Jump to ratings and reviews
Rate this book

பெண் கதைகள்

Rate this book

200 pages, Unknown Binding

First published January 1, 2009

2 people are currently reading
76 people want to read

About the author

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born in Idaiseval village in 1923. He dropped out of school in the seventh standard. He was appointed a professor of folklore at Pondicherry University in the 1980s. He held the title of Director of Folktales in the university's Documentation and Survey Centre. He was a member of the Communist Party of India and went to prison twice for his participation and support in the CPI organised peasant rebellions during 1947–51. In 1998-2002 he was a General council & Advisory board Member of Sahitya Akademi.

Ki. Ra.'s first published short story was Mayamaan (lit. The Magical Deer), which came out in 1958. It was an immediate success. Ki. Ra.'s stories are usually based in Karisal kaadu (scorched, drought stricken land around Kovilpatti ). He centres his stories around Karisal country's people, their lives, beliefs, struggles and folklore. The novels Gopalla Grammam (lit. Gopalla Village) and its sequel Gopallapurathu Makkal (lit. The People of Gopallapuram) are among his most acclaimed; he won the Sahitya Akademi award for the latter in 1991. Gopallapuram novels deals with the stories of people living in a South Indian village before the arrival of the British. It involves the migration of people escaping brutal kingdoms north of Tamil Nadu. As a folklorist, Ki. Ra. spent decades collecting folktales from the Karisal Kaadu and publishing them in popular magazines. In 2007, the Thanjavur based publishing house Annam compiled these folktales into a 944-page book, the Nattuppura Kadhai Kalanjiyam (Collection of Country Tales). As of 2009, he has published around 30 books. A selection of these were translated into English by Pritham K. Chakravarthy and published in 2009 as Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Ki. Ra. is well known for his candid treatment of sexual topics, and use of the spoken dialect of Tamil language for his stories (rather than its formal written form). In 2003, his short story Kidai was made into a Tamil film titled Oruthi. It was screened in the International Film Festival of India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (40%)
4 stars
13 (52%)
3 stars
1 (4%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Renya Ragavi.
37 reviews4 followers
February 23, 2023
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா வின் கதைகளில் பெண்களைப் பற்றி வரும் கதைகளை திரட்டி ஒரு தொகுப்பாக கொண்டு வரச் சொல்லி தனது வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்காக இந்நூலை கீ.ரா தொகுத்துள்ளார்.

மொத்தம் 21 கதைகள் அத்தனையும் பெண்களைப் பற்றியது. கதைகள் முழுக்க பெண் என்ற ஒரு பாலினத்தை பற்றியது என்றாலும், ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளவள்.ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனை .ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு கவலை. ஒவ்வொருவரின் உலகமும் வேறு வேறு.

பெண் கதைகள் என்ற தலைப்பினால் பெண்களை உயர்த்தி பிடிக்கும் கதைகள் அன்று. இதில் வரும் பெண்கள் பல உருவங்களை கொண்டவர்கள்.எல்லா பெண்களும் தேவதைகள் போல காண்பிக்கப்படாமல் சமூகத்தில் தினம் தினம் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களைப் போல ஒவ்வொரு பெண்ணும் வாசகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துபவர்களாக அமைகிறார்கள்.

இக்கதைகளில் வரும் ஒவ்வொரு பெண்களின் மனம் ,ஏக்கம்,கனவு, ஆசை அவர்களின் சமூகம் மற்றும் குடும்ப நிலை போன்றவைகளையும் சமூகத்தின் பார்வைக்காக ஒரு பெண் எப்படி எல்லாம் மாற்றப்படுகிறாள் மாறுகிறாள் என்பதனையும் அந்தந்த பெண்களின் செயல்பாடுகளின் வழியே கி.ரா வெளிப்படுத்துகிறார்.

இதில் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பல இடங்களில் எழுதி இருப்பார். எடுத்துக்காட்டாக பெண்கள் தங்களின் சமையலுக்கு நல்ல கைமணம் வர வேண்டி சமைக்கும் முன் பச்சை பாம்பின் வால் பகுதியை உருவி விட்டு சமைப்பார்களாம்.

இது போன்ற பல சுவாரசியமான தகவல்களையும் பெண்களின் தனித்துவமான குணாதிசயங்களையும் அவர்களின் அழகை குறிப்பாக திருமணத்திற்கு முன் இருக்கும் அந்த கன்னி பருவத்தை மிக அழகாக இரசிக்கும்படி எழுதியிருப்பார்.

ஒவ்வொரு கதையையும் படிக்க படிக்க மென்மேலும் அந்த பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் வாசகர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் சலிப்பு தட்டாத வகையில் கி.ராவின் எழுத்து நம்மை கட்டி ஆள்கிறது.

ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்து விட்டுப் போகட்டும் என்ன பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா?

சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்து விட்டோம் நாம்.

ஆட்டுக்கறியின் போது அடித்துக் கொள்கிறதும்
கோழிக்கறியின் போது கூடிக்கொள்கிறதும் சகஜம்தான்.

வரகரிசி வேகும் நேரம்தான் புருசம் பொண்டாட்டிச் சண்டை
என்கிறது ஒரு சொலவம்.

பழைய மனிதர்களைப்பற்றிய இந்த புதுபுது கதைகளை இன்றைய தலைமுறையினர் நிச்சயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்‌...அனைவுரும் வாழ்வில் என்றாவது ஒரு நாள் கி.ராவின் நூல்களை‌ வாசிக்கவேண்டும்.

பெண் கதைகள் - கி.ராஜநாராயணன்
Profile Image for Soundar Phil.
129 reviews12 followers
August 26, 2024
பெண் கதைகள்
கி.ராஜநாராயணன்

1970, 80 மற்றும் 90-களில் குமுதம், ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களிலும், தாமரை, நீலக்குயில், அமுதசுரபி போன்ற இலக்கிய இதழ்களிலும் கி.ரா-ஆல் எழுதப்பெற்ற பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பே "பெண் கதைகள்" என்னும் இந்த படைப்பு.

இன்றைய காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் கதைகள் எழுதபெற்ற காலம் பழையது எனினும், வேறு வேறு நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் புதிராகவும், புதுமையாகவும் இருக்கும் பெண்மையை ஒட்டி பின்னப்பட்ட கதையாகையால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.

இந்த கதைகள் நமக்கு அறிமுகப்படுத்தும் மனிதர்களும், மண்ணும், கலாச்சாரமும், பண்பாடும், நம்பிக்கைகளும், வாழ்வு முறைகளும் கி.ரா-வின் ஆழமான புரிதலுக்கும், அவரின் தனிநோக்கு பார்வைக்கும் பெரும் எடுத்துக்காட்டுகள்.

குலசாமியாய், குழந்தையாய், குமரியாய், கிழவியாய், தாயாய், மனைவியாய், பிசாசாய் என பெண்மைக்குஅத்தனை பரிமாணங்களையும் தந்து அதற்கான நிதர்சனத்தோடு தன் பாணியில் கதைகளை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இந்த கதைச்சொல்லி.
17 reviews
January 17, 2025
படிக்க சலிப்பில்ல்லாத சிறுகதைகள். என்னதான் பெண்மையும் பெருங்குணமும் ஒரு பெண்ணிற்கு இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றாலும், திருமணமும் ,பிரசவமும் அதுவரை அவர்கள் தாங்கி வந்த குணங்களை மாற்றக்கூடியவை என்ற நிதர்சனத்தைச் சொன்ன "கன்னிமை" என்ற கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதற்கு நேர்மாறாக "வேலையே வாழ்க்கை" என்ற கதை பொறுப்புகளும், வேலைகளும், பிரச்னைகளும் கூடும் போது கூட அவர்கள் இயல்பிலிருந்து மாறுவதில்லை என்ற அதிசியத்தையும் கூறுகிறது. என்னதான் இவை அனைத்தும் பெண்களைப் பற்றிய கதைகளாயினும் அவை பெண் என்பது முதலில் ஒரு போக பொருள் என்ற ஒரு ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டவையே.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.