Oceans and Ships are always beautiful. We often look at the sea as a symbol of peace. But we dont often think how the lifestyle of the workers of the ship will be. The author gives a clear explanation in this field with his own handfull experience.
கடல் பயணம் சற்று அச்சத்தை கொடுக்க கூடியது என்று தான் நினைத்து இருந்தேன், ஆனால், கணேசன் அவர்களின் கை கோர்த்து அவருடன் சேர்ந்து பயணத்தை மேற்கொண்டதால், ஒரு ஆக சிறந்த அனுபவமாக இந்த புத்தகம் அமைந்தது!
எல்லோரும் புரிந்துகொள்ள கூடிய எளிய நடை, சுவாரசியம் குறையாத அவரின் எழுத்துக்கள், ஆச்சர்யமும், பயமும், பதற்றமும், வேதனையும் எல்லாம் கலந்த ஒரு பயணம் இவரின் அனுபவங்களை கோர்த்த இந்த புத்தகம்.
நிலத்தில் இருந்து கொண்டு நம்மை தீண்டி செல்லும் கடல் அலைகளை ரசிக்க தெரிந்த நமக்கு, நடு கடலில் நடக்கும் விசயங்கள் அறிய வாய்ப்பில்லை, இந்த உணர்வை இந்த புத்தகம் தீர்த்து விட்டது.
அடுத்து அடுத்து வாசிக்க தூண்டும் இவரின் எழுத்து நடை தான் இதன் சிறப்பு!
கடலை பற்றி, கடல் வாழ்க்கையை பற்றி, கப்பல்களை பற்றி, வெவ்வேறு நாட்டின் கலாச்சாரங்களை பற்றி, கடலின் பயங்கரங்களை பற்றி அறிந்து கொள்ள அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. முற்றிலும் வேறுபட்ட வாசிப்பனுபவம்💙
து. கணேசன் ஜூனியர் விகடனில் எழுதிய தொடர் இது. Marine engineerஆக 9 வருடங்களில் 6 கண்டங்களுக்கு சென்று வந்த அனுபவத்தை விவரித்துள்ளார்.
என்ன தான் ஆசிரியர் join பண்ண முதல் நாளே கசப்பான அனுபவங்களை சந்திச்சாலும் போக போக இந்த கப்பல் வாழ்க்கை அவருக்கு சுவாரஸ்யமா அமைஞ்சது என்னவோ உண்மை.
ரேடியோ ஆபீசர் ஜோன்ஸ் மார்டின் உடன் நடந்த உரையாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாட்ரிசியா மற்றும் ரோசானா உடன் நடந்த உரையாடல்கள் wholesome. அருண் மனைவி ரோகிணி செலவைக் குறைக்க செய்த முன்னேற்பாடுகள் சிரிக்க வைத்தது. பூமத்தியரேகையை கடக்கும்போது நடந்த சம்பவம் வெகுவாக கவர்ந்தது. அதற்காக நடந்த வினோத விழாவும் ஆச்சர்யமாக இருந்தது. ஜப்பானியர்களின் நேரம் தவறாமை வியப்பை ஏற்படுத்தியது .
வில்லியம்ஸ் கேதரின் கதை என்னை சோகத்தில் ஆழ்த்தியது. சூயஸ் வியாபாரிகளின் கில்லாடித்தனத்தைப் பற்றி படிக்கும்போது குபீர் சிரிப்பு வந்தது. கப்பலில் காணாமல் போன ஆனந்தனின் கதை என்னை அழ வைத்தது. ஆசிரியர் ஒரு அருமையான கதைசொல்லி. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உணர்ச்சியை தூண்டும் வகையில் இருந்தது. கடல் மற்றும் கப்பல் சம்பந்தமான பல தகவல்களையும் கூறியிருக்கிறார். For ex: ஆப்பிரிக்காவின் தென்மேற்குக்கோடியான Cape of good hope என்ற இடத்திற்கு வந்த பிறகு தான் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழியை கண்டுபிடித்தார்.
அவரது அனுபவங்கள் மட்டும் அல்லாமல் அவர் கேட்டு அறிந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளார். ரொம்ப நாட்களுக்கு பிறகு புத்தகத்தை கீழே வைக்க மனமில்லாமல் படித்தேன். Watchkeeping, wheel house, ballast voyage, stowaway இவற்றைப் பற்றியெல்லாம் நான் தெரிந்துகொண்டேன்.
ஒரு marine engineer தனது வேலையில் சந்தித்த அனுபவங்களை படிப்பவருக்கு அலுப்பு தட்டாத வகையில் எழுதி இருக்கிறார்.
பொதுவாகவே கப்பலில் வேலை செய்பவர்கள் கடினமாக உழைப்பார்கள், நல்ல சம்பளம் வாங்குபவர்கள், உலக நாடுகளை ஓசியில் சுற்றி பார்ப்பவர்கள் என்ற அபிப்ராயம் எனக்கு உண்டு. இந்த புத்தகம் அது உண்மை என்று நிரூபிக்கிறது.
ரயில் கூட்ஸ் வண்டியில் கடைசி பெட்டியில் அமர்ந்து செல்லும் கார்டு பெரும்பாலான நேரம் தனியாகத்தானே இருப்பார் அவர் அச்சமயங்களில் என்ன செய்வார், பைத்தியம் பிடித்து விடாதா என்றெல்லாம் யோசித்தது உண்டு. ஆனால் அதே போன்ற தனிமை கப்பலில் வேலை செய்பவர்களுக்கும் இருக்கும் என்று இந்த புத்தகமே புரிய வைத்தது.
சரக்கு ஏற்றி வாணிபம் செய்யும் கப்பல்கள் எத்தனை வகைப்படும், கப்பலின் என்ஜின் எவ்வாறு வேலை செய்யும், கப்பலில் வேலை செய்பவர்களின் பதவிகள் என்னென்ன, என்ன மாதிரியான வேலை செய்வார்கள் என்று எளிமையாக புரிய வைக்கிறார்.
மேலும் சரக்கு, பெண்கள், துறைமுகங்கள் என்று கூடுதல் தகவல்களும் உண்டு. படித்து ரசிக்க வேண்டிட புத்தகங்களில் ஒன்று.
கடல் வாழ்க்கை, தொலைதூரக் கப்பல் பயணங்கள், தான் சந்தித்த வெவ்வேறு நாட்டு மக்கள் குறித்த அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் நாவல் போல தொகுத்துள்ளார்.கடல், கப்பல் குறித்த ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் படிக்கவும் :-)
மிகச்சிறந்த கடல் அனுபவம்.. இன்னும் தொடர்ந்து எழுதி இருக்க வேண்டுமோ.. என்ற ஆசை முடிக்கையில் வந்து விடும் என்பது திண்ணம்... வாசகர்கள் பெற்றதும் கடல் அளவே... நன்றிகள் பல..
கரையில் நின்று கடலை பிரமித்த பார்க்கும் மக்களின் ஒருவனாக நான் நினைப்பதெல்லாம் தொடுவானத்தினை கடலில் பயணித்து துரத்தி பிடிக்கமுடியுமா? என்பதே. கரையில் நின்றே கடலை ரசிப்பன், கடற்கரையில் உற்சாகமாக வலம் வருபவன், கப்பலில் வேலைசெய்யும் நண்பரின் கப்பல் பயண அனுபவங்களின் கட்டுரை தொகுப்பு புத்தகத்தை(கற்றது கடலளவு) படித்தபோது நான் இதுநாள் வரை கேள்விப்பட்ட, கப்பலில் வேலை என்றால் கரையில் ஆறுமாதம், கடலில் ஆறுமாதம். கரையில் உள்ள ஆறுமாதமும் கம்பெனி சம்பளம் கொடுத்துவிடும், இந்த ஆறுமாத கணக்கு, விடுமுறையுடன் கூடிய சம்பளம் என்பது போன்ற செய்திகள் யாரோ சொன்ன பொய் என்பதை சரக்குகப்பலில் இன்ஜின்ரூம் இன்ஜினியர்யாக பணியாற்றும் கணேஷன் அவர்கள் எழுதிய கற்றது கடலளவு புத்தகம் தெளிவுபடுத்துகிறது. மேலும், 30க்கும் அதிகமான நாடுகளுக்கு கப்பலில் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களையும், துறைமுகம் சார்ந்த தகவல்களையும், கடல் கொள்ளையர்களினால் ஏற்றப்பட்ட இழப்புகள், பிரேசில் துறைமுகத்தின் அருகில் இருக்கும் பார்ரில் இவர் சந்தித்த விலைமாதுவின் கள்ளங்கபடமற்ற அன்பு, கடலில் முழ்கிப்போன விஷ்வமோஹினி கப்பலில் இருந்து உயிர்பிழைத்தவரின் அனுபவங்கள், பூமத்தியரேகைய கடக்கும் திருவிழா, கடல்வழி பாதைகளில் ஆர்பரித்து அச்சமூட்டும் கடல் அலைகள், கப்பலின் கட்டமைப்பு மற்றும் கப்பல் இயங்கும் முறைகள், துறைமுக பைலெட்டுகளின் அத்தியாவசியம், சூயஸ் கால்வாய்& பனமா கால்வாய்களில் சிறப்புகள் மற்றும் இந்த கால்வாய்களை கப்பல் கடக்கும் நிகழ்வுகள், கப��பலில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, கிரேக்க கப்பல்களில் உள்ள பணிச்சிக்கல்கள், கடலில் தொலைந்துபோன நண்பரின் கதை, கப்பலை நிறுத்த கப்பலுக்கு பிரேக் இல்லை!!! என பல ஆச்சரியங்களும், அச்சமூட்டும் நிழ்வுகளும் அடங்கிய அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இந்த கற்றது கடலளவு.
கப்பல்ல வேல பாக்கறவனுக்கு கடல் அளவு சம்பளம் என்பது உண்மையாக இருந்தாலும் கப்பலின் வேலையாட்களுக்கு சனி, ஞாயிறு என எந்த விடுமுறை நாட்களும் இல்லை கப்பல் கடலில் உள்ள எல்லா நாட்களும் வேலை நாட்களே!!!.