Jump to ratings and reviews
Rate this book

சோளகர் தொட்டி

Rate this book
தன்​​னை மனித உரி​மைச் ​செயல்பாமடுகளுடன் இ​ணைத்துக்​கொண்டவர். பி,யூ,சி,எல். அ​மைப்பில் ​செயல்படுபவர், வழக்கு​​ரைஞர் கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரி​மை மீறல்களுக்கு எதிரான ​செயல்பாடுக​ளை இயககமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈ​ரோடு மாவட்டம் பவானி​யைச் ​​சேர்ந்தவர் பண்பாடு, வாழ்க்​கை, ​தொன்கங்கள் மற்றும் வனம் ​போன்றவற்றுடன் தனக்குள் பி​ணைப்​பை இந்நாவலில் ​வெளிப்படுத்தியுள்ளார்.

240 pages, Paperback

First published December 1, 2004

47 people are currently reading
734 people want to read

About the author

S. Balamurugan

132 books22 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
167 (63%)
4 stars
86 (32%)
3 stars
7 (2%)
2 stars
1 (<1%)
1 star
4 (1%)
Displaying 1 - 30 of 57 reviews
Profile Image for Dhulkarnain.
80 reviews2 followers
March 19, 2023
இந்த நாவலைப் படிப்பதற்கே மிகப் பெரிய மன வலிமை வேண்டும். தமிழக-கர்நாடக காவல் துறை வீரப்பனை பிடிப்பதாக சொல்லிக் கொண்டு அப்பாவிச் சோளகர்களில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் என்று யாரையும் விட்டு வைக்காமல், எவ்வளவு கொடூரமான சித்திரவதைகளை செய்திருக்கிறார்கள். கண்ணீர் விடாமல் யாராலும் இந்த நாவலை முழுமையாகப் படித்து விட முடியாது. தமிழில் வந்த ஆகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று என்பது என்னுடைய கருத்து.
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
May 14, 2024
வனப்பகுதி அருகே எந்தவிதமான வம்பு துன்பிக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அப்பாவி மக்கள் இந்த அதிகாரத்தாலும் கொலை வெறி பிடித்த காவல்துறை மிருகங்களாலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். இதை வாசிக்கும் நமக்கே குலை நடுங்குகிறது .ஆனால் இதை செய்த காவல்துறையினருக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லை ஒவ்வொன்றையும் அவர்கள் ரசித்து ரசித்து செய்கிறார்கள். ஒரு இளகியை மனம் கொண்ட ஒருவர் இந்த நாவலை வாசிக்கவே முடியாது . அந்த அளவுக்கு கொடூரமான சித்திரவதைகளை காவல்துறை இந்த அப்பாவி மக்கள் மீது நடத்துகிறது. இறுதியில் அந்த காவல் துறையினர்கள் பதக்கங்களையும் உயர்பதவிகளையும் ஊதிய உயர்வு உயர்வுகளையும் பெற்று கம்பீரமாக வாழ்கிறார்கள். ஆனால் இந்த கொடூர சித்திரவதைகளை அனுபவித்த மக்களுக்கு இன்று வரை எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை சதாசிவம் கமிஷன் அமைத்து இப்படியான கொடூரமான மனித உரிமை மீறல்கள் நடந்தது உண்மை என்று அறிக்கை தாக்கல் பண்ணிய பிறகும் கூட இன்றுவரை அந்த காவல்துறையினருக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படவில்லை என்பது இந்து நாட்டில் நீதி என்ற ஒன்று இருக்கிறதா ? என்ற கேள்வியை ஒவ்வொரு மனிதனும் நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே இங்கே சட்டம் என்பது அரசாங்கத்தின் காவலாக தான் செயல்படுகிறது சட்டம் என்பது எளிய மனிதனுக்கு ஒருபோதும் கிடைக்காது என்கின்ற ஒரு நிலை தான் இன்றும் நிலவுகிறது. ஆனால் இவ்வளவு கொடுமைகளையும் செய்த காவல்துறையில் நபர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது ஒரு மனைவி இருக்கிறாள் குழந்தைகள் பிள்ளைகள் இருக்கிறார்கள் அந்த குடும்பம் அந்த மனிதர்களோடு தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது மனிதர்கள் தானா இவர்கள் என நினைக்கிறேன். அந்த குடும்பம் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அந்த இதைப் போன்ற காவல்துறை அதிகாரிகளுடன் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது நமக்கு ஒரு அருவருப்பும் தாங்க முடியாத மன வேதனையுமே எழுகிறது. காவல்துறை என்பது சட்டப்படி குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அவ்வளவுதான்.
Profile Image for Aswath Narayanan.
44 reviews11 followers
January 23, 2015

வீரப்பனை கொன்றாகிவிட்டது, பாராட்டு விழா முடிந்தாகி விட்டது, பதக்கங்களும் வீட்டு மனைகளும் கொடுத்தாகிவிட்டது ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை
Profile Image for Renya Ragavi.
37 reviews4 followers
January 17, 2022
ச.பாலமுருகன் வழக்கறிஞராகவும் மனித உரிமை செயர்பாட்டாளராகவும் இருக்கிறவர்.பழங்குடி மக்களின் வாழ்க்கை,பண்பாடு,காடுகளுடனும் இயற்கையிடனும் அவர்களுக்குள்ள உறவு ஈடுபாடு போன்றவற்றின் மீது ஆர்வத்துடன் இருந்தவர் இம்மக்களுக்கு நிகழ்ந்த நிகழ்த்தப்படும் மனித உரிமை மீரல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்கத்தின் வெளிப்பாடே இந்த சோளகர் தொட்டி என்னும் இவர் எழுதிய புத்தகம்.

தமிழக கர்நாடக எல்லை காடுகளில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களே இந்த சோளகர்கள் இவர்களும் வசிக்கும் இடத்தை தொட்டி என அழைப்பர்.சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அரசால் ஒரு அதிரடிப்படை அமைக்கப்படும் அவர்கள் வீரப்பனை பிடிக்கிறோம் என்ற பெயரில் இந்த காட்டினுள் நுழைந்து இந்த பழங்குடி மக்களையும் வீரப்பனின் சமுதாயத்தை சேர்ந்த மக்களையும் விசாரணையின் பெயரில் அவர்களுக்கு நிகழ்த்திய கொடுமைகளைப் பற்றி பேசுவதே சோளகர் தொட்டி என்னும் இந்த புத்தகம்.

புத்தகத்தை இரண்டு பகுதியாய் பிரிக்கலாம் ஒன்று அதிரடி படையினர் தொட்டியினுள் நுழைவதற்க்கு முன் நுழைந்தப்பின்.

முதற் பகுதியில் சோளகர்களின் வாழ்க்கை பண்பாடு உறவு முறை காட்டைப்பற்றிய அவர்களது அறிவுத்திறன் என அனைத்தையும் தெளிவாக அரியலாம்...இவர்கள் வேட்டையே முதன்மைத்தொழிலாக கொண்டவர்கள் சொந்தமாக நிலம் எதுவும் இல்லாமல் விவசாய நிலங்களில் கூலியாக வேலை செய்வார்கள்.தொட்டியின் Introduction ஐ ஆசிரியர் விவரிக்கும்போது எனக்கு பேராண்மை படித்தில் ஜெயம் ரவியின் அந்த சின்ன பழங்குடி மக்கள் வாழும் அந்த location தான் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது.புத்தகத்தை நான் வாசிக்கும்போதுக்கூட படித்த அனைத்து நிகழ்வுகளை அந்த இடத்தில் நடந்ததுபோன்ற scene என் மனக்கண்முன் ஓடிக்கொண்டு இருந்தது...

இந்த மக்கள் அவ்வளவு ஒரு எளிமையானவர்கள் உணவோ அங்கு விளையும் ராகிதான் பெரும்பான்மை .வருடத்தில் என்றோ ஓரிரு நாள் அரிசி மற்ற அனைத்து நாட்களும் ராகி கலியுடன் சூடான மொச்சைக்குழம்பு அல்ல ராகி அடை செய்து அதனை தேனுடன் தொட்டு சாப்பிடுவாரகள் . அவர்களின் வீடும் கூட ஓடினாலோ சிமென்டினாலோ இல்லாமல் அந்த பகுதியில் விளையும் மூங்கிலாலே அமைத்து இருப்பார்கள்.

"கண்டவன் தின்னது போக
காத்தவன் தின்னது போக
கள்வன் தின்னது போக
விளையனும் சாமி"....
இப்பாடலை அம்மக்கள் அருவடையின் போது பாடுவர்..இதில் ஒரு நிகழ்வு வரும் அதில் ஒருத்தன் மானை வேட்டையாட அதனை துரத்திக்கொண்டு ஓடுவான் ஆனால் அந்த மான் தப்பித்து ஓடிவிடும் உடனே அவனும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அன்றைய வேட்டையை முடித்துக்கொண்டு தொட்டி திரும்புகையில் அவனை ஒரு கரடி தாக்கவரும் அதனால் இவன் அதனை கொன்று விடுவான் . கொன்று அதனை தொட்டிக்கு கொண்டு சென்று அனைவருக்கும் பிகிர்ந்து கொடுப்பான் வேட்டையாடிவனின் பங்கு அதிகம் போக அதுமட்டுமின்றி நாய்களுக்கும் ஓர் பங்கு கரி அதிகம் மீதமிருந்தால் அதனை பக்கத்து தொட்டியினருக்கும் வழங்குவர்.இந்நிகழ்வுகளின் மூலம் சோளகர்கள் ஓர் பொதுவுடைமை சமுதாய கட்டமைப்பை கொண்டவர்களாகவும் அவர்களுக்கு தேவையில்லாதவற்றை தொடக்கூட விரும்பாதவர்கள் என்பதனை அறியலாம்.

காட்டைப்பற்றிய இவர்களின் அறிவு அபாயகரமானது இந்த வழியில் யானை இருக்கிறது என்பதை வெறும் அந்த இடத்தில் வரும் வாசனையை வைத்தே கண்டுபிடிப்பவர்கள் எந்த விலங்கு எங்கு இருக்கும் எப்போது தண்ணீர் குடிக்க வரும் என்ன சாப்பிடும் என காட்டின் மொத்த Blueprint ஐ உள்ளங்கையில் வைத்து இருப்பவர்கள்..ஆனால் These people are very innocent காசின் பயன்பாட்டு அறியாதவர்கள் தங்களுக்கு தேவை ஒரு வருடத்திற்கான உணவு ராகி அது கிடைத்தால் போது என நினைப்பவர்கள் யாராவது காசு கொடுத்தால் அதை குச்சியில் கோர்த்து மாலையாக வீட்டின் முன் மாட்டிவிடுவார்களாம்.சந்தனத்தை ஏன் வெட்டுகிறார்கள் என தெரியாது காட்டில் இருக்கும் பல மரங்களைப்போல சந்தன மரமும் ஒன்றுதான் நினைத்து வாழ்ந்தவர்கள் அந்த சந்தனத்தை இறந்தவர்களை எரிக்கும்போது வாசத்துடன் இருக்க பயன்படுத்துவது மட்டும்தான் அவர்களுக்கு தெரிந்தது . அதுபோல யானையின் தந்தத்திற்க்காக ஏன் யானையை வேட்டையாடுகிறார்கள் என தெரியாது இதை கதையில் மல்லி ரதி என இரு பெண்களின் உரையாடல் மூலம் அறியலாம்

பலநாள் முன்பு இறந்துப்போன யானையை பார்ப்பார்கள்

மல்லி : பாவம் யானை ..இந்த யானையை என் தந்தத்துக்காக கொல்றாங்க ? அந்த தந்தத்த வெச்சி என்ன செய்ய போறாங்க..

ரதி : தந்தத்த வெச்சி யானை பொம்ம சொஞ்சி வெச்சிப்பாங்க போல...

இப்படி இவர்கள் வெளி உலகம் அறியாமல் வாழ்ந்துவந்தனர் அப்படி இருக்கும்போதுதான் அதிரடிப்படையினரின் Entry யானது அமைதியாய் இருக்கும் தண்ணீரில் கல்லை கொண்டு எரிந்ததைப்போல் பல கொடூரமான நிகழ்வுகளுக்து தொடக்கப்புள்ளியாய் அமையும்.

இவர்களுக்கு சில நாட்களாய் இரவில் சில்பேர் வந்து கட்டையை ( சந்தனத்தை ) வெட்டிக்கொண்டு போகிறார்கள் என தெரியவரும் அப்போது இதனால் தங்கள் தொட்டியினருக்கு ஆபத்து நிகழுமோ என பயந்து இருப்பார்கள் அவர்கள் நினைத்ததுபோலவே கர்நாடக போலீஸ் காட்டினுள் கேம்ப் அமைத்து இந்த சோளக ஆண்களை இரவானால் காடு முழுக்க மூங்கில் கட்டையை தட்டிக்கொட்டு திரிய வேண்டும் என உத்தரவிடுவார்கள் அவர்களும் அவ்வாரே செய்ய அவர்களுள் ஒருவன் மனைவியின் மோசமான உடல்நிலையால் வராமல் போக இதனால் கோபம் கொண்டு அவனை அடித்து அவன் உடம்பு சீழ்பிடித்து அவன் இறந்தே போவான்...கர்நாடக போலீஸ் இவ்வாறு செய்கிறார்கள் என தமிழ்நாடு போலீசிடம் நியாயம் கேட்க போயி இவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்..

தமிழில் பல கொடூரமான லாக் அப் சீனாக விசாரணை படம் ஜெய் பீம் லாக் அப் சீன் என சொல்லுவார்கள் ஆனால் இங்கு இம்மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடூரங்கள் வெறும் கற்பனையாய் இருக்கக்கூடாதா என மனம் ஏங்கும் அளவிற்கு ஓர் கொடுமையை இம்மக்கள் அனுபவித்துள்ளனர் என்பது வேதனைக்குறிய ஒன்று...

வீரபனுக்கு அரிசி கொடுத்த என சொல்லி இம்மக்களை கேம்ப்பிற்க்கு கொண்டுவந்து சித்தரவதை செய்துள்ளனர்...பல ஆண்களை மயக்கம் வரும் அளவிற்கு அடித்து பின் டெய்லரை அழைத்து வந்து வீரப்பன கூட்டம் அணியும் பச்சை சட்டடையை அணிவித்து கையில் துப்பாக்கி கொடுத்து காட்டில் சுட்டு கொன்றுள்ளனர் பலரை முட்டியில் சுட்டு விடுவார்கள் அப்படி செய்தால் விடிவதற்க்குள அவன் முட்டியில் சீழ் பிடித்து புழு ஏறி அவன் இறந்தவுடன் அதனை பேப்பரில் வீரப்பனின் ஆட்களை பிடித்ததாக போட்டுக்கொள்ளுவார்கள்..

கர்பிணி சிறுமி என பாராபட்சம் பாரக்காமல் பலர் சேர்த்து ஒரு பெண்ணை கொடூரமாய் புணர்ந்துள்ளானர்..மகன் அப்பாவை அடிக்கவேண்டும் அடி மெதுவாக விழுந்தால் அவனுக்கு பின்னாடி நிற்பவன் இவனை பலமாய் அடிப்பான் அதேபோன்று பெற்ற மகனை அப்பா அடிக்க வேண்டும் அடி மெதுவாக விழுந்தால் அப்பனுக்கு மரண அடி ..மகனை விட்டு அப்பாவை செருப்பால் அடிக்கவைப்பதும் அப்பாவை வைத்து மகனை செருப்பால் அடிக்கவைப்பதும் , பெற்ற தாயையும் மகனையும் நிர்வானமாய் ஓர் அறையிலும் தந்தையையும் மகளையும் நிற்வானமாய் ஓர் அறையிலும் என பல விவரிக்கமுடியாத கொடுமைகள்...

இத்தனை நாட்களாய் workshop என்ற வாரத்தையை கேட்டால் சாதாரன வார்த்தையாக தெரிந்த எனக்கு இனி அந்த வார்த்தை கேட்கக்கூட விரும்பாத அளவிற்க்கு இந்த புத்தகத்தில் வரும் workshop என்னை மாற்றியுள்ளது....இம்மக்களிடமிருந்து உண்மையை வரவழிக்க இவர்களை தனித்தனியாய் workshop க்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி தலைகீழாய் தொங்கவிட்டு காதுகளிலும பிறப்புறுப்பிலும் clip போட்டும் Electric shock கொடுப்பார்கள்.. wire யை மாட்டியவுடன் ஒருவன் இயந்திரத்தை சுற்றுவான் ஆண்கள்ளுக்கு நான்கு சுற்று பெண்களுக்கு மூன்று...பெண்களுக்கு பிறப்புறுப்பிலும் மார்பகத்திலும் மாட்டி shock கொடுத்து அவர்கள் கதறி துடித்து மயங்கியவுடன் தூக்கிக்கொண்டுப்போய் சிருநீர் நாற்றமும் மலம் நாற்றமும் வீசும் அறையில் போட்டுவிடுவார்கள்..அதேபோல் ஆண்களுக்கும் இதில் ஒருவனுக்கு வீரப்பனுக்கு போலீஸைப்பற்றி உளவு கூறியதாக சொல்லி அவனுக்கு தொடர்ந்து shock கொடுத்ததில் அவன் துடிதுடித்து அங்கேயே மலம் கழிந்திடுவான். இதனை பார்த்த அதிகாரி நாயே இப்படி இந்த இடத்த நாரடிச்சிட்டியே வாடா வா வந்து உன் பீய நீயே தின்னு என்று அந்த கொடுமையிலும் கொடுமையாய் அந்த மனிதனின் நரகலை அவனேயே உண்ணச் சொல்லி அவனும் பயத்தில் உண்டு வெளியே சென்று வாந்தி எடுத்துவிடுவான்..இந்த சீனை படிக்கும்போது I just throw my book away and cried like hell i can't control my emotions ..

ஒருகட்டத்தில் இந்த விஷயம் எல்லாம் வீரப்பனுக்கு தெரியவரும் ஆனால் அவன் அப்பாவி மக்களை காப்பாற்ற எந்த முயற்ச்சி செய்யவில்லை..இங்கு வீரப்பனை புனிதன் வீரன் குற்றவாளி என எதையும் நான் முன் நிறுத்தவில்லை என் கோபமெல்லாம் அவன் தனக்காக இப்படி அப்பாவி மக்கள் கொடுமைப்படுத்தபடுகிறார்கள் எனத் தெரிந்தும் ஏன் அப்போது சரணடையவரவில்லை ? ஏன் காப்பாற்றவரவில்லை ? என்ற கேள்விதான்...ஆனால் பலர் வீரப்பன தனது demandஆக இம்மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியாதக சொல்கிறார்கள் I have no idea about that .. i have to read more about him and these issues.

இதில் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை என்ன வென்றால் இத்தனை கொடுமைகளை அனியாயமாய் அனுபவித்த இந்த குற்றமற்ற மக்களுக்கு வீரப்பன் யார் என்றே தெரியாது அவனை பாரத்ததும் இல்லை..இவர்கள் அப்பாவிகள் கிழங்கு பறிக்கவும் இலை பறிக்கவும் காட்டிறகாகுச் சென்றவர்களுக்கு அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் மன்னிக்கமுடியாத இத்தனை கொடுமைகளையும் அநீதியையும் நிகழ்த்தியுள்ளனர் என்பது வேதனைக்குறியது..

மனித உரிமை மீறல் என்றால் அது ஆப்பிரிக்காவிலோ , இலங்கையிலோ , யூதர்களுக்கோ நிகழ்த்தப்பட ஒன்று மட்டும் அல்ல அது நம் ஊரிலேயே நம் மக்களுக்கும் நிகழ்ந்துள்ளது அதற்கு ஓர் எடுத்துக்காட்டே இந்த சோளகர்கள்..

soft hearted people don't read this book
Profile Image for Jaya Kumar K.
24 reviews7 followers
January 2, 2016
SOLAKAR THOTTI, more than a novel, is a factual detailing of terror unleashed by the Tamilnadu and Karnataka police personnel during the infamous hunt for the notorious forest brigand Veerappan.

The author, who worked closely with the affected tribal people for their rehabilitation has just put on pen the powerful overflow of emotions of being a witness to the horrors.

The accounting starts with a rather sedate lifestyle of the tribes oblivious of the changes that the world outside the jungles had gone through. Then comes the gradual encroachment of their land and culture by the so called Civilized people of the plains and the sudden onslaught of the terror after the hunt for Veerappan begins.

The life of the villages are totally devastated, the once revered culture belittled, the men folk mercilessly tortured and even killed, and the modesty of the women folk outraged on a day-to-day basis.

On the whole, the tribes are treated more like animals rather than humans. It even takes us to the era of the African slave trade.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews27 followers
February 18, 2020
வீரப்பன் வேட்டையில் பழங்குடியினர் அனுபவித்த துன்பங்களையும் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகளை பதிவு செய்துள்ளார்.முதல் பகுதி அவர்களின் வாழ்வியலோடு ஒன்ற வைத்துள்ளார். இரண்டாம் பாதியில் காவல் மற்றும் ராணுவத்தின் பிடியில் அவர்கள் சந்தித்த இன்னல்களை கண்ணீரோடு பதிவிட்டு உள்ளார்.
108 reviews3 followers
February 15, 2023
பழங்குடி மக்கள் , அவர்கள் சார்ந்த வாழ்வியல் மிக சொற்பமே நான் வாசித்துள்ளேன்.

எளிய மனிதர்கள் மீது நடத்தப்படும் வன்முறை என்னற்றவை.

வலிகள் சக மனிதன் தரும் போது எப்படி அதை ஏற்றுக்கொண்டு ��ாழ்வது.

நாவல் முழுக்க விறவி இருக்கும் வேதனை, துயர், வன்முறை, வசை,ரணம் நம்மை அழ வைக்கும்.

பீனாச்சி காணம் நானும் கேட்க ஆசை.

வீரப்பன் தேடும் படலம் என்னும் பெயரில் கொடுமைகள், வன்புணர்வுகள், சித்ரவதைகள். வாசிக்க முடியாமல் நின்ற நொடியில் மனம் வருந்தி கணக்க செய்தது.

காடே எனது காணி தான் அவர்கள் வாழ்வு. அதை சிதைத்து , தனது மண்ணிலே தன்னை அகதியான நிலை தான் அவலம்.

அவனது கூர் வாளை கொண்டு அவனையே
மிரட்டும் வாழ்வு தான்.

நிச்சயம் வாசிக்க பட வேண்டிய நாவல்.
Profile Image for Balaji M.
221 reviews14 followers
April 12, 2023
"சோளகர் தொட்டி"-ச.பாலமுருகன்
*************************************

240 பக்கங்கள் - சரியாக 7 இரவுகளில் படித்தாகிவிட்டது..காரணம் , கதைச்சம்பவங்களும், தொய்வில்லாமல் கொண்டுபோகும் எழுத்துநடையும்!!!

எதிர்பார்த்ததை விட, நல்ல புத்தகத்தை வாசித்திருக்கிறேன்.
வாசித்திருக்கிறேன் என்பதை விட, 'இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா ' என்பதை போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டேன் எனச் சொல்லலாம்.

அதாகப்பட்டது...

வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலிஸுக்கும் , வீரப்பன் கும்பலுக்கும் மத்தியில் ரணவேதனைகளையும் வன்கொடுமைகளையும் அனுபவித்த மலைவாழ் மக்களை பற்றிய நாவல்.

கதைகளமாக,.... சோளகர் இனத்தை கொண்ட 'தொட்டி' என்ற தமிழக கர்நாடக எல்லையோர வன பகுதியில் உள்ள கிராமம்.

நாவலின் தொடக்கத்தில்..
கொம்பன் யானை,
கொத்தல்லி..
எனப் பெயர்களை படித்தவுடன்....அட 'கும்கி' படக் கதையோ? எனச் சிறு சந்தேகம்..

ஆனால் அப்படி ஏதும் மொத்தமாக 'காப்பி'யடித்துவிடவில்லை பிரபு சாலமன்.
அப்படியே 'காப்பி' அடித்திருத்தாலும், படம் 'சென்ஸார் போர்டை' தாண்டியிருக்காது.

முதல் 100 பக்கங்கள்(தோராயமாக) ...
சோளகர்களின விவசாயம், பழக்க வழக்கங்கள் , திருமண முறைகள் பற்றி விறுவிறுப்பும் , நகைச்சுவையும் கொண்ட கதையம்சமாக போகிறது. சற்றே இடதுசாரி வாழ்க்கை முறையாகவும் காட்டபடுகிறது.

ஆனால்,
அதன்பின் வரும் பக்கங்கள், அப்பப்பா...!!! இரத்தக்களரி.

லத்தியடி, செருப்படி, நிர்வாணம், கற்பழிப்பு, ரணம், ரத்தம் , சீழ், மலம், சிறுநீர், துப்பாக்கிச்சூடு, மரணம் என வன்கொடுமைகளுக்கு உண்டான அத்தனை அம்சத்தையும் பயன்படுத்தியிருக்கிறார், எழுத்தாளர் "ச.பாலமுருகன்"

இவர், இதில் எழுதிய சம்பவங்கள், 100% கற்பனை எனத் தள்ளிவிட முடியாது.. நாம் அரசல் புரசலாக கேள்விப்பட்ட விஷயங்களை, உள்ளிறங்கி விவரித்திருப்பார்.

ஆனால் இவ்வளவு அருவருக்க தக்க சம்பவங்களை விவரித்திருத்தாலும், அதன் வலியை மட்டும் நமக்கு உணர்த்தி, காட்டினுள் பயணப்பட வைத்திருப்பார்.

போலிஸா? விரப்பனா?....
யார் நல்லவர் என்பதை விட..இந்த தேடுதல் வேட்டையில் , அகப்பட்டு சீரழிந்தது, மலைவாழ் மக்களே! எனத் தெளிவாக காட்டியிருக்கிறார், எழுத்தாளர்!

நிச்சயம் , மனதளவில் கனத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய புத்தகம் !!!
Profile Image for Thirumalai.
89 reviews13 followers
November 22, 2021
பழங்குடி வாழ்வியலை மிக நெருக்கமாக விவரிக்கும் நாவல். மற்ற கதைகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்பது தமிழ் வாசகர்ளுக்கு ஒரு புதிய உலகை அறிமுகம் செய்ததில் சொல்லலாம்.

அவதார் படம் 2009 எடுக்கப்பட்டிருந்தாலும் பல இடங்கள் இந்த நாவலில் அந்த காட்சிகளை கண்முன் கொண்டு வருகிற்து. ஒரு கிராமம் ஒரு குடும்பமாக வாழ்வது என்பது ஒரு பெரும் கனவு என்று நினைத்திருந்தேன் ஆனால் இது ஒரு இவர்களின் வாழ்க்கைமுறை என்பதை நாவலின் மூலம் அறியும்போது பெரும் மகிழ்ச்சிதான் முதலில் எனக்கு வந்தது. இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்வு இதற்கு மிக நெருக்கமானது ஆனால் காலங்காலமாக உருவாகி வரும் அந்த கலாச்சாரம் இதில் வருவதென்பது பகல் கனவுபோலத்தன் இருக்கும்.

கதை மாந்தர்கள் நல்லவர்கள் மட்டுமே என்று நினைக்கிறேன் அல்லது நாவலின் சோளகர் தொட்டியின் ஒரு மனிதனின் பாதிப்பால் அப்படி நினைக்கின்றேனா என்று தெரியவில்லை. அவ்வளவு பேரும் ரத்தமும் சதையுமாக மண்ணில் உலவியவர்கள் என்றால் நம் தர்க்க மனம் ஒப்புவதில்லை அதுவும் தன் மைய நோக்குகொண்ட நடுத்தர மனம் இதை நம்புவதில்லை என்றால் மிகையல்ல.

தமிழின் மிக முக்கியமான ஆவணமாகவும் வரப்போகும் பல கதைகளுக்கான உற்றுமுகம் இந்தக்கதையில் இருப்பதாகவும் நினைக்கிறேன்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
April 18, 2021
சோளகர் இன மக்கள் வனபகுதியை ஓட்டிய நிலப் பகுதியில் தொட்டி என்கிற ஊரில் வாழ்கிறார்கள். சந்தனமரத்த கடத்தும் வீரப்பனுக்கு இந்த வனப்பகுதியை ஒட்டி வாழும் மக்கள் மூலமாகதான் உணவுப் பொருட்கள் செல்கிறது. நீ தான அவனுக்கு ராகி மாவு, சக்கர, டீ தூளு குடுத்த என அதிகாரிகள் சத்தேகப் படுபவர்கள் அனைவைரயும் அடித்து, உதைத்து துன்புறுத்துகிறார்கள், அதிகாரிகளின் சந்தேக வலையத்தில் இருப்பவன் கிடைக்கவில்லை எனில் அவனது மனைவி, மகள்களை விசாரணைக்கு அழைத்து சென்று பகலில் அடித்து, உதைத்து துன்புற்த்த இரவில் அந்த பெண்களை புணர்ந்து தங்களின் இயலாமையை தீர்த்து கொள்கிறார்கள். இவங்கள காப்பாத்த யாராவது வர மாட்டாங்களா என எண்ணி ஏங்க வைக்கிறது அடுத்தடுத்த பக்கங்களை படிக்கும்போது. வீரப்பன் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் அதிகாரிகள் வனப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை பதிவு செய்கிறது இந்த நாவல்.

இது ஒரு கற்பனை பதிவா இருக்கனும் என எண்ண வைக்கிறது இந்த நாவல் ஆனால் இதில் பதிவு செய்யப்ட்டது அனைத்தும் நடத்த உண்மை நிழ்வுகள் என புரியும் போது மனம் வலிக்கிறது. -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews23 followers
November 13, 2017
கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வாசிக்க ஆரம்பித்து பின் பெரியதொரு அனுபவத்தை தந்தது இந்நாவல் .
முதல் பாதி சோளகர் என்ற மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் இரண்டாம் பாதி வீரப்பன் தேடுதல் வேட்டையினால் அவர்கள் பட்ட துன்பங்களை பற்றியும் பேசுகிறது. வீரப்பன் மரணத்தை அரசின்/போலீசின் சாதனையாக சிலாகிப்பவர்கள் ஒரு முறை இதை வாசித்து விடுதல் நலம்
Profile Image for Praveen Selvaraj.
2 reviews1 follower
April 25, 2015
சந்தனக்கடத்தல் வீரப்பன். இவரை(னை)ச் சுற்றிய செய்திகள், அரசியல் நகர்வுகள், போரட்டங்கள் அனைத்தையும் அவ்வளவு எளிதில் மறந்து விடுவதற்க்கில்லை. போலீசாரும் அதிரடிபடையினரும் வீரப்பனை சுட்டுக் கொன்றதாக அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள், பாராட்டுகள், பரிசுகள், பதவி உயர்வுகளுக்கான செய்திகள் மட்டுமே பெரும்பாலான சாமானிய சமூகத்தை வந்தடைந்திருக்கிறது. அனால் அதன் பேரில் அவர்கள் நிகழ்த்திய அப்பட்டமான மனித உரிமை மீறல்களும், கொடூரங்களும், பாலியல் ���ன்மங்களும், உயிர் பொருள் இழப்புகளும் வெளி உலகிற்கு வராமல் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன.

மலைக்கும், காட்டிற்கும் தங்கள் வாழ்கையை ஒப்புக் கொடுத்துவிட்டு இயற்கையோடு இயல்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சோளகர் தொட்டி கிராமத்தின் பழங்குடி மக்கள். அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, சடங்குகள், சந்தோஷங்கள், துக்கங்கள் என பயணப்படும் பக்கங்கள் வீரபனைக் குறிவைத்து தமிழக, கர்நாடக போலீசாரும், அதிரடிபடயினரும் வட்டமிட ஆரம்பித்தவுடன் ரத்தமும், வலியும், வேதனையும், கண்ணீரும், மூத்திரமும், மலமுமாக நனைகின்றன.

விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று கணவன் கண்ணெதிரில் கற்பழிக்கப்படுவதும், வீட்டுக்கு வந்ததும் அவள் தீட்டுப்பட்டுவிட்டாள். அவளுடன் இனி வாழ முடியாது என வீட்டை விட்டு துரத்துவதும்…

விசாரணை அறையில் அடைபட்டு பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுக்கு உதவி கேட்கப் பயப்பட்டுப் பற்களால் கடித்துத் தொப்புள் கொடியை அறுத்துப் பிரசவம் பார்ப்பதும்…

“ஆறு மாச புள்ள வயித்துக்காரிங்க..என்னைய விட்ருங்க..” எனக் கெஞ்சிக் கதறியும் மனசாட்சியே இல்லாமல் மூன்று போலீஸ்காரர்களால் ரத்தம் வழிய மாறி மாறி சீரழிப்பதும்…

வயதுக்கு வந்த தன் மகளை அவர்களிடமிருந்து எவ்வளவோ காப்பாற்ற முயன்றும் முடியாமல் கற்பை இழந்து பரிதவிப்பதும்…

விசாரணை என்ற பெயரில் அம்மணமாக நிற்க வைத்து பிறப்புறுப்புகளிலும், மார் காம்புகளிலும் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்வதுமென…நெஞ்சை நடுங்கி உறைய வைக்கின்றன.

இவை எல்லாம் வெறும் கதை என்றோ, ஆசிரியரின் கற்பனை என்றோ சத்தியமாக ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இதை எழுதிய ச.பாலமுருகன் அவர்கள் அம்மக்களுடன் தங்கி அவர்களுக்காகப் போராடி வரும் மனித உரிமை ஆர்வலர். பாதிக்கபட்ட மக்களின் மூலமாக திரட்டப்பட்ட தகவல்கள் வழியாக எழுதப்பட்டது இந்நூல் என உணர முடிகிறது.

வீரப்பனைப் பற்றி எந்த தகவல்களும் இன்றி அவன் பெயரில் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் மட்டுமே விவரிக்கப்படுகிறது கதை முழுதும். படித்துக் கொண்டிருக்கும் போதே கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் அரும்புவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. வேறு யாருக்கோ எங்கோ நடந்தது என அவ்வளவு எளிதில் கடந்து செல்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. நாவல், கதை என்பதைத் தாண்டி என்னளவில் ஒரு ஆவணமாகவே இதை கருதத் தோன்றுகிறது.
Profile Image for Thamiziniyan Supa.
Author 1 book27 followers
March 3, 2015
அதிக கனத்தோடு கையில் சுமந்து படித்த புத்தகம் இது. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த புத்தகமும் இதுவாகத்தான் இருக்கும்.
Profile Image for Mohamed Azarudeen.
7 reviews3 followers
July 10, 2024
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்


தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் வன எல்லையில் வாழும் பழங்குடி சோளகர் சமூகத்தின் வாழ்வியல் மற்றும் வீரப்பன் தேடுதலில் ஏற்பட்ட கொடுமைகளை பிண்ணனியாக கொண்டு உருவான புனைவு நாவலே "சோளகர் தொட்டி"


இரண்டு பகுதிகளைஉள்ளடக்கிய இந்த புத்தகம்,  முதல் பகுதியில் காடு மற்றும் நிலத்தின் மீது சோளகர்கள் கொண்ட காதல், நில அபகரிப்பு, வேட்டை, குடும்ப உறவு, தெய்வ வழிபாடு மற்றும் அவர்களது வாழ்வியலை மிக அழகாக விவரிக்கிறது. 


இரண்டாம் பகுதியில் எழுதப்பட்ட சோளகர் அனுபவித்த துரோகங்கள், வன்முறை, உளவியல் மற்றும் பாலியல் கொடுமைகள் வாசிப்பவர் இரத்தம் உறைய வைக்கிறது. தங்களின் சொந்த விளைநிலங்களிலிருந்து அண்ணியராக்கப்பட்டு, வாழ்வோடு பின்னிய வனங்களிலிருந்து சுதந்திரம் பிரிக்கப்பட்ட அவல நிலை மனதை கனக்க செய்கிறது. 


ஆஸ்விட்ச் வதைமுகாம், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறைக்கு நிகரான வன்முறையை இம்மக்கள் அனுபவித்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இது ஒரு புனைவே என்றாலும், அந்த வனம் பல மாதி, சிக்குமாதா, மல்லி, சிவண்ணா பொன்ற மனிதர்களை கண்டது பொய்யாகாது. அதிகாரம், அரசியல் பெயரில் எளிய மக்களுக்கு நிகழ்த்திய சித்திரவதைகள் கற்பனைக்கு எட்டாதவை. 

இவை அனைத்தும் எழுத்தாளரின் கற்பனையாக இருந்த விடக்கூடாதா என மனம் ஏங்குகிறது.


சென்ற ஆண்டு வெளியான " The Hunt for Veerappan"(Netflix) மற்றும் "Koose Muniasamy Veerappan"( Zee5) ஒரு சில விஷயங்களில் மாறுபட்டாலும் இந்த மக்கள் கண்ட சித்திரவதைகளை மறுக்கவில்லை. அதையே இந்நாவல் எழுத்தில் படிக்க சற்று கூடுதல் தைரியம் தேவைப்படுகிறது.


நாவலின் ஆசிரியர், ச. பாலமுருகன் பழங்குடி மக்களின் மீதான மணித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். சோளகரோடு கலந்து வாழ்ந்து இந்த துன்பியல் நிகழ்வுகளை வெளியிட்டதற்காக பல நன்றிகள். 


சற்று கடினமாக இருந்தாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்
Profile Image for HARI VIGNESH  KUMAR.
3 reviews1 follower
March 9, 2021
புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஆசிரியர் பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மற்றும் வசிப்பிடங்களைப் பற்றி பேசுகிறார். இரண்டாம் பாகுதியில் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சோளகர்களுக்கு நடந்த மனித உரிமை மீறல் பற்றி பேசுகிறார். இரண்டாவது பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல் படிக்க படிக்க நம்மை சோகமாக்கிவிடும்.
Profile Image for Pradeep.
5 reviews2 followers
June 13, 2022
*படித்து முடிக்கும்போது மனதில் பெரும்பாரம் ஒன்று ஏறிவிடுகிறது... இது ஒரு வரலாற்று பதிவாக இல்லாமல் கற்பனை நாவலாக இருந்துவிட கூடாதா என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.*
Profile Image for Prabhu R.
22 reviews32 followers
July 18, 2014
ச.பாலமுருகனின் இந்த நாவலைப் பற்றி நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். ‘வீரப்பன் தேடலில் போது நடந்தது’ என்ற அந்த ஒரு வாக்கியம் மட்டும் என் மனதில் பதிந்திருந்தது.தஞ்சையில் அவ்வப்போது ஏதாவது ஒரு புத்தக கடையில் நுழைந்து 1/2 மணி நேரம் வேடிக்கை பார்ப்பது வழக்கம் (இது ஒரு வித வியாதியா என‌ தெரியவில்லை).அப்போது தான் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது அந்த புத்தகத்தை வாங்கினேன். இரண்டு மூன்று வாரங்கள் கடந்தது. ஓர் வார இறுதி , தனிமை என இரண்டு சொர்க்கமும் சேர்ந்துக் கிடைத்தது. அப்போது தான் துவங்கினேன் சோளகர் தொட்டியை வாசிக்க...

பொதுவாக முன்னுரை வாசிப்பது எனக்கு விருப்பமில்லாத ஒன்று, ஆதலால் நேராக நாவலில் குதித்துவிட்டேன். நாவலை இரண்டு பகுதியாக பிரிக்கலாம்.

முதல் பகுதி :

சோளகர் தொட்டி மக்களின் வாழ்வியல் முறை, அவர்களின் வழிபாடு, விவசாயம், கொண்டாட்டங்கள் என நகரும்.துவக்கத்தில் கும்கி ப��ம் பார்ப்பது போல இருந்தது. நாவலின் கதாப்பாத்திரங்கள் நம் மனதிற்கு பதிந்து விடும். கண‌வனின் மர‌ணத்திற்கு பிறகு கொழுந்தனை திருமணம் செய்வது என சின்னச் சின்ன சம்பிரதாய முறைகளும், மக்களின் கஞ்சா பழக்கத்தை பற்றின தகவல்களும் கதையோடு நகரும். அரசின் சட்டத்திட்டங்கள் அறியாது நிலத்தை பறிக்கொடுத்து தவிக்கும் அவர்களின் நிலைமை சற்றே நம்மை வேதனையின் நுழைவாயில் வரை எடுத்துச் சென்று அடுத்த பகுதியில் வேதனையில் முழுமையாக தள்ளிவிடும்.

இரண்டாம் பகுதி:

நரகம் என்றதும் நமது கற்பனை எவ்வளவு தூரம் செல்ல நேரிடுமோ அதை விட பல மடங்கு கடந்து நிற்கிறது சோளகர் தொட்டி மக்களின் நிலைமை. தமிழகம், கர்நாடகம் என பாகுபாடு இல்லாது கொடுமைகள் அந்தந்த மாநில அதிகாரிகள் (வீரப்பன் தேடலின் போது ஈடுப்பட்ட சில அதிகாரிகள்) மூலம் அங்கு அரங்கேறியுள்ளது. நாம் சித்திரிக்கும் ராட்சகர்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள் என்பதை நாவல் ‘பளார்’ ‘பளார்’ என முகத்தில் அறைந்தார் போல் சொல்லிக் கொண்டே நகர்கிறது.

நாவல் கொடுமையின் உச்சத்தை நம்மிடையே நகர்த்திச் செல்லும் போது, தொடர்ந்து படிக்க முடியாமல் மனம் தள்ளாடும். கரண்ட் அறை (சரியாக நினைவில் இல்லை) என ஒர் அறை இருக்கும். அங்கு மக்களை நிர்வாணமாக தொங்க விட்டு உடம்பில் மின்சாரம் பாய்ச்சி விசாரனை என்ற பேரில் நரக்த்தினை வடிவமைத்த பெருமை அந்த அதிகாரிக்களுக்கே சேரும்.இதில் ஆண்,பெண் பேதமில்லை. மாதவிடாய், கர்ப்பம் என பாகுபாடு இல்லை. கண்கள் மூடி சிறிது நேரம் அமரும் போதெல்லாம் அந்த கோரக் காட்சிகள் நம் முன் வந்து நம்மை ரணமாய் வதைத்துச் செல்லும்.

இந்த நாவலின் பாதிப்பு கண்டிப்பாக சிறிது நாட்களுக்கு நம்மை விட்டு பிரிந்துச் செல்லாது. தமிழர்கள் என அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் நாம், தமிழனின் கருப்பு சரித்திரத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தனிமை, வார இறுதி இந்த இரண்டு சொர்க்கமும் சோளகர் தொட்டியின் நரக‌ வேதனையை என் கண்முன்னே காட்டியது. சென்ற வருடம் நான் படித்த சிறந்த புத்தகம் மற்றும் என்னை மிகவும் பாதித்த புத்தகம் எனில் இதைத் தான் சொல்வேன்.
Profile Image for A.
118 reviews3 followers
March 23, 2020
All cops are bastards
Profile Image for Sugan.
144 reviews38 followers
November 14, 2023
Disturbing



The revelation of events akin to Nazi concentration camps happening in close proximity and recent times is undeniably disturbing. The unsettling realization that individuals involved in such acts, live among us today as cops, raises disconcerting questions. The possibility that these individuals were recognized and rewarded for their service to the system adds another layer of concern.

While the literary value of the book may not stand out, its unique and compelling content makes it a worthwhile read. The narrative is so immersive that it transcends the realm of fiction, drawing readers into a gripping story that leaves a lasting impact.
Profile Image for Jagan Sagaya Nathan.
26 reviews2 followers
February 4, 2020
எல்லை இல்லா துன்பங்களின், ஒட்டுமொத்த வெளிப்பாடுகளின் தொகுப்பு இந்த புத்தகம்
Profile Image for Karthikeyan Radha.
26 reviews1 follower
April 19, 2025
சத்தியமங்களம் வனப்பகுதியில் இருக்கக்கூடிய மலை கிராமங்களை தொட்டி என்று அழைக்கிறார்கள். சோளகர் என்ற இன மக்கள் வசிக்கக்கூடிய மலை கிராமத்தின் பெயர் சோளகர் தொட்டி.

மூங்கில் தடிகளை நட்டு வைத்து அதன் மேல் களிமண் பூசி கூரை வெய்து அந்த வீட்டில் வாழ்கிறார்கள். ஆனால் அத்தகைய வீடு ஒரு மழைக்குக் கூட தாங்குவதற்கு வாய்ப்பு இல்லை.
வனத்தில் வாழ்வதில் குளிர் அதிகம் என்பதால் நடு வீட்டில் பலகை வடிவில் கல் பதிக்கப்பட்டு அதன் மேல் காய்ந்த விரகுகளை அடுக்கி வைத்து உறங்கும் முன் அவற்றைப் பற்ற வைத்து அவற்றை சுற்றி உறங்குகிறார்கள்.

தொட்டியில் எந்த ஒரு பிரச்சனையானாலும் அதற்கு கொத்தல்லி தான் நீதிபதி. தொட்டியின் தலைவனை கொத்தல்லி, பட்டாகாரன் என்ற பதவியும், பூசாரிக்கு கோல்காரன் என்ற பதவியும் உண்டு. அவர்களின் வாரிசுகள் அந்த பதவியில் நீடிப்பார்கள். மனிராசன், மாதேசுவரன் என்ற குலதெய்ஙங்களை வழிபடுகிறார்கள்.

பணம் சேர்த்து வைத்து சொத்துகள் சேர்க்கும் பழக்கம் இவர்களுக்கு இல்லை. அந்த வருட தேவைக்கு ஏற்ப கேழ்வரகு பயிரிட்டு அவற்றை தானிய குதிரில் சேர்த்து வைத்து ஆண்டு முழுக்க பயன்படுத்துகிறார்கள். மழை பொய்த்துப் போனால் அரை பட்டினி கால் பட்டினி தான். அதுதவிர மலை முகடுகளில் உள்ள தேன் சேகரிக்கிறார்கள்.

அவர்களின் கொண்டாட்டம் என்பது பீனாச்சி எனப்படும் ஊதும் இசைக்கருவியை வாசித்து தப்பை அடித்து மலையில் விளையக்கூடிய கஞ்சாவை புகைத்து கொண்டாடுகிறார்கள். அவ்வாறு ஒரு நாள் மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கையில் இரவில் தொலைவில் உள்ள மலை முகடுகளில் தீப்பந்தங்கள் போன்ற வெளிச்சம் நகர்வதை இம்மக்கள் காண்கிறார்கள். அவை இரவில் சந்தன மரங்களை வெட்டி ஏற்றும் கூலி வேலை செய்யும் நபர்கள். அவ்வாறு ஒவ்வொரு இரவும் தொடர்ச்சியாக இம்மாதிரியான வெளிச்சம் நகர்வதை தொடர்ந்து வனத்திற்குள் காவல்துறையினர் முகாம்களை அமைக்கிறார்கள்.

மலைவாழ் மக்களுக்கு அரசாங்கம் சட்ட திட்டம் போன்றவை அவ்வளவாக புரிவது இல்லை. அதனால்தானோ என்னவோ இவர்களில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ வீரப்பனுக்கு வேலை செய்ய வனத்திற்குள் சென்று இருக்கிறார்கள். வெட்டிய சந்தன மர கட்டைகளை லாரிகளில் ஏற்றுவது வெட்டப்பட்டு விடப்பட்ட மரத்தின் வேர் பகுதியை தோண்டி யாருக்காகவது விற்பது போன்ற வேலைகளை செய்து இருக்கிறார்கள்.

வீரப்பனை பிடிக்க அதிரடிப் படையினர் வனத்தில் முகாமிட்டப் பின் சோளகர்கள் உட்பட அப்பகுதி மக்களின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சிதைந்து போனது என்பதுதான் இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதி. குறிப்பிட்ட பக்கங்களை படித்து எளிமையாக கடந்து செல்வது மிகவும் கடினம். மனவலிமை இல்லாதவர்கள் இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியை படிக்க வேண்டாம்.

ஒரு தனிநபரை பிடிக்க அவர்களின் குடும்பங்களை பிடித்து வந்து உறவிற்குரிய மரியாதையை சிதைக்கும் வகையில் சகிக்க முடியாத விசாரனை காவல்துரையினரால் நடத்தப்பட்டுள்ளது.

யூதர்கள் வதைமுகாம்களில் எந்த மனநிலை கொண்டு வாழ்ந்தார்கள் என்று அந்த வதைமுகாமில் வாழ்ந்து வெளிவந்த மனநல மருத்துவர் விக்டர் ஃபிரான்கைல், Man searching for meaning என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

ஆனால் உள்நாட்டு காவல்துரையால் முகாம்கள் அமைக்கப்பட்டு,
அந்த முகாமில் சித்திரவதையிலிருந்து தப்பித்து வந்த ஒரு சோளகரின் கதைதான் இந்த சோளகர் தொட்டி நாவல்.
21 reviews2 followers
March 24, 2023
சத்திய மங்கலத்துக்கு அருகே தாளவாடிக்கு அருகில் இருக்கிறது சோளகர் தொட்டி எனும் சிறு மலைவாழ் கிராமம். அமைதியே வடிவாக வாழ்ந்து வரும் கிராமத்தில் அதிரடிப்படையினர் நுழைந்ததும் அந்த கிராமமே சின்னாபின்னமான கதைதான் சோளகர் தொட்டி.


ஊர்த் தலைவர் கொத்தல்லி, கோல்காரன் ஆகியோரின் வழிகாட்டுதலில் மரங்களும் தேனும் அவர்கள் தெய்வம் மாதேஸ்வரனும் என அமைதியாக வாழும் சோளகர்களின் வாழ்வில் ஆதிகாலத்தில் வெறும் காட்டு மிருகங்களே பிரச்சினையாக இருக்கின்றன.

அடுத்த தலைமுறையில் காலங்காலமாக காடே தங்களுக்குச் சொந்தம், காட்டு மிருகங்களே உணவு என வாழ்ந்து வரும் அவர்களின் வாழ்வில் மணியகாரன் மாதப்பன், துரையன் மூலமாக நில அபகரிப்பில் பிரச்சினை ஆகிறது.‌

மூன்றாம் தலைமுறையில் கர்நாடக அதிரடிப்படை ஒருபுறம் தமிழக அதிரடிப்படை மறுபுறமும் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஊரையே சின்னாபின்னப்படுத்துகிறது. அதற்கான ஆவணம்தான் இந்த சோளகர் தொட்டி.

வெறும் மலைவாழ் மக்கள் கதையாக இந்நாவலைக் கடக்க முடியாது.‌ வரம்பற்ற அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்ளும் அதிரடிப்படையினர் ஆணாக இருந்தால் சாகும் வரை அடிப்பதும் பெண்ணாக இருந்தால் கூட்டுப் பாலியல் செய்வதுமாக தங்கள் விசாரணையைத் தொடர்ந்திருக்கின்றனர்.

இதனால் கதையின் தொடக்கத்தில் ஒற்றை காட்டு யானை வந்தால் கூட கவலையின்றி தூங்கிக் கொண்டிருக்கும் சோளகர்கள் பின்பு ஜீப் சத்தம் கேட்டாலே பயந்து ஒளிந்து கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

தலைகீழாகத் தொங்க விடுவதற்கு என்று தனி சங்கிலி, உடலின் sensitive private இடங்களில் மின்சாரம் பாய்ச்ச என்றே தனிக் கருவி நகம் பிடுங்கும் குறடு என விதவிதமான‌ முறையில் உடலியல் ரீதியாகவும்

மனைவியின் முன்பே கணவனின் விதையில் மின்சாரம் பாய்ச்சுவது, கணவனின் முன்பே மனைவியை வன்புணர்வு செய்வது, தந்தையை விட்டே மகனை அடிப்பது என தனியாகவும் கூட்டாகவும் அப்பாவி மக்கள் மேல் வன்முறை கட்டவிழ்த்து இருக்கிறார்கள்.

சோலைகளே தங்கள் வாழ்வு என வாழ்ந்த சோளகர்கள் இன்னும் மௌன சாட்சியாய் நியாயம் கிடைக்கும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். தமிழக கர்நாடக அரசாங்கங்கள் உடனே புகார் கொடுக்கவில்லை என சப்பைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது‌ .

இறுதியாக நீதிமன்றம் 10 கோடி தர‌வேண்டும் என உத்தரவிட்டும் இன்னும் ஏழரை கோடி தரப்படவில்லை. எல்லாவற்றையும் கடந்தும் தங்கள் தெய்வம் மாதேஸ்வரன் , மணிராசன் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறது சோளகர் தொட்டி.
53 reviews8 followers
October 15, 2025
#2ndBook #Madhureadingchallenge2025
Title : சோளகர் தொட்டி
Author : ச.பாலமுருகன்
Genere : நாவல்(ஆவண புத்தகம்,)
Book Type : Paperback
Start Date : 8-Jan-25
End Date : 17-Jan-25
Rating : 4.5/5
Number of Page : 288

சோளகர் தொட்டி

என்ன எழுதுவது எங்க இருந்து எழுதுவது என்று விக்கித்து நிற்க வைக்கும் புத்தகம்.
எழுத்தாளர் இமையம் அவர்களால் பரிந்துரைக்கப் பட்ட புத்தகம். எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னாலும் ஒரு அற்ப மனிதர்களின் வாழ்வும் அழுத்தப்பட்டு இருக்கும் என்பதற்கு உதாரணமாக இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வும் ஒரு உதாரணம்.

எல்லாருக்கும் தெரிந்த வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு பின்னால் ஒரு பழங்குடியினரின் தலையெழுத்தே அழித்து எழுதப்பட்டுள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும்?. அந்த அப்பாவி மக்கள் அனுபவித்த சித்திரவதையை பற்றி தான் பேசுகிறது இப்புத்தகம்.

சோளகர் என்னும் பழங்குடிகள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அனுபவித்த இன்னல்களை ஆவணமாக்கியுள்ளார் ஆசிரியர்.
ஒரே புத்தகத்தில் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.

முதல் பகுதியில்
தொட்டியின் மூத்தகுடி கொத்தல்லி, சிறு சிறு மந்திரம் மற்றும் வைத்தியம் பார்க்கும் ஜோகம்மாள், வீரமும் விவேகமும் கொண்ட ஜோகம்மாளின் மகன் சிவண்ணா, அவனின் தம்பி ஜடையன், தங்க ரதி, அவளின் சினேகிதி மல்லி, சிவண்ணாவின் மனைவி மாதி, மகள் சித்தி, தொட்டியின் கோல்காரன் காரியன், அவன் மனைவி கெப்பம்மாள், மகன் தமக்கயன், இவர்களை ஆட்டி படைக்கும் சீர்காட்டில் உள்ள மணியக்காரன், துரையன், அவனின் மனைவி சாந்தா என்று சோளகர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தொட்டி பழக்கவழக்கங்கள், அவர்களுக்கு இடையில் உள்ள சந்தோஷத்துக்கங்கள், சண்டை சச்சரவுகள், சம்பிரதாயங்கள், வழிபட்டு முறை என்று விரிந்து செல்கிறது. மேலே சொன்ன தகவல்கள் அனைத்தும் கட்டுரை போன்ற உணர்வைத் தராமல் கதையின் போக்கிலே நாவலின் விறுவிறுப்பை குறைக்காமல் செல்கிறது. சினிமாக்களில் வருவது போல முதல் பகுதியின் இறுதியில் வீரப்பன் அறிமுகம் உள்ளே நுழைந்து, இனி என்ன நடக்க போகுதோ என்ற விருப்புடன் முடிகிறது.

(To be continued. In first comment)
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
March 11, 2023
புத்தகம்: சோளகர் தொட்டி 
ஆசிரியர்: ச. பாலமுருகன்
பக்கம்: 288
பதிப்பகம்: எதிர் வெளியீடு

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் தான் சோளகர்கள். அவர்களது வாழ்விடமே தொட்டி (ஊர்) என்று அழைக்கப்படுகிறது.
வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் இரு மாநில காவல் துறையினரும் மேற்கொண்ட சிறிதும் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல்களை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது.

சோளகர்களின் வாழ்க்கை முறை, சமூக அமைப்பு, திருமணம், கடவுள் வழிபாடு போன்றவற்றை புத்தகத்தின் முதல் பாகத்தில் அறிந்து கொள்ள முடியும்.

அருமையான வசனங்களோ, நுட்பமான உரையாடல்களோ, நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கான பாத்திரப்படைப்புகளோ இப்புத்தகத்தில் இல்லை. ஆனால் இப்படியானதொரு உறுத்தல் இரண்டாவது பாகத்தைப் படிக்கும் போது தோன்றவே இல்லை.
காரணம், அந்த மக்கள் அனுபவிக்கும் சித்திரவதை மட்டுமே கண்முன் நின்றது. ஒரு உண்மை நிகழ்வினை வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்துவதே இப்புத்தகத்தின் ஒரே நோக்கமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விசாரணை படம் பார்க்கும் பொழுது தோன்றிய பயமும் பதட்டமும் இப்புத்தகத்தை வாசிக்கும் போதும் உருவானது. அதிர்ச்சியான செய்திகளைக் கேட்கும்போது அனிச்சையாய் கையை எடுத்து வாயை மூடிக்கொள்வோம் அல்லவா, இப்படிப்பட்ட உணர்வினைத் தரும் சம்பவங்கள் தான் இப்புத்தகத்தை நிறைத்திருந்தன. இளகிய மனம் படைத்தவர்களால் இரண்டாவது பாகத்தை எளிதில் படித்து விட முடியாது.

இந்த மனித குலத்தை வெறுப்பதற்கான காரணங்கள் கூடிக்கொண்டே தான் போகின்றன. இம்மாதிரியான வெறுப்புணர்வு என் மனதில் வளரும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொள்வது இதைத்தான் - There are more love than hate. இதில் உண்மை இருக்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் இதுதான் என் மனநிலையைச் கொஞ்சம் சீராய் வைத்துக் கொள்ள உதவுகிறது.
Profile Image for Raj Gajendran.
17 reviews
August 22, 2022
மாநகரங்களில் நடக்கும் குற்றங்களும் அதிகார மீறல்களும் பொதுவெளியில் அறிப்படுவதைப்போல பெருங்கானங்களில் பிறந்து வாழும் பூர்வக்குடிகளுக்கு நிகழும் அநீதிகள் தெரிவதில்லை. இவர்களின் காலமும் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் கூட அழிக்கப்பட்டிருக்கிறது.
பந்தைய குதிரைப���போல தேர்ந்த அடிமைகளாகின்றனர் மற்றவர்களை அடிக்கவும் துன்புறுத்தவும் உரிமைகளை நசுக்கவும் அதிகாரம் பெற்ற காவல்துறையினர். ஜாதி மதம் மொழி நிலம் இவையாவும் தாண்டி சக மனிதர்களிடம் இவர்கள் காட்டும் மிருகத்தனமே இதன் வெளிப்பாடு.

நிச்சயம் எளியோர்க்கும், வேண்டியவர்க்கும், வாடியவர்க்கும் ‘கடவுள்’ இருக்கிறார் என்பதெல்லாம் வெறும் ஆறுதல் மட்டுமே என்பதை இதை விட நமக்கு உணர்த்தமுடியாது. துன்புறுத்துவதில் இவர்களுக்குள் இருக்கும் குதுகலமும் நினைத்ததை பெறலாம் என்ன எண்ணமும் எவ்வளவு கோரமானதாக இருக்கிறது. விசாரணை கைதிகளின் நிலையும், அவர்களின் உயிர்களின் குரவளைகளும் அடைக்கப்பட்டு, தீவிரவாத உடைகளுக்கு அளவு எடுக்கப்பட்டு சுட்டு பொசுக்கப்படுகிறது.

போலீஸ் உடனான துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் மூவர் மரணம் என்ற செய்தி துளிகளில் எத்தனை சதவிகிதம் உண்மை என்ற கேள்வியை இனி நாம் கேட்டு கொண்டே இருக்கபோகிறோம்.

வீரப்பனின் தேடுதல் வேட்டையில் சிறிதும் வீரப்பனுக்கோ தமிழக-கர்நாடக காவல்துறைக்கோ சம்பந்தம் இல்லாமல் சிக்கிக்கொண்டு அழிந்த சோளகனின் ஆன்மா இப்புத்தகத்தை படிக்கும் மனங்களோடு வாழவேண்டும்!
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
October 13, 2025
என் வாசிப்பு வாழ்வில் மனதை நொறுக்கும் நூல்களில் ஒன்றாக, முன்வரிசையில் இடம் பெற்றுள்ளது சோளகர் தொட்டி. இது ஒரு சாதாரணப் புதினமல்ல, உண்மை சம்பவங்களின் எரியிலே வடிக்கப்பட்ட, மலைவாழ் மக்களின் இரத்தத்தையும் கண்ணீரையும் கலந்து உருவான ஒரு ஆவணம். இதனை வாசிக்க, முதிர்ந்த மனம் அவசியம். ஏனெனில் இதில் சொல்லப்படும் உண்மைகள் வெறும் எழுத்துகளாக இல்லாமல், வலியாக உடலுக்குள் புகுந்து நம்மைத் துயரத்தால் திசைமாறச் செய்கின்றன.

இந்தப் புதினம் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் வாழும் மலைவாழ் மக்களின் துயரத்தை மையமாகக் கொண்டது. வீரப்பன் என்ற பெயரை சொல்லி அவர்கள் காவல்துறையினரால் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறு அவர்களின் உடலும் மனமும் சிதைக்கப்பட்டன என்பதனை ஆசிரியர் துன்பத்தை அனுபவித்த மக்களின் சாட்சியோடு பதிவு செய்துள்ளார். அந்த உண்மைத் தடங்கள் நமக்குள் “இது நடந்ததா?” என்று நம்ப முடியாத அதிர்ச்சியையும், “நடந்திருந்தால் காவல்துறையினர் மனிதர்களா?” என்ற கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.

முதல்பாகம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அழகாக வர்ணிக்கிறது. அவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வியல், வழிபாட்டு முறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், அனைத்தும் உயிரோட்டத்துடன் வெளிப்படுகின்றன. ஒரு சமூகத்தின் மரபு, அதன் உள்ளார்ந்த நம்பிக்கைகள், சிறு சிரிப்புகளும் சின்னச் சின்ன கனவுகளும் எல்லாம் அந்த மலைமூடிய கிராமங்களில் உயிர் பெறுகின்றன. ஆனால் மெதுவாக அந்த இன்பமான காட்சிகள் இருண்ட நிழல்களில் விழத் தொடங்குகின்றன.

இரண்டாம் பாகம் தொடங்கியவுடன் கதை திடீரெனக் கறுப்புப் பக்கங்களுக்குள் தள்ளப்படுகிறது. காவல்துறையினரால் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் கூட எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை ஆசிரியர் எந்தச் சொல்லையும் மங்கலாகவோ மறைப்பாகவோ எழுதவில்லை. ஒவ்வொரு வாக்கியமும் உண்மையின் கரிமைபோல் நம் மார்பில் ஒட்டுகிறது. காவலர்கள் பெண்களைப் பாலியல் ரீதியாக சீரழித்த காட்சிகள் நம்மை நெஞ்சில் உறையச் செய்கின்றன. அந்த வேதனையைப் படிக்கும்போது நாம் அந்த முகாம்களுக்குள், அந்த அறைகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம் போல உணர்வது தான் பாலமுருகனின் எழுத்தின் ஆழம்.

இறுதியில் நம் மனம் வெறுமையடைகிறது. இது வெறும் கதையல்ல, மலைவாழ் தமிழர்களின் சிதைந்த வரலாறு. அந்த மனிதர்களின் வேதனையை “புதினம்” என்று அழைப்பது கூட குறையாகும். இது ஒரு ஆவணம், ஒரு சாட்சி, ஒரு மனித இனத்தின் காயத்தின் பதிவேடு. சோளகர் தொட்டி வாசிக்க எளிதல்ல. ஆனால் அறிய வேண்டிய உண்மை இது. நாம் மறந்த மலைகளில் இன்னும் ஒலிக்கும் அழுகையின் சாட்சியாக இந்த நூல் நிற்கிறது.

இது ஒரு வாசிப்பு அல்ல, ஒரு மனதை உலுக்கும் அனுபவம்.
Profile Image for Muhammad Razvi Zaman.
7 reviews
January 6, 2022
காவல்துறையினரின் அத்துமீறல்களை படிக்கும்போது கண்கள் பணிக்கவாவது செய்தது என்றால் நாம் மனிதமனம் படைத்தவர்கள். அந்த பாவப்பட்ட மனிதர்கள் பட்ட சித்திரவதைகளை படிக்க, படிக்க அந்த பக்கங்கள் விரைவில் முடிந்துவிடாதா என்ற ஏக்கம் மிகுந்தது. இதுவரை படித்த புத்தகங்களில் மிகவும் பாதிக்க வைத்த புத்தகம் இதுவே. காவல்துறைகளில் சேரும்போதே காக்கியை அணியும்போது மனசாட்சியை அவிழ்த்து நிர்வாணம் ஆக்கிவிட்டுதான் அணிவார்கள் போல. சித்திரவதை செய்தவர்களுக்கு பணிக்கொடை, பதவி உயர்வு. பட்டவர்களுக்கு…… இன்னும் கேள்விகள் தொக்கியே நிற்கிறது…
Profile Image for Tommy.
2 reviews3 followers
January 20, 2023
This book depicts how the so called 'Veerappan Hunt' actually been a Cruel Persecution of Western Ghats tribes by the government in the late 80s and early 90s. Every character is meticulously built as such it elaborates the cultural nuances of 'Solakar' and also was abled to empathize with the plight of innocents who were merely a collateral damage.

I doubt, I'll get a decent night's sleep because of how profound and painful the impact was.
I wonder why this excellent piece of work didn't get its deserved attention and praise as 'Visaaranai' and 'Jai Bhim' since 2004.
Displaying 1 - 30 of 57 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.