കർണ്ണാടകയിലേക്ക് കുടിയേറി കോടീശ്വരനായി എം.എൽ.എയും മന്ത്രിപദവിയുമൊക്കെ കൈയെത്തും ദൂരത്തിൽ നഷ്ട്ടപ്പെട്ട കുപ്രസിദ്ധ മോഷ്ടാവ് കെ. മണിയൻ പിള്ളയുടെ അതിസാഹസികമായ ജീവിതകഥ. രണ്ടും കല്പിച്ച് ഒരു കള്ളന്റെ തുറന്നെഴുത്ത്.
G.R.Indugopan, is a noted young writer in Malayalam literature who has written nine books, mostly novels. Regarded as a novelist with scientific bend, his Ice -196 C is the first technology novel in malalayam, based on nanotechnology and published by DC books. Muthalayani 100% Muthala deals with the issues of globalization. His other famous novel Manaljeevikal, focuses on the sad plight of people staying in the mineral sand mining areas of Kollam Chavara area. Iruttu Pathradhipar is a collection of short stories. He has bagged several noted awards like Abudabi Shakthi, Kumkumam, Ashan prize etc. He is also the script writer of the Sreenivasan starred film, Chithariyavar, directed by Lalji. Recently he has scripted and directed the movie called Ottakkayyan where the director paints the screen with dark side of human nature to hint at the rotting core of this society. He works as the senior sub editor of the Malayala Manorama daily. He lives in Trivandrum, Kerala, with his family.
இந்த புத்தகத்தையும் எஸ்.ரா அவர்களின் ஓர் உரையின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். பின்னர் என் நண்பனும் படித்ததைப் பார்த்தேன். அதன் பின்னரே இப்புத்தகத்தை வசித்து விட வேண்டுமென்ற உணர்வு தலைதூக்கியது. ஒரு திருடனின் சுயசரிதை என்பதை இது வரையில் கேட்டதில்லை. அப்படி என்ன எண்ணங்கள் அதில் பதியப்பட்டிருக்கும், முடிந்த வரையில் தன் செயல்களை நியாயப்படுத்தியும், அதற்கான களங்கள் அமைந்து விட்டதெனவும் இருக்குமென்று நினைத்து ஆரம்பித்த எனக்கும் எனது குறுகிய எண்ணச் சலனங்களுக்கும் மிகப் பெரிய அடியாக அமைந்த புத்தகம்.
இப்போதும் மணியன்பிள்ளையாக அவரால் ஆகி விடமுடியாதபடிக்கு மாற்றி விட்ட சமூகமாகத் தான் நாம் இருக்கிறோம். அவர் இப்போதாவது மணியன்பிள்ளையாக மாறி வாழ்ந்து வருவார் என்று எதிர்ப்பார்ப்போடு நகர்கிறது புத்தகம். புத்தக வடிவத்திற்காக சில முரண்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது எல்லாமே உண்மையாக, அப்பட்டமாக வெளிச்சத்தில் போட்டு உடைக்கும் மனோபாவத்திற்கு அவர் தள்ளப்பட்டிருக்கலாம் என்பதே உண்மையென இருக்கும். முழுமையாக ஒரு வாழ்க்கையை இந்த உலகத்திற்கு முன்னால் வைத்து விட முடியுமா என்ற கேள்விக்கு ஓரளவிற்கு விடை இருக்கிறது இந்த புத்தகத்தில்.
ஒரு முறை திருடி விட்டால், அதன் பிறகு திருடிய வாழ்க்கை எப்படி சுழலும், எப்படிப்பட்ட வாழ்க்கை, அதன் பிறகு புகுத்தப்படும் அதிகார தோரணைகள், அதனால் அந்த திருடனின் குடும்பம் படும் சிரமங்கள், அவமானங்கள், என்ன தான் முயன்றாலும் மாற்ற முடியாத வாழ்க்கை பாதைகள், ஒரு வகையில் போலீஸ்காரர்களோடு ஏற்படும் சிநேகம், அதனால் வாங்கிய அடிகள், சில போலீஸ்காரர்களின் நேர்மை, பலரின் அடாவடித்தனம், உருட்டி பிரட்டி எடுத்த அடிகள், மரணத்தின் வலி, அவமானத்தின் நிழல்கள், கரைந்தே போகாத துன்பங்கள், துரோகத்தின் அளவிட முடியாத எச்சங்கள் இப்படி இந்த புத்தகம் முழுவதும் தான் யார், தன்னால் வஞ்சிக்கப்பட்டவர்கள் யார், திருடனாய் இருந்தும் தனக்கென மணியன்பிள்ளை வரையறுத்து கொண்ட நேர்மையின் கோடுகள் என்று நீண்டு நெடிய கதைகளை சொல்கிறது இந்த புத்தகம்.
ஒவ்வொரு அத்தியாயமும் அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் இரவிகுளத்தில் பிறந்து மிக இளம் வயதில் திருடன் பட்டம் பெற்று இன்றும் கூட அதே களவின் பயத்தில் மனிதனாய் கூட நடத்த மறக்கும் சமூகத்தின் ஏதோ ஓர் ஓரத்தில் கிடந்து, வாழ முற்பட்டு கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கை. மொத்த புத்தகமும் அவரின் நண்பர்கள், களவுகள் (ஆபரேஷன் என்று பெயர் சூட்டப்பட்ட திருட்டுக்கள்), சிறை வாழ்க்கையின் இருட்டு பக்கங்கள், அவரின் ஒரு நாள் இரவில் களவு போன அரசியல் பிரவேசம் (திருடனிடமிருந்தே திருடப்பட்ட கணங்கள்) என்று மிக துல்லியமாய் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை.
எப்போதும் தவறு என்று நாம் நினைக்கும் எல்லா செயல்களுக்கும் பின்னால் ஒரு தர்க்கரீதியான நியாயம் இருக்கும். அல்லது இருப்பதாக ஒரு மாயை உருவாக்கப்படும். இந்த புத்தகம் முழுதும் அப்படியான தர்க்கங்கள் நிறைய காணப்படுகின்றன. அவை உள்ளது உள்ளபடி கூறப்பட்டால் அதில் மிகப்பெரிய சமூக சீரழிவும், எப்படி இந்த சமூகம் சார்ந்து இத்தகையோர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகின்றன என்ற உண்மை விளங்கும். எப்போதெல்லாம் திருந்தும் மனங்களின் எண்ண ஓட்டங்கள் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் போலீஸோ அல்லது மிகவும் உதவும் துரோக நிழல்களான மற்ற திருட்டு நண்பர்களால் காட்டிக்கொடுக்கப் பட்டு மீண்டும் சிறை, ஆதி உதை, மரபியல் மாறிய பார்வைகள், ஊனை உருக்கி மெல்ல அதில் கம்பியை பாய்ச்சுகிற பார்வை என்று இப்படியே ஒரு திருடனின் வாழ்க்கை கழிகிறது.
உயிர் வாழத் தேவை எதுவென்று தேடித் தேடி பார்த்தல் நலம் தான். அதன் விடை பணமாக மாறும் போதும், ஒரு தவறை திருத்திக் கொள்ள திருடனாய் நினைத்தாலும், அவன் வாழும் சமூகம் எப்போதும் நினைக்காத போதும், திருடனின் செயல்களுக்கான தண்டனைகளை அந்த குடும்பத்தையும் சேர்த்து சுமக்க வைக்கும் கயமைத்தனங்கள் ஒழியாத போது திருடனின் வாழ்க்கை வேறெந்த பாதையிலும் பயணிக்க முடியாமல் போகும் என்பதுதான் புரிகிறது.
எத்தனையோ திருட்டுகள், அதில் இருந்த சுவாரசியங்கள், திருடன் ஒரு தியாக ஆத்துமா என்று வர்ணிப்பது, யோகா நிலை என்பதை எல்லாம் நகைச்சுவை என்று கடந்து போக முடியவில்லை. மேற்போக்காக பார்த்தால் இவை அனைத்தும் சிரிப்புக்கான அலைகள் என்றே தெரியும். ஆனால் உற்று நோக்கினால் அதில் இருக்கும் உண்மைகள் புரியும். திருடனாய் அலைந்து திரிய ஆவல் வந்திட வில்லை. ஆனால் சக மனிதனை இப்படியான ஒரு செயலால் விலங்கினங்களுக்கும் கீழாய் நடத்த முற்படும் இந்த சமூகத்தின் மீதான மணியன்பிள்ளையின் கோபமே மேலெழும்பி நிற்கிறது.
உதாரணத்திற்கு ஒரு முறை அக்காவின் வீட்டில் உணவு உண்ணும் தருணத்தில்: "பெரியம்மாவின் மகளின் குழந்தைக்கு அப்போது ஒரு வயதிருக்கும். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பயறுக்கஞ்சியும் மசியல் கூட்டும். தவழ்ந்து என் பக்கத்தில் வந்த குழந்தைக்கு நான் கொஞ்சம் சோற்றை எடுத்து ஊட்டி விட்டேன். குழந்தையும் அதைத் தின்று விட்டது. அக்காவுக்குப் பெருங்கோபம். கையிலிருந்த அகப்பையால் என் கையில் ஓங்கியடித்து விட்டு அழுதாள்:
"அய்யோ, கஞ்சிக்கு வக்கத்துப்போய் வந்த இந்தப் பிச்சைக்காரப்பயல் என் குழந்தைக்கு சோறு கொடுத்துட்டானே, இனி அவனோட தலையெழுத்து என்னவாகப் போகுதோ?" என்று சொல்லி அழுதாள்.
அவன் இப்போது அரசு ஊழியன். நன்றாகவே இருக்கிறான். ஆனால், நான் அன்று குழந்தையாக இருக்கும்போது பார்த்ததுதான். பிறகு, பார்க்கவே இல்லை. திருடன் சோறூட்டியதற்காக குழந்தையும் திருடனாகி விடாது. நடிகன் சோறூட்டினால் குழந்தையும் நடிகனாகி விடுமா? விபச்சாரி சோறூட்டினால்? ஐஏஎஸ்காரன் ஊட்டியதற்காக மட்டுமே குழந்தை ஐஏஎஸ்சாகி விடுமா? வெறும் நம்பிக்கைகள். இப்படியான சில நம்பிக்கைகளும் தேவைதான். எதையாவது நம்பி நம்பி சாவதுவரைக்கும் வாழ்ந்து தொலைக்க வேண்டாமா?"
இப்படியாக பயணித்தேன் இந்த புத்தகத்துடன். ஒரு சிறுமியின் அழுகையில் பிறந்த நேர்மைக்காக திருட்டை ஒத்து கொண்டு கடந்து போவது, அராத்தான அதிகாரியை பழி தீர்க்க பயன்படுத்திய திருட்டு, வாழ்வில் கடந்தது போன பெண்கள், அவருக்கென வாழ்ந்து மறைந்த மனைவி, மணியன்பிள்ளை சலீம் பாஷாவாக வாழ்ந்த நாட்கள், எம்.எல்.ஏ பதவி கிட்டப் போகும் தருணத்தில் பொய் கேசுகளின் பிடியில் சிக்கி அழிந்து போன வாழ்க்கை, உருட்டி எடுக்கப்பட்ட தேகம், உருட்டி எடுத்தும் உடைந்து போகாத மனம், பாலியல் தொழில் செய்யும் பெண்களைக் கடந்த தருணங்கள், சற்று அதிகமாகவே இருக்கும் நேர்மை என்று நகரும் புத்தகம். திருடனுக்கு என்ன இவ்வளவு புகழாரம் என்று தோன்றலாம். நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்...
ஒரு சமூகத்தின் ஒரு அங்கமாக கள்ளனும் தேவை என்பதை யார் தேர்ந்தேடுக்கிறார்கள். அந்த சமூகமா அல்லது அந்த திருடனா இல்லை சமூகங்கள் உருவாக்கிவைத்து இருக்கும் சட்டங்களா... க���்ளன் என்றும் சமூகத்தின் சம நிலை குலைத்து கலைத்துபோட்டப்படியே இருக்கிறான். சமூகம் இவர்களை கண்டுகொள்கிறதா... அல்லது அது அதன்போக்கில் போய்கொண்டே இருக்கிறதா... சமூக உருவாக்கத்தில் ஒரு திருடனின் பங்கு என்ன... திருடனின் அகம் என்ன நினைக்கிறது... ஒரு திருட்டு என்பது கட்டுப்படுத்த முடியாத ஒரு அகத்துண்டுதலில் நிகழ்கிறதா... கள்ளத்திற்கு என்று ஏதும் வரைமுறைகள் உள்ளனவா... இப்படியான பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தேடுகிறது எனலாம்.
இந்த புத்தகம் ஒரு தன்வரலாறாக இருந்தாலும் ஒருவிதமான நேர்த்தியுடன் சம்பவங்களை தொகுத்து சொல்கிறார். இவரின் தரிசனத்தை மிகவும் அருமையாக இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதை இவர் சிறியவராக இருக்கும்போது ஆரம்பிக்கிறது. இவரின் குடும்பம் கொல்லத்திற்கு பக்கத்திற்கு இரவிபுரம் என்ற ஊரில் இருக்கிறது. வாழ்ந்து கெட்ட ஒரு நாயர் குடும்பம் எனலாம். தந்தை ஒரு பெரும் குடிகாரர். சொந்தக்காரர்கள் இவருக்கு வரவிருக்கும் ஒரு பெரும் சொத்துக்காக கள்ளில் விஷம்வைத்து கொன்று விடுகிறார்கள். மிகவும் சொகுசாக இவர் இவரின் தந்தையால் வளர்க்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் தந்தை இறந்துவிட இவர் திகைத்து நிற்பதில் இருந்து கதை ஆரம்பம் ஆகிறது எனலாம். இவர் செய்யும் முதல் திருட்டில் இருக்கும் ஒரு விதமான பரவசம் இவரை திருட்டை நோக்கி செலுத்த ஆரம்பிக்கிறது எனலாம். இரண்டாவது திருட்டுத்தான் உண்மையில் இவர் செய்யும் அனைவரும் அறிந்த திருட்டு எனலாம் ஆனால் இதில் இருந்து இவரை வெளியே வரவிடாமல் சமூகமும் இந்த சட்டங்களும் தடுத்துவிட்டன என்கிறார். ஒரு நாள் சீட்டு விளையாடும்போது வைத்து ஆட பணம் இல்லாமல் கோவில் உண்டியை உடைக்க முயற்சி செய்து மாட்டிக்கொள்கிறார்கள். இந்த இடத்தில் பல கேள்விகளை முன்வைக்கிறார். ஒரு சமூகத்தில் தந்தையின் இடம் என்ன ஒரு குடிகாரனாகவே இருந்தாலும் அவரின் இருப்பே அந்த குடும்பத்தை நல்வழிப்படுத்துவதில் பங்காற்றுகிறதா... சமூகமும் தந்தை இல்லாத பிள்ளைகளை எளிதில் தவறான முன்னுதரணமாகக்கா முயற்சி செய்கிறதா... சட்டங்களும் இந்த இடத்தில் சமூக அக்கறையுடன் இல்லாமல் வெறும் சட்டகங்களில் மனிதர்களை அடைத்துப்பார்க்க முயற்சி செய்கிறதா... திருடினான என்றும் பாராமல், அந்த சிறுவனின் வயதை கணக்கில் கொள்ளாமால் சட்டத்தின்முன்னால் கொண்டுபோய் நிறுத்தி அந்த சிறுவனுக்கு தண்டனை கொடுத்து அந்த சிறுவனை மீளாபதையில் தள்ளிவிடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சமூகத்தின் சட்டங்களை மீறுவதில் உள்ள பரவசம் அவனை மேலும் மேலும் தவறுகள் செய்ய வைக்கிறது. இவர் கொண்டுவரும் பணத்தையும், பொருட்களையும் இவரின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து வறுமையிலே வாழ்கிறார்கள். பின்னாளில் இவர் உழைத்து பெரும்பணம் சம்பாத்தபோதும் இவரின் பொருள் இவரின் குடும்பத்திற்கு பயனில்லாமலே போகிறது. மிகமுக்கியமானது இந்த தரிசனம். ஒரு செல்வத்தின் பயன் அது சோறாக, உடையாக, வீடாக மாறினால் மட்டும்போதுமா... கொள்வாரில்லாத இந்த பணம் சமூகத்திற்கு ஒருவிதமான பாடங்களை விட்டுசெல்கிறதா என்ன...
ஒரு வீட்டுக்கு திருடசென்றால் அங்கே சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு விடியற்காலையில் காலையில் செல்வது இவரின் பாணி. இப்படி பலத்திருட்டுக்களைப்பற்றிய குறிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஒரு வீட்டில் 5 நாய்கள் இருக்கின்றன. இவர் அவற்றின் துணைகொண்டே அனைத்தையும் கொள்ளை அடிக்கிறார். அதன்பின் எப்பொதுபோல் அங்கே சாப்பிட ஆரம்பிக்கிறார். நாய்களுக்கும் கொஞ்சம் கொடுக்கிறார். பின்னாளில் இவர் அகப்படும்போது அந்த வீட்டின் உரிமையாளர் இவரிடம் கேட்கிறார் எப்படி நாய்களை சமாளிய்தீர்கள் என்று. இவர் சொல்கிறார். பின் அந்த உரிமையாளர் அந்த இரவுக்குப்பின் அவை எதுவும் சாப்பிடாமல் இருந்து இறந்துவிட்டன என்று. ஒரு நாய் என்றால் சரி எனலாம் அனைத்து நாய்களும் அப்படியே மரணிக்கின்றன. அனைத்தும் சாகசத்தன்மை நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் இவர் பிடிபட்டால் அனைத்தையும் ஒப்புக்கொள்கிறார். இவருக்கு இவரே வாதாடுகிறார். இவரின் வாதத்திறமை பல அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது. சில இடங்களில் இவர் வாதம்பண்ணபோகிறார் என்றால் அவர்களே சமாதானத்திற்கு வருகிறார்கள். அப்புறம் போலிஸ் பற்றிய குறிப்புகள் மிக அற்புதம். போலீஸும் திருடனும் ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் என்கிறார். போலீஸ் கொடுக்கும் சேவைகளைப்பற்றிய விரிவான குறிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. போலீஸ் அனைவருமே கெட்டபோலீஸ்தான் அதில் கூட குறைய நேரத்திற்கு தக்க மாறுபடுகிறார்கள். ஒருமுறை இவரின் அம்மாவை ஒரு போலீஸ் அடிக்கவந்தார் என்று அவரை வேலைவிட்டே தூக்கவைக்கிறார். எந்த போலீசையும் இவர் பகைத்துகொள்வது கிடையாது. இவரால் பாதிக்கப்பட்டவர்களிடம்கூட.
இவரின் தலைமறைவு வாழ்க்கை மிகவும் சுவாரஸியமான பகுதிகள். இவர் நிம்மதியாக வாழகருதி பெங்களூர் செல்கிறார் அங்கே இருந்து எடயாளம் என்ற இடத்தில் போய் தங்கி டீ கடை, பாயசக்கடை நடத்த ஆரம்பித்து பின் மெஸ் ஆரம்பித்து, சில நிலங்களை குத்தகைப்பிடித்து புகையிலை பயிர்செய்து, மண்ணெண்ய் வியாபாரம், பெட்ரோல் பங்கு என்று படிப்படியாக மிகப்பெரும் சொத்துக்களை சம்பாதிக்கிறார் கிட்டத்தட்ட 1 கோடி துபாய் அளவுக்கு 1985 இல். இவையெல்லாம் ஒரு ஐந்து வருட இடைவெளியில் நடக்கின்றன இவரின் வளர்ச்சி எப்படியென்றால் ஒரு கட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் நிற்க முன்னிறுத்தப்படுகிறார். இப்போது போலீஸ் வந்து கைது செய்து இவரின் அனைத்து சொத்துக்களும் ஏலம்விடப்பட்டு அரசாங்கம் எடுத்துசெல்கிறது. இதன்பின் துவரங்குறிச்சியில் பர்னிசர் கடை ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறி திமுக பிரமுகராக ஆகும் நேரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த இடங்களில் இவரிடம் வேலைசெய்பவர்கள்கூட இவரைப்பற்றி முழுதும் தெரியாமல் இருக்கிறார்கள். இவருக்கு மிகப்பெரும் குற்றவுணர்வாக இது நீடிக்கிறது. இந்த இடங்களில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் பெரும் நாடகத்தருணங்களாக இருக்கின்றன.
இந்த புத்தகத்தில் வரும் சிறைப்பற்றிய குறிப்புகள் அனைத்தும் மிக மிக அற்புதமாக இருந்தது. ஒரு திருடனின் பார்வையில் வருகிறது என்பதால் இந்த இடங்கள் அனைத்தும் கூடுதல் அழுத்தம் பெருகின்றன. சுயப்பாலினம் பற்றிய குறிப்புகள் மிகப்பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஒரு சிறைச்சாலையில் இருக்கும்போது ஒரு கைதியின் மன நிலை என்னவாக இருக்கும் பின் அது எப்படி வெளிவந்தவுடன் மாறும் என்பதைமிக நுணுக்கமாக பதிவு செய்கிறார். இது ஒரு விதமான போதை மன நிலைபோல் உள்ளது. உள்ளே இருக்கும்வரை வெளியில் சென்றவுடன் ஒரு நல்ல வாழ்க்கைக்கு கண்டிப்பாக திரும்பிவிடவேண்டும் என்ற எண்ணம் எப்படி படிப்படியாக வெளியுலக தொடர்புகளால் மாறி எப்படி அவன் விட்ட இடத்தில் இருந்து திரும்பி ஆரம்பித்து கடைசியில் மீண்டும் சிறைக்கே வந்து சேர்கிறார். சிறை அளிக்கும் எளிய வாழ்க்கைமுறை வெளியில் வரும்போது இல்லாமல் போகிறது. பரந்துபட்ட இந்த வெளியுலகமும் ஒரு சிறையாக மாற்றிக்கொண்டால் ஒழிய மாற்றம் நிகழமுடியாதா... பிற நூல்கள் அளிக்கும் சிறைப்பற்றிய பார்வையை இது கொஞ்சம் மாற்றி அமைக்கிறது எனலாம். சிறையில் இருக்கும் கைதி கண்டிப்பாக ஒரு மனமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது இவரின் பார்வையாக உள்ளது. இது அனைத்துக்கும் பொருந்துமா...
ஒரு வழியாக வாசித்து முடித்துவிட்டேன் மணியன் பிள்ளையை. ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை, ஒரு முன்னாள் திருடனின் வாழ்விலிருந்து திருடிக் கொள்ள எனக்கு இவ்வளவு இருக்கும் என்று. அப்படி மணியன் பிள்ளையிடம் இருந்து நான் திருடிக்கொண்ட���ை ஏராளம்.
ஒரு மனுசனோட வாழ்க்கையில் இவ்வளவும் நடக்குமான்னு யோசிக்கவும், வியக்கவும் வைக்கிறது மணியன் பிள்ளையின் வாழ்வும், அவருடைய அனுபவங்களும்.
வாழ்க்கை எந்த நிமிஷத்தில் வேணாலும் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி எந்த திசையில் வேண்டுமானாலும் தடம் புரண்டு தலை கீழாக மாறக்கூடிய ஒன்று தான்னும், வாழ்வில் நாம் எடுக்கிற ஒரு சின்ன தவறான முடிவு கூட, வாழ்க்கை முழுக்க நம்மள விடாமல் துரத்தி அதிலிருந்து மீண்டெழ நினைத்தாலும் மீளவே முடியாத இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி விடும் என்பதற்கு மணியம் பிள்ளையின் வாழ்வு மிகச் சிறந்த உதாரணம்.
ஒரு திருடனின் வாழ்வில் அப்படியென்ன இருந்துவிடப் போகிறது தன்னை நியாயப்படுத்துகிற காரணங்களும், அவன் வாழ்க்கை எவ்வளவோ அவலமும், அபத்தமும் நிறைந்தது என்பதைப் பற்றிய குறிப்புக்களைத் தவிர என்ற முன் அனுமானத்தோடு ஆரம்பித்த எனக்கு மணியம் பிள்ளையின் வாழ்வு காட்டிய உலகம் முற்றிலும் வேறானது. அது நிச்சயம் வெறும் அவலமும், அபத்தங்களும் மட்டுமே சூழப்பட்டது இல்லை.
அங்கேயும் சாகசங்களும், கொண்டாட்டங்களும், சுவாரசியங்களும், நடுங்குகிற விரல்களை இறுகப் பற்றிக் கொள்ளும் நேசமும், நிர்க்கதியாய் நிற்பவர்களை அரவணைத்துக் கொள்கிற அன்புக்கும் குறைவே இல்லை.
கொஞ்சம் கோவம், கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் ஏமாற்றம்,கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை, கொஞ்சம் அருவருப்பு, கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அவநம்பிக்கை, கொஞ்சம் கொண்டாட்டம், கொஞ்சம் தர்க்கம், கொஞ்சம் அரவணைப்பு ஆனால் நிறைய அன்பு மற்றும் கருணையென மணியன் பிள்ளையின் வாழ்வு காட்டுகிற சித்திரங்கள் அத்தனையும் ஏதேதோ உணர்வு தளத்திற்குள் பயணிக்க வைக்கிறது மனதை.
தன்னுடைய சிறுவயதில் உறவுக்கார பெண்ணின் தூண்டுதலின் பேரில் ஆரம்பிக்கிற மணியம் பிள்ளையின் குற்றப்பத்திரிக்கை, அதன் பிறகு கோவில் உண்டியலை உடைக்கும் முயற்சியில் கைது, கேரளாவின் வாழத்துங்கல் பகுதியில் சிறிதும் பெரிதுமாய் பல திருட்டுகள், கடைசியில் ஒரு மிகப்பெரிய திருட்டு அதன் பின் மைசூரில் தொழிலதிபர் சலீம் பாஷாவாகக் கோடியில் புரளும் தலைமறைவு வாழ்வு இன்னும் கொஞ்சம் நாட்களில் மிகப்பெரிய கட்சியில் தனக்கென ஒரு பதவி கிடக்கிற வாய்ப்பு என நீண்ட மணியம் பிள்ளையின் வாழ்க்கை ஒரு சிறிய கவனப் பிசகால் - கைது செய்யப்பட்டு மீண்டும் எல்லாத்தையும் இழந்து வாழ்க்கை எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே கொண்டுபோய் நிறுத்துகிறது மணியம் பிள்ளையை. இதற்கு இடைப்பட்ட ஒரு முப்பது ஆண்டுக்கால திருடனின் வாழ்வைப் பற்றிய தன் வரலாறு தான் திருடன் மணியம் பிள்ளை.
திருடன் தன் வாழ்க்கையில் நிகழ்த்திய திருட்டுகள், அதற்காகக் கையாண்ட நுட்பங்கள், திருடிய பொருட்கள், திருடிய பொருட்களை வைத்துக் கொண்டாடிய நாட்கள், கள்ளுக்கடை சச்சரவுகள், திருடி மாட்டிக்கொண்டதும் உடனே ஒப்புக் கொண்டு கைது ஆகிற சம்பவங்கள், நிகழ்த்தப்பட்ட விசாரணைகள், உருட்டிப் பிழியப்பட்ட அடிகள், தன் வழக்கைத் தானே வாதாடும் அடாவடிகள், ஒரு சில காவலர்களின் நட்பு, திருடன் பொருட்டு அவன் குடும்பம் படும் அவமானங்கள், கடந்து வந்த காதல், திருமண வாழ்க்கை, தான் சந்தித்த வேறு சில நுட்பமான திருடர்கள், பெண்கள், பாலியல் தொழிலாளிகள், கஞ்சா விற்பவர்கள், கள்ள நோட்டு அடிப்பவர்கள், சிறை வாழ்க்கை அங்கு நிகழும் கொடுமைகள், பாலியல் பிரச்சினைகள், அதிகாரத்தின் அழுக்கான பக்கங்கள் என மணியன் பிள்ளையின் வாழ்வு திறந்து காட்டுகிற பக்கங்களும், மனிதர்களும் ஏராளம்.
இதில் தன்னை நியாயப்படுத்துகிற இல்லை மற்றவர்களைக் குறை கூறுகிற இடங்களோ, பாசாங்குகளோ, மன்றாடி நிற்கிற தருணங்களோ கூட பெரிதும் இல்லை ஒரு சில மிகைப்படுத்துதலைத் தவிர.
வாசிக்கிற எனக்குத் தான் அது பத்தில் ஒரு கதையே தவிர, அதைச் சொல்பவனுக்கு அது எப்பவும் தன் வாழ்வைப் பற்றிய சாகச கதைதான், அதில் கொஞ்சம் மிகைப்படுத்தல் இயல்பு தான் என்பதையும் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
மணியன் பிள்ளையின் வாழ்வைப் படிக்கும் போது, உண்மையில் திருடன் மட்டும் தான் சமூகத்தில் திருடனா என்கிற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. மணியன் பிள்ளையின் வாழ்வு அதிகாரத்தின் பின்னாலும், சமூக அந்தஸ்தின் பின்னாலும் ஒளிந்து இருக்கிற பல திருடர்களையும் அடையாளம் காட்டுகிறது.
ஒரு திருடனிடம் இருந்து கூட எண்ணலாமோ திருடப்படுகிறது அதிகாரத்தால் - உணவாக, உடையாக, உடலாக, உறவாக, திருடிய பொருளாக இப்படி எண்ணலாமோ.
இந்த புத்தகம் - ஒரு சில சமயங்களில் சகல குற்றங்களைச் செய்த திருடனின் வாக்குமூலமாகத் தோன்றலாம், இல்லை திருடனின் வாழ்க்கை சாகச கதையாகத் தோன்றலாம், இல்லை எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழக்கூடாது என்று அறிவுறுத்துகிற கையேடாகவும் தோன்றலாம். இது எல்லாமுமாகவும் தோன்றினாலும் அத்துடன் சேர்த்தே பின்னப்பட்டு இருக்கும் மானுட நேசத்தின், அன்பின், கருணையின் தரிசனமாகவும் இதைப் பார்க்க முடிந்தது.
ஒரு மனிதன் சக மனிதனை எதனால் வஞ்சிக்கிறான், பலி வாங்கத் துடிக்கிறான் என்பதற்கெல்லாம் மிக எளிமையாகக் காரணங்களைக் கண்டடைய முடிகிற நம்மால், ஒரு மனிதன் சக மனிதனை எதற்காகவெல்லாம் நேசிக்கிறான், அன்பு செலுத்துகிறான் என்பதை மட்டும் ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது போல, உண்மையில் அதுதான் வாழ்வின் சுவாரஸ்யமும் போலும். அப்படியான தருணங்களும் நிறைந்து கிடக்கிறது மணியன் பிள்ளையின் வாழ்வில்.
குழந்தையின் அழுகைக்காகத் திருட்டை ஒப்புக் கொண்டது, பட்டினியோடு படுத்துக் கிடக்கும் மனிதர்களின் வீட்டின் முன் சீனிக்கிழங்கை வைத்து விட்டுப் போவது, ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் சீரழிக்கப்பட்டு நிர்க்கதியாய் நின்ற பெண்ணை மணியன் பிள்ளையின் நண்பன் அழைத்து வந்து ஆதரவு கொடுத்தது, உயிருக்குப் போராடுகிற கணவனுக்கு மருந்து வாங்க விபச்சாரத்தில் ஈடுபட்ட - தெரியாத பெண்ணுக்காகத் திருடப்போனது, மணவறைத் திருடன் மணப்பெண்ணின் மீது ஆசை ஏற்பட்டு அவளைத் தொட்டதும் தன் மகளின் நினைவு வந்ததால் அவளைத் தட்டி தூங்க வைத்தது, சகல குற்றங்களைச் செய்து தன்னை தெருவில் விட்டுவிட்டுப் போன மணியன் பிள்ளையை மன்னித்து அவரது மனைவி மெகருன்னிஸா கடைசி வரை அவருக்காகவே வாழ்ந்து, அன்பு செய்து இறந்தும் போனது, சலீம் பாயாக வாழ்ந்து ஏமாற்றியது திருடன் எனத் தெரிந்த பின்பும் அவனுக்காக ஓடி வந்து யுசஃப் அழுது நின்றது, திருடனுக்கும் கருணையோடு உதவி செய்த சில நல்ல காவலர்கள், நீதிமன்றம் இப்படியென்று அன்பும், கருணையும் நிறைந்து கசிந்துருகவும் வைக்கிறது மணியன் பிள்ளையின் கதை.
ஒரு திருடன் என்ன போதிப்பது, பெண்களை அத்தனை இழிவாக நடத்திய ஒருவன் என்ன அறிவுரை சொல்வது என்றளவில் மட்டுமே இந்த புத்தகத்தைச் சுருக்கிக் கொள்ள முடிந்து விட்டால் இதிலிருந்து எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லை. ஆனால் ஆழமாக வாசித்துப் பார்த்தால் வாழ்வில் சகல குற்றங்களையும் செய்த திருடனின் ஆத்ம விசாரணையில் தெறித்து விழுந்த அத்தனைத் தத்துவங்களும், புரிதல்களும் முத்துக்களே.
அது காட்டுகிற திறப்புகளும், புரிதல்களும் ஆத்மார்த்தமானவை. அதில் முடிந்த அளவுக்கு கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டேன் எடுக்க முடியாதவற்றை மணியன் பிள்ளை சொல்வது போல் எனக்காணவை இல்லை என்று ஒதுக்கியும் தள்ளி விட்டேன்.
முன்னமே சொன்னது மாதிரி திருடனின் வாழ்விலிருந்���ு திருடிக் கொள்ள எனக்கு இவ்வளவு இருக்கும் என்று நினைக்கவில்லை அப்படி நான் திருடிக்கொண்டவை ஏராளம்.
முடிந்தால் நீங்களும் திருடிக்கொள்ளுங்கள் - இன்னமும் நடுங்கிக் கொண்டே இருக்கும் ஒரு வாழ்க்கையை, சமூகம் பற்றியான புரிதலை, மானுட அன்பை, நேசத்தை மற்றும் அதன் கருணையை.
பொதுவாக திருடர்கள் தான் திருடுவதற்கு சமூகத்தையோ, சூழ்நிலைகளையோ, வறுமையையோ காரணம் காட்டி நியாயப்படுத்துவார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே மணியன்பிள்ளை அவர்கள் "நான் திருடுவது தவறு என்று தெரிந்தே தான் திருடினேன்.அதில் எந்தவித நியாயப்படுத்துதலும் இல்லை" என்றே ஆரம்பிக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தப் புத்தகம் சுயசரிதைப் போன்று அல்லாமல் ஒரு உளவியல் புத்தகத்தை வாசிப்பது போன்ற அனுபவத்தை எனக்குள் ஏற்படுத்தியது. பெண்கள், காவலர்கள், சக திருடர்கள், சிறை அதிகாரிகள், போன்றவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கூறிவிட்டு அதன் உளவியல் அம்சங்களை அவர் பகுப்பாய்வு செய்கின்ற விதத்தில் விவரிக்கும்போது நம்மையும் அறியாமல் இந்த புத்தகத்தின் பக்கங்களில் கட்டுண்டு விடுகிறோம். நாய்களைப் பற்றிய உளவியல் அம்சங்களை இவர் விவரிக்கின்ற விதம் எனக்குள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
சில தவறுகளை நாம் செய்துவிட்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது முதல்வகை. மற்றவர்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது இரண்டாம் வகை. நாம் திருடன் மணியன்பிள்ளை வாழ்க்கையை இரண்டாம் வகையில் எடுத்துக்கொள்ளலாம்.
திருட்டை நியாயப்படுத்தினாலும், இல்லையென்றாலும் அதை எவ்வளவுதான் சாகசத்தன்மையோடு மிகச் சுவாரசியமாக விவரித்தாலும் என்னைப் பொறுத்தவரையில் (பொருள், பணத்தை பறிகொடுத்தோர்) பாதிக்கப்பட்டவனின் மனநிலையில் இருந்து பார்க்கும்பொழுது அந்த குற்றத்தின் தீவிரத்தன்மை நமக்கு புரிபடும். பாதிக்கப்பட்டவனின் பார்வையில்தான் குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்க வேண்டும்.
எங்கும் தொய்வில்லாமல் படிப்பதற்கு முக்கிய காரணமாயிருந்த மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
അപകടമാം വിധം മനോഹരമായ പുസ്തകം. അപകടമെന്തെന്നാൽ ഒരു കള്ളൻ വീരനായകനായിരിക്കുന്നു. നായകപരിവേഷം മനംമയ്ക്കും വിധം പുസ്തകത്തിലുടനീളം ചിത്രീകരിക്കുന്നുണ്ട്. 'Robinhood' സിനിമയിലെ നായകനെ പോലെ adventures & action ആണ് പുസ്തകം സമ്മാനിക്കുന്നത്. സമൂഹം, കള്ളനായി മാറുന്ന ഒരു ചെറുപ്പക്കാരനെ മുതലെടുക്കുന്നു, അവനെ കള്ളനായി മാറാൻ പ്രേയരിപിക്കുന്നു, എന്നിട്ട് ഇതേ സമൂഹം തന്നെ അവനെ തള്ളിക്കളയുന്നു.
സാധാരണ, കള്ളൻ എന്നുകേൾക്കുമ്പോൾ മനസ്സിൽ തെളിയുന്ന രൂപങ്ങളെയും, ഭാവങ്ങളെയും ഉടച്ചുകൊണ്ട്, അവനും ഒരു വ്യക്തിത്വം ഉണ്ട് എന്ന് നമുക്ക് മനസിലാക്കിത്തരുന്ന പുസ്തകം. പക്ഷെ കള്ളനും കള്ളന്റെ കുറെ പ്രവർത്തികളും ഏറെ മഹത്വത്കരിക്കപ്പെട്ടോ എന്ന സംശയം ഉണ്ട്. എങ്കിലും ചിന്തിക്കാനുള്ള ഒട്ടേറെ കാര്യങ്ങൾ പുസ്തകം മുന്നോട്ട് വെക്കുന്നുണ്ട്.
ആട് ആൻറണിയുടെ തിരുടാതിരുടാ പോലെ ഒരു പുസ്തകമാണിത്. കുപ്രസിദ്ധ കള്ളനായ മണിയൻപിള്ളയുടെ ജീവചരിത്രമാണ് ഇതിൽ ഉള്ളത്. വെള്ളപൂശലിന്റെ ഭാഗമായി അവതരിപ്പിച്ചിരിക്കുന്നത് പോലെ തോന്നി. മോഷണവും സ്ത്രീകളുമായുള്ള അവിഹിത ബന്ധങ്ങളാൽ സമ്പുഷ്ടമാണ് ഇദ്ദേഹത്തിൻ്റെ ജീവിതം. താൻ എന്തോ മഹത്തായ കാര്യം ചെയ്യുന്ന പോലെയാണ് ആദ്യം മുതൽ പറയുന്നത്. അവസാനം ആകുമ്പോഴാണ് അൽപമെങ്കിലും ചെയ്തത് തെറ്റാണെന്ന് ഒരു തോന്നൽ ഉണ്ടാവുന്നത്. കളളൻ ആണെങ്കിലും അൽപസ്വൽപം നന്മകൾ ഒക്കെ അവിടെ ഇവിടെയുണ്ട്. കർണാടകയിലേക്ക് കുടിയേറി കോടീശ്വരൻ ആയിട്ടും എംഎൽഎ സ്ഥാനവും മന്ത്രിസ്ഥാനവും കൈയകലത്തിൽ മോഷണം കാരണം നഷ്ടപ്പെട്ടു. കള്ളനായതിന്റെ കാരണം മുഴുവൻ സമൂഹത്തിന്റേയും പോലീസിന്റേയും തലയിൽ കെട്ടി വച്ചിരിക്കുന്നു. ഒരുപാട് മഹത്വ വൽക്കരണവും സ്വയം പുകഴ്ത്തലുകളും ആവശ്യത്തിലധികം ഉണ്ട്.
അവിശ്വസനീയമായ കള്ളന്റെ അനുഭവങ്ങൾ. ഒരു ജീവിതത്തില് ഇത്രയും അനുഭവങ്ങൾ! വായിക്കാൻ രസം ആണ്. പക്ഷെ മനസ്സുകൊണ്ട് ചേര്ന്നുപോകാൻ പറ്റാത്ത ചിന്തകളും സംഭവങ്ങളും ഉണ്ട്. എന്നാലും വായിച്ചിരിക്കേണ്ട പുസ്തകങ്ങളില് ഒന്ന് തന്നെ.
ஒருவரின் மனதைத் தனியாகப் பிய்த்து எடுத்து, அதன் ஒவ்வொரு அங்கங்களையும் புலனாய்வு செய்து, ஒவ்வொரு உணர்ச்சியாக எல்லாமே வெளிப்படையாக எழுதினால் எப்படி இருக்குமோ, அதுதான் மணியம்பிள்ளை அவர்களின் இந்த சுயசரிதை.
திருட்டுத் தொழிலில் ஈடுபடும் ஒருவன், அதைச் செய்ய எது தூண்டுகிறது?அந்தத் தொழிலை அவன் விரும்பியே ஏற்றுக்கொள்கிறானா? அதில் ஈடுபடுபவர்கள் அது தவறு என்று தெரிந்தும் ஏன் அதிலிருந்து வெளிவருவது இல்லை? அவர்களை எது தடுக்கிறது? மனிதனின் கீழ்மைகளை, குரூரத்தை, அக வெளியில் அவனுள் இருக்கும் ஏக்கங்கள், முரண்கள், பிடிவாதங்கள், தூண்டுதல்கள் எல்லாவற்றையும் கொத்தாக எடுத்து நம்மை அறைகிறார் மணியம்பிள்ளை.
மேல்தட்டில் இருக்கும் ஒருவன் திருடும்போது, அவர்கள் திருந்துவதற்கு எச்சரிக்கை செய்து விட்டுவிடும் இந்தச் சமூகம், சாதாரண ஒரு மனிதன் திருடும்போது அவனைத் திருடன் என்று முத்திரைகுத்தி வழக்குப் பதிவு செய்து, அவன் வாழ்நாள் முழுவதும் திருட்டுப் பட்டம் கட்டி ஒதுக்கி வைக்கிறது.
மணியம்பிள்ளை அவர் வாழ்வில் நடந்த சுவாரசியங்கள், காம வேட்கை, காதல், சிறைவாசம், குடும்பம், முக்கியமாகத் தன் மனைவியின் அன்பு, சக திருடர்களின் வேடிக்கைகள், போலீஸ் கூட்டத்தின் உண்மை முகங்கள் என்று அனைத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.
வழி தவறிச் செல்லும் ஒருவன் நியாயத்தின் வழியில் செல்ல எடுக���கும் முயற்சிகள் அனைத்தும் முட்டுக்கட்டை எவ்வாறெல்லாம் போடப்படுகிறது, தன் சுயத்தை ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் அவனே விமர்சித்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.
திருடன், இந்த உலகத்தை, சமூகத்தை அணுகும் பார்வை, அவன் எதிர்கொள்ளும் மனப் போராட்டங்கள், அவமானங்கள், அவன் செய்யும் செயல்களால் அவன் சுற்றியுள்ளவர்களும், குடும்பமும், என்னவெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த சுயசரிதை புத்தகத்தை கண்டிப்பாக ஒருமுறையேனும் வாசித்திடுங்கள்.
திருடன் மணியன்பிள்ளை - மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற புத்தகம், கேரளம் கொல்���ம், கோழிக்கோடு பகுதிகளில் 70வது களில் பிரபலமான மணியன்பிள்ளை என்ற திருடனின் தன்வரலாறு தான் இந்த புத்தகம். ஒரு மொழிப்பெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்ற நினைவே வராது, மிகவும் நேர்த்தியான மொழிப்பெயர்ப்பு ... பொதுவாக எல்லா குற்ற செயல்களில் ஈடுபடுகிறவர்களும் தனக்கென ஒரு நியாயத்தை வைத்து கொண்டு செயல்படுவார்கள் அதை ஜஸ்டிபையும் செய்வார்கள், ஆனால் மணியன்பிள்ளை ஆரம்பத்திலேயே இந்த நூலின் நோக்கம் தன்னை ஜஸ்டிபை செய்வதோ அல்லது திருடுவதை glorify செய்வதோ அல்ல என்று தெளிவாக சொல்லிவிடுகிறார், அதை எழுத்தில் கடைபிடிக்கவும் செய்கிறார்.... ஒரு திருடனின் வாழ்வு இவ்வளவு சாகசங்களை உள்ளடக்கியதாக இருக்குமா, ஒருவேளை புனைவாக இருக்குமா என்ற ஐயத்தையும் எழுப்பாமல் இல்லை. சிறுவயதில் தந்தை இறந்துவிடுகிறார், வறுமையில் குடும்பம் தவிக்கிறது தங்களுக்கு வைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தான் பசியை போக்க இருக்கும் ஒரே வழி, தாய் வர மறுத்து விடுகிறார் சகோதரிகளின் துணையுடன் சாப்பிட செல்லும் போது உறவினர் ஒருவர் இவரை சாப்பிட விடாமல் தடுத்து அசிங்கப்படுத்துகிறார், அப்போது ஒரு வரி வரும் ‘குழந்தைகள் வேதனைகளையும் அவமானங்களயும், நான்கைந்து வயதிலிருந்தே மனதில் பாதுகாத்து வைத்திருப்பார்கள்’ இந்த சம்பவத்தின் மூலம் பணம் தான் எல்லாம் என்ற எண்ணம் ஒரு மணியனை உருவாக்கியிருக்கலாம்.... மணியன்பிள்ளை தான் வளர்ந்த பிறகு எவ்வாறு அந்த நபரை பழிவாங்குகிறார் என்பதை சொல்லும்போது மணியன்பிள்ளை பகையை போற்றுவதில்லை என்பதையும் அவரின் இயல்பையும் நமக்கு ஆரம்பத்திலேயே விளக்கிவிடுகிறது. கதைக்கு ஆரம்பம் முடிவு என்றில்லாமல் முன்னும் பின்னும்மாக நகர்வது நேரடியாக கதை கேட்கும் அனுபவத்தை தருகிறது, சில இடங்களில் ஓவர்லேப்பும் ஆவதை தவிர்க்க முடிவதில்லை... மணியன் குற்ற செயல்களிலிருந்து ஒதுங்கி குடும்பத்துடன் தலைமறைவாக கர்நாடகத்தில் தொழில் செய்து ஜனதா கட்சியில் MLA சீட்டு வாங்கும்மளவுக்கு முன்னேறிய பிறகு, ஒரே ஒரு நாளில் அனைத்தையும் இழந்து மீண்டும் ஆரம்ப நிலைக்கே வந்துவிடுகிறான். அப்போது அவன் எண்ண விவரனைகள் அனைத்தும் வாழ்க்கையின் fragility ஐ உணர்த்துகிறது...இந்த கதையின் உச்சமாக இந்த அத்தியாயங்கள் வருகிறது, தன் மனைவி மெகருன்னிஷாவைப் பற்றி வரும் அத்தியாயங்கள் நூலின் ஆன்மா, பிற்பாதியில் வரும் இந்த அத்தியாயங்கள் முடிந்த பிறகு தன்வரலாறு முடிந்ததாக தோன்றுகிறது.. அதன் பிறகு வரும் அத்தியாயங்கள் தேவையற்றதாக மாறிவிடுகிறது... 600 பக்கங்களை கொண்ட இந்த தன்வரலாறில் சொல்வதற்கு நிறைய சாகசங்கள் இருக்கிறது... 88 அத்தியாயங்களும் சாகசங்கள் ... Maniyanpillai gonna haunt me for long time...
பி.கு - 1. சாருவின் எழுத்து சில நேரங்களில் ஏமாற்றி இருந்தாலும் அவரின் பரிந்துரைகள் ஏமாற்றுவதில்லை... புயலிலே ஒரு தோனி, காதுகள், சார்வாகன் கதைகள், கரமுண்டார் வீடு, திருடன் மணியன்பிள்ளை போன்றவை அவர் பரிந்துரைகளில் சில. 2. திருடன் மணியன்பிள்ளை ஒரு அட்டகாசமான வெப் சீரியஸ்சுக்கான கதையாக இருக்கும்
புத்தகம்: திருடன் மணியன்பிள்ளை எழுத்தாளர்: மணியன் பிள்ளை & தமிழில்: குளச்சல் யூசுஃப்
என்னக்கான தவறை நான் தான் கற்றுக் தெளிவேன், பிறர் தவறிலிருந்து நான் எதுவுமே கற்க மாட்டேன் என்பது மடமை.
திருடனின் அனுபவம் என்பது இத்தனை பறாக்கிரமங்கள் நிறைந்து என்றால் ஆச்சர்ய பட வேண்டும். நான் எந்த முன் முடிவுகள் எஏதுமில்லாமல் வாசித்தேன் என்பதால் யார் பக்கமும் நின்று யோசிக்கவில்லை.
தன்னை திருடன் ஆக்கியது, எது என்றால் வருமை தான் காரணமாக இருக்கும். ஆனால் திருட துவங்கிய பின்பு சுக போக வாழ்வை தேடி தான் அத்தனை அபத்தங்களும். மணியன் பிள்ளை அவ்வாறே ! முதல் திருட்டு பதினாறு பதினேழு வயதில். அதற்குக்கு பிறகு என்றுமே கள்ளன் மணியன் தான்.
இவர் திருட்டின் பொருட்டு உடமைகளை மட்டுமே திருடி இருக்கிறார். ஆனால் எந்த ஒரு கொலை பாதகமும் , வன்புணர்வுகள் எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருந்தது ஆச்சர்யம் தான்.
" திருடனாய் பார்த்த திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ' என்ற பாடல் நிஜத்தில் மாற்றம் கொள்ள வேண்டி இருக்கிறது " திருடனும், காவலர்களும், சமூகமும் சேர்ந்து தான் அதை செய்ய இயலும்.
நான் அம்மாவிடம் எத்தனை ஒரு ருபாய்களை திருடனேன் என்றால் தெரியாது, ஆனால் அம்மாவுக்கு தெரிந்த அன்றுமே அடித்து துவைக்கும் அம்மா அன்று கண்கலங்கள் மட்டுமே அது போதும் அதற்க்கு முடிவுகட்ட . மணியனுக்கு அப்படி ஒன்று நிகழவில்லை.
தான் பெரிய பெயர் போன திருடனாக திரிந்த நாட்களில் கூட திருட்டில் கிடைத்த பணத்தை, தேவைபடுவோருக்கு தருவது ( அவர்களுக்கு தெரியாமல்) ஏதோ வள்ளல் என்றதனால் அல்ல, அவரின் மனசாட்சிக்கும். வாங்குபவர் திருட்டு பணம் என்பதனால் நிச்சயமாக மறுப்பார்கள் என்பதனால் என்று தோன்றியது. பெரும்பாலான திருட்டுகள் பெரிய செல்வந்தர்கள், மக்களிடம் இருந்து திருட்டுத்தனமாக சம்பாரித்தவை. அது குற்றமா என்று அவரே கேள்வி தொடுக்கிறார்.
ஜெயில் வாழ்க்கை: காமம், வன்புணர்வுகள், ஊழல், பகைமை ( கைதிகளுக்கும், ஜெயிலர்கழுக்கும்). நம் சினிமாக்களில் போலிஸ் என்ற உடுப்பை போட்டாலே மாஸ், அது இது என்று எல்லா டகுள் பாட்ஸா வேளைகள். நிஜத்தில் அது ஒரு மன வதை கூடம் என்று தான் நிதர்சனம்.
மலை உச்சியில் இருந்து விழுந்தால் அடி பலமாக தான் இருக்கும் அது போல தான் பெரிய திருட்டுக்கான தண்டனைகள் வழங்கப்பட்டன. தனது வழக்குகளை தானே வாதாடி தனக்கான விஷயத்தை பேசுகிறார்.
மது, மாது, இத்தியாதிகளில் திளைத்த ஒருத்தனாக இருந்த விட்டொளித்தவனை மீண்டும் அதனுள் திளைக்க வைப்பது கடினம். அதுவரை அதை அனுபவிக்காத ஒருத்தரை அதில் திளைக்க வைப்பது சற்று எளிது.
என்னால் ஒரு சிறு பதிவில் இந்த இமயம் போன்ற ஒரு கதை எப்படி பிரதிபளிப்பத்து?
திருடிய பணத்தை கொண்ட முதலிடு, பரோலில் தலைமறைவு கிளைகள் தனி மறமாக மாறும்.
இது சுயசரிதை அல்ல நமக்கான மனிதர்கள் மீதான படிப்பினை.
தன்னை தாங்கும் ஏணிகள் தன்னால் முறிக்கப்படவும் செய்கின்றன என்பது மனதை வதைக்கும் ஒன்று.
തസ്കരൻ, മണിയൻ പിള്ളയുടെ ആത്മകഥ | ജി.ആർ. ഇന്ദുഗോപൻ.
ഒരു കള്ളൻ്റെ ആത്മകഥയിലെന്തിരിക്കുന്നു എന്നാണ് ഈ പുസ്തകം കണ്ടപ്പോൾ ആദ്യമെനിക്ക് തോന്നിയത്. പിന്നീടാണ് ഡിസി ബുക്ക് കാലിക്കറ്റിൽ സംഘടിപ്പിച്ച ലിറ്ററേച്ചർ ഫെസ്റ്റിവലിന്റെ വീഡിയോ കണ്ടപ്പോഴാണ് ഈ പുസ്തകം വായിക്കണമെന്ന് തോന്നിയത്.
1970 കളിൽ കേരളത്തിലെ കുപ്രസിദ്ധ മോഷ്ടാക്കളിൽ ഒരാളായിരുന്നു മണിയൻപിള്ള. ഒരു പാട് സാഹസികമായ കഥകൾ പറയാനുണ്ട് മണിയൻപിള്ളക്ക്.
ചെയ്ത് പോയ കുറ്റങ്ങളിൽ മാനസാന്തരം വന്ന മണിയൻ ഒരിക്കൽ നാട് വിട്ട് മൈസൂരിലെത്തി. ഉപജീവനത്തിനായി ചെറിയൊരു ചായക്കട തുടങ്ങി. സാധ്യതകൾ മുതലാക്കി പുതിയ മേഘലയിലേക്ക് കച്ചവടം വ്യാപിപ്പിച്ചതോടെ വലിയ മുതലാളിയായി മാറി.
1983-ൽ കർണ്ണാടക നിയമസഭയിലേയ്ക്ക് മത്സരിക്കാൻ അവസരം ഒത്ത് വന്നപ്പോൾ അതും നോക്കി. പക്ഷേ നിർഭാഗ്യവശാൽ ആസമയത്ത് കേരള പോലീസ് അറസ്റ്റ് ചെയ്തു. ആ സമയത്തെ ആസ്തികൾ ലേലം ചെയ്ത വകയിൽ മാത്രം 93 ലക്ഷം രൂപക്കു ഞായിരുന്നു.
ഒരു കള്ളനിൽ നിന്നും ഒരു പാട് പഠിക്കാനുണ്ട്. കള്ളൻ രാത്രിയുടെ മറവിൽ കണ്ട ഞ്ഞെട്ടിപ്പിക്കുന്ന കഥകൾ പലരുടെയും മുഖം മൂടി വലിച്ചഴിക്കുന്നതാണ്.
കള്ളനും പോലീസും ഒരു നാണയത്തിന്റെ രണ്ട് വശങ്ങളാണെന്ന് മണിയൻ പിള്ള അനുദവങ്ങളുടെ നേർകാഴ്ചയിലൂടെ സമർത്തിക്കുന്നുണ്ട്. കോടതിയും ജയിലും പോലീസുമെല്ലാം വളരെ ആഴത്തിൽ മനസ്സിലാക്കിത്തരുന്നുണ്ട്.
ഒരാൾ കള്ളനാവേണ്ടി വരുന്ന സാഹചര്യങ്ങളും സമൂഹം അവരോട് സ്വീകരിക്കുന്ന സമീപനവും മനസ്സിലാവുമ്പോൾ മാത്രമേ അവരെ നേരിന്റെ മാർഗത്തിലേക്ക് നയിക്കാൻ കഴിയൂ..
ഒരു പാട് ഫിലോസഫി യുള്ള വ്യക്തിയാണ് മണിയൻ.
നല്ലൊരു വായനാനുഭവം ഈ പുസ്തകം വായനക്കാരന് നൽകുന്നുണ്ട്.
ഡി.സി.ബുക്സാണ് ഈ പുസ്തകം പ്രസിദ്ധീകരിച്ചിരിക്കുന്നത്.
மணியன்பிள்ளை வாழ்க்கை நமக்கு சொல்வது விதி வசத்தால் திருடன் உருவாகிறார்கள் பிறகு சமுகமும் சட்டமும் அவனை திருடனாகவே இருக்க செய்கிறது. அவன் திருந்தி வாழ நினைத்தாலும் உதைத்து தள்ளுகிறது. பகடியும் விருவிருப்பான எழுத்தும் வாசிக்க எளிமையாக இருக்கிறது. ஆனால் இதற்கு பின் இருக்கும் வலி நிறைந்த வாழ்க்கை கற்பனைக்கு அப்பாற்பட்டது....
ஒரு திருடன் அனுபவித்த வாழ்க்கைச் சம்பவங்கள் அவன் குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, அவனது வாழ்வு காட்டும் விளைவுகள் மனித சமுதாயத்தின் அடுக்கடுக்கான சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன. இதனால் தான் "திருடன் மணியன்பிள்ளை" போன்ற நூல்கள் வெறும் சுவாரஸ்யக் கதைகள் அல்ல, சமூகவியல் ஆய்வுக்குரிய ஆவணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மணியன்பிள்ளை விவரிக்கும் பசி, பட்டினி, வறுமை ஆகியவை வெறும் தனிநபரின் சோதனைகள் அல்ல; சமூகத்தின் அமைப்பில் உள்ள சமத்துவமின்மை, வறுமையின் தீவிரம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகும். ஒருவரை திருட்டிற்கு தள்ளுவது அவரது தனிப்பட்ட குணக்குறை அல்ல, அவரைச் சூழ்ந்துள்ள சமூக, பொருளாதார நிலைகளின் தாக்கமே என்பதை இந்த அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக பசியால் தவிக்கும் மனநிலையை மணியன்பிள்ளை விவரிக்கும் விதம், குற்றவாளியை ஒரு குற்றவாளியாக மட்டுமே பார்ப்பதற்குப் பதிலாக, சமூகத்தின் தோல்வியால் உருவான ஒருவனாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது.
திருட்டின் போது ஏற்பட்ட நாய் சம்பவம், மனிதன் மற்றும் விலங்கு விசுவாசம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. எஜமானருக்கு அளித்த உண்மை நம்பிக்கையைக் குலைத்துவிட்டதாக நினைத்து உயிரையே அர்ப்பணித்த நாய்களின் நிகழ்வு, மனித சமுதாயத்தில் காணப்படும் ஒழுக்கக்கேடுகளையும் மதிப்பீனத்தையும் சாடும் விதமாக திகழ்கிறது. மனிதர்கள் பல நேரங்களில் தனநலத்திற்காக விசுவாசத்தை மீறுகிறார்கள்; ஆனால் விலங்குகள் கூட தங்கள் எஜமானருக்கான பற்றை உயிருக்கு மிச்சமாய் காக்கின்றன. இந்த ஒப்பீடு, சமூக உறவுகளில் விசுவாசம், நம்பிக்கை, பொறுப்பு போன்ற குணாதிசயங்களின் குறைவைக் காட்டும் உவமையாக அமைகிறது.
இத்தகைய அனுபவக் கதைகள் குற்றத்தை நேரடியாகத் தூண்டுவதில்லை; மாறாக, குற்றத்தின் பின்னணி, அதனால் உண்டாகும் உளவியல் துயரம், பிறருக்கு ஏற்படும் தாக்கம் போன்ற அம்சங்களை வலியுறுத்துகின்றன. ஒரு குற்றவாளியின் மனஉளைச்சல், அவனைச் சுற்றியுள்ளோரின் வலி, சமூக அமைப்பின் தோல்வி ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை உணர்த்துகின்றன. இதுவே சமூகவியல் பார்வையில் முக்கியம், ஏனெனில் ஒரு தனிநபரின் தவறு என்பது தனிமையான நிகழ்வு அல்ல, சமூகக் காரணிகளின் சங்கிலியால் உருவான விளைவாகும்.
"திருடன் மணியன்பிள்ளை" எனும் நூலில் இடம்பெறும் கதைகள் வெறும் குற்றச் சம்பவங்களின் சுவாரஸ்ய விவரிப்பாக இல்லாமல், மனித வாழ்க்கையின் ஆழமான உண்மைகளைப் பிரதிபலிக்கின்றன. வறுமையின் தாக்கம், நம்பிக்கையின் வலிமை, தவறின் தண்டனை, மனித ஒழுக்கத்தின் எல்லைகள், இயற்கையின் நீதி ஆகிய அனைத்தும் இக்கதைகளில் நம்மை சிந்திக்கத் தூண்டும் வகையில் கலந்துள்ளன. எனவே, இந்நூல் ஒரு குற்றவாளியின் வாழ்க்கைக் குறிப்பாக மட்டுமல்லாமல், சமூக நெறிகள், மதிப்புகள், மனித நடத்தைகள் ஆகியவற்றை ஆராயும் அரிய சமூக ஆவணமாகவும் கருதப்பட வேண்டும்.
മണിയൻപിള്ളയെ പോലെയാകണം. എന്താ ഒരു തേജസ്സ്. കേരളത്തിൽ കള്ളന് ഫാൻസ് ഉണ്ടെങ്കിൽ കൊച്ചുണ്ണി കഴിഞ്ഞാൽ മണിയൻപിള്ളക്കായിരിക്കും. പക്ഷെ നമ്മുടെ ചെറുപ്പകാലത്തെ ഇ-മാന്റേയും ശക്തിമാന്റേയും ഒപ്പം ഇഷ്ടപ്പെട്ട ഫാനായിരിന്നു കായംകുളം കൊച്ചുണ്ണി. ഉണ്ടാക്കിയെടുത്ത കഥാപാത്രമാണോ എന��നറിയില്ല എന്നിരുന്നാലും അങ്ങേര് കള്ളനൊപ്പം പാവങ്ങളുടെ അത്താണി കൂടിയായിർന്നു. പക്ഷെ അവിടെ മണിയൻപിള്ള അങ്ങേരെ മുൻകടക്കുന്നു. *കള്ളൻ* *അത്താണി ഓഫ് പാവങ്ങൾ* *സ്റ്റേഷൻ നടത്തിപ്പുകാരൻ* *വക്കീൽ* *ലോറി പിരിവുകാരൻ* *തേയില മുതലാളി* *കർണാടകയിലെ ലക്ഷപ്രഭു* will be minister of *കർണാടക
ഒറ്റയിരിപ്പിൽ വായിച്ചിരിക്കേണ്ട ബുക്കാണ് മണിയൻപിള്ളയുടെ ജീവിതകഥ പക്ഷേ സാവധാനം വായിച്ചത് കുത്സിത വായന ഉള്ളതുകൊണ്ടാണെന്ന് ആരും തെറ്റിദ്ധരിക്കേണ്ട.അത് അതാണ്, വേറെ ഒരു അത്! അല്ല അങ്ങേരെ കഥ .He was a codable thief. കള്ളൻ ഉണരുന്നത് എല്ലാവരും ഉറങ്ങുമ്പോഴാണ്. പകൽ ജീവിതം നരകമാണവർക്ക്. ഷാപ്പിൽ കയറി നേരം ഇരുട്ടിക്കും, ആവശ്യത്തിന് കള്ളിന് പുറമെ അത്യാവശ്യം ചീനിയും മീനും പിന്നെ നോക്കണ്ട ഒരു സെറ്റപ്പും.King of keeps അല്ലെ അതിനൊരു പഞ്ചവുമില്ല. പിന്നൊരു സെക്കന്റ് ഷോ, ജോലിക്ക് സമയമായി. കോഡുഉള്ള കള്ളനിലേക്ക് പോകാം.... വിശപ്പുണ്ടെങ്കിൽ ജനൽ കമ്പി വളച്ചു നേരെ അടുക്കളയിലേയ്ക്ക് , അയല കറി ഉണ്ടെങ്കിൽ കുറച്ചധികം തിന്നും. അടുക്കള പേടിക്കണം കേരളത്തിലെ പെണ്ണുങ്ങൾ മസാലകൾ ചെറിയ പത്രങ്ങളിലായി തൊട്ടാൽ വീഴുന്ന രൂപത്തിൽ വരിക്ക് വെക്കും, ഒന്ന് തൊട്ട് വീണാൽ മതി അന്നത്തെ ജോലി പോയി കിട്ടാൻ.ഉറങ്ങുന്നവരുടെ ശരീരത്തിൽ നിന്ന് ആഭരണങ്ങൾ എടുക്കാത്ത കള്ളൻ, വീട്ടുകാർ എവിടെയാണ് വിലപിടിപ്പുള്ള വസ്തുക്കൾ വെച്ചത് എന്നതിനെ കുറിച്ചുള്ള ശാസ്ത്രം വ്യക്തമായി സ്വായത്തമാക്കിയവൻ, എണ്ണയും ചീർപ്പും കയ്യിലുണ്ടാവും. പണി കഴിഞ്ഞാൽ ഷവറുള്ള വീടാണെങ്കിൽ നനഞ്ഞ മുണ്ട് ഷവറിൽ നിന്ന് തൂക്കിയിട്ട് വളരെ നിശബ്ദമായി കുളിച്ചു മുടി ചീകി സുന്ദരനാകും.ഒരു ഡോക്ടറുടെ വീട്ടിൽ കയറിയ അനുഭവം പറയുന്നുണ്ട് സാധനങ്ങളൊക്കെ പാക്ക് ചെയ്ത ശേഷം സ്പ്രേയും ഡോക്ടറെ വാച്ചും എടുക്കുന്നു. കഴുത്തിൽ സ്റ്റെതെസ്കോപ്പും വലതു കൈയിലെ സ്വർണം നിറച്ച ബാഗും കണ്ട് ഡോക്ടർ ആണെന്ന് ധരിച്ച വഴിയിലുള്ള ആളുകൾ ഡോക്ടറെ റെയിൽവേ സ്റ്റേഷനിലേക്ക് ഡ്രോപ്പ് ചെയ്യുന്നു. മോഷണത്തിനായി ഇറങ്ങുമ്പോൾ ഗ്ലൗ ഇടാത്തതിന്റെ ഗുട്ടൻസ് ഇതാണ് കൈ കൊണ്ട് തോട്ടാലെ സ്വർണ്ണമാണോ മുക്ക് പണ്ടമാണോ എന്ന് മനസ്സിലാവൂ. രാത്രി വിശപ്പുള്ള വീടിന് മുന്നിൽ പിറ്റേന്ന് രാവിലെ അരിയും വസ്ത്രങ്ങളും "എടാ മണിയാ ഇന്നലെ രാത്രി ആരോ അരിയൊക്കെ വെച്ച് പോയിട്ടുണ്ട്." മണിയൻ ഓഹ് അതെയോ ആര് വെച്ചതാവോ ല്ലേ. സ്വന്തം കേസ് വാദിച്ച് എതിരാളികളുടെ വായ അടപ്പിക്കുന്ന വക്കീലാണ് മണിയശാൻ.
This entire review has been hidden because of spoilers.
ഒരു തസ്കരന്റെ അനുഭവങ്ങൾ. ഒരു കാലത്ത് കേരളത്തിലെ കുപ്രസിദ്ധിയാർജ്ജിച്ച മോഷ്ടാവായിരുന്നു മണിയൻ പിള്ള. അതുകൊണ്ട് തന്നെ സാധാരണക്കാരായ മനുഷ്യരേക്കാളും വളരെയധികം സാഹസികതകൾ നിറഞ്ഞ ജീവിതം. രാത്രിസഞ്ചരനായ മണിയൻ പിള്ളയുടെ സാഹസികപ്രയാണങ്ങളാണ് ഈ ബുക്കിൽ. അച്ചന്റെ മരണശേഷം പഠിത്തം നിന്നു പോയപ്പോൾ ബന്ധുക്കളുടെ തണലിലായി. ഒരു ബന്ധുവിന്റെ പ്രേരണമൂലമാണ് ആദ്യ മോഷണം നടത്തിയതെങ്കിലും ആ ബന്ധു തന്നെ ആദ്യമായി ‘കള്ളൻ’ എന്ന് വിളിച്ചു. പലതരത്തിലുള്ള മോഷണങ്ങൾ, മോഷണത്തിനിടയിലെ ആക്രമണം, പല പകൽ മാന്യന്മാരുടേയും യഥാർത്ഥമുഖങ്ങളൂടെ സാക്ഷി, പല ശിക്ഷകൾ, പല ജയിലുകൾ, പല സ്ഥലങ്ങളിൽ ഒളിവാസം, പല പല ബന്ധങ്ങൾ എന്നിങ്ങനെ പലതും നിറഞ്ഞ ജീവിതം. ആദ്യസമയങ്ങളിലെ ജയില്വാസത്തിന് ശേഷം മനം മടുത്ത് ആത്മഹത്യാശ്രമം വരെ നടത്തി അതിൽ നിന്ന് രക്ഷപ്പെട്ട് വർഷങ്ങൾക്ക് ശേഷം ജനതാപാർട്ടിയുടെ സ്ഥാനാർത്ഥിയാവാൻ വരെയെത്തി നിന്ന കോടീശ്വരൻ. അന്ന് പിടിക്കപ്പെട്ടില്ലാരുന്നെങ്കിൽ രാഷ്ട്രീയത്തിൽ മറ്റൊരു സാമ്രാജ്യം സൃഷ്ടിക്കാൻ മാത്രം കഴിവുണ്ടായിരുന്നേനെ എന്ന് തോന്നിപ്പിച്ചു ബുക്ക് വായിച്ച് തീർന്നപ്പോൾ. വീണ്ടും പലവട്ടം ജയിലനകത്തും പുറത്തും.
നല്ലൊരു വായനാനുഭമായിരുന്നെന്ന് സമ്മതിക്കാതെ വയ്യ. ബന്ധുക്കളും, നാട്ടുകാരും, പോലീസുകാരുമാണ് കള്ളനായി തീരാൻ ഇടയാക്കിതീർന്നത് എന്നാണ് മണിയൻ പിള്ള പറയുന്നത്. വായനക്കാരന്റെ സഹതാപം ആഗ്രഹിക്കുകയോ പ്രതീക്ഷിക്കുകയോ ചെയ്യുന്നില്ല എന്ന് പറഞ്ഞിട്ടുണ്ടെങ്കിലും വായിച്ചുകൊണ്ടിരുന്നപ്പോൾ പലവട്ടം എനിക്ക് തോന്നിയത് ചെയ്തികൾ പലതും ന്യായീകരിക്കുകയല്ലേ എന്നാണ്. ഒരിക്കൽ ഒരാൾക്ക് കള്ളൻ എന്ന പേര് ചാർത്തികിട്ടിയാൽ പിന്നെ അതൊരു മനുഷ്യനാണെന്ന് പോലും ഞാനടക്കമുള്ള ഭൂരിപക്ഷം ആളുകളും മറക്കും. നല്ലൊരു ജീവിതം അവരും ആഗ്രഹിക്കുന്നുണ്ടെന്നും, വ്യക്തിത്തം അവർക്കും ഉള്ളതാണ് അല്ലെങ്കിൽ ഉണ്ടായിരുന്നതാണ് എന്നതും. ഒരു തവണ പിടിക്കപ്പെട്ടാൽ പിന്നെ നാട്ടിൽ എവിടെ മോഷണം നടന്നാലും പിടിക്കപ്പെടുന്നത് അയാളായിരിക്കും, ആ സംഭവത്തിൽ നിരപരാധിയാണെങ്കിലും. പലതവണ ചെയ്യാത്ത കുറ്റത്തിന് മണിയൻ പിള്ള പിടിക്കപ്പെട്ടിട്ടുണ്ടെങ്കിലും, പലതവണ ചെയ്ത കുറ്റത്തിന് പിടിക്കപ്പെടാതെയും ഇരുന്നിട്ടുണ്ട്.
എന്തായാലും സ്വന്തം ജീവിതം പുസ്തകമാക്കാൻ മണിയൻപിള്ള കാണിച്ച ധൈര്യം അഭിനന്ദനമർഹിക്കുന്നു. അത് എഴുതിയ എഴുത്തുകാരനും.. തീർച്ചയായും വായിച്ചിരിക്കേണ്ട ഒരു പുസ്തകമാണ്. Robinhood, Dhoom, Now you see me, Money heist etc.. ഒക്കെ ആസ്വദിക്കുന്ന നമുക്ക് തീർച്ചയായും ഇതും ആസ്വദിക്കുവാൻ പറ്റും. ഇത്ര വിശദീകരിച്ചു നമ്മളോട് മറ്റാര് പറയാൻ..
பொருளைப் பறிகொடுத்தவனுக்கு மட்டும் தான் திருடன் அயோக்கியன். மற்றவர்களுக்கு அவன் ஒரு சாகசக்காரன்.
- திருடன் மணியன்பிள்ளை
ஆம், அதுபோல தான் இந்த புத்தகத்தைப் படிப்பவர்களும், பொருளைப் பறிகொடுக்காமல் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர்கள். சுவாரஸ்யமாகமாகத் தான் இருக்கும். ஆனால் இருக்கக்கூடாது என்று முன்பே நம்மை எச்சரிக்கை செய்துவிடுகிறார் மணியன்.
புத்தகம் முழுக்க ஃபிளாசப்பிகள் நிறைந்திருக்கிறது. நீ எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விட ஒரு சக மனிதனை நீ எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அதிகம் உணரவைக்கிறார் மணியன். ஏன்னென்றால் உன்னைடைய தாக்கம் தான் மற்றொருவனின் வெளிப்பாடு. அதில் உருவாகிறது இந்த சமூகம். ஆதலால், அச்சமூகம் சரியாக இருக்க வேண்டுமெனில் உன்னடைய சமூக செயல்த்தாக்கம் சரியாக இருந்திட வேண்டும்.
ஒரு திருடனின் வாழ்க்கை வரலாறு இந்த சமூகத்திற்கு தேவையா என்று மறுக்காத பதிப்பாளருக்கும், அதை தமிழுக்கு மொழிபெயர்த்த ஆசிரியருக்கும், அதற்கு சாஹித்திய ஆகாதமி விருத்தளித்து லைம் லைட்டிற்கு கொண்டு வந்த தேர்வு குழுவிற்கும், இந்நூலை படிக்க பரிந்துரைத்த எனது நண்பருக்கும் நன்றி.
குறை என்றால் அதிகமான உள்ளடக்கங்கள் தான். அவற்றில் சிலவற்றை நீக்கினால் இன்னும் சுவாரஸ்யமாகவும், ஒரே அமர்வில் படிப்பதற்கும் எதுவாக இருக்கும்.