கோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான இயல்பானதாக நம் பொதுமனதில் பதிந்து உள்ளது.கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும் அரசர்களின் வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன .ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள் இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோவில்களுக்கு உடைமையாக இருந்தன என்பதையும் தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக் கோவில் சபைகளே நடத்திவந்தன என்பதையும் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.இவற்றின் அடிப்படையில் ஆராயும் போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகிறது. ஆகவே கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வாகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வலராற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ.வேல்சாமி தொடங்கி வைத்துள்ளார்.
I started reading this book looking for answers for few questions.
How did temples end up owning huge loads of land? Why are they still with them and not with the government or the TNHRCE? Why are they exempted from the land ceiling laws?
The book didn't answer my questions, but clarifies few points and provides more reference to other books to dig deeper.
These questions seems like, it will never be answered.
கடந்த காலத்துல வாழ்ந்த மக்களோட கதைகள், நிகழ்வுகளோட தொகுப்பு தான் வரலாறா? அப்படித்தான் இங்க நாம வச்சிருக்கோமான்னு கேட்டா, கண்டிப்பா நம்ம படிச்ச அல்லது நமக்கு சொல்லப்பட்ட வரலாறு அப்படியானது அல்ல. நிறைய பிரச்சாரங்களும், ஆண்ட வர்க்கத்தின் திரிப்புகளும் காலம் காலமா சேர்ந்தது தான் நாமறிந்த வரலாறு.
நிலவுடைமை சமூகமா இருந்து, கோவில்கள் வாயிலாக ஒடுக்குமுறை நிறுவி "ஆண்டவங்க"/"ஆளப்பட்டவங்க" தான் நம்ம. அதுலயும் இராணுவ நிர்வாகம் தான் இப்போ நாம வரலாற்றுல படிச்சு ஆர்காஸம் அடையும் மூவேந்தர் கைல இருந்திருக்கு; சாதாரண மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கும் சிவில் நிர்வாகம் பார்ப்பனர்கள் கைல, கோவில்கள் கைல தான் இருந்திருக்குன்னு கல்வெட்டுகள், இலக்கியங்கள் கொண்டு நிறுவுகிறார் பொ.வேல்சாமி! 'கோவில் நிலம் சாதி' என்னும் இந்நூல் உடைக்கும் பர்னிச்சர்கள் ஏராளம். அதுல கொஞ்சத்தை மட்டும் இங்க சொல்றேன்:
1. ராஜராஜன் தொடங்கி பின்வந்த சோழர்கள் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்பது எப்படியாபட்ட உருட்டுன்னா: மூன்றாம் ராஜராஜன் ஆட்சில சோத்துக்கு வழி இல்லாம ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் தங்களைத் தாங்களே அடிமையா வித்துகிட்டத் தகவல் கல்வெட்டுகளில் காணக் கிடைக்குது! கடல் கடந்து போர் புரிந்து ஆட்சி செஞ்சு கொண்டு சேர்த்த செல்வமெல்லாம், பார்ப்பனருக்கும், அரசரை சார்ந்தவருக்குமே சேர்ந்த அதே காலத்துல தான் உணவுக்கு கையேந்தி தன்னையே ஒரு தமிழன் வித்திருக்கான்!
2. இப்போ எப்படி உள்ளூர் பார்ப்பனருக்கு ஒண்ணுன்னா உடனே ரங்கராஜ் ன்னு ஒரு பீகார் பிராமணன் வரானோ, அதே மாதிரிதான் சோழர் காலத்துல இருந்து இருக்கு. அப்போ இன்னும்கூட மோசம், ராஜேந்திர சோழனுக்கு "ராஜ குரு" ஒரு பீகார் சைவப் பார்ப்பான்! இதையே அவனுக்கு பின்னால வந்த சோழர்களும் தொடர்ந்தாங்க. தங்களோட மெய்கீர்த்திகளில் 'மனு நீதி' என்னும் சாதிய (அ)நீதியை கண்ணும் கருத்துமா பாதுகாத்த மாதிரி போட்டுப் புளகாங்கிதம் அடைஞ்சாங்க!
3. கிபி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து மாலிக் காபூர் படையெடுப்பு வரை இருந்த தமிழ் சமூகத்தோட நிர்வாக ட்ரெண்ட் என்னவா இருந்ததுன்னு வரிசையா பதிவு பண்றார் ஆசிரியர். பௌத்த, சமண அவைதிக மதங்கள் பழங்குடி மக்களிடையே திளைத்து கல்வி வளர்த்ததையும், பின்னர் வந்த சைவம் வைணவம் போன்ற வைதிக சமயங்கள் மருத நிலத்தில் நீர்ப்பாசன அமைப்பு கொண்ட சமூகத்தில் நிலைபெற்று பேரரசுகளை அமைத்தது என்றும், அது சமண பௌத்ததை வேரறுத்து, அந்த இடத்தில் சமூக அநீதியான சாதியத்தை நிலைநாட்டுனது பத்தியும் பின்னால வருது.
3. இந்த மாற்றத்துக்கு பெரும்பாலும் துணைபோனது பக்தி இலக்கியங்கள் அப்படின்னு நம்ம படிச்ச சில நூல்கள். சைவ சித்தாந்தத்துல குறிப்பாக இதுக்கு உதவியது திருமந்திரம். என்னமோ பெரிய தத்துவநூல் மாதிரி கொண்டாடப்படும் இந்நூல் வெறும் இறையியல் நூல் தான் (theology not philosophy) என்று அதில் வரும் பாடல்கள் கொண்டே நிறுவுகிறார் ஆசிரியர். அது சரி, கண்ணதாசனை தத்துவஞானியா பாக்குற சமூகம் தானே நம்ம😑
4. தமிழ் மொழியின் மேல தமிழ் கற்ற அனைவருக்குமே ஒரு செருக்கு இருக்கும். ஆனால் அதோட அழுக்கு நிறைந்த சாதிய வரலாற்றைப் பார்த்தோமானால், இந்தப் பெருமையும் தேவையில்லாத ஆணிதான்னு புரிஞ்சுரும். சங்க இலக்கியங்கள் எப்படி பார்ப்பனிய உரைகளால் பொருள் கொள்ளப்பட்டன, சமயப் பாடல்கள் எப்படி உள்ளூர வைதிக மதத்தை ஆதரிச்சும், பௌத்தம் சமணம் மாதிரியான தர்க்கம் சார்ந்த (logical) மதங்களை அடிச்சும் பேசின என்றும் பார்க்கிறோம். அது தவிர இமயம், யவனர், அரேபிய வணிகம் என்று இருந்த தமிழ்ச்சங்க இலக்கியம், கொஞ்ச கொஞ்சமா பெரிய புராணம், ராமாயணம்ன்னு சீரழிந்து கடைசியில் தல புராணத்தில் இருந்து சுய சாதிப் புகழ் பாடுகிற நூல்கள் வரை பாடியவையாக மாறியது எப்படின்னும் தெரிஞ்சுக்கலாம்.
இந்த சாதிய வரலாற்று அலைய எதிர்த்து நின்றவங்களையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்; இலக்கியத்துல, வழிபாட்டுல இருக்க பொய் புரட்டுகளை அம்பலம் செய்தது தானே சித்தர் பாடல்கள் என்பது!
அரசர் எப்படி இருந்தார், என்ன போர் புரிந்தார்ன்னு படிப்பது வரலாற்று பெருமைக்கு உரியதல்ல. அந்த காலத்து மக்களின் வாழ்க்கைத் தரம் தான் நாம் பார்க்க வேண்டிய ஒன்று. இந்நூல் ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா எடுக்கும் நிகழ்வுக்கு ஆட்டின் விடுகிற, சோழர் பாண்டியர் பல்லவர்ன்னு சொன்னாலே ஆர்காஸம் அடையிறவங்களுக்கு கிப்ட் பண்ண வேண்டிய நூல். ஆதாரத்தோடு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை அடித்துச் சொல்வதால், referenceக்கு ஏற்ற நூலாகவும் இது அமையும்!
நூல்: கோவில் நிலம் சாதி ஆசிரியர்: பொ.வேல்சாமி காலச்சுவடு பதிப்பகம்
Great book! Illuminating read on how brahmins grew powerful with uc caste hindus, both of them legitimizing each other, and continue doing so.
It touches 'Orgin of politics' and especially in மருத நிலம். How did a certain group gain legitimacy to be rulers? Where from a particular group derive their legitimacy? The answer is simple. We know the mechanism. Must read.
இத்தனை மேற்கோள்களை கொண்டு வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கமுயலும் நூலை நான் இதுவரை வாசித்ததில்லை. தற்பெருமைக்காக திரித்துப் பேசப்படும் ராஜ்ஜியங்கள், அரசர்கள், அவர்கள் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட ஆகமவிதிப்படியான கோவில்கள், பெரும் ஏற்றத்தாழ்வோடு கொடையாக பிராமணர்களுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள் பின் அவை அரசர்களுக்கே சவாலான சிவில் முறையான திகழ்ந்தது என இந்த நூல் என்னுள் எழுப்பிய கேள்விகள், மாற்றங்கள் ஏராளம்.
If you want to learn History of Tamil Nadu in real sense as to what had happened and how, then Po Velsamy is one such author to follow. His articles are results of hos great efforts and learning which he has carried out for several years.