ஒருத்தியை பெரிதாகக் காதலிக்கும் போது அவள் வெளிப்படுத்தும் மிகச் சாதாரண நல விசாரிப்புகளைக் கூட பெரும் அக்கறைகளாக எடுத்துக்கொள்வாய், நீ அவளுக்கு முக்கியமானவனாக இருப்பதாகா நினைத்துக்கொள்ளுவாய். அவள் உன் மீது அத்தனை தீவிரமாக அக்கறைகாட்ட வேண்டுமென நீ விரும்புகிறாய். அப்படி இல்லை என்னும்போது உன் மனம் சமநிலை குலைகிறது அதனால் உன் மனம் உன்னை மகிழ்விக்க ஏற்படுத்தும் மாயத்தோற்றமே இது. மற்றபடி அவள் உன்னிடம் வெளிப்படுத்துவது எல்லோரிடமும் போல மிகச் சாதாரணமான முகமன் நலவிசாரிப்பு மட்டுமே. போலவே அவள் அலைபேசியில் உன் அழைப்பை ஏற்காமல் போனால், செய்திக்கு பதிலளிக்காமல் போனால், உன்னை கண்டுகொள்ளாமல் போனால், ஏதோ பெரிய புறக்கணிப்பை எதிர்கொண்டா
ஒரு நல்ல காதல் கவிதை என்ன செய்யும்? காதலை நம்பிட விழையாத ஒருத்தியை வாசிக்கும் நொடிகளில் மாத்திரமாவது காதலில் மூழ்கி பித்தேறச் செய்யும்…. அத்தகைய காதல் கவிதைகளை கொண்ட அழகிய தொகுப்பு… அன்பின் பிரயத்தனங்கள், அன்பின் ஆதுரங்கள், அன்பின் வெளிப்பாடுகள், அன்பின் பிரிவுகள் என அன்பின் அழகிய பரிமாணங்களை அழகிய தமிழில் வெளிப்படுத்தத் தவறவில்லை இந்த நூலின் ஆசிரியர்…