Jump to ratings and reviews
Rate this book

அணிலாடும் முன்றில்

Rate this book
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா... என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் - அன்பு! இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்!’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி!

144 pages, Paperback

First published January 1, 2012

400 people are currently reading
3499 people want to read

About the author

Na. Muthukumar

16 books324 followers
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1,037 (66%)
4 stars
395 (25%)
3 stars
78 (5%)
2 stars
24 (1%)
1 star
26 (1%)
Displaying 1 - 30 of 180 reviews
Profile Image for Avanthika.
145 reviews853 followers
March 2, 2014
இரண்டே மணி நேரத்தில் வாழ்ந்த குடும்பத்தையும் பழைய உறவுகளையும் எண்ணி ஏங்கி தவிக்க செய்தது <3 Awesome book on relationships :)
கூட்டு குடும்பத்திற்காக ஏங்கும் அனைவரையும் சின்ன வயது வாழ்க்கையை நினைவுபடுத்திக்கொள்ள செய்கிறது :)
அம்மா-அப்பா, அத்தை-மாமா, பெரியம்மா-பெரியப்பா, சித்தி-சித்தப்பா, பாட்டி-தாத்தா, அக்கா-தங்கை, ஒன்று விட்ட அண்ணன்-தம்பி, உடன் பிறந்த அண்ணன்-தம்பி, அண்ணி, முறைபெண்களென அணிலாடும் முற்றத்தில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த நினைவுகளை திரும்ப தருகின்றது <3
Profile Image for Girish.
1,155 reviews260 followers
January 27, 2019
"ஒரு புத்தகத்தை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தை தொடுவாய்"

Aniladum Mundril is one of the most beautiful walk down the memory lanes you can ever read. Touching, humorous and makes you totally nostalgic about the various relations.

As a kid who grew up in a large family with all the relatives, the book was instantly relatable. It's a shame that English doesn't have translations for half the relations explained here. Everyone is Uncle and Aunt or what? What was even more surprising was how all the relations live upto the stereotype!

For example your Mama (Maternal uncle) is always the one who you try to emulate or how your Chithappa (Paternal Uncle) is the friend. Your Periamma (Maternal Aunt - Elder) is caring but only second to her own kid and your Athai (Paternal Aunt) is the one who pampers you the most. The book takes you back to your childhood and Na.Muthukumar's 'rasanai' of words is standout.

The last 2 chapters- letters to his wife and his son were something I was tempted to plagiarize. So beautiful, not all lyrical, but straight from the heart.

Like this is for my 6 month old daughter. I don't want to lose the beauty of the words in translation.
"உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. ‘தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்’ என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்துபோனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டு இருந்தாய்."

In today's world family and relatives are extended whatsapp groups sharing forwards and a monochrome of timebound robots. I wish my daughter could experience these relations which make growing up colorful and full of memories - fond and otherwise.

Na.Muthukumar - what all could he have produced had God not took him away early. Bless his soul.
Profile Image for Dinesh.
128 reviews9 followers
July 16, 2022
இந்நூலில் வரும் உறவுகளைப் பற்றிய ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை பழைய நினைவுகளுக்கு இட்டுச்செல்லும். உறவுகளை கொண்டாட வைக்கும்!
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
December 26, 2023
கண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது ..... நா.மு வாழ்ந்து கொண்டே இருப்பார் கவிதைகளாகவும் பாடல்களாகவும்...💙💙💙💙
108 reviews3 followers
September 18, 2022
உறவுகளின் மேன்மையை அவரது பால்யம் வாயிலாக சொல்லும் ஒரு அழகிய படைப்பு!!

கண்டிப்பாக நாம் நம் உறவுகளை திரும்ப பார்த்து அசை போடுவோம்!

நாம் நேசித்த பக்கத்து வீட்டு அக்காகள், நமது நண்பர்களின் தங்கைகள் தமது தங்கைகள் ஆனது, மாமாக்கள் நமக்கு சொல்லாமல் சொன்ன பாடங்கள், பால்யம் உறவுகளால் விரவி கிடக்கின்றது.

எளிமை என்றுமே இளையொடும் முத்து குமாரின் வரிகளில், இவையும் அப்படியே!!

இளைப்பாரல் தரும் வரிகள்!!
Profile Image for Vignesh Asokan.
22 reviews5 followers
November 6, 2020
நா. முத்துக்குமார் அவர்கள் தான் கடந்து வந்த உறவுகளையும் உணர்வுகளையும் சிறப்பாக படைத்து நம் நினைவலைகளை வருடிச்செல்கிறார்.
எழுத்து வடிவம்: கவிதை + கட்டுரை + கடிதம்!!!
மற்றவர்களுக்கு பரிசாக அளிக்க சிறந்த புத்தகம்.
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
January 21, 2019
சுட்டும் விளிச்சுடரில் அவரது ரசிகனாகினேனென்றாலும் தேடி படிக்கும் பழக்கம் அப்போதில்லை. என் நேரத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த வேலையை துறந்தப் பிறகான காலம் வாசிப்பின் மீதான நட்பை நீண்ட காலத்திற்கு பிறகு வாசிப்பில் மீண்டும் கொண்டு சேர்த்தது. பழைய வாசிப்பின் பரிச்சயம் கொஞ்சம் நாள் ஆன்மீகத் தேடலில் அவ்வப்போது கழிந்திருந்த நேரம் இலக்கிய உலகத்திற்கு நானொரு புதிய வாசகனே. எதிலிருந்து தொடங்குவது என்பது எல்லா தொடக்க வாசகனுக்கும் எழும் மிகப்பெரிய ஐயமே..
எனது முதல் வாசிப்பு அரசியல் கட்டுரையில்தான் தொடங்கியது, அப்போது எனக்கு தெரியாதது எழுத்துலகமும் அவரவருக்கானக் கொள்கை புரிதலோடுதான் தன் எழுத்துகளையும் விமர்சனப் பார்வைகளையும் இந்த உலகத்திற்கு கொடையாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அது இப்போதும் தொடர்வது இலக்கிய உலகின் சாபம் மட்டும் தான் அதைக் கடந்து ஒரு வாசகன் கற்று கொள்வது மிகப் பெரிய வாசிப்பிலும் தேடலிலும் தான்.
இன்றும் இதன் பார்வைகள் மாறவில்லை என்றே கருதுகிறேன். தொடக்க வாசகனிலிருந்து தீவிர வாசகனாக மாறியப் பிறகும் நாம் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களில் இன்றும் ஒரு குழப்பநிலை சூழ்ந்தேயிருக்கிறது. அதுவே பல எழுத்தாளர்களின் அறிமுகத்தையும் நம்முள் கொண்டு வருவதில் மிகப்பெரிய தடையாகவே இருக்கிறது. அந்த தடையின் நீட்சிதான் இந்த புத்தகத்தை வாங்கிய பிறகும் வாசிக்காமல் என் டிஜிட்டல் அறைக்குள் உறங்கி கொண்டிருந்தது
இந்த புத்தகம் கூட ஒரு ஞாபகார்த்தத்திற்காய் மட்டுமே வாங்க பட்டது என்பதை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். ஆங்கிலப் புத்தகத்திற்காய் மட்டுமென இந்த டிஜிட்டல் புத்தக கருவியை (கிண்டில்) வாங்கியிருந்தாலும் காலப்போக்கில் தமிழ் புத்தகங்களும் அதன் பதிப்புகளை கொண்டு வர விலைகளின் காரணமும் தமிழ் புத்தகங்களுக்கானத் தேர்வை தந்தது.
உண்மையை சொல்வதென்றால் ஒரு மரணத்தின் நினைவில் வாங்கப்பட்டது தான் இந்த அணிலாடும் முன்றில் புத்தகம். கவிதையா ? கட்டுரையா ? என்று கூட பார்க்கவில்லை என்பதற்காய் நிச்சயம் எனது வருத்தத்தையும் பதிவு செய்வது அவசியமாகிவிடுகிறது. எதேச்சமாக குட்ரீட்ஸ் குழுமத்தின் உந்துதலில் புத்தகத்தை படிக்க முனைந்த போது தான் அது ஒரு கட்டுரை தொகுப்பு என்பதை கவனித்தேன். எனது அலட்சியம் கூட இதை கவிதைத் தொகுப்பாய் முன்கூட்டியே கணித்த எனது தவறுதல் மட்டுமே.
என் இதயத்தை பாடல் வரிகளால் நிறைத்த நா.முத்துகுமாரின் அணிலாடும் முன்றிலை வாசிக்கத் தொடங்கிய உடனே அதனுள் என் நினைவுகளும் புதைந்து கொண்டது. ஞாபக மறதியாக இருந்தாலும் எங்கோ படித்த ஒரு நினைவு. நமது இறந்தகால நினைவுகள் எப்போதும் புதியது வர வர அதனிடம் துளித் துளியாக மாறிப்போகிறது என்று படித்திருந்தேன். இந்த புத்தகத்தை வாசிக்கும் நேரம் அந்த சிறுதுளி நினைவுகளும் பெருங்கடலாய் பெருக்கெடுத்து மனதுக்குள் எல்லாவித பால்யக் கால எண்ணக் கோடுகளையும் நிழல் சித்திரங்களாய் வரையத் தொடங்குகிறது.
நினைவுகளை மீட்டெடுக்கும் மந்திரம் இந்த புத்தகத்தின் வரிகளுக்குண்டு என்றே எனது பார்வை. எளிய வாசகனையும் ஈர்க்கும் எளிய நடை. படிக்கப் படிக்க பரவசமூட்டும் இரத்த உறவுகளின் உணர்வு ���ெளிப்புகள் நம்மை கடைசி வரை குளிர்வித்துக் கொண்டேயிருக்கின்றன.
படிப்பறிவு மிகுந்த காலத்தில் சுயநலச்சமூகக் கூட்டத்தில் வாழும் நமக்கு எல்லா உறவுகளையும் பரிமாணத்தையும் பரிச்சையத்தையும் நித்தம் நித்தம் தொலைத்து விட்ட கணத்தை, இப்புத்தகத்தின் மூலம் இனி வரும் காலத்தில் வாசிக்கப் போகிற புதிய இளம் வாசகர்களுக்கு இந்த விசயங்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள் மாறும் நினைவுச் சின்னங்களே.
Profile Image for Kavitha Sivakumar.
353 reviews60 followers
February 2, 2019
கவிஞர் வெவ்வேறு சொந்தங்களை பற்றி தனது அனுபவங்கள் மூலம் விவரித்து இருக்கிறார்.

The author tried to explain about various relatives through his own experiences. His writings shows what a wonderful soul and heart he has.

When I have a worse mood, mind automatically thinks only the bad experiences from our relatives. On a good day, I may think all the nice experiences and forget about ill-thoughts. When I read this book, i kept reminiscing about my relatives and the good times I had with them :)

In this book, the author has only good things to say and even when there were some negative aspects of his relatives, he described in a lighter tone. I also liked how he quoted a poem or a short story before describing about each relative.

When discussing about his untimely death and a loss to Tamil literature, a friend quoted S. Ramakrishnan's words which I feel like repeating here.....மேதமைககும, அறப ஆயுளுககும உளள தொடரபு உலகெஙகும ஒனறு போலவே இருககினறது.


59 reviews
August 13, 2017
Incredible

There wasn't a single chapter that didn't leave me without tears. What incredible writing. Makes me feel the loss of a great writer much more than I previously felt.

Every single line is worth highlighting. I'm so glad I bought this book. Every now and then I'll be going back and reading parts of it, shedding a tear or two in the process.
Profile Image for கவி.
32 reviews2 followers
March 25, 2024
அணிலாடும் முன்றில்-நா. முத்துக் குமார்

🍁தன்னை பெற்றெடுத்த தாயிலிருந்து
தன்னால் உதித்த சேய் வரைக்குமான
காலகட்டத்தில் தான் வாழ்ந்து, பார்த்து கடந்துவந்த, குடும்ப உறவுகளையெல்லாம் உள்ளடக்கி உள்ளார்.
🍁இதில் காணும் உறவுகள் ஒன்றேனும் வாசகர்கள் தத்தம் வாழ்வில் அனுபவித்து இருப்பர்.
🍁தன் உதிரம் கொண்ட சில உறவுகளும்,தன் வாழ்வில் வழித்துணையாய் வந்த சில உறவுகளையும் சேர்த்து தொடுத்த ஓர் அழகிய பூச்செண்டு.

ஒரு வாசிப்பின் போது பிடித்த வரிகளுக்கு அடிக்கோடு இழுப்பதற்கான காரணத்தை…

அப்பா:
“எங்கோ இருக்கும்
இதையெழிய எழுத்தாளனுக்கு…
நான் இங்கிருந்தே
கை குலுக்குகிறேன்” …. என்று தன் தந்தை சொல்லியதாகக் கூறும் வரிகளில்…
அந்த வரிகளுக்கு அடிக்கோடிட்டு அந்தத் தந்தையோடு கை குலுக்கத் தவறவில்லை நமது கைகள்.

மனைவி:
"..இந்த உலகத்தில்
எல்லாப் பூக்களும்
மலர்ந்த பின் தான் வாடும்.
வாடிய பின் மலரும் ஒரே பூ
நீதானடி…
உன்னை மலரவைக்கவே
வாடவைக்கிறேன் என்பது
உனக்குத் தெரியாதா என்ன…?!”…

மகன்:
"தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான். கற்றுப் பார்.. உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப் பார்"

புத்தகத்தில் பிடித்த வரிகள் என்று ஒருசில வரிகளை என்னால் அடக்க முடியவில்லை.
வாசிப்பை நேசிக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
251 reviews38 followers
December 31, 2022
புத்தகம் : அணிலாடும் முன்றில்
எழுத்தாளர் : நா.முத்துக்குமார்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
பக்கங்கள் : 144
நூலங்காடி : ஈரோடு புத்தகக் கண்காட்சி

🔆உறவுகளின் அழகியலைக் கூற எண்ணற்ற பாடல்கள் உண்டு . அப்பா - மகள் , அம்மா - மகன், அண்ணன் - தங்கை உறவுகளின் பாடல்கள் தமிழ் மொழியில் அதிகம் . அதில் விட்டுப் போன உறவுகளை பற்றி கூறுவதே “அணிலாடும் முன்றில்”.

🔆அம்மா , அப்பா தொடங்கி பெரியம்மா, பெரியப்பா , சித்தி - சித்தப்பா , மாமா - அத்தை , பங்காளிகள் , முறைப் பெண்கள் என விக்ரமன் படத்தில் காட்ட தவறிய அனைத்து உறவுகளையும் நம் கண் முன்னே காட்டி விட்டார் , நம் நாயகர் .

🔆சிறு வயதிலேயே அம்மாவை இழந்த முத்துக்குமார் அவர்களுக்கு , அவர் அம்மாவின் உடலை கிடத்தி வைத்திருந்த போது , சிறு கரும்பு ஒன்றைக் கொடுத்தார்களாம் . அந்த கரும்பு கசப்பாக இருந்ததாக கூறியிருக்கிறார். அது போல போலியான உறவுகளின் , சுய ரூபம் தெரியும் போது கசந்து தான் போகிறது .

🔆அவரின் தந்தை ஒரு புத்தக பிரியர். அவர் மூலமாக அவர்க்கும் வாசிப்பு பழக்கம் வந்தது என அறிய முடிகிறது .

🔆அம்மாவை இழந்த அவருக்கு , அவரின் இரு “ஆயாக்களும்” அவரை எப்படி பார்த்துக் கொண்டனர் என்பதை படிக்கும் போது மிக ரம்மியமாக இருந்தது.

🔆இந்த உலகத்தில் இருந்து , அவரை இயற்கை சீக்கிரம் எடுத்துக் கொண்டாலும் , அவரின் வரிகள் நூற்றாண்டு காலம் நம்மொடு வாழும் .

“மகள்களைப் பெற்ற அப்பாக்குகளுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று “.



புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Gowsalyaa.
78 reviews28 followers
January 11, 2023
உறவுகளும் உணர்வுகளும் ♥️
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books174 followers
October 26, 2022
"ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு தோற்றம் தரும் கண்ணாடி தானே வாழ்க்கை"-நா.மு

"அன்பே சிவம்" ல ஒரு வசனம் வரும், "சமீபத்துல நீங்க பாத்து ரசிச்சு பாதிச்ச Art எது" னு, என்கிட்ட யாராவது இப்போ இந்த கேள்விய கேட்டா இந்த புக்கை தான் காட்டுவேன்.

அம்மாவில் தொடங்கி தன் மகன் வரை அவர் சந்தித்த உறவுகள் எல்லாம் பற்றி எதார்த்தம் மாறாமல் கொண்டாடி தீர்த்திருக்கிறார். 20 உறவுகள்-20 கதைகள்! பக்கங்களை திருப்புகையில் கூட இதமாகவே இருக்கிறது இந்த புத்தகமும் இதில் எழுதியிருக்கும்‌ உறவும் உணர்வுகளும்!
அவ்வப்போது வழிந்த கண்ணீர் துளிகளில் எல்லாம் என் உறவுகளின் நியாபகத் துளிகளே!

நெடுந்தூரம் ஒரு Solo Trip பிளான் பண்ணி இந்த புத்தகத்தை மறக்காமல் பையில் வைத்துக் கொண்டு படியுங்கள், ஓர் மகிழ்ச்சியும் பேரமைதியும் மனதில் உண்டாகும்!

வாழ்க்கை எங்க போயிட‌ போது? சொந்தக்காரங்க தான் ‌எங்க போக‌‌ போறாங்க, பாத்துக்கலாம் பேசிக்கலாம்னு நெனைக்கற‌ எல்லாரும் ஒரே ஒரு முறை மட்டும் இந்த புத்தகத்தை படித்து விட்டு செல்லுங்கள்!

அணிலாடும் முன்றில்-இதமான நினைவுகள்! கனமான நியாபகங்கள்!
Profile Image for Arun gg.
11 reviews
January 18, 2022
உறவுகள் பற்றிய படைப்பு, இனிப்பும், கசப்பும் மாற்றி, மாற்றி உண்டது போல அனுபவம்.. தொடர்ச்சியாக கண்ணில் கண்ணீர் காய்ந்தும், பின்பு வழிந்ததுமாக கடைசி பக்கத்தை அடைந்தேன்...
Profile Image for Uma.
6 reviews2 followers
July 15, 2024
“ஏன் இந்தக் கண்கள் எதற்கெடுத்தாலும் கலங்குகின்றன?”
~ இந்த புத்தகத்தில் 20 அத்தியாயங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அப்பா, அம்மா, அண்ணி, அண்ணா போன்ற விதவிதமான குடும்ப உறவுகளை ஆராய்கிறது. அப்பா, அம்மா, அண்ணா மற்றும் பாட்டி பற்றிய அத்தியாயங்களால் மட்டுமே நான் அழுவேன் என்று நினைத்தேன், ஆனால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான் அழுதேன்.❤️‍🩹

எனக்கு இவ்வளவு அர்த்தமுள்ள பல உறவுகள் இருக்கின்றன என்று இப்பொது தான் நான் உணர்கிறேன்.
இந்த புத்தகம் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. இவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று சொல்ல வார்த்தைகளும் இல்லை. உண்மையில் நான் என் குடும்பத்தை இவ்வளவு நேசிக்கிறேன் என்று நான் அறியவில்லை.❤️

I never knew I love my family this much.❤️
This book is truly amazing.❤️‍🩹

(1. **அண்ணா**: எனது முதல் மிதிவண்டி, மொபைல் போன் மற்றும் லேப்டாப் அனைத்தும் அவன் உபயோகப்படுத்தியது😏 என்று உள்ளுக்குள் ஒரு கோபம் எனக்கு, ஆனால் எனது குழந்தைப்பருவத்தில் நான் எப்போதும் அவனைப் போல் உடை அணிய விரும்பியதைக் என் அம்மா எப்போதும் என்னிடம் கூறுவார். நான் அவனது பாண்ட்-ஷார்ட்களைத் தான் போட்டுக் கொள்வேனாம்!😏❤️
2. **மாமா**: ஸ்டைல்+ அந்த 2வார்த்த ஆங்கிலம் கலந்த பேச்சு! அவர்=Hero!🔥ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை, என் மாமா எங்களைப் பாட்டியின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மிதிவண்டியில் வருவார். பாட்டி வீடு = சொர்கம்.❤️
அவர் ஒரு Onida LCD TV வாங்கினார், அப்போது பள்ளிக்கூடம் எல்லாம் வேண்டாம் இனிகினு சொல்லி TV பார்க்க அழைத்துப்போனார். அவர்=Trend!✨
3. **அண்ணி**: நம்மை அறியாமேலேய ஒரு கூடுதல் மரியாதையை நம் உதடுகளில் இருந்து அண்ணனுக்குப் பெற்றுத் தருகிறாள் அண்ணி” ~ உண்மை❤️
4. **Co-Sis**: நான் மிகவும் மனச்சோர்வில் இருந்தபோது, ​​அவரே எனக்கு புத்தகங்களைப் படிக்குமாறு பரிந்துரைத்தவர்.❤️
5. **Cousins**: என்னிடம் எதற்காவது ஆலோசனைக் கேட்கும்போது, ​​அவர்கள் (Periya varthai dhan but unmai)எனது குழந்தைகள் போல் தோன்றுகிறார்கள், நான் அவர்களை ஒரு தாயாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியுள்ளது. தங்கங்களா!❤️
6. **Uncle(Kaga)**: என் குழந்தைப் பருவத்தில், கடலை விற்கும் வியாபாரி (Kalla bhandi) இரவு 9மணிக்கு மேல் வருவார். நாங்கள் ஒரே தெருவில் இருப்பினும் Kaga-வைக் கண்டால் மறைந்துக்கொள்வேன். ஒரு நாள், அவர் எனக்கு 1 ரூபாய்க்கு கடலை வாங்கி தந்தார். மிகவும் கூச்சப்பட்டு வாங்கிக் கொண்டேன். அவரை அதற்கு முன்பு வரை எனக்கு பிடிக்காது!😅❤️
7. **பாட்டி**: எனது பாட்டி(அப்பாவின் அம்மா) ஒருமுறை எனக்கு necklace கொடுத்தார், அதை நான் பாட்டிக்கு (அம்மாவின் அம்மா-நான் அவருக்கு நெருக்கமாக இருந்தேன்) காட்டினேன். அவர் கேட்டார், "அப்போ, இனிமே அவங்கள தான உனக்கு ரொம்ப புடிக்கும்?" நான் பதிலளிக்கவில்லை. எனது மனதினுள் மட்டும் விடையளித்துக் கொண்டேன்.❤️

(இங்கே என் பெரியம்மா-சித்தி-அத்தை-மற்ற Kaga-Kagi களைக் குறிப்பிடவில்லை, மிக நீண்டுக் கொண்டு போவதால்! அனைவருக்கும் ஒரு கடிதம் எழுவிடலாமோ?!)🥹
)
Profile Image for Raj Omm.
24 reviews1 follower
February 7, 2025
அணிலாடும் முன்றில்- நா. முத்துக்குமார்🫂

முத்து அண்ணனின் வரிகளை வாசிக்கையில் நம் மனம் எப்போதும் லேசாகி விடுகிறது❤️

உயிரற்ற பொருட்களையும், கதாநாயகர்களாக்கி, வியந்து பார்த்து, சுவாரசியத்தை கூட்டுகிறது இவரின் எழுத்துக்கள்.

என் தாய் மொழி தமிழ் இல்லை என்பதால், புத்தகத்தில் குறிப்பிட்ட உறவுகள் சில என்னால் தொடர்புபடுத்தி கொள்ள சற்று சிரமமாக இருந்தது.

ஒவ்வொரு உறவை பற்றிய தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கவிதைகள் மிகவும் ரசிக்கவைப்பதாக இருக்கின்றன. முத்துவிற்கு என்று ஒரு தனி மொழி நடை இருக்கிறது, அது அவருக்கே உரித்தான அழகிய நடை, அப்படியொரு படைப்பாற்றலை அழகாக தன் வரிகளில் வெளிப்படுத்துகிறார்💙

மனதிற்கு நெருக்கமான உறவுகளாக எனக்கு பட்டது அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மனைவி( மனைவி தலைப்பில் வரும் எழுத்துக்களை வாசிக்கும் போது, முத்து அண்ணனின் அலாதியான அன்பானது காதலன் தன் காதலிக்காக எழுதும் காதல் கடிதம் போல் அத்தனை நேசம் அதில் வெளிப்படுகிறது)

இறுதியாக மகனுக்காக கடிதம் எழுதி முடித்திருக்கிறார், அதை வாசித்து முடிக்கும் போது கண்கள் கலங்கத்தான் செய்கின்றன.

உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான்.🥹🫂 உங்களின் மகனிற்காக எழுதிய எழுத்துக்கள் உங்களுக்கும் எவ்வளவு பொருந்தும்❤️🥹

உறவுக்காரர்கள் என்றாலே பணத்திற்கும், தேவைக்கும் மட்டுமே உடன் இருப்பவர்கள் என்கிற தற்போதுள்ள பொதுப்புத்தி இனியாவது நம் தலைமுறையுடன் மாறிட வேண்டும்🍃
Profile Image for Ayubkhan.
3 reviews2 followers
January 4, 2019
நா. முத்துக்குமார் ஒரு தசாப்தம்.
இந்த புத்தகம் படித்து முடிக்கையில் கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம்.
குறிப்பாக அப்பா அம்மா சித்தி மகன் மனைவிகாக அவர் எழுதிய கட்டுரைகளை படிக்கும்போது கண்கள் கலங்குவது இயற்கை.
Profile Image for Krishna.
60 reviews8 followers
February 18, 2016
Really loved reading this book.. I was recalling all relatives and relationship portrayed in this book
Profile Image for Pandiaraj J.
34 reviews12 followers
December 31, 2013
உறவுகளை ரசிக்க பால்யத்திற்கு இழுத்துச்சென்றது.
6 reviews
August 24, 2016
I ve heard people reading 100-600 pages per day. But this book, no body can read tat fast. Each page will give you 5 mins of your childhood memories.
Profile Image for Karthick.
369 reviews121 followers
June 16, 2021
அப்பா - நா.முத்துக்குமார் - மகன் <3
உறவுகள் தொடர்கதை!

மறுவாசிப்பு (16 June 2021)

திரும்ப படித்தாலும் உறவுகளின் மென்மையும் ஆழமும் சிறிதளவும் குறையவில்லை
193 reviews9 followers
November 2, 2020
If you have relationships, read this to take it ahead..
If you don't have, read it to start with
Profile Image for Vadivel C.
24 reviews2 followers
November 29, 2024
வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லிவிட இயலாது இந்த உறவுகளின் உணர்வுப் பெட்டகம் பற்றி.

கடைசி பக்கம் வந்தும் திருப்பி கொண்டே இருந்தேன் ...இன்னும் இது நீளக் கூடாதா என்று ...
Profile Image for Univer Sun.
10 reviews1 follower
September 27, 2023
நீண்ட நாள் இடைவேளைக்கு பின் மீண்டும் வாசிப்பு பழக்கத்தை துவக்க மனதிற்கு நெருங்கிய நண்பர் பரிந்துரை செய்த புத்தகம். மிகவும் அருமை. அடுத்தடுத்த பக்கங்களை படிக்க ஆர்வம் தூண்டி புத்தகத்தை கீழே வைக்க விடாத வரிகள்.
20 உறவுகளை அருமையாக கண் முன்னே நிற்கவைகிறது. நான் பெற்ற அனுபவங்களையும் நினைவுபடுத்தி நான் பெறாத அனுபவங்களையும் உணரவைத்த அருமையான நூல். நால்கழித்து மீண்டும் இந்நூலை நிச்சயம் பூரட்டுவேன்.
எனது குறிப்பிற்காக படித்ததில் பிடித்த வரிகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

அம்மா

ஞாபக அடுக்குகளின் ஆழ்கிடங்கில் உனக்கும் எனக்குமான சம்பவங்கள் ஒன்றிரண்டே மிச்சம் உள்ளன.
உன் முகம் களைடாஸ்கோப்பின் வளையல் சித்திரமாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய்!

அப்பா

எங்கோ இருக்கும் இதை எழுதிய எழுத்தாளனுக்கு நான் இங்கு இருந்தே கை குலுக்குகிறேன்.

அக்கா

அக்காவின் கைக்குக்குட்டையில் இருந்து என் கைவிரல்களை ஈரமாக்கியது கண்ணீர்த் துளிகளா? வியர்வை துளிகளா என்பதை இன்று வரை நான் அறிந்தேன் இல்லை.

தம்பி

நேருவின் முகத்தில் மீசையும்; காந்தியின் நெற்றியில் நாமமும் வரையப்பட்ட அந்த புத்தகங்கள், தம்பியின் கற்பனைக்கு இடம் கொடுக்காமல் அவனைப் பெருத்த சவாலின் முன் நிறுத்துகின்றன.

ஆயா

மனசுன்னு இருந்தா.... மனஸ்தாமும் இருக்கத்தானே செய்யும்?

அத்தை

பெருமைக்கு பின்பு இருந்தும் அன்பு பீரிடத்தானே செய்கிறது.

நெல் வயலில் ரோஜா கூட களைதான்.

தாத்தா

ஒவ்வொரு மனிதனும் முதுமையின் கடைசி படிக்கட்டில் கால்வைக்கும் அதே நேரம், காலச் சக்கரத்தில் திரும்பி வந்து, குழந்தைமையின் முதல் படிகட்டிலும் கால் வைக்கிறான். பால்யத்தின் பிரமிப்புடன் தெரிந்த இந்த பிரபஞ்சம், முதுமையின் கண்கள் வழியாகப் பார்க்கையில், அதே பிரமிப்பு அடங்காமல் வடிவம் காட்டுகிறது. புள்ளியாக வளர்ந்து தேய்ந்து மீண்டும் புள்ளியாகி இணையும் பள்ளிதான் தாத்தா - பேரன் உறவோ ?

தன் கிளையில் தன் வண்ணத்தையும் வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த பூவைப் பற்றிய செடியின் பெருமிதம் அப்பா மகன் உறவு எனில்.
தன் காலடியில் தன் விழுதும் தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும் அமைதியின் பெருநிலையே தாத்தா - பேரன் உறவோ ?

இந்த குணம் ஆணாதிக்கத்தின் எச்சமா... அடக்கு முறையின் உச்சமா... ஒழுங்கு முறையின் மிச்சமா என குழம்புவது உண்டு.

தம்பி

தன்னைவிடவும் உக்கிரமாக மனிதர்கள் இருப்பதைப் பார்த்துப் பயந்தபடியே வெயில் அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தது.

தங்கை

என் எல்லோரையும் வயதென்னும் தூண்டில் முன்னே இழுத்தபடி நகர்ந்து செல்கிறது ?

பங்காளிகள்

கண் எதிரே காற்றில் மிதக்கும் மேகங்கள். தோன்றி கலைந்து மீண்டும் புதிதாகத் தோன்றி எதைச் சொல்ல வருகின்றன இந்த மேகங்கள். ஓடி ஓடிக் காற்றில் உடைவதற்கா, இந்த ஓட்டம்?

எங்கள் கிளைகள் பூப்பதற்காகவே, நீங்கள் வேராக மண்ணுக்குள் மறைந்துகிடந்தீர்கள். உண்மையில் பூக்கள் ஒருநாள் மண்ணில் உதிர்வது எல்லாம், வேர்களை முத்தமிடத்தானோ ?

மது, நினைவுகளின் பொக்கிஷத்தை திறக்கும் சாவி. சில நேரங்களில் அதுவே நினைவுகளின் புதைகுழியை மூடும் வேலியாகவும் அமைந்துவிடுகிறது.

பெரியம்மா

பெருமையடையாதே
பௌர்ணமியின் முழுமையும்
ஓர் இரவுக்குத்தான்!


அந்தக் கணம் என் கால்களுக்குக் கீழே தரை நான்கு அடி பிளந்தது. உள் மனசில் இருந்து ஒரு குரல் சொன்னது `உறவு வேறு... உதிரம் வேறு!'

சித்தப்பா

வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை.

அண்ணி

வாழ்க்கை என்னும் நதி, மரணம் என்னும் கடலில் கலக்கும் வரை, வெவ்வேறு திசைகளிலும், வெவ்வேறு மேடு பள்ளங்களிலும் ஓட வேண்டியிருக்கிறது.

மைத்துனன்

உறவுங்கிறது ஒரு கயிறு மாதிரி. உண்மையில் நாம அந்த கயிற பிடிக்கல. அந்தக் கயிருதான் நம்மளப் பிடிச்சுக்கிட்டு இருக்கு.

மனைவி

அலையின் வேகம் குறைந்தாலும், நதி எப்போதும் கரையுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கும்.

மகன்

இந்த உலகம் இப்படித்தான். அழ வேண்டும். சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்

உறவுகளிடம் நெருங்கியும் இரு, விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மென்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Vadivel.
5 reviews
July 13, 2018
Until last week I have only been mesmerized by his cinema song lyrics but this book is onto the next level. Reading this book was an emotional journey and many chapters brought tears to my eyes - as subconsciously I had started thinking about my relatives.

12th July 1975 was his birthday and co-incidentally I finished reading this book yesterday (12th July 2018). Na. Muthukumar father (Mr. Nagarajan) when his son was born has written this in his diary "இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!".

Thinking about his mother who has passed away during his childhood he has written this masterpiece which I have read at least 100 times now

நி எப்படி இறக்க முடியும்?

உன்னுள் கருவாகி,
உனக்குள் உருவான
சின்னஞ்சிறு செடி நான்.
மண்ணுள் நான் வீழ்ந்து,
மெள்ள உதிரும் வரை
என்னுள் .... நீ வாழ்வாய்!

This book will surely take you back to your childhood and would make you recollect those memories and little things which you might have forgotten during the course of your life.
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
December 21, 2015
உறவுகளின் உண்ணத்தையும்,
உணர்வுகளையும் உயிர்ப்புடன் விவரிக்கும்
உயரிய நூல் அணிலாடும் முன்றில்.
அம்மா, அப்பா, அக்கா, தம்பி தொடங்கி தாத்தா, பாட்டி, பங்காளி, மனைவி, மகன் என
அணைத்து உறவினர்களைப் பற்றியும்
அவர்களின் அன்பையும், பாசத்தையும்
அற்புதமாக செதுக்கியுள்ளார்.
இவற்றை படிக்கும் போது நம்மை அறியாமலே நமது நினைவு நமது பால்யத்திற்கு
நகர்கிறது...
Profile Image for Pradeep Loganathan.
1 review2 followers
May 29, 2014
Uravugaloda arumaia alaga solirukaru !!

Padikum poluthu namma chinna vayasu nyabagam kaathula paranthu varathu :)
Profile Image for Jenkins.
31 reviews16 followers
May 4, 2021
Na.Muthukumar didn't write the book. He CRAFTED it!
Profile Image for Pasupathi.
49 reviews3 followers
July 12, 2020
இவ்வுலகில் நமக்குப் பிடித்தவர்களுக்கு கொடுக்க அன்பை விடப் பெரிதாய் என்ன இருக்கிறது? அன்பு தானே எல்லாம்.
அணிலாடும் முன்றில் - கூட்டுக் குடும்பத்தில் உள்ள அத்தனை உறவுகளிடமும் நம் கரம் பிடித்துச் சென்று நாம் பகிர்ந்து கொண்ட பழைய நினைவலைகளை எண்ண ஓட்டத்தில் ஏற்றி அன்புக்கடலில் திளைக்க விடுகிறது. அக்கடலின் அலை ஒவ்வொரு முறையும் கரையான இமைகளை தொட்டுத் தொட்டுச் செல்கிறது.

இறுதியில் நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் "ஒரு புத்தகத்தை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தை தொடுவாய்" என்று குறிப்பிட்டுள்ளார். இது கண்டிப்பாக அப்படியொரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கக் கூடிய நாவல்.
Displaying 1 - 30 of 180 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.