Jump to ratings and reviews
Rate this book

நான் இந்துவல்ல நீங்கள்?(nan hindhuvalla nengala?)

Rate this book
தமிழன் இந்துவா இல்லையா என்கின்ற கேள்வி பல நாட்களாக பல அரசியல்வாதிகளின் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது அதனையும் தாண்டி வரலாறு என்ன சொல்கிறது இன்று என்கின்ற சொல் இங்கிருந்து உருவானது அதனை யார் உருவாக்கியது இப்படி பல கேள்விகளுக்கான பதிலை தோப்பா அவர்கள் பல ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்

24 pages, Kindle Edition

Published May 19, 2023

22 people are currently reading
230 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books230 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
56 (53%)
4 stars
34 (32%)
3 stars
10 (9%)
2 stars
3 (2%)
1 star
2 (1%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Vadivel C.
24 reviews1 follower
October 15, 2022
இந்துங்கிற இந்த செயற்கை மதத்துக்குள்ள இவளோ இருக்கா?

சைவத்த விட வைணவம் பரவாயில்லை போல. அது தாழ்த்தப் பட்டவர்களுக்கு கொஞ்சமாவது கருணை காட்டுது.

சங்கராச்சாரிகள் பற்றி பல புதிய தகவல்கள் உள்ளன இந்த புத்தகத்தில்.
Profile Image for Kesavaraj Ranganathan.
48 reviews7 followers
March 1, 2022
நான் இந்துவல்ல நீங்கள்...? - தொ.பரமசிவம்

இன்றைய காலகட்டத்தில் முக்கியமாக இந்திய நிலத்தின் பெருபான்மை மக்களுக்கு சென்று சேர வேண்டிய தலைப்பு இது! ஏன்னென்றால் இங்கு ஒரு குறைவான சதவிகிதம் மட்டுமே இருக்கின்ற ஒரு சாதி மக்கள் மற்றவர்களை அடுக்காதிக்கத்தின் வழியாக ஆண்டு கொண்டு சாமானியர்களுக்கான சட்டத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சொல் "இந்து".

இந்து என்கிற சொல்லின் வேர் இந்திய மொழிகளிலும், வேதங்களிலும், உபநிடதங்களில் எங்குமே இல்லை. அது இங்கிருக்கும் மக்களை அடையாளப்படுத்துவதற்காக 1799 ல் சர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்களால் கொண்டுவரப்பட்ட Hindu Law உள்நாட்டு நீதி நெறிகளின் தொகுப்பிற்கான பெயராகிறது... இதிலிருந்து தான் இந்த பெயருக்கான அரசியல் பயணம் ஆரம்பமாகிறது...

சரி இதற்கு முன்னர் இந்து மதம் என்பது எப்படி இருந்தது? அதற்கு ஒருமித்த பெயரோ கருத்தாக்கமோ கிடையாதா என்றால் "இல்லை" என்பது தான் பதில்... அதற்கு முன்னர் சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம், சாக்தம் எனபதாக பரிந்து இருந்தது... 18ம் நூற்றாண்டிற்கு பிறகு இவைகளை அரசியல் அங்கீகாரத்தின் மூலமாக ஒருங்கிணைத்த சொல்லாக இந்து என்கிற சொல் வடிவம் கொண்டது அவ்வளவே!

கோவில் நுழைவுச் சட்டம் வந்திராவிட்டால் அனைத்து சாதியினரும் வழிபடும் உரிமையை இன்றளவும் இந்தியாவில் பெற்றிருக்க முடியாது என்பதை தொ.ப இந்த நூலில் சுட்டிக்காட்டுகிறார்... இந்து மதத்தின் ஒரு அதிகார பீடமான காஞ்சி சங்கர மடத்தின் பின்னனி தகவல்களையும் அவர்களின் முந்தைய நிலையையும் விவரிக்கிறது இந்த புத்தகம்...

அத்வைத வேதாந்தத்தின் முக்கியமான ஆச்சிரயாரான ஆதிசங்கரர் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை ஆத்மா, பரமாத்மா எல்லாம் இறைமையின் வெவ்வேறு வடிவநிலைகள் தான் என்பதை போதித்தார்... அவர் ஆரம்பித்த மடமும் கூட இதே பாரம்பரியத்தில் வந்தது தான்... அவர்களுக்கும் கோயில் என்னும் அமைப்பிற்கும் எந்த தொடர்புமில்லை... ஆனால் இன்றைய சூழலில் கோயில்களை விட்டு விலகி நின்றால் தனிமைப்பட்டு போவோம் என்பதை உணர்ந்த சங்கராச்சாரியார்கள் கோயில்களின் மீது தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயல்வதை தொப விக்கியுள்ளார்!

மதமாற்றத்தை பற்றி குறிப்பிடும் போது மதம் மாறிய மக்களை 'இங்கிருந்து துரத்தப்பட்டவர்கள்' என்றே குறிப்பிடுகிறார்... சமூக அரசியல் ஆதிக்கம் காரணமாக தென்மாவட்டக் கடற்கரையில் இருக்கிற பரதவர் என்ற தொல்குடி மக்கள் 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிகளிளேயே நூற்றுக்கு நூறு மதம் மாறிவிட்டதாக கூறுகிறார்... இதே போல தான் பல்வேறு காலகட்டங்களில் ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதோராக கருத்தப்பட்ட மக்களின் துரத்தியடிப்பும் நிகழ்ந்துள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது!

கேள்வி பதில் பாணியில் எழுதப்பட்ட இந்த சிறிய புத்தகம் இந்து என்கிற மாயையை உடைத்தெறிய நிச்சயம் உதவும்! நான் இந்து அல்ல நீங்கள்? அதை உங்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்... 🙂

புத்தகம் – நான் இந்து அல்ல நீங்கள்...?
ஆசிரியர் - தொ.பரமசிவன்
பதிப்பகம் – வானவில் புத்தகாலயம்
பக்கங்கள் - 16
விலை - ₹11
Profile Image for Karthick.
371 reviews123 followers
December 31, 2021
Are you Hindu?
Are We Hindu?

NO. It was European Orientalist and Sir william Jones coined the word "Hindu" for indians and there is no evidence of its root in Vedas and sangam Literature. Its not a religious utterance word. There is no positive definition of Hindu in Indian Constitution also.

Then Who are we?

This book talks more about Hindu.
Who are Smartha Brahmins? what were their customs?
How they are differs from Shaivites and Vaishnavites?
Whats the role of Kanchi sankaracharya?
How Dalits were seen from Shaivism and Vaishnavism view?
Did Tamilnadu follow Varnashrama or Caste system?
What is agama Worship?


All answers for this question can be found in this book.
Amazing one!

Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
December 25, 2020
தொ.ப வின் இந்த சிறிய தொகுப்பு நம்மை 'இந்து' என்னும் பண்பாட்டு சமைய மாயையிலிருந்து விலகி சிந்திக்க தூண்டும்
Profile Image for Anitha Ponraj.
277 reviews45 followers
July 12, 2025


போபாலில் நாங்கள் வசித்த சமயத்தில் நம் ஊர்களில் Doctor,Engineer, lawyer என்று வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது போல் ,I AM HINDU, I AM A PROUD HINDU என்றெல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெரிய ஸ்டிக்கர் ஒட்டிய வண்டிகளை சர்வசாதாரணமாக காணமுடியும்.

அதைக் கண்டு சிரித்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு அடையாளமா? என்று. ஆனால் இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் மேலும் சிரிக்கத் தோன்றியது.

கிரிஸ்தவர் போல் இசுலாமியர் போல் இந்து என்பது அடையாளம் அல்ல ,சாதி என்ற கொடுமையான அடையாளம் தான் உண்மை,மத அடையாளம் எல்லாம் மேல் சாரதிகளுக்குத் தான் என்ற பதிப்பக ஆசிரியரின் உரையில் இருந்த உண்மையை சற்றேனும் தன் சுற்றுப்புறத்தை, கோவில் நடைமுறைகளை கவனிக்கும் எவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

“இந்து என்ற சொல். இந்தியாவிலே பிறந்த வேதங்களிலோ. உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ பிராமண்யங்கள் என்று சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை. இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே ஐரோப்பிய Orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்தச் சொல்லுக்கான 'மரியாதை' என்ன என்று கேட்டால், 'இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல்' என்பது தான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது.”

“1799-ல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்தபொழுது கல்கத்தாவில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu law என்று பெயரிட்டார். அப்பொழுதுதான் Hindu என்ற சொல் முதன்முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. இந்தச் சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது, ஆரிய மொழிகளிலும் கிடையாது.”

என்று முதல் பக்கத்தில் கொடுத்திருந்த பதிலை/உண்மையை தெரிந்திருந்தால் இங்கு மொழி அரசியல்/மத அரசியல் நடத்தி பிழைப்பவர்கள் நிலை என்னவாகும்? “I AM PROUD HINDU” என்று ஸ்டிக்கர் ஒட்டுவார்களா?

இரவீந்திரநாத் தாகூர், 'பஞ்சாப சிந்து குஜராத மராட்ட திராவிட' என்று பாடும்போது நான்கு தெ��் மாநிலங்களைச் சேர்ந்த நிலப்பரப்பை 'திராவிட' என்ற சொல்லாலே குறிக்கிறார். எனவே. ஆரியம், திராவிரும் என்ற சொல்லுக்கு ஒரு வரலாறு உண்டு: இந்து என்ற சொல்லுக்கு அப்படியொரு வரலாறு கிடையாது.

இப்படி எந்த ஒரு மூலமும் இல்லாத ஒரு வார்த்தையை வைத்து மூலைமுடுக்கெல்லாம் அரசியல் நடக்கிறது என்பது தான் உண்மை.

இந்துவுக்கு அடுத்து அதிகம் அரசியலாக்கப்பட்ட சொல்ல சனாதனம்!! இந்த புத்தகம் வாசிக்கும் முன்பு அதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது தெரிகிறது.

“முன்னோர்கள் போல'. 'நமது முன்னோர்கள் செய்தது போல'. 'மரபுப்படி' என்று சொல்லுவதற்கு 'சனாதனம்' என்று அர்த்தம். முன்னோர் செய்தது முன்னோர்கள் செய்தது' என்று இவர்கள் சொல்லுவதெல்லாம் பிறப்பு காரணமான சாதி வேற்றுமையைக் கோயிலுக்குள்ளே மறுபடியும் நிலை நிறுத்துவது என்பதே.

முன்னோர்கள் என்ன செய்தார்கள் ? பிறவி ரீதியாக மக்களை மேல்கீழாக அடுக்கி வைத்தார்கள். உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனப் பிரித்து வைத்தார்கள். இதுதான் 'முன்னோர்கள் செய்தது போல' என்பதின் இரகசியம் !!”

என்ற வார்த்தைகளில் இருந்த உண்மையை மறுக்க முடியாது. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போதும், புதிய பாராளுமன்றம் திறந்த போதும் அதில் ஏன் ஜனாதிபதி இடம்பெறவில்லை என்று ஒரு கேள்வி அச்சமயங்களில் எழுந்தது. அது தான் இந்த சனாதானத்துக்கான விளக்கம் என்று எனக்கு தோன்றியது.

இவையல்லாமல் சைவர்கள், வைணவர்கள் என்பதன் பொருள்,காஞ்சி காமகோடி பீடம், கோவில் கருவறையில் தமிழ்/வடமொழி குறித்து, அர்ச்சனை என்ற சொல்லின் பொருள், கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நிலை, மதச் சிறுபான்மை சமூகங்கள் குறித்து, பகுத்தறிவு வாதங்கள் குறித்து என்று கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது போல இருபது பக்கங்களில் அத்தனை தகவல்கள்!!!

தொ.பவின் புத்தகங்கள் அனைத்திலும் சிலப்பதிகாரம் குறித்து ஏதாவது ஒரு சிறு பகுதியாவது இருக்கும் அதே போல் இந்த புத்தகத்திலும் தமிழில் அருச்சனை என்ற தலைப்புக்கு கீழ் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் உள்ள சில வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

புத்தகத்தில் பல இடங்களும் எனக்கு பிடித்திருந்தாலும்,ஆழப்பதிந்த கேள்வியும் பதிலும் இது தான்,

நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் கோயில் என்ற அமைப்பே சாதிகளைக் காப்பாற்றும் முறைபோன்று தோன்றுகிறதே ?

ஆம். 1949-இல் கோயில் நுழைவுச் சட்டம் வருகிற வரைக்கும் கோயில் என்ற நிறுவனம் சாதியை முழுமையாகக் காப்பாற்றும் அமைப்புத்தானே. கோயில் நுழைவுச் சட்டம் என்பது தடை செய்யப்பட்ட சாதியார் கோயிலினுள் நுழையலாம் என்பது தானே! இவர்களைத் தடை செய்து வைத்தது எது? கோயில் தானே. இன்றைக்கு நாம் அனைவரும் உள்ளே போய் வணங்கினாலும் கூட மதுரை வீரன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்திற்கு வெளியேதான் இருக்கிறது. அதே போல மதுரை வீரனை வணங்கும் சாதியார் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.

என்பது தான். அனைவருக்கும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நல்ல நூல்.
60 reviews6 followers
September 7, 2021
நான் இந்துவல்ல நீங்கள்?
தொ.பரமசிவன்

தொ.பரமசிவன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விடையின் தொகுப்பே இந்த நூல். இதில் பெரிதாக எதுவும் புதிதாக தெரியவில்லை. அனைத்தும் ஏற்கனவே அறிந்த விஷயங்கள்தான். ஆனால் ஒரு விஷயம் இதில் நெருடலாக இருந்தது. வைணவர்கள் முன்பு எல்லாம் எந்த சாதியினரை வேண்டுமானாலும் தீட்சை அளித்து வைணவர்கள் ஆக்கிக்கொண்டனர். பிறகு வைணவ சமூகம் தீட்சை பெற்றவரிடம் என்ன சாதி என்பதை கேட்கவே மாட்டார்கள் என்றும் ஆசிரியர் கூறி இருந்தார். அது எந்தளவிற்கு உண்மை என எனக்கு தெரியவில்லை. அதற்கு வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன்.
Profile Image for Selva.
55 reviews
April 15, 2021
இது சிறிய புத்தகம் தான் ஆனால் நிறைய கருத்துக்கள் உள்ளன. இப்புத்தகத்தின் மூலம் மதம், மதமாற்றம், சாதி, மத அரசியல் என பல விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

2017 ல் வெளிவந்த புத்தகம் ஆனால் நான் இந்த புத்தகத்தை படிக்கும் (2021) போது தமிழக கோவில்களை காப்போம் (#FreeTNTemples) என்ற பதிவு பரவுகிறது. ஆனால் ஏன் கோயில்கள் சிதிலமடைந்திருக்கிறது என்ற கேள்விக்கு இப்புத்தகத்தில் பதில் கிடைத்திருக்கிறது.
Profile Image for Selva.
55 reviews
April 15, 2021
இது சிறிய புத்தகம் தான் ஆனால் நிறைய கருத்துக்கள் உள்ளன. இப்புத்தகத்தின் மூலம் மதம், மதமாற்றம், சாதி, மத அரசியல் என பல விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

2017 ல் வெளிவந்த புத்தகம் ஆனால் நான் இந்த புத்தகத்தை படிக்கும் (2021) போது தமிழக கோவில்களை காப்போம் (#FreeTNTemples) என்ற பதிவு பரவுகிறது. ஆனால் ஏன் கோயில்கள் சிதிலமடைந்திருக்கிறது என்ற கேள்விக்கு இப்புத்தகத்தில் பதில் கிடைத்திருக்கிறது.
Profile Image for Manish Dharanenthiran.
1 review
May 20, 2021
Excellent explanation about the formation of caste, "what is meant by Hindu" with proper research background and details.
Profile Image for அன்புடன் பாரதி.
11 reviews2 followers
January 6, 2023
ஆசான் என்பவன் யார்..?
மக்களோடு மக்களாக
பயணித்தவனும்..

மக்களிடையே
கள ஆய்வு
செய்தவரும்தானே
இருக்கமுடியும்..!

அந்த வகையில்
ஆசான்..
தொ.பரமசிவன்
16 reviews
February 21, 2023
Tho.Pa briefly discusses with supporting facts how one can never be a Hindu and how the term has rooted deeply within the so called Hindu people.
June 20, 2024
இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களுக்காக...
வாசிப்போம் அறிவோம் 🎈
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.