"Even now a war is going on. But this war is not face to face. This war is waged with hidden weapons. It is a war between the sky and the earth. War waged on the people and the nature. The world has not seen a war of this kind before. This is the war waged by global warming and globalisation against agriculture."
Poet Vairamuthu is the Sahitya Akademi award winning Tamil novelist and poet, who is famous for his lyrics for the Tamil movies. He is the only lyricist who has won the National Award for lyrics six times. 'Moondram Ulaga por' (Third World War) is his third novel after 'Kallikkattu ithikasam' and 'Karuvachi kaaviyam'.
Vairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle-class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.
The ambience of the village is said to have inspired him to write poems. According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The speeches of Periyar & Anna, the writings of Karunanidhi and the works of eminent poets like Bharathi, Bharathidasan and Kannadasan and the life in the countryside shaped the young poet's thinking. At the age of fourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write a Venba compilation of poetry, strictly adhering to the Yappu grammar rules of Tamil poetry.
He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimed as the best speaker and poet. While in his second year of B. A. and barely nineteen years of age, Vairamuthu published his maiden anthology Vaigarai Megangal. It was prescribed for study in Women's Christian College. Thus, he achieved the distinction of a student poet whose work was taken into the curriculum while he was still a student.
His second work, Thiruththi Yezhudhiya Theerpugal, in pudhu kavidhai (free verse) form was published in 1979. He made his film debut in the succeeding year when he set lyrics for Bharathiraja's Nizhalgal.
"The nation that destroys its soil, destroys itself"(Franklin Delano Roosevelt). These are few quotes which will be a good review for this book. and If someone calls this book a rubbish or waste or worthless, it means they haven't understood the book and the present situation we are all facing. It is a wonderful outcome from my favorite poet kaviperarasu Vairamuthu. every one must read it!!..
மூன்றாம் உலக போர் புத்தகத்தை முடிக்கும் பொழுது கருத்தமாயினு ஒரு விவசாயி கூட வாழ்ந்த அனுபவம் கிடச்சுது. இந்திய விவசாயி மேல மரியாதையும் விவசாயத்தோட எதிர்காலம் குறித்து கேள்விகளையும் நம் இடையே விட்டு செல்கிறது இந்த புத்தகம்.
விவசாயத்தின் பெருமையை உரக்கச்சொல்லும் ஒரு படைப்பு. செயற்கை உரம் சந்தைப்படுத்துதலுக்கு பின்புலமாக இருக்கும் அரசியல், புவிவெப்பமயதாதலால் நாம் இழந்த, இழக்கப்போகும் வளங்கள்; முற்றிலும் மாறிப்போன நம் வாழ்வியல் முறையை, உணவு பழக்கவழக்கங்களை, மீண்டும் உயிர்ப்பிக்க மன்றாடும் ஒரு கவிஞனின் தவிப்பு.
கள்ளிக்காட்டு இதிகாசம் பேயத்தேவரின் நீட்சியே கருத்தமாயி என தோன்றுகிறது.
கருத்தமாயி, சிட்டம்மா தம்பதிகள் முப்பது ஆண்டுகளாக பேசிக்கொள்ளாவிடினும் அவர்களுக்குள் இருக்கும் அழகியல்; முத்துமணியின் கெட்டிக்காரத்தனமான களவாணித்தனம், சொள்ளையன், கெழங்குராணி, என பாத்திரப்படைப்புகள் மிக அருமை.
ஓரிரு இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. மற்றபடி அருமையான படைப்பு.
மூன்றாம் உலகப் போர். எதைக் கொண்டு துவங்குவது? இந்தியாவில் இன்றைய விவசாயிகளின் நிலையை ஓர் ஓரம் நின்று படம் பிடித்து காட்டும் ஒரு நூல். கண்ணீர் சிந்தாமல் படித்து முடிப்பது சிரமம் தான். மையக்கருவான விவசாயம் தவிர்த்து, வைரமுத்துவிற்காக மட்டுமே கூட படிக்கலாம், அத்துணை கவித்துவமான எழுத்துக்கள். சில வட்டார வழக்கு மொழிகள் நெஞ்சில் பல நினைவுகளை தூண்டிவிட்டுச் செல்கின்றன. உதாரணமாக ஏழ்மையை உணர்த்தும் இந்த வரிகளை சொல்லலாம்.
"பூவரச இலைக்கே பொங்கல் பத்தாதுங்கிறப்ப வாழையிலைக்கு எங்கிட்டுப் போறது?"
கருத்தமாயி. கதையின் முக்கிய கதாபாத்திரம். மூன்று தலைமுறையின் கதையில் நடு தலைமுறை மனிதன். ஒவ்வொரு முறை சாகுபடி பொய்க்கும்பொழுதும், மனம் தளர்ந்துவிடாமல் மீண்டும் எழுந்து ஓட துடிக்கும் கால்கள். பல இடங்களில் எனது அப்பா மற்றும் பெரியப்பாக்களை நினைவுறுத்துகிறார். தலைமுறை இடைவெளிகள் பூதாகாரம் எடுக்கையில், கிராமத்து இளைய தலைமுறை வசைச்சொற்களை எளிதாக அள்ளி வீசிவிடுகின்றது. மூத்த தலைமுறை மௌனமே தன் தாய்மொழி என்று ஓரமாய் அமர்ந்திருக்கின்றது. கருத்தமாயியும் அவ்வகையே. மூத்த மகன் முத்துபாண்டியின் பழிப்புகளுக்கு மௌனம் மட்டுமே பதிலாக தருகிறார் கடைசிக்கு முந்தைய அத்தியாயம் வரை.
விவசாயம். அழிந்து வரும் விவசாயம் குறித்த சில புள்ளி விவரங்கள் மனதை பிரளயம் கொள்ள செயகின்றன. பசியால் வருடத்திற்கு 130 லட்சம் மனிதர்கள் இறந்து போகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 லட்சம். யாரும் அறியாமல், மனித இனம் வ்ருடம் இரண்டு உலகப்போர்களை சந்தித்து வருகின்றது.
சின்னப்பாண்டி. எமிலியிடம் தனியாக பேச செல்கையில் காதல் குறித்து அவன் மனதில் ஓடும் என்ன ஓட்டங்கள் அலாதி பிரியம். வைரமுத்துவின் காதல்வரிகளுக்கு ஈடு இணை இங்கு இல்லை என்பதை நினைவுறுத்துகிறார். ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே வரும் வைரமுத்து எனும் கதாபாத்திரமும், மலை குறித்த அவரது கருத்துக்களும் அழகு.
"அரபிக் கடல் காற்றைத் தடுத்து மேகத்தின் மடியில் செலுத்தி மழை கறப்பது இந்த மலைதான்."
எமிலி, இஷிமுரா. அழிந்து வரும் வேளாண்மை குறித்த பல்வேறு கருத்துகளையும், புள்ளி விவரங்களையும் இவர்கள் இருவர் எடுத்துரைத்தாலும், இரு பாத்திரங்களும் கதையில் ஒட்டாதது போலவே இருக்கின்றனர்.
கருத்தமாயி - சிட்டம்மா. என்றோ ஏற்பட்ட சிறு சிக்கலை கொண்டு, இத்துணை வருடம் பேசாமலே இருக்கும் தம்பதியினர். பேசாமலே இரண்டு குழந்தைகளும் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டனர். சிட்டம்மா, கருத்தமாயிடம் சொல்ல வேண்டியவற்றை கோழி, வெள்ளாடு, பூனை மற்றும் சில சமயங்களில் சுவர்களையும் அழைத்து சொல்வது பேரழகு. காதல் சப்தமின்றி அவர்களிடையே நிறைந்து கிடக்கின்றது.
On the whole, I feel blessed that I got a chance to read this book. What else I can say !!!
இப்புத்தகம் உலகத்தைப் பற்றிக் கண்டு கொள்ளாத மனிதர்களுக்கு, உலகமயமாதல் மற்றும் உலக வெப்பமயமாதலின் முன்னுரை. உலகம் சூடேறி உயிர்கள் ஆவியாகும் நாள் மிகத்தொலைவில் இல்லை என்பதை சில ஆர்வலர்கள் கூறும்போது காது கொடுக்காது மானுடம் என்பதை நன்கு அறிந்திருக்கிறார் வைரமுத்து. ஓர் கதை இல்லையெனில் புத்தகத்தைக் கையில் எடுக்காது இக்கூட்டம் என்பதைத் தெளிவாக மனதில் பதித்துக் கொண்டே இப்படைப்பை உருவாக்கி இருக்கிறார். உயிர் காக்கும் உணவு படைக்கும் விவசாயியின் உயிரும் உழைப்பும் மதிப்பற்றுப் போகும் அவலம் படிப்பவர்களின் நெஞ்சில் ஆணி அடிக்கிறது. நகரத்தில் நாகரிகம் தேடி கிராமத்தை விட்டுச் செல்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலையே செய்து மண்ணும் மானமும் இழக்கும் கொடுமை, முடியாத கதை போல் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
விவசாயத்தை அலட்சியப்படுத்தும் அவலம் நிறுத்தப்பட வேண்டும். விவசாயியே உணவிடுபவன். அவன் இறைவனுக்கு நிகராக மதிக்கப்படவில்லையாயினும், சக மனித மரியாதை வேண்டும் அவனுக்கு. சாப்பிட்டபின் அருந்தும் ஆடம்பர பானங்களின் தொழிற்சாலைகளைக் காட்டிலும், அவசியமான சாப்பாட்டையே கொடுக்கும் விவசாயத்திற்கு வேண்டும் தண்ணீரும் மின்சாரமும்.
விவசாயத்தை விட்டுக் கணினி நோக்கிச் செல்லும் இளைஞர்களைத் தடுக்க வேண்டாம். ஆனால் கணினியை விவசாயம் நோக்கி விழி செலுத்த வைக்க வேண்டும் அவ்விளைஞர்கள்.
"அனுபவிக்கறது மட்டும் தான் காசு. அதுக்கு மேல பதுக்கி வெக்கறதுலாம் வெறும் நம்பர் தான் ", என்று வைரமுத்து கூறுவதை உணர வேண்டும் காசு பார்க்க விவசாயத்தை விட்டுவிடும் மனிதர்கள்.
ஓர் உண்மை மட்டும் அனைவரும் மனதில் நாம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. "நாம் இன்று மண்ணைக் கொல்லலாம். மலடாக்கலாம். பூமித்தாய் உடம்பை ஆயுதங்களைக் கொண்டு அச்சுறுத்தலாம். அவள் தேகம் அனலாய்க் கொதிக்க வைக்கலாம். ஆனால் மண்ணுக்கும் மனிதனுக்கும் நடக்கும் மூன்றாம் உலகப்போரில் மண்ணுக்கே வெற்றி கிடைக்கும். மண்ணே மானுடத்தை அழிக்கும். " அதற்கு வழி விடாமல் மண்ணின் உடலையும் மனத்தையும் குளிரச்செய்ய வேண்டியது நம் கடமை.
பசுமை எண்ணங்களை ஒரு புகழ்பெற்ற கவிஞனின் எழுத்துக்களில் நம்மில் விதைக்கும் ஒரு புதினம் 'மூன்றாம் உலகப் போர்'... அனைவரும் படிக்கவேண்டிய ஒரு நூல்.
வைரமுத்துவின் எண்ணங்களிலும் கவிதை நடையில் வரும் அவர் வார்த்தைகளிலும் மண்ணின் மீதும் மக்களின் மீதும், மற்ற உயிர்களின் மீதும் அவருக்கிருந்த கரிசனத்தை நம்மில் விதைப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்.
பசுமை போற்றுதல் என்ற கதை மூலத்தால் இந்த தாக்கமா... அல்லது வைரமுத்துவின் வைரம் பாய்ந்த வார்த்தைகளால் இந்த தாக்கமா என்று தெரியவில்லை... ஆனால் கருத்தமாயியும், சிட்டம்மாளும், சின்னப்பாண்டியும், எமிலியும், இஷிமுராவும், முத்துமணியும், ஏன் சுழியனும் இன்னும் இந்த படைப்பில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம்மில் அப்படியே தங்கிவிடுகின்றன.
இது நாம் தினந்தோறும் காணும் மனிதர்களை போலவே படைக்கப்பட்டுள்ளதால் வந்ததா அல்லது வைரமுத்துவே சொல்வது போல மண்ணின் மனம் கமழும் பாத்திரங்களின் பெயர்களால் வந்ததா என்று தெரியவில்லை.
சில இடங்களில் வர்ணனைகள் சற்றே மிகையான அளவுகளில் இருந்தாலும் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தை வாசகர்களின் மனதில் அரைகுறையாக நிறுத்தாமல் முழுமையாய் பதிக்க அவை தேவைபடுகின்றன.
கதையை கதையாய் மட்டும் செலுத்தாமல், இடையிடையே கட்டுரை போன்று விளக்கங்களும் கொடுத்தது புதிய அணுகுமுறை.
இந்த புதினத்தை உருவாக்க வைரமுத்துவின் பல்லாண்டுகால தேடுதல்கள் வீண்போகவில்லை.
பிறந்த மண்ணெனும் தாயிற்காற்றிய கடமையாக, தாய்மண்ணைக் காக்க அவரின் தொண்டாக அமைந்துவிட்டது இந்நூல்.
என் நினைவு தெரிந்து ஒரு புத்தகத்தை படித்து இவ்வளவு கண்ணீர் சிந்தியது இல்லை...
"சாபம் பெற்று வந்த தெய்வம் விவசாயிகள்" என ஆரம்பித்து விவசாயிகள் பற்றியும் அவர்கள் , துன்பம், சந்தோஷம், பாசம், துரோகம், அன்பு, கடன் என அனைத்தையும் வைரமுத்து அவர்கள் கூறிய விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
"உடல் விட்டு உயிர் பிரிந்து செல்வது மட்டும் சாவு இல்லை சொந்த மண்ணை விட்டு மனிதன் செல்வதும் சாவு தான்" என புரிய வைத்த ஒரு புத்தகம்.
இடையில் மண் வளம் பற்றியும், இயற்கை உரம், நியூட்ரினோ, காவேரி மணல் கொள்ளை, மீத்தேன் பற்றியும் வைரமுத்து கூறியிருப்பது சிறப்பு.
என்னை பொருத்தவரை இது புத்தகம் என்பதை விட விவசாயி மற்றும் விவசாயம் பற்றிய "பாடம்"
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்." என்ற திருக்குறளுடன் எனது உரையை முடிக்கிறேன்.
இரண்டு தலைமுறையாக கடனில் இருக்கும் ஒரு குடும்பம். கருத்தமாயி இக்கதையில் வரும் சாதாரண விவசாயி. தன் தந்தையின் விவசாய நிலத்தையும் ஊராரின் விவசாய நிலத்தையும் தனியாரிடம் விற்க நினைக்கும் மூத்த மகன் முத்துமணி, தன் கிராமத்தையும் மக்களையும் சீர்திருத்த முயற்சிக்கும் இளைய மகன் சின்னப்பாண்டி . சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் ஈன்ற மூத்த மகனை கொன்று விட்டு சிறைக்கு செல்லும் கருத்தம்மாயி. தந்தை விட்டு சென்ற இடத்தில் விவசாயத்தை தொடரும் இளைய மகன்.
ஆழ்கடல் குதித்து,அறிவுச் சிப்பிக்குள்,உணர்வென்னும் 'முத்தை', 'வைரம்' போன்ற கூர்மையான வார்த்தைகளால் செதுக்கி,கீறியெடுத்து முத்தாய் மிளிர்வது இந்த புத்தகம் மட்டுமல்ல,வாசித்த பின் நம் மனமும் தான்... மூன்றாம் உலகப்போர்-இது வெறும் புத்தகம் அல்ல, மனிதன் ஒவ்வொருவனும் வாழ வேண்டிய பெரும் வாழ்வு!🔥💥💯
உலக தமிழர்கள் ஏல்லோரும், குறிப்பாக இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.. சீனிச்சாமியின் எமோஷனல் பிளாஷ் பாக்.. சுழியனும் பன்றி மேய்ப்பவளும் செய்யும் காதல் சரசங்கள்.. கருத்தமாயின் மாஸ் கிளைமாக்ஸ் எல்லாம் எனக்கு பிடித்த காட்சிகள்.. ஒரு விவசாயியின் துக்கத்தை பகிர்ந்து கொண்ட அனுபவம் நிச்சயம் கிடைக்கும்
ஒரு பக்கத்தில் விவசாயிகள் பற்றி வைரமுத்து அவர்கள் குறிப்பிடும்போது வியந்துபோனேன் அந்த வரிகள் இதோ: திறந்த வானம், தாவரக்காற்று, திசைகளுக்குச் சுவர்கட்டி நிற்கும் தூரத்து மலைகள்,பறவைகளின் பாடல்கள், மழைத்துளிகளின் ஆசீர்வாதம் இதற்குள்தான் உங்கள் தொழில்; இதற்குள்தான் உங்கள் வாழ்க்கை எனில் யாருக்கு வாய்க்கும் இது? ஒற்றையடிப் பாதையில் தன்னந்தனியே நடந்து போகும் சுகம் உலகத்தின் எந்த ஜனாதிபதிக்கும் வாய்க்கவில்லை. ஒருவன் துப்பாக்கிகளின் துணையோடு பூப்பறிப்பதும், ஒருவன் உறக்கத்தை நூறுபேர் காவல் காப்பதும், இரண்டு மூன்றுபேர் உண்டு பார்த்து ஒருவனுக்கு உணவு படைப்பதும் சுதந்திரம் அல்ல. அது சிகரத்தில் வைக்கப்பட்ட சிறை.எந்த உழவனுக்கும் அப்படி ஒரு தண்டனை வழங்கப்படவில்லை.
மூன்றாம் உலகப்போர்-போர்கள் மனித நாகரிகத்தின் அடித்தளம். எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் போர்கள் நடந்ததோ அங்கெல்லாம், அப்பொழுதெல்லாம் மனித நாகரிகம் அடுத்த கட்டம் நோக்கி முன்னேறியது. மரத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்களை, போர் புரிந்து அழித்து க்ரோமேக���னன் மனிதர்களாகிய நாம் நாகரிகம் அடைந்தோம். உலகம் முழுக்க தமிழர் வீரம் பரவியது நம் சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் கலிங்கம் முதல் சாவகம் வரை போர் புரிந்து வென்றதனால். ஜப்பானின் இன்றைய அசுர பொருளதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் "லிட்டில் பாய்" மற்றும் "பேஃட் மேனின்" விளையாட்டால் தான். முதலிரண்டு உலகப்போர்கள் மனிதனால் மனிதன் மீது தொடுக்கப்���ட்டது. அங்கே ஆயுதங்கள் கொண்டு போர் செய்தனர். ஆனால், என் கவிஞர் கருப்புத்தங்கம் வைரமுத்து சொல்லும் மூன்றாம் உலகப்போர், மனிதன் இயற்க்கை மீது தொடுத்தானா? இல்லை இயற்க்கை மனிதன் மீது தொடுத்ததா? வினாக்கள் எவ்வாறாயினும் அழிவு மனிதனுக்கே. இன்று கையில் பீட்சாவும், பர்கரும் உண்டு வியர்வைக்கே வேலை வைக்காத வேலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் 50 வருடங்கள் கழித்து நம் பிள்ளைகள் பீட்சாவை தாங்கி பிடிக்குமளவு சிரமமில்லாமல் அதற்கு நேரமுமில்லாமல் ஒரு மாத்திரையை விழுங்கி ஒட்டம் பிடிப்பார்கள் அலுவலக வண்டியில். இதனை, புள்ளி விவரங்கள் மூலமாகவும் அறிவியல் மூலமாகவும் புத்திக்கு பாடம் சொல்கிறார் வைரமுத்து. பொதுவாக புத்தகத்தின் பக்கங்களில் காகித வாசனை விசிறியடிக்க படிக்கும் சுகமே தனி. ஆனால், வைரமுத்துவின் புத்தகங்களில் காகித வாசனை இருக்காது பதிலாக மண் வாசனை கமழும். கருத்தமாயி, சிட்டமாவிற்கு நாமும் மகன்களாக கூடாதா, அட்டணம்பட்டி தெருக்களில் நாமும் வளம் வர கூடாதா, சின்னப்பாண்டியுடன் சேர்ந்து நாமும் இந்த உலகத்தை, உலக உயிர்களின் அத்தியாவசியமான விவசாயத்தை இயற்க்கை நோக்கி திருப்ப மாட்டோமா, அந்த அட்லாண்டா அழகு தேவதை எமிலியை ஓரப்பார்வை பார்க்கும் புண்ணியம் கிட்டாதா, இஷிமுரா நட்பு அமையாதா, தலப்பெரட்டு புடிச்ச பய முத்துமணிய ஒரு எத்து எத்தலாமா, சீனிச்சாமி கடன் கழிய நாமும் உதவ மாட்டோமானு மனசு ஏங்கி தவிக்குமய்யா..!!. மனிதா, நாம் பணம் பின்னால் ஓடுகிறோம், பதவியின் பின்னால் ஓடுகிறோம் வியர்வைக்கு வழியேயில்லை என்றாலும், வழிந்து விடுமோ என்ற அச்சத்தில் கைக்குட்டையுடன் ஓடுகிறோம், பசியென்று வந்தால் நாம் வியர்வையில் நனைந்து ஏரை தோளில் சுமந்து நடை போடும் விவசாயியின் பின்னால் தான் ஓடுகிறோம். என்னை பொருத்தவரை வாளை பிடித்தவனை விட ஏரை பிடித்தவன் தான் வீரன்.
ஐயா வைரமுத்து ஒரு வேளை நான் எழுத்துத்துறைக்கு வந்தால் அதற்கு காரணம் உங்கள் கருவாச்சியும், மூன்றாம் உலகப்போரும் தான்.
Village story part will be similar to Kallikatu Ithigasam, Karuvachi Kaviyam. But still the wordings and thoughts made me to feel, "How this man can always think fresh and see the usual things in a different way ?". Whenever I read a Vairamuthu's book, i ll get impressed by the language Tamil ... This one made me to think about our environment too ...
பிரபலமான புள்ளி ஒருவர் இந்தப் பொருளை பேச முனைந்ததற்கே பாராட்டியாகவேண்டும். பல தகவல்கள். இப்படி ஒரு எழுத்தாளர் எழுதினால் கருத்துகள் பல்வேறு தளங்களைச் சென்றடையும் என்பதில் சந்தேகம் இல்லை. சிற்சில ஓட்டைகள். செயற்கையான சில கதாப்பாத்திரங்கள். நிச்சயம் வாசிக்கலாம். ஆனால் வைரமுத்துவின் மற்ற சிறந்த படைப்புகளோடு ஒப்பிட முடியாது.
I liked the book in parts. I liked the climax very much. The two foreigners were very much artificial. Verses at certain places does not gel with the flow and looks weirdly artificial. I hate those parts. The romantic feelings of Chinna Paandi does not stick with the story at all. It is unnecessary. I think the author did not succeed in doing justice to the idea he has taken.
கதையின் போக்கு சற்றே நழுவி கட்டுரையின் போக்காக மாறியது. மொத்த கதையிலும் விவசாயம் பற்றியும், புவி வெப்ப மயமாதல் பற்றியும் கருத்துக்களை சொல்லியவாறே இருக்கிறார். எமிலியும், இஷிமுராவும் கதையோடு ஒட்டாமல் இருப்பது சற்றே சலிப்பை ஏட்படுத்துகிறது. இறுதி அத்தியாயங்கள் செல்ல செல்ல கதை எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்புடன் பக்கங்களை படித்தும் படிக்காமலும் நகர்த்தியவாறே புத்தகத்தை முடிக்க வேண்டியதாகியது.
This book exactly the reflection of cinema. The entire book is like a film that talks about farmers, environmental issue. No solutions, no scientific methods. Just propaganda and dramatic.
இந்தக் கட்டுரை புத்தகத்தைப் பற்றிய புகழுரையோ அல்லது எழுதியவருக்கு அணிவிக்கப்படும் புகழ்மாலையோ அல்ல! ( சில தரவுகள் புத்தகத்திலிருந்து பெறப்பட்டு இடப்பட்ட இடைச் செருகல்கள்)
புத்தக வாசிப்பைப் பற்றி அறியாதவர்களின் அறிவு தெளிவின்மையை புரிந்துகொண்டதன் சிறு ஆதங்கம்!!
இந்த மண்ணில் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு எழுத்தாளன் தன் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் உற்றுநோக்கி உலகத்தின் போக்கை புரிந்து கொண்டு உள்ளூர் மக்கள் சிலரால் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளின் உலக குரலாக இந்த புத்தகத்தை பதிவு செய்திருக்கிறார்!
இது தீர்வுகளுடன் சொல்லப்பட்ட மண்ணை பெருமை செய்யும் படைப்பு!
இது மண்ணில் மக்க போகும் மனிதனால் மக்காத பொருளை கண்டடைந்து விட்டதன் அதிர்ச்சி!!
வானத்தில் குப்பை கொட்டுகின்ற வளர்ந்த நாடுகளைப் பற்றியும், பூமியில் குப்பை கொட்டும் வளரும் நாடுகளின் வேளாண்மை நிலை பற்றியும், நிலவுக்கு விண்கலம் அனுப்பும் அறிவாற்றல் மகிழ்ச்சிதான் என்றாலும்,முதலில் கடைக்கோடி கிராமத்தில் இருப்பவர்களின் வீட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சப்பட்டு விட்டதா? விவசாயிகளின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் அது அமைந்து விடுமா? அதற்கான புரிதலை அரசாங்கமும், மக்களும் புரிந்து விட்டார்களா? என்று பல எண்ணங்களை மனதில் விதைத்துப் போகிறது!
நவ நாகரீக சமூகம் ஜனத்தொகையை குறைத்து,கால்நடையை பெருக்குவதற்கு பதிலாக கால்நடையை குறைத்து ஜனத்தொகையை பெருக்கிக்கொண்டே இருக்கின்றன!
தோராயமாக 2100-ம் ஆண்டிற்குள் 900-ம் கோடிக்கும் மேல் மக்கள் தொகை எண்ணிக்கை கூடலாம் என்று சொல்கிறது சில புள்ளி விவரங்கள், விவசாயம் தற்போதுள்ள நிலையில் நீடித்தாலே அத்தனை பேருக்கும் உணவு உற்பத்தியை கூட்டி விட முடியுமா? என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது? இப்போது இருக்கும் மக்களினால் ஏற்படும் குப்பையும் நச்சுப்புகையும் ஏற்படுத்தும் தாக்கங்களையே தாக்குப்பிடிக்க முடியாத உலக நாடுகள் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து அதன் வளர்ச்சியை எதிர் கொண்டு விட முடியுமா?
நுகர்வு கலாச்சாரத்தை கண்டறிந்த மனிதன் கழிவு கலாச்சாரத்தையும், நீரியல் மேலாண்மையையும், காட்டு வளங்களையும் கட்டிக்காக்க வேண்டிய நேரமிது! ஆரோக்கியமான தேசத்திற்கு தேவை அவசியம் 33 விழுக்காடு காடு, 2014 கணக்கின்படியே இந்தியாவில் அது 21 சதவீதமாக குறைந்துவிட்டது.
மக்கள் தொகையும், அதற்கு ஏற்ப குப்பைகளும், குறிப்பாக மின்னணு கழிவுகளும் (e-waste), கொட்டுவதற்கு அண்டை நாடுகளின் நிலத்தை வாடகைக்கு கேட்கும் அளவிற்கு கூடிக்கொண்டே வருகிறது.
விவசாயமும், விளைநிலங்களும் நீரும்,ஆறும் ஆற்றுப்படுகைகளும், காற்றின் தரமும், குறைந்துகொண்டே வருகின்றன,
கூட வேண்டியது குறைகிறது, குறைய வேண்டியது கூடிக் கொண்டே வருகிறது!
ஒரு விவசாயி நிலத்தை விற்று படிக்க வைப்பதன் மூலம் நான்கு ஆண்டுகளில் ஒரு வேலை இல்லா பட்டதாரி உருவாகிறான், விளைநிலத்தை விற்பதனால் கிட்டத்தட்ட 10 குடும்பத்திற்கான வாழ்நாள் உணவு உற்பத்தியே நின்று விடுகிறது. இன்னும் சில நாட்களில் அனைவரிடமும் மகிழுந்து(car) இருக்கலாம்! கறவைமாடு இருக்காது!
வீட்டுக்கு வீடு இணையதளம் இருக்கலாம்! இலந்தைப்பழம் இருக்காது!
வீட்டின் நான்கு பேருக்கு 5 அலைபேசிகள் கூட இருக்கலாம், அறுபதாம் குறுவையை அறுவடை செய்ய முடியாது!
மின்சார கார்களின் இரைச்சல் சப்தம் இருக்கும் பறவைகளின் சங்கீதம் இருக்காது!, வெளிநாட்டு மது இருக்கும் இறைச்சி இருக்காது! (மனிதனை மனிதன் உண்ணாத வரை தான்),
இரண்டாம் உலகப்போரில் சைபீரியாவில் சிறைவைக்கப்பட்ட 1லட்சம் ஜெர்மானியர்கள் 872 நாட்களுக்கு பிறகு பறவைகளையும் எலிகளையும் வீட்டு விலங்குகளையும் தின்று தீர்த்த அதற்குப்பின் சக கைதிகளின் 5000 பிணங்களின் மீது அவர்களின் பசி நீண்டது. பின்னர் அவை எலும்பு கூடுகளாக கண்டறியப்பட்டன என்பது வரலாறு,
பெட்ரோல் கிணறு வற்றி விட்டால் மின்சார போக்குவரத்து முழுமையாக்கபடலாம், நீரும் நிலக்கரியும், வற்றிவிட்டால் சூரிய ஒளி மின் சக்தியினால் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டி விடலாம் அல்லது வேறு ஏதோ! ஆனால் உணவிற்கு மாற்று உண்டாக்கப்படுமா?
முயல்களின் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பது போன்றதுதான் நாம் இயற்கையை எதிர்ப்பது!
இந்த எழுத்தாளனின் சீறிய உழைப்பால் வடித்து கொட்டப்பட்ட சோற்றை உங்கள் சுற்றத்தார்களிடம் சமபந்தி இடுங்கள். மாற்றம் நிகழக்கூடும்..
இந்த நிலை நீடித்தால் இந்தியாவின் அறிவு செல்வங்களும், அழிந்து போகாத கலை மரபுகளும், நிமிர்ந்து விண்ணை முட்டி நிற்கும் நகர கட்டமைப்பும், புதைந்து மறைந்து கொண்டிருக்கும் கிராமங்களையும் வெறும் தரவுகளாக மட்டுமே தக்கவைக்க முடியும் அடுத்த தலைமுறைக்கு!
அன்று சொன்னான் பாரதி காணி நிலம் வேண்டும் கண்ணம்மா! காணி நிலம் வேண்டும் கண்ணம்மா! -என்று இன்றோ அவன் இருந்திருந்தால் காண நிலம் வேண்டும் கண்ணம்மா! காண நிலம் வேண்டும் கண்ணம்மா! என்று கதறியிருப்பான்!!!
தனது கரிசக்காட்டு நடையின் மூலமாக கதையோடு பயணித்தே அழைத்து செல்கிறார் ஆசிரியர். கருத்தமாயி ஓர் ஏழ்மையான விவசாயி ( விவசாயி என்றாலே ஏழ்மையானவர் என்ற கட்டத்துக்கே வந்துவிட்டோம்) அவரைச் சுற்றியே நகரும் கதையோட்டத்தின் யாரும் யத்தனிக்க முடியாதபடி அறிவியலை கதையோடு ஒன்றி உருபெற வைத்துள்ளமை சிறப்பு. இப்புத்தகத்தை வாசிக்கும் அனைவருக்குமே விவசாயம் மற்றும் விவசாயிகளின் மகத்துவத்தையும் அவர்களின் அன்றாட அல்லள்களையும் படம் போட்டு காட்டியுள்ளார். இஷிமுரா எமிலி என்னும் கதாப்பாத்திரங்களின் உரையாடல்கள் வியக்கத்தகு வண்ணம் வடிவமைத்துள்ளார்.மூன்றாம் உலகப்போர் தொடங்கியுள்ள எச்சரிக்கையை கதைமுழுவதுமே வெவ்வேறு வடிவங்களாக பருவநிலை மாற்றம் , உலகமயமாக்கல் தாராளமையமாக்கல் வழியாக மேலும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. சின்னப்பாண்டி என்னும் கதாபாத்திரம் வழியே " தனி ஒருவனால் மாற்றத்தை உருவாக்க முடியும" என்னும் கருத்து ஆழமாக வேரூன்றி உள்ளமை கூடுதல் சிறப்பு.வைரமுத்து நம் தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் 'தமிழ் புதையல்' எனலாம். *உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்* #விவசாயம் காப்போம் #மண்வளம் பெருக்குவோம் #மழைநீரை சேமிப்போம். #மூன்றாம்உலகப்போர் - தொடங்கியது
எழுத்தாளர் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்த புத்தகம் வெளிவந்ததோ 2012ல்,நான் இதை படித்தது 2021ல்..!
இவ்வளவு ஆண்டுகளாக இதை படிக்காமல் போய்விட்டேனே என்று வருந்துகிறேன் ..அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று,நானும் பின்விளைவுகள் தெரியாமல் இயற்கைக்கு நிறைய தீங்கு செய்து விட்டேன். மற்றொன்று,விவசாயம் என்பது ஒரு தொழில் என்று நினைத்திருந்தேன்,ஆனால் விவசாயம் ஒரு வாழ்க்கை முறை என்பது படித்தபின் தான் தெரிந்தது.
நம் பாரத தேசத்தில், பறவைகளைக் கூட கடவுளுக்கு பக்கத்தில் வைத்து பார்க்கும் பண்பு உண்டு.ஆனால் ,கடவுளாகவும் போற்றப்பட வேண்டிய விவசாயிகளை மனிதனாக கூட பார்ப்பதில்லை..
இருந்து என்ன செய்ய போறோம்னு செத்து போறவங்க பாதி,செத்து என்ன செய்ய போறோம்னு இருக்கவங்க மீதி..!இது தான் இன்றைய விவசாயிகளின் அவல நிலை.
மூன்றாம் உலகப் போர் விவசாயியா இருந்து பாருங்க! இல்லனா விவசாயிக்கூட இருந்து பாருங்க..! இது ரெண்டுமே முடியலனா இந்த புத்தகத்த படிச்சாவது பாருங்க!!!
இந்த பொத்தகத்தை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் 'எப்படி இப்படி ஒரு கதையை வட்டார வழக்கோடு, சொல்ல வந்த நோக்கம் மாறாது அழகாக எழுதியிருக்கிறார்' என்பது தான். எமிலியிடம் தொடங்கிய கதை இஷிமுராவை அறிமுகப்படுத்தி அட்டணம்பட்டியை வந்தடைகிறது.
அட்டணம்பட்டியில் வாழும் மக்களை ஒவ்வொரு கதாப்பாத்திரமாக போகிற போக்கில் அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். கருத்தமாயி- சிட்டம்மாவின் வாழ்க்கை ஒரு வாழ்வியலாக நம் கண் முன்னே நிழலாடுகிறது. கருத்தமாயியின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் போது உண்மைக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. அங்கு வாழும் ஒவ்வொரு விவசாயியின் நிலைமையை சொல்லும் போது நமக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது.
விவசாயிகளின் நிலைமையையும் முக்கியத்துவத்தையும் சம்மட்டி அடியாக உணர்த்துகிறது வைரமுத்து அவர்களின் எழுத்துகள். பல வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன, குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகின்றன, கண் கலங்க வைக்கின்றன. இவை அனைத்தையும் ஒரு கதையில் மிகச் சிறப்பாக வைரமுத்துவை தவிர வேறு யாராலும் எழுதவே முடியாது. இந்த பொத்தகத்தை வாசித்து முடித்தவுடனே மீண்டும் இந்தக் கதையை வாசிக்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. அது தான் ஒரு சிறந்த எழுத்தாளனின் வெற்றி!
மூன்றாம் உலகப்போர் - அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்!
“அறியப்பட்ட இருபது லட்சம் உயிரினங்களில் ஒரு ஜீவராசிதான் மனிதன்.” அவ்ளோதான்!அவ்ளவேதான்!!பத்துல ஒன்னு கூட இல்ல…இருபது லட்சத்துல ஒன்னு!!!
🔥உலக வெப்பமாதல்(Global Warming), 🕴🏻தனியார்மயமாக்கல்(Privatisation), 🌐உலகமயமாக்கல்(Globalisation), 🗑️திடக்கழிவு மேலாண்மை(Solid waste management), காடழித்தல்(Deforestation) “அம்மான்னா சும்மா இல��லடா!” என்பதைப் போல மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் அதன் பொருள் இழந்து போன cliche களில் இவையும் அடங்கும்!எவ்வுளவு மகத்தான விஷயமாக இருந்தாலும்,எவ்வுளவு அவசியமான விஷயமாக இருந்தாலும்,திரும்பத் திரும்ப பரிச்சயப்பட்டால் அலுத்துப்போகும் தன்மை முதல் முறையாக சற்றே பயமளித்தது.
மேற்சொன்ன ஒவ்வொன்றும் விவரம் தெரிந்த நாள் முதலே கேள்விப்பட்டவை அவற்றின் பொருளும் அவைகளின் தாக்கமும் கூட நன்றாகவே தெரியும்.இருப்பினும்,மீண்டும் மீண்டும் கேள்விப்பட்டதாலேயே அவற்றின் அடி ஆழத்தை,ஒன்றுடன் ஒன்றின் தொடர்பை,தனிமனித ஒழுக்கத்தால் எப்பொழுதும் கூட இவற்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு இருக்கும் ஆறுதலையும் உணராமலேயே இருந்திருக்கிறேன்.
அட்டணம்பட்டி வெவசாயி சீனிச்சாமி கடன் வாங்கி வெவசாயம் செய்தார். கடன் கொடுத்தவன் ஒரு நாள் தெருவில் வைத்து அநாகரிகமான(நிர்வாணப்படுத்தி) முறையில் கடனை திருப்பிகேட்டான். அவமானத்தில் மனம் நொந்து போனவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். அதில் மகன்கள் சுழியனும், கருத்தமாயிம் தப்பிவிட்டார்கள். தாய்,தந்தை, தங்கையின் தற்கொலைக்கு காரணமான கவட்டைகாலனை(கடன் கொடுத்தவன்) கருத்தமாயி கொலைசெய்துவிட்டு சிறை சென்று தண்டனை காலம் முடிந்து திரும்பி அட்டணம்பட்டி வந்து தந்தையின் வழியில் வெவசாயத்தை தொடர்கிறார். சிட்டம்மாவை திருமணம் முடித்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகிறார். மூத்த மகன் முத்துமணி, இரண்டாவது மகன் சின்னப்பாண்டி, மகள் தேனு. எமிலி அமெரிக்க நாட்டை சேர்ந்த சூழியல் போராளி, இஷிமுரா ஜப்பான் இயற்கை விவசாயி இவர்கள் இருவரும் சின்னப்பாண்டியுடன் இணைந்து அட்டணம்பட்டியில் ஏற்படுத்தும் நல்ல மாற்றங்களையும், மூத்தமகன் முத்துமணி ஊருக்கே எமனாக மாறியதையும், உலக வெப்பம் அதிகரிப்பதால் விவசாயம்தில் ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது மூன்றாம் உலகப்போர். -கலைச்செல்வன் செல்வராஜ்.
சமுதாய பிரச்சினைகளை ஒரு கதை வடிவத்தில் கொடுத்துள்ளார் வைரமுத்து , இது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் . வைரமுத்து பெயருக்கு ஏற்றார் போல , வைரத்தை போன்ற ஒறு புத்தகத்தை நமக்கு முத்தெடுத்து கொடுத்திருக்கிறார் .
ஆங்கிலத்தில் The author talks about the current difficulties of global warming and its impact on the agriculture sector inside a story in an engaging way , this book is a food ( pun intended ) for thought and everyone should read it and act upon it for the sake of our future generation .
எங்கோ இருக்கும் குமரிக்கண்டத்தில் கடவுள் இருந்தார், அவர் ஆட்சி செய்த ஊர் கடலில் மூல்கிப்போனது எனப்பலர் பேச கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த நூலை படித்த பிறகு தான் அவ்வளவு தூரம் ஏன் யோசிக்கர? உன் மாவட்டத்தில் ஒரு அங்கமாக இருந்த ஒரு ஊர் இன்று அணைக்கட்டின் அடியில் முழுகிப்போச்சுனு தெரியுமானு? கவிஞர் என்னப்பாத்து கேட்ட மாதிரி இருந்தது. வைரமுத்து அவர்களின் ஒரு மிக முக்கியப்படைப்பு இந்த நூல். கட்டாயம் படியுங்கள், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தூக்கமின்றி தவியுங்கள். நன்றி!