ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்து நடிகனாக, இயக்குநராக, நடனக் கலைஞனாக, பாடலாசிரியராக, எழுத்தாளராக, பாடகராக என பல்துறைக் கலைஞனாக, சகலகலா வல்லவனாக விளக்கும் கமலின் திரையுலக வரலாற்றை விவரிக்கும் நூல். 300க்கு மேற்பட்ட பக்கங்களில் கமலைப் பற்றி ஏராளமான தகவல்கள், ஆசிரியரின் தேடல் பாராட்டத்தக்கது. வழமையான தமிழ் வாழ்க்கை வரலாற்று நூல்கள் போல கமல் புராணம் பாடாமல் நடுநிலையோடு எழுதியிருப்பது சிறப்பு. திரும்ப திரும்ப வரும் சில விடயங்களை கத்தரி போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.