உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்.
வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போது அவற்றை வாழ்க்கைக்கு அப்பால் கொண்டு சென்று விளங்கிக்கொள்ள முயன்ற தொல்மனத்தின் முயற்சிகள் இவை. உலக இலக்கியத்தின் பெரும் படைப்பாளிகள் பலரும் பேய்க் கதைகளை எழுதியுள்ளனர்.
எப்போதுமே மனித மனங்களின் உச்சங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன், எழுத முனைபவன் என்ற வகையில் நான் ஏற்கெனவே தொடர்ந்து பேய்க் கதைகளை எழுதி வந்துள்ளேன். அவற்றின் உளநுட்பங்களும் கவித்துவ ஆழங்களும் என் வாசகர்களால் பெரிதும் உணரப்பட்டும் உள்ளன.
வாழ்க்கையைக் கற்பனை மூலம் அறிய முயல்பவர்கள் தினம் தினம் காணும் பேய்கள் பல. அவனுள் குடிகொண்டுள்ள பேய்களோ பற்பல. இத்தொகுப்பில், முற்றிலும் அப்படிப்பட்ட கதைகளால் ஆன ஓர் உலகை உருவாக்கியுள்ளேன். குற்றம், பாவ உணர்ச்சி, தனிமை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகவே இக்கதைகளைக் காண்கிறேன். ஜெயமோகன்
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
பேய்களைப் பற்றி ஏற்கனவே எனக்கு ஒரு கருத்து இருந்தது.. பேய்க் கதைகள் எப்போதும் நம்மோடு இருப்பவை... தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் யோசித்துப் பார்த்தால் அதில் 70 சதம் பேய்க்கதைகளாகத் தான் இருக்கும்.. பேய் மீது நம்பிக்கையற்றவர்கள் கூட எப்போதும் பேய்களை சுமந்து கொண்டே திரிகிறார்கள். பேய்களும் பேய்க் கதைகளும் அச்சத்துக்கு உரியவை அல்ல.. என்னைப் பொருத்தவரை பேய்க்கதைகள் நம்மை ஆசுவாசப்படுத்துபவை நமக்குள் ஆழ்ந்திருக்கும் வன்மத்தை அச்சத்தை சபலத்தை வெளிக்கொண்டு வந்து நம்மை விடுவிப்பவை... இதை ஜெ.மோ வின் இந்த தொகுப்பில் நன்கு உணரலாம்.. இதில் எந்த கதையையும் நீங்கள் படித்துவிட்டு பயப்பட மாட்டீர்கள்... ஆனால் இது ஏற்படுத்தும் அமானுஷம் உங்கள் உணர்வுகளை கொஞ்சம் உஷாராக்கிவிடும்.. இதில் இருக்கும் இமையோன்.. தம்பி.. ரூபியைத் தவிர மற்றவை எல்லாம் சுமாரனவை தான்.. வேகமான வாசிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் உதவும்...
நான் படித்த முதல் ஜெயமோகன் புத்தகம், அவரின் வாசகர்கள் அவரை ஆஹா! ஓஹோ! என்று புகழும் காரணம் இந்த புத்தகத்தின் முதல் கதையின் பாதியில் புரிந்தது. மிகச்சாதாரண பாமர எண்ணங்களை மிக அழகாய் வெளிபடுத்த அவர் பயன்படுத்தும் தொன்மையான அதே நேரத்தில் எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி எழுதுவது மிக நேர்த்தி.
இந்த நிழல்வெளி கதைகளின் ஊடே தொடக்கம் முதல் முடிவு வரை பிடாரிகளும்,நீலிகலும்,அழகான யட்சிகளும்,தேவதைகளும் உலாவுவார்கள் இதனை எழுத்தாளர் அவர்கள் மானுட மனத்தின் அலைகளின் மறுவடிவங்களே என கூறுகிறார்.
இந்த நூற்றாண்டில் இதை படிக்கும் வாசகனுக்கு நிறைய இடத்தில் பழமை தென்படும்..., இதற்க்காக எழுத்தாளர் அவர்கள் நிறைய விஷயங்களை பரண் மீது இருந்து எடுத்து அழகாய் எழ்த்து வடிவம் தந்திருக்கிறார்.
பழைமை,விசித்திரம்,பேய்க் கதைகள் விரும்பிகளுக்கு உகந்த தவறவிட கூடாத புத்தகம்.
பேய்கள் இருக்கா? இல்லையா? என்பது ஒரு முடிவில்லா விவாதம். இந்த புத்தகத்தில் அதற்கு பதில் கிடைக்கும். வண்ணம் பூசி உருவம் கொடுத்து நாம் படத்தில் பார்த்த பேய்கள் பல. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இந்த புத்தகத்தில் பேய்களுக்குள் இருக்கும் உணர்ச்சியை நீங்கள் உணரலாம். பேய்கள் என்றால் கெட்டதோ காட்டேரியோ அல்ல, அவர்களும் தேவதைகள் தான்.
இந்த பத்து கதைகளில் அறைகள், பாதைகள், தம்பி, ஐந்தாவது நபர் மற்றும் ரூபி எனக்கு பிடித்தவை.
அந்நியன் படம் பார்த்திருக்கிறோம். அதில் ஒரு சைக்காட்ரிஸ்ட் நாயகனுடன் ஒரு செஷன் நடத்துவார். அது உண்மையில் சம கால வாழ்வில் எப்படி இருக்கும் அதை சைக்காட்ரிஸ்ட் எப்படி இன்டெர்ப்ரெட் செய்து கண்டுபிடிக்கிறார் என்பது தான் இந்த சிறுகதை. நான் சிறுகதை படித்து பயப்படுவேன் என்று உணர்த்திய கதை. மனம் என்பதை எப்படி ஏமாற்றுவது, நாம் அதற்காக எப்படி நடிப்போம் மற்றும் அதன் இயல்பு என்ன என்று சொல்லும் கதை. அன்பு காட்டினால் அந்த பேய் கூட ஓட்டிவிடலாம் (உண்மையாக இருந்தால்) என்று எடுத்து காட்டும் சிறுகதை. ஜெ விற்கு நன்றிகள்
A small collection of ten short stories, all focused on supernatural themes, ghosts, and horror. Vivid and spectacular descriptions spook the reader, while the characters and events burrow new insights into the human psychological depths. I particularly liked the three stories - "thambi" (dealing with a case of split personality syndrome), "kural" and "Ruby" (both dealing in supernatural scenarios with animals, thereby bringing an extra layer of sinister unease.)
இந்தச் சிறுகதை தொகுப்பில் மனிதர்களுக்குள் குடியிருக்கும் பேய்களாலான ஓர் உலகை உருவாக்கியுள்ளார் ஜெயமோகன். எல்லாக் கதைகளும் ஆழ்மனதைத் தொடும்படி உளவியல்ரீதியாகவும் கவித்துவத்துடன் உள்ளது. பத்து பன்னிரண்டு பக்கத்தில் மனதில் அநீதி, துரோகம் , மோகம் போன்ற எல்லா உணர்வுகளையும் ஆழமாக உணரவைக்கிறார் ஜெ. குறிப்பிடும் படியாக இமையோன் பாதைகள் , தம்பி, யட்சி மற்றும் குரல் மிக அருமையாக இருக்கும். இதில் யட்சி, இரண்டாவது பெண் போன்ற கதைகள் பல முறை வாசித்தபின்னே எனக்குப் புரிந்தது. நான் படித்த சில சிறுகதை தொகுப்பினில் (“அறம் Aram ”க்கு அடுத்தபடி ) சிறந்த தொகுப்பு இது தான்.
Read when I was in school (around 8/9 years back) and I still can remember these stories vividly.
The story about a wife violently attacking her husband (in his privates) while being possessed by a godly spirit and the story about the crippled flower seller becoming a revered elder when he kills his sister's molester are particularly haunting.
A grotesque caricature of our seemingly amicable society and such wielding of the prose - Poignant and flowing.
ஜெயமோகன் எழுத்தில் நான் படிக்கும் முதல் புத்தகம்.வட்டார சொற்கள் இருக்கும் இடங்கள் எனக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.10 கதைகள் ... அழகாக இருந்தது.தனிமையில் தான் படித்தேன்.தம்பி கதை மிகவும் பிடித்தது.கதைகள் பலவற்றிலும் ஆண்,பெண் உறவு சார்ந்த்தாகவும்,தனிமையில் உறையாடும் மனப்பான்மையுடனும் இருந்தது.நம்ம சூது கவ்வும் விஜய் சேதுபதி ஸ்டைல்ல ஒரு கதை இருந்தது.
நான் சிறு வயதில் பேய்களை கதைகளில் கேட்டதில்லை...அதனால் எனக்கு இக்கதைகள் யாவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.
இந்த புத்தகத்தின் கதைகள் எல்லாம் சொல்வழி கதைகள், அதனால் இந்தகால வாசிப்பாளர்களுக்கு பெரிதாய் சுவாரசியத்தை ஏற்படுத்தாது.! ஆயினும், ஒரு முறை படிக்கலாம்...