“இன்னிக்கு சந்தோஷத்தை நேற்றைய வேதனையிலோ நாளைக்கு உண்டான கனவுகளிலோ விட்டுடாதே.”
எப்படியோ மாதம் ஒரு பாலகுமாரன் புத்தகம் படிக்க நேர்கிறது எனக்கு..வரம் என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க்கையின் எதார்த்தத்தை,மனித மனதின் எதார்த்தத்தை,உண்மையை ஒவ்வொரு முறையும் அழகாக எளிமையாக,மனதை மிகவும் அழகாக நெருடும் வகையில் எழுதுவது இவரால் மட்டும் தான் முடியும்.
“அகல்யா”-இளம் விதவையாக அறிமுகமாகி தனக்கான துணையை கண்டறிந்து,மீண்டும் திருமணம் செய்து கொள்கிறாள்.அதன் பின் அவள் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பது தான் கதை. “சிவசு”-என் மனம் கவர்ந்த ஆண் கதாபாத்திரங்களில் சிவசுக்கு நிச்சயம் முதலிடம் உண்டு. “காதலை” மிகவும் complicate செய்துவிட்ட இந்த காலகட்டத்தில் சிவசுவின் காதல் மொழி மனதை நெகிழ வைக்கிறது.
எல்லாம் இனிமேல் சரியாகத் தான் போகும்,இதற்கு பின் என் வாழ்க்கையில் எல்லாமே சுபம் தான் என்று எண்ணும் தருவாயில் விதி தன் விளையாட்டை காட்டும்.அப்படி ஒரு விதியால் கதையில் திடீர் திருப்பம். அத்தனைக்கு மத்தியிலும் ஒரு காதல்..ஒரு அழகான காதல் மனதை மிகவும் பாதிக்கிறது,ரசிக்கவும் வைக்கிறது.