reviews2 followers
September 21, 2021
தேசாந்திரி- எஸ். ராமகிருஷ்ணன்
⠀⠀
எஸ்.ரா தன் பயண அனுபவங்களை கட்டுரை தொகுப்பாக கொடுத்துள்ளார். முழுவதும் தன் மேற்கொண்ட இந்திய பயணகளையை பதிவு செய்துள்ளார். அதிலும் பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பயணகளை.

இந்தியவை அறிந்து கொள்ள வரைபடம் மட்டும் போதாது இந்திய நெடுகிலும் பயணம் செய்ய வேண்டும் என்கிறார் எஸ். ரா.மனிதனை தெரிந்து கொள்ளவும் நம்மை நாமே புரிந்து கொள்ளவும் பயணம் அவசியம் ஆகிறது. உட்கார்ந்த இடத்திலிருந்து இந்தியவை சுற்றிய உணர்வை தேசாந்திரியின் மூலம் பெற்றேன்.
⠀⠀
எஸ். ரா நம்முன் பல கேள்விகளை விசிகிறார் ராமனுஜரை நம் ஏன் கண்டுகொள்ளவில்லை பழமையான ஒவியங்களையும் சித்திரங்களையும் ஏன் நாம் பாதுகாக்க தவறிகிறோம். என் வரலாறு பள்ளி பாட புத்தகங்களில் சுருங்கி உள்ளது வரலாற்றை அறிந்து கொள்ள கூடிய ஆர்வம் நம்மிடம் ஏன் குறைவாக உள்ளது என பல கேள்விகளை எழ செய்கிறார் எஸ்.ரா.
Profile Image for Kavitha Sivakumar.
353 reviews60 followers
August 1, 2017
அருமையான புத்தகம்! ஆசிரியரின் எழுத்து நடை என் இளமை பிராயத்தை நினைவு கூற வைத்தது :) சென்ற ஊர்களை பற்றி மட்டுமல்லாமல் ஆசிரியரின் மனநிலையையும் நமக்கு காட்டும் புத்தகம். அந்த ஊர்களை நானும் சென்று பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டுகிறது.
193 reviews9 followers
December 26, 2020
A masterpiece for travel around India in tamil... A rare one for a travel book as well...
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
March 11, 2023
புத்தகம் : தேசாந்திரி
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பக்கம் : 256
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்களும் அவற்றைப் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் மனதில் உருவாகும் உணர்வுகளும் மிகவும் முக்கியமானது. யாரோ ஒருவருடைய பயணம் நமக்கு ஏன் மகிழ்ச்சியையும் ஆசையையும் ஊக்கத்தையும் சமயங்களில் பொறாமையையும் உண்டாக்குகிறது ��னத் தெரியவில்லை.

இப்புத்தகத்தில் உள்ள சத்னாவில் ஒரு இரவு, நினைவில் எறிந்த கல், சீர்திருத்தச் சாமியாட்டம், உறங்கும் கடல் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே என்னை ஈர்த்தன. ஆசிரியரது 'இரயில் நிலையங்களின் தோழமை' என்ற புத்தகத்தை இதற்கு முன் வாசித்திருக்கிறேன். அப்புத்தகம் என்னைக் கவர்ந்த அளவிற்கு தேசாந்திரி ஈர்க்கவில்லை. ஆனால் இத்தனைக் கட்டுரைகளுக்கும் பின்பு உள்ள பயணங்கள் எனக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வளவு வித்தியாசமான பயண அனுபவங்களை மனிதர்கள் சேகரிக்கிறார்கள், அப்படியான வாழ்க்கைச் சூழல் அவர்களுக்கு அமைந்திருக்கிறது அல்லது அமைத்துக் கொள்கிறார்கள் என்பதே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

இப்புத்தகத்தில் உள்ள 41 கட்டுரைகளில் நிறைய இடங்கள், அனுபவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயண விரும்பிகள் நிச்சயம் வாசிக்கலாம்.

எனக்குப் பிடித்த வரிகள்:

1) வாழ்வின் எளிய நிலையில் நாம் பிறந்திருந்தாலும் கூட, அறிவும் தொடர்ந்த உழைப்பும் நிச்சயம் நம்மை உலகின் உச்சிக்குக் கொண்டு செல்லும்.

2) எல்லா பக்கமும் திறந்து கிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டு செல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை.
Profile Image for Vignesh Narayanan.
119 reviews9 followers
September 17, 2025
A gentle reminder to breathe life in and to romanticize the ocean, mountains, city, wind, temples, art, history, anything and everything. if you are a sucker for nostalgia, this one's for you.
Profile Image for Remy Moses.
35 reviews4 followers
August 8, 2021
மனிதர்கள் உலகத்தை அறிந்து கொள்ள பயன்படுதல் அவசியமானது இலக்கற்ற பயணியான எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரசியமாக பகிர்ந்து தந்துள்ளார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார். மொத்தம் 41 தலைப்புகள் ஒவ்வொரு தலைப்பிலும் ஒவ்வொரு இடங்களை நமக்கு சுட்டிக் காட்டுகின்றார் எஸ்ரா.ஒவ்வொன்றையும் வாசிக்கும் பொழுது நாமும் அந்த இடத்தினை ஸ்பரிசிக்க வேண்டும் என்கின்ற உணர்வு கண்டிப்பாக எழும். சூரியன்,மேகங்கள், மலைகள், கடல் ஆகியவை குறித்து இதுவரை இப்படி ஒரு விளக்கம் உள்ள புத்தகத்தை நான் வாசித்ததில்லை .ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள அர்ச்சுனாபுரம் ஊரில் உள்ள நல்லதங்காள் கிணற்றையும் நல்லதங்காளின் கதையையும், வருடம் முழுக்க மழை பெய்து ஓயும் லோனாவாலாவிலும்,புனித தாமஸ் மலையையும்,சப்னா என்ற ஊரில் அவர் கண்ட மனிதர்களையும் நமது கையை பிடித்துக்கொண்டு வழிநடத்தி சுட்டிக்காட்டுகின்றார்.

" பயணத்தில் நான் கண்ட எத்தனையோ வியப்பான இடங்கள் அதிசயமான சிற்பங்கள் அரண்மனைகள் யாவும் அந்த நிமிடத்தில் அர்த்தமற்றுப் போனது எனது பயணத்தில் நான் கண்டறிந்த அற்புதம் அந்த மனிதர் தான் அவரது ஒரு சிறிய வீடும் எல்லா மதங்களை விடவும் உயர்வானது என்றாவது ஒருநாள் அவர்களே எனது வீட்டுக்கு அழைத்து வந்து என் குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன் உலகில் இருப்பது இது போன்ற மனிதர்களும் அவர்களின் மனது மட்டும் தான் எப்போதும் ஏதோ ஒரு நாளில் அந்த தன்னுயிர் என்ற மனிதரின் நினைவில் வந்தபடி இருக்கிறார்"


கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
December 4, 2022
Book 95 of 2022- தேசாந்திரி
Author- எஸ்.ராமகிருஷ்ணன்

“காலத்தில் நாம் எதையெல்லாம் முக்கியம் எனத் தெரியாமல் தூக்கி எறிகிறோமோ,அதையெல்லாம் பின்னாளில் அடைவதற்குப் பெரிய விலை கொடுத்து வருகிறோம் என்பதையே காலம் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறது.”

“தேசாந்திரி”-தமிழில் நான் படித்த முதல் “பயணக்கட்டுரை” புத்தகம். 41 கட்டுரைகள், 41 இடங்கள்-ஒவ்வொன்றும் ஏற்படுத்தும் தாக்கமும் சொல்லித் தரும் பாடமும் மிக ஆழமானது.

பயணம்னா என்ன? Royal Enfield அல்லது பல தரப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வேறு ஒரு இடத்திற்குச் சென்று அங்கிருக்கும் காட்சியை ரசித்து,உணவு சுவைப்பதா? அது இல்லையே பயணம் என்பது. உங்கள் வீட்டு ஜன்னல் வழியாக வரும் சூரியக் கதிர்களை எட்டி பார்க்காமல்,உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்றுக் கொண்டு மேகத்தை ரசித்திடாதவர்கள் எத்தனை மைல் தூரத்து இடங்களுக்குச் சென்றாலும் பயணத்தின் உண்மையான ருசியை அவர்களால் உணரவே முடியாது.

நமக்கு தெரிந்த பல இடங்களைப் பற்றி நமக்குத் தெரியாத பல கதைகளை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். சின்ன சின்ன விஷயங்களில் இருக்கும் ஜீவனை இவர் எழுத்தால் நம்மால் உணர முடிகிறது. Instagram stories, reel, blog இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது இந்த பயணம் என்பது. வாழ்க்கையை மேம்போக்காக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம் தலைமுறையினருக்கு வாழ்க்கையை இன்னும் உற்றுப் பார்க்க சொல்லித் தருகிறது.

இந்த புத்தகத்தை படித்தப் பின்,கல்,காற்று,நீர்,ஆகாயம்..ஏன் மனிதர்களை கூட நாம் சாதரணமாக பார்க்க மாட்டோம். நாம் வாழ்க்கையை எதிர்நோக்கும் பரிமாணத்தையே முற்றிலும் மாற்றிவிடுகிற சக்தி இருக்கிறது இந்த புத்தகத்திற்கு.

தேசாந்திரி-வெறும் புத்தகம் அல்ல! வாழ்க்கைப் பயணம்!
Profile Image for Ananthaprakash.
83 reviews2 followers
December 4, 2022
எது ஒரு பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுகிறது, நினைத்த இடத்தை சென்று அடைவது மட்டும் தானா? இல்லை , பயணத்தின் சுவாரஸ்யம் அதற்கான முன் ஏற்பாட்டில் இருந்தே ஆரம்பம் ஆகி விடுகிறது.

அது ஏனோ பயணத்தின் முந்தைய இரவு மற்றும் தூக்கத்தை மறந்து பயணத்துக்காக தயாராகுவது இன்று வரை மாறமல் இருப்பது தான் நமக்குள் அடைந்தே இருக்கும் குழந்தையை ஞாபக படுத்துகிறது.

பயணத்துக்காக தயாராகுவது,போகும் வழியில் புதிய இடங்களை பார்பது, புதிய மனிதர்களோடு பழகுவது, அவர்களுடைய நம்பிக்கைகளை புரிந்து கொள்வது.இது எல்லாம் சேர்ந்தது தான் பயணம்.

அதிலும் சன்னல் ஓர இருக்கை தரும் சந்தோஷம் சொல்ல முடியாதது.சன்னல் ஓர இருக்கை என்றாலே இளையராஜாவின் பாடல்களும் கூடவே வந்து விடுகின்றன.

இது போல தான் மேற்கொன்ட பயணங்களையும், சென்ற இடங்களையும், வரலாற்று சிறப்புகளையும், சந்தித்த மனிதர்களையும், தக்க நேரத்துல கிடைத்த உதவிகளையும், பயணங்களின் வழியாக சொல்கிறார் பயணங்களின் காதலன் எஸ். ராமகிருஷ்ணன்.

புத்தகங்களை போலவே மனிதனை பக்குவ படுத்துபவை பயணங்கள்.
Profile Image for மணிகண்டன்.
12 reviews4 followers
January 4, 2016
புத்தகம் படித்த பிறகு மனம் என்னவோ செய்தது. படிக்கும் போது முழுமையாக ஒன்றிப்போக செய்வது உறுதி. எத்தனை மனிதர்கள், ஊர்கள், பாதைகள், மலைகள், ஆறுகள் இன்னும் நீள்கிறது. பலருக்கு இப்புத்தகத்தை பரிந்துரைத்து இருக்கிறேன்.
99 reviews
February 28, 2018
மிக சிறந்த பயண பகிர்வு , பல அறியப்படாத தகவல்களை அறிந்துகொள்ள உதவியது . உதாரணத்துக்கு கும்பகோணம் அருகில் உள்ள ஒரு ஊரில் காவேரி ஆறு ஓடும் பாதை பற்றிய சுவர் ஓவியங்கள் இருக்கறது.

மிக சிறந்த வர்ணனை ...
பயணத்தின் மிது உள்ள காதலை அதிகப்படுத்தியுள்ளது.

Profile Image for Cruz J.
21 reviews2 followers
August 18, 2020
Amazing narrative
As i have seen interview of S.Ra, while reading the book
I can imagine S.Ra himself is narrating story to me.
Book gives most of unknown facts to me.
Though I'm a travel lover, this book urges me to explore places.
Profile Image for VimalRaj S.
11 reviews
August 18, 2021
படித்ததில் சிறந்தது!
‘தேசாத்திரி’ புத்தகம் படித்தேன்.இத்தனை வருடங்கள் ஏன் படிக்கவில்லையென வருந்தினேன். ஒவ்வொரு பயணத்திலும் நானும் இருந்தது போலத் தோன்றியது. 34 வயதில், நம் வரலாறு மற்றும் இலக்கற்ற பயணங்களின் முக்கியத்தை உணர்ந்தேன்.
1 review
September 28, 2021
வாழ்வை ரசிப்பதும் ,ஆவணப்படுத்துவதும் பற்றி எண்ணங்களாள் நிரம்பிய புத்தகம்! இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும் இரசனைமிக்கது! இந்த புத்தகங்களில் கடந்து வந்த நிறைய ஊர்களை கண்டதில்லை எனினும் இரசித்து விட்ட திரிப்தி:)
Profile Image for Ruban Shanmugavelu.
2 reviews
January 12, 2018
அதீத அனுபவம்.. எஸ். இரா அவர்களுக்கு நன்றி.
Profile Image for vijayan.
40 reviews1 follower
September 18, 2019
சிறப்பான பயணக்கட்டுரை புத்தகம். நண்பன் மகளின் கதை மிகவும் கணமானது
Profile Image for Bin Diya.
74 reviews14 followers
October 14, 2020
4.5 * Its about the travel diary of the author. He beautifully narrates the authenticity of the places he traveled in India
4 reviews
January 2, 2021
நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று. இப்புத்தகத்தின் உடைய தலைப்பு அதாவது தேசாந்திரி இந்த வார்த்தையே ஒரு வசீகரத் தன்மை கொண்டது. அது உங்கள் ஆயுளுக்கும் உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும்
Profile Image for Sruthi.
24 reviews
February 25, 2024
✨ தேசாந்திரி - எஸ். ராமகிருஷ்ணன் ✨

"பால்யம் என்பது உலகம் நமக்கு மிக நெருக்கமாக இருந்த காலம்."

🌍 அப்படியெல்லாம் இந்த புத்தகத்தை சீக்கிரம் வாசித்து மறந்து விடமுடியாது.

🌍 சிறுவயதில் நாம் ரசித்த பல சின்ன விஷயங்கள் முதல் நாம் வியந்த பெரும் விந்தைகள் வரை ஒரு மெல்லிய இளங்காற்று நம் பழைய நினைவுகளை வருடியது போன்று ஒரு இனிமையான சுகம் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது கிடைக்கும்.

🌍 ராமகிருஷ்ணன் ஐயா அவர் மேற்கொண்ட பயணங்களும் அதில் அவர் கண்ட காட்சிகளையும், தொன்மையான வரலாற்று நினைவுகளையும் அழகாக விவரித்திருக்கிறார். 

🌍 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக காலத்தோடு பயணித்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சரியான பராமரிப்பின்றி சிதிலமடைவது குறித்து ஆசிரியர் சொல்லும்போது துக்கம் தொண்டையை அடைகிறது. நாம் அறிந்து கொள்ள நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்ததை நம் பிள்ளைகளுக்கு நம்மால்  காண்பிக்க முடியாமல் போய்விட்டது என நினைக்கும்போது மிகவும் வெட்கமாக இருக்கிறது. இதைவிட மிக மோசமான விஷயம் என்னவென்றால் நமக்கே அப்படியெல்லாம் இடங்கள் இருப்பது தெரியாது என்பதே.

🌍 வளர்த்த பிறகு நாம் எதையும் ரசிப்பதில்லை. பணம் தவிர எதற்கும் முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. அப்படி தான் வாழ்கிறோம் கைபேசி என்னும் கூண்டில் கிளிகளாக. 

🌍 இந்த புத்தகத்தை வாசித்த பின்பு எங்காவது பயணம் செல்லவேண்டும் போல் ஆசையாக உள்ளது. அழகான பதிவுகள். ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

"எல்லா பக்கமும் திறந்துகிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டு செல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை!"
Profile Image for Arvind Srinivasan.
326 reviews18 followers
July 31, 2021
The book talk on travel of S.Ra sir. It is compilation of 41 articles that got released in Tamil weekly. The 41 articles can be broadly classified into 4 sections :
1. Description and details on places visited like saranath, st Thomas mount, dhanushkodi, korkai etc
2. Details on places that were prominent in history and their state now like dandi , ash murder railway station, forest where kattaboman hide, house of ramanjam etc
3. Nature and thoughts on peculiar environment like hill station next to s.ra's grandmother house, rain in lonavala, flowers why they blossom, clouds and their shape, sun in hills, sea and its statement etc
4. People and thoughts on people - festival of transgender, marriage of frog in search of rain, people on hills about wind
Though each article runs just for 4-5 pages, each of them will make you think a lot and make us remember the childhood thoughts. A book that will kinder us to think and relish. Go for it u will enjoy it for sure.

For more details in Tamil check out -https://www.youtube.com/watch?v=Z-yfk...
25 reviews2 followers
April 24, 2025
Excellent Writing by Thiru.S. Ramakrishnan @ (S.Ra).. Each chapter will take us to several locations in our country. Ranging from a small home to the highest peaks, from small villages to big cities. The author not only mentioned the speciality of those locations but also about the people and their humanity in various aspects..In one of the chapters he covers about the emotions of Transgender and in another chapter he explains about the Golden memories and culture that we failed to carry along with us in this fast and target oriented world... (PS: I will travel to each chapter)
15 reviews
January 15, 2022
நான் வாசித்த முதல் எஸ். ரா வின் புத்தகம். எனக்குள் தூங்கி கொண்டிருந்த பயணியை ,எஸ்.ரா தட்டி எழுப்பிவிட்டார். அவர் கூறிய இடங்களுக்கு சென்று அவர் பார்வையில் உலகை பார்த்து புதிய அனுபவம் பெற வேண்டும். குறிப்பாக - கொடைக்கானல் cycle பயணம், மூணார் மேகங்கள், கங்கை கொண்ட சோழபுரம்
,மழை நிறைந்த லோனாவலா, கல் மரங்கள் உள்ள திண்டிவனம், குருமலை, சமணர் பள்ளிகள்,இன்னும் பல.என் நாட்குறிப்பு பயணத்துக்கு வழிகாட்டும். வாழ்க்கையே ஒரு முடிவே இல்லாத பயணம் தானே.
This entire review has been hidden because of spoilers.
2 reviews1 follower
May 31, 2021
One of the best books I have ever read. Reading this book brings us back those memories which we have dreamt when we were a kid or those days when we travelled places.

This book speaks about the things we experienced ourselves but not written, it just reminds you to love even small things that you see something even outside the window of your own house.

Just live it.
Displaying 1 - 30 of 128 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.