முமுக்ஷுப்படி என்னும் க்ரந்தம் பிள்ளை லோகாசார்யர் இயற்றியுள்ள அஷ்டாதஶ ரஹஸ்யங்கள் எனப்படும் பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்களுள் முக்கியமானதொன்றாகும். இது, ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் தன்னுடைய ஆசார்யனிடத்திலிருந்து பெறும் ரஹஸ்ய த்ரயம் எனப்படும் மூன்று ரஹஸ்யங்களின் அர்த்தங்களை விளக்க வந்ததாகும். இந்த க்ரந்தமானது ஸூத்ர வடிவில் இருப்பதால் சுருக்கமாகவும் புரிதலுக்கு அரிதாகவும் இருப்பதால், தம்முடைய அபார கருணையினால் மணவாள மாமுனிகள் இதற்கு மிகச் சிறந்த வ்யாக்யானம் இட்டருளினார். ஆனால், மணிப்ப்ரவாளத்தில் அமைந்துள்ளதால் அதையும் புரிந்து கொள்வதென்பது இக்காலத்தில் உள்ளவர்களுக்குச் சற்று அரிதாகவே உள்ளது. ஆகையால், அந்த வ்யாக்யானத்தை எளிய தமிழாக்கும்