காலம் நமக்கு காட்டும் ஆகப்பெரும் அதியசங்களில் ஒருவர். "வர்" என்ன? ஒருவன்.. இந்த ஹிட்லர். புராண காலங்கள் எல்லாம் அல்ல, ஒரு எண்பது ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விட்டுக்கொண்டிருந்த மனிதன் தான்.
எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், பணபலமும் இல்லாமல் மிக கீழ் நிலையிலிருந்து ஒருவன் இப்படி விஸ்வரூபம் எடுக்கமுடியுமா என்று வியப்புடனேயே ஒவ்வொரு பக்கத்தையும் கடந்தேன். ஒரு வாழ்நாளில், அறுபது வயதுக்குள், ஒரு கண்டதை, ஏன் உலகத்தை ஆட்டிப்படைத்த ஒருவன்.
என்ன ஒழுக்கம், என்ன தாபம், என்ன நாட்டுப்பற்று, என்ன விடாமுயற்சி, எத்துனை கேவலமான கொலைகள்! அவை மட்டும் அல்ல. எத்தனை பயங்கள், எவ்வளவு தாழ்வுணர்ச்சி, எத்தனை ரகசியங்கள்! யூத பக்கங்களை நகர்த்தும் கை நடுக்கம் இன்னும் நிற்கவில்லை.
இறுதியில் அவனிடம் வேலை செய்த, அவனிடம் பழக்கம் கொண்டவர்களின் மூலம் நாம் அறியும் அவனின் மனநிலை... அதெல்லாம் விடுங்க, அவன் உயிர் நண்பன் ஒருத்தன் இருக்கானே கெப்பல்ஸ் என்று... நிகழ்கால ஹிட்லர்களுக்கு பின் இருக்கும் அவனைப் போன்றவர்களை வேரறுத்தால் போதும்