மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும். தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு ‘மரப்பசு’. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு ‘மரப்பசு’. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ‘மரப்பசு’. பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள். நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் சொன்னால் “மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாக” இருக்கும் தனித்துவம் கொண்டவள்.
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.
His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.
பெண்களை அடிமைப்படுத்தும் சம்பிரதாயங்கள், கம்யூனிசம் பேசும் நண்பர்களின் சேர்க்கை, சீராளிக்கு நடந்த கொடூரம் இன்ன பிற சம்பவங்களால் திருமணத்தை வெறுத்து கோபாலியின் தவறான வழிகாட்டலாலும் "தீண்டும் புரட்சி" செய்யும் எண்ணத்தாலும் (?) உறவுகளை உதறிவிட்டு தாசி வாழ்க்கை மேற்கொள்ளும் அம்மணி என்கிற பிராமணப் பெண்ணின் வாழ்க்கையையும் அவள் சந்திக்கும் நபர்களையும் விவரிக்கிறது மரப்பசு. தி.ஜா அவர்களின் கதை சொல்லும் பாணியும் மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய எளிமையான இயல்பான விவரணங்கள் அழகு. மார்க்சியத்தை நியாயப்படுத்திக் கொண்டு மார்க்ஸியம் பேசும் அம்மணியின் தோழிகளின் போலிவேடத்தை அம்மணியூடாகவும் அம்மணியின் போலிச் சீர்திருத்தவாதத்தை அம்மணியின் பெரியப்பா மற்றும் இறுதி வரிகளூடாகவும் காட்டிய விதம், க்ரைம் நாவல்களை மாத்திரம் வாசிக்கும் பெரியப்பா தனது வாசிப்புப் பழக்கத்தை நியாயப்படுத்திய விதம், காட்டான் கோபாலய்யரின் ஈனச்செயலூடாக ஒரு சிறு வதந்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றது என்று எடுத்துக்காட்டிய விதம், பெரியப்பாவின் கோபத்தை அன்பின் வெளிப்பாடு என அம்மணி நியாயப்படுத்தும் இடம், மரப்பசு என்ற பெயருக்கு கூறப்பட்ட விளக்கம் என ரசித்து மகிழ்ந்தவை பல.எனினும் பாத்திரப் படைப்பில் குறிப்பாக பிரதான பாத்திரங்களான அம்மணி, கோபாலி ஆகிய பாத்திரங்களின் படைப்பில் பல ஓட்டைகளை காண முடிந்தது. பாத்திரம் வித்தியாசமானது மட்டுமன்றி சிக்கலானாதும் கூட. திருமணம் செய்யாது சுதந்திரமாக வாழ்வதற்கும் தாசி வாழ்க்கைக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியை சர்வசாதாரணமாக கடப்பது, கோபாலியுடன் நல்லுறவைப் பேணிக் கொண்டு வெறும் பாலியல் இச்சைக்காக தன்னை தேடிவருபவர்களிடம், அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்ட பிறகும் சாதாரணமாக உறவு வைத்துக் கொள்வது. எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் இருந்தவள் சட்டு சட்டென்று உறவுகளை தூக்கி எறிவது....இப்படி குழப்பங்களின் மீது படைக்கப்பட்டிருக்கிறது. நன்கு படித்த அறிவாளியான ஒரு பெண் புரூஸ் வரும் வரை எதிர்காலம் பற்றி ஏதும் சிந்திக்காது இருப்பதும் நூறு ஆண்டு வாழ்ந்த பெண்ணின் அனுபவம் தனக்கிருப்பதாக கருதும், பிடிவாதம் மிக்க அம்மணி மரகதத்தை பார்த்ததும் தன்னை மாற்றிக்கொள்வதும் பொருத்தமானதாக இல்லை என்பது என் எண்ணம். கோபாலியை அம்மணி மீது உயிரையே வைத்திருப்பவராக சித்தரித்து விட்டு இறுதியில் கோபாலிக்கு அம்மணி மீது இருந்தது வெறும் பால் கவர்ச்சியோ என்று ஐயுறும் வகையில் கதையை நிறைவு செய்வதும் அம்மணி தன்னுடையவளாக மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்பும் கோபாலியே அவளை தேவதாசியாக மாறச்சொல்வதும் சபல புத்தியுடையோருக்கு அறிமுகப்படுத்தி வைப்பதும் சற்று இடிக்கின்றது. காரணமேயின்றி தேவதாசியாக மாறும் அம்மணி ஒரு விதிவிலக்கு, அவளுக்காக எதுவும் செய்யத் துணிந்த பட்டாபி இன்னொரு விதிவிலக்கு, சபல புத்தியை பொறுத்தவரை கோபாலியும் ஒரு அசாதாரணமே.இப்படி மூன்று அசாதாரணமான துருவங்கள் கதையின் மிக முக்கியமான பாத்திரங்களாக அமைந்தமை சற்று மிகைப்படுத்தப்பட்டது போல் தோன்றியது.
மொழியை கூர் தீட்டி ஆயுதமாக நெஞ்சில் குத்தி உயிரை ஊடுருவி ஆன்மாவை அடையும் எழுத்துநடையில், அம்மிணியின் வாழ்க்கையை, தேடலை,உணர்வுகளை வெறும் சொற்களாக அல்லாமல் உயிருள்ள மன ஓவியங்களாக, உணர்ச்சிகளில் பட்டுத் தெறிக்கும் வாழ்வானுபவங்களாக தி.ஜாவின் மரப்பசு விரிகிறது. அம்மிணியின் செயல்களில் பொதிந்த உணர்ச்சிகளில், அவள் தனக்கு சொல்லிக்கொள்ளும் காரணங்களில், அவள் மற்றவர்களுக்கு சொல்லும் பாடங்களில், கோபாலியின் பாடல்களில், பட்டாபியின் கேள்விகளில், மனித மனங்களின் நுணுக்கமான விவரணைகளில் இப்புத்தகம் தனித்து நிற்கிறது.
ஒரு சிறந்த புதினம் படிக்கும்பொழுது மனவெழுச்சியையும், படித்து முடித்தவுடன் ஒரு சுய வெறுமையையும் தரவேண்டும். எனக்கு இது தி.ஜாவின் முதல் புதினம். அம்மிணியையும், கோபாலியையும், பட்டாபியையும், குஞ்சாளியையும், இறுதியில் வரும் மரப்பசுவையும் தாண்டி வர எனக்கு சில காலம் பிடிக்கும். உங்களிடம் மீண்டும் வருவேன் தி.ஜா.
Marappasu (wooden cow) is one on which no one has any expectations or a numb cow. This book written way back in 70s must have been an absolute shocker with it's controversial philosophy. This was 5 stars for me till about 80% and then became 4 stars.
Ammini is a character who is tough to describe despite hearing her thoughts and witnessing all her actions. When as a child she witnesses her neighbour (Kandu Mama) tonsure his widow daughter, she decides she will not marry. She loves to physically touch people and is outspoken. She soon leaves her village to live with her aunt who treats her like a friend.
She meets an old singer Gopali who lusts after her but knows he can't control her. When she has to decide between studying, working or marrying - Gopali proposes she live in Chennai in her own house as his "Brahmana daasi". She accepts and pursues music, dance and conversations on Marxism an communism. In this situation Pattabi, Gopali's nephew is asked to stay at her house leading to mutual attraction. But Pattabi, in guilt, decides to move out of the house.
After Pattabi leaves, she becomes more bohemian in both ideas and actions. Describing her actions without any judgement is true test for a perceived feminist. There is a critical juncture after many lives are touched mutually like Maragatham and Bruce ( a hat-tip to the Vietnamese war reference). During this self discovery journey of 4 days, as she touches 38, she realises her age and decides she can't live like this forever.
This is where the book let me down. I can live with inconsistency in actions or an evolving thought process, but this book also changed the character's nature. Relatable to Balachandar's women - the book is a man's view of keeping her an enigma.
I discovered Marappasu ('Wooden Cow') by T. Janakiraman through my friend's recommendation. I got it last week and read in during the past few days.
'Marappasu' is the story of a young woman, who is a rebel. She refuses to follow tradition, refuses to be constrained by the rules of society. She refuses to be attached to anyone or owned by anyone. James Joyce says in 'A Portrait of the Artist as a Young Man' that the three things that constrain and enslave a person are the family, the church (or religion), and the state. I'll also add one's job to this list, as the constraints forced by one's employment probably have a bigger influence on a person today, than religion or the state. Our rebellious heroine feels exactly like this. She likes to be free, and she does everything to be free. She is ready to take the good and bad that comes with that. On the way, she discovers people who are genuinely kind and innocent, which surprises her. She also changes the lives of the some of the people she touches, in fundamental ways. What happens to this woman is the rest of the story.
The main character in the story, our rebellious heroine, Ammani, is a very fascinating person. I sometimes found myself cheering for her, I sometimes didn't agree with what she was saying or doing. But I could relate to her way of thinking, to be free and live life the way she wanted without the constraints imposed by society. This book was written more than fifty years back, but it still feels fresh and contemporary. So much has changed in our world in the past fifty years, but Ammani still feels like a rebel, even now. I think people would have found her uncomfortable even now, after they've talked to her.
There were so many beautiful and thought-provoking passages in the story, and I want to share some of them here, but the effort it will take to translate them intimidates me, and so I'll just keep quiet. I'll just say that the book is filled with amazing passages and conversations.
'Marappasu' has been translated into English as 'Wooden Cow' by Lakshmi Kannan. In case you'd like to read it in translation.
This is my fourth T. Janakiraman book, and with each book, things keep getting better and better and more and more rebellious 😊 All Janakiraman's stories feature strong women characters and they are amazing!
Have you read 'Marappasu' / 'Wooden Cow'? What do you think about it?
This is a fantastic story where a life of girl called Ammani is defined from her childhood. She lives a carefree life because she wants to be loved by everyone and she want to love everyone.
Such a bold content in early 19th century. Just thinking how much stir this book would have created those times.
I was literally thinking why author names this book as MARAPASU
THEN CAME THE FANTASTIC MEANING, WHICH CAN BE APPLIED TO ANYONES LIFE.
It's like being a living cow one can be a wooden cow. Bec living cow will be used for milk, it will be worshipped but once it gets aged none will respect it .Even it dies in road the owner doesn't care to give it a proper burial
But if its a wooden cow it can be happily in showcase as decorative material and everyone will admire it's beauty.
The way this novel challenged my perceptions absolutely blew my mind; I was totally captivated by the unforgettable, fiercely independent characters who lived life on their own terms.
"மரப்பசு"-தி.ஜானகிராமன் ******************** 1975ல் வெளிவந்த நாவல், அதற்குமுன் 1972-73இல் கணையாழியில் வெளி வந்த தொடர். முன்னுரை ஏதும் இல்லை.
அன்னவாசல் எனும் ஆற்றுபடுகை கிராமத்தில் வசிக்கும் அன்னம் (அ ) அம்மணி எனும் சிறுமி, அவளது ஒவ்வொரு பருவத்திலும்(அதாவது 40வயது வரை), கும்பகோணம், சென்னை-மாம்பலம் திருவல்லிக்கேணி ,ஈரான், ரோம் , பாரிஸ், லண்டன் என இவ்வுலகில் சந்திக்கும் பல்வேறு மனிதர்களுடனான நிகழ்வுகளை சொல்லி செல்லும் கதை.
அக்கால தமிழ் பெண்களுக்கே உரித்தான சமுதாய கட்டுப்பாட்டு சங்கிலிகளை உடைத்து, கிட்டத்தட்ட தான்தோன்றியாக சுற்றும் பெண்ணாக, அம்மணி காட்டப்பட்டிருக்கிறாள். அவளுக்கு இழவு வீட்டில் தாளமுடியாத சிரிப்பு வரும், தன் வயதையொத்த விதவையையும் அவர்கள் ஏற்ற கோலத்தை கண்டு கோபம் கொள்வாள், அவள் கனவில் லெனின், டாஸ்டாவ்ஸ்க்கி, நேரு வருவார்கள். லெனின்,மார்க்ஸ்,சேகுவேராவை பின்பற்றுபவள், சமத்துவமும் புரட்சியும் பேசுவாள், உலகில் உள்ள அனைவரையும், அதாவது பெண்கள்,ஆண்கள் குழந்தைகள் கிழம் என அனைவரையும் தொட்டு அணைப்பதின் மூலம் அன்பு மற்றும் அவர்களை திறக்கசெய்வாள் .
கதையை சற்றே விரிவாக,பார்த்தால், கும்பகோணத்தில் பெரியப்பா வீட்டில் தங்கி படிக்கும் அம்மணியை, அவளின் ஒவ்வாத செயல்களால் பெற்ற தாய் கைவிட, பெரியம்மா சுவீகரித்து கொள்கிறாள். பெரியம்மா மகளின் திருமணத்திற்கு கோபாலி வித்வானிடம் பேசி, அவரது கச்சேரி ஏற்பாடு செய்தாள். 47வயதான கோபாலியுடன் சரச கதையாடல் புரியம்படியான பழக்கம் ஏற்படுகிறது. தன்னை விட 2 வயது அதிகமுள்ள ஒரு பெண்ணின் தந்தையான கோபாலியால்.தனியாக விடெடுத்து வைப்பாட்டியக்கப்படுகிறாள், அவளது விருப்பத்தின் பேரிலேயே. அவளுக்கு கோபாலி மூலம் பல நண்பர்கள் கிடைக்கிறார்கள், அதே வீட்டில் பேச்சு-துணைவர்களாக வந்து செல்வார்கள். பட்டாபி என்பவன் பாலிடெக்னிக் படிக்கும் கோபாலியின் சொந்தம், அம்மணி. இருக்கும் வீட்டில் ஒத்தாசைக்கு தங்க வைக்கபடுகிறான். அவனையும் அம்மணி விரும்புகிறாள் பல கச்சேரிகளுக்கு இந்தியா முழுதும் பயணப்படும் கோபாலியுடன் அம்மணியும் பயணம் புரிகிறாள். ஸ்டிராப்போர்டு(லண்டன்) ப்ரூஸ் உடனான தொடர்பிற்கு பின், சென்னையில், வேலையாள் மரகதம்-பச்சையப்பனுடன், பட்டாபிக்கு காத்திருப்பதாக முடிகிறது கதை.
இடையே, ரயிலில் பென்னட் குடும்பத்துடனான உரையாடல்கள், மும்பை நடராஜு உடனான கோபாலியின் உரையாடல்கள், வேலையாள் பச்சையப்பன்-மரகதம் உடனான உரையாடல்கள் ரசிக்கும்படியும், முதிர்ச்சித்தன்மையும் கொண்டதாக இருக்கிறது.
கணவன்-மனைவி-குடும்பம் என்ற கூட்டுகள் அடங்காதவள், கற்பு புனிதம் போன்ற இத்யாயத்திகளுக்குள் சிக்காத பசு அவள். பால் தராது, வயது ஆகாது, மரணித்தாலும் யாரும் கேட்காத மரப்பசு அவள்.
தி. ஜா வின் அம்மணி போன்ற பெண்ணை பார்ப்பது மிக அரிது. மிகவும் வித்யாசமான பெண். மிருகங்கள் கூட இப்பிடி ஒரு வாழ்க்கை வாழுமா என்று சந்தேகம்தான். அம்மணிக்கு சரி தவறு என்று கிடையாது. எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். கல்யாணம் என்றால் ஆகாது. கோபம் வந்தால் சிரிப்பு, துக்கம் வந்தால் சிரிப்பு, எது நடந்தாலும் சிரிப்பு. எல்லோரையும் தொட்டு பார்க்க வேண்டும், எல்லோரையும் கட்டியணைக்க வேண்டும். மார்க்சிசம் , கம்யூனிசம் படித்ததால் கடவுள் மேல் நம்பிக்கை இல்லை.அன்னவாசலில் பள்ளி படிப்பு , பிறகு பெரியப்பா-பெரியம்மா வீட்டில் இருந்து கொண்டு பி.எ ஹிஸ்டரி. ஒரு ஏவுகணை ஆனது எப்படி வானில் செல்லும்போது ஒவ்வொரு பாகமாக கழட்டிவிட்டு செல்கிறதோ அதே மாதிரி அம்மணியும் ஒவ்வொரு பருவதிலும் தன்னுடைய சொந்தங்களை கழட்டிவிட்டுக்கொன்றே செல்கிறாள். கோபாலி என்கிற 40 வயது பாட்டு விதவான் மேல் முதல் முதலாய் காதல் வயப்படுகிறாள். கோபாலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கிறது. இப்போது இருக்கும் பாப் ஸ்டார்ஸ்க்கு எப்பிடி பெண் ரசிகைகள் இருக்கிறார்களோ அதே மாதிரி கோபாலி கச்சேரிக்கும் ரசிகைகள் உண்டு.ஆகையால் கோபாலிக்கு பெண் சபலமும் உண்டு. அம்மணியை மேற்படிப்பு படிக்க வைக்கிறேன் பாட்டும் படிக்கவைக்கிறேன் என்று மெட்ராஸில் ஒரு வீட்டில் குடி வைக்கிறார் கோபாலி. அங்கிருந்து மாறுகிறது அம்மணியின் வாழ்க்கை. அவள் வாழ நினைப்பதை வாழ்கிறாள். இந்த நாவலில் எல்லாம் வெளிப்படையாக சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் அம்மணி ஒரு ப்ராமண குளத்தில் பிறந்த ஒரு வேசியாக வாழ்கிறாள். மனிதர்களை அம்மணி போன்று நேசிக்கவும் முடியாது, உதறித்தள்ளவும் முடியாது. அனால் அப்படிப்பட்ட அம்மணி ஒரே ஒருவன் மீது மட்டும் தன்னை அறியாமல் ஒரு ஓரத்தில் காதல் கொள்கிறாள், காதல் என்று சொல்லமுடியாது அனால் காதல்தான், அப்பிடி ஒரு விசித்திரமான பீலிங் என்றுதான் சொல்லமுடியும். விசித்திரமான பெண்களுக்கு மட்டும் வரக்கூடிய பீலிங். அந்த அம்மணி மனதை கொள்ளையடித்தவன் பட்டாபி என்ற பையன். ஊர் ஊராக சுத்துகிறாள். அவள் போகும் இடங்களில் இருக்கும் மனிதர்களையெல்லாம் தன் இஷ்டப்படி கட்டியணைத்துக்கொள்கிறாள். கடைசியில் எங்கு போனலும் பட்டாபி போல இல்லை என்று தெரிந்து அவனுக்காக உருகி கடிதம் எழுதுகிற மாதிரி கதை முடிகிறது. முடிவாக இக்கதை feminism பேசுகிறது என்று சொல்ல முடியாது , அதையெல்லாம் தாண்டி அம்மணியின் மனது எதையோ நோக்கி நகர்கிறது. 2050 ஆம் வருடத்தில் அம்மணி போல பெண்களை பார்க்க நேரிடலாம் என்றுதான் சொல்லலாம்.
அம்மணியின் வாழ்க்கை பயணம் என்று சொல்லலாம். சிறு வயதில் பார்க்கும் ஒரு பெண்ணின் கணவனின் மரணம் அதன் மூலம் அந்த பெண்ணுக்கு ஏற்படும் நிராகரிப்புகள் மிக இளவயதிலேயே பெரும் காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதன்பின் தான் அனைவரையும் ஸ்பரிசம் தொட்டு வாழவிரும்புகிறாள். கதையில் வரும் கண்டு என்ற அத்வைதியின் வாயிலாக வாசகனுக்கு உணரும் விசயம் கண்டு வெறும் படித்தமேதை ஆனால் அம்மணி அதை அனுபத்தில் பார்க்க ஆசைபடுகிறாள்போலும். ஆனால் சமுகத்தில் ஒரு ஆண் இப்படி இருக்க நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தியதுபோல் பெண்களுக்கு இல்லை. இந்த போதாமையினால் யார் பார்த்தாலும் அம்மணியிடம் வெறும் உடல்வேட்கையை மட்டும் தனித்துகொள்கிறார்கள். அம்மணிக்கும் அப்படி இருக்கபிடிக்க இருந்ததோ என்னவோ. கடைசியில் மரகதம் மற்றும் புரூஸ் கதாப���்திரம் அம்மணியை அவளின் வாழ்க்கைப்பற்றி ஒரு மறுவரை செய்ய நிர்பந்திக்கின்றன எனலாம்.
கதையில் வரும் கோபாலி கதாபாத்திரம் ஒரு கலைஞனின் மன நிலையில் இருக்கும் தத்தளிப்புகளை அழகாக வெளிபடுத்தியுள்ளது. ஆனால் அவர் அம்மணி என்ற தன் மகளை ஒத்த பெண்ணை ஒரு வைப்பாக வைத்துகொள்வது என்பது அவரின் ஒரு மிகு கற்பனையின் பகுதி எனலாம். எங்கோ கேள்விப்பட்ட ஒரு செட்டியாரின் வாழ்வுபோல தன் வாழ்வு வேண்டும் என்பதற்காக இப்படி இருக்கவேண்டுமா என்ன.... மற்றபடி கதையில் வரும் அம்மா பெரியம்மா பெரியப்பா நிறைய கதாபத்திரங்கள் அங்கங்கே நின்று விடுகிறார்கள்.
அம்மணி கிட்டதட்ட 301 பேருடன் உறவு வைத்துகொள்கிறாள் என்பதெல்லாம் என்ன கணக்கு என்று தெரியவில்லை இதையெல்லாம் தெரிந்தும் கோபாலியால் அம்மணியை விட முடியவில்லை. பட்டாபி அம்மணி கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று அம்மணியின் 23 வயதில் வாக்கு கொடுக்கிறான். அம்மணி 39 வயதில் பட்டாபிக்கு கடிதம் எழுதிகிறாள்
பட்டாபி வந்தானா... அம்மணிக்கு என்ன நடந்தது... யாருக்கு தெரியும். ஆனால் பச்சையப்பனும் மரகதமும் கூட இருந்தார்கள்...
கதையின் பலம் இவ்வளவு பாலியல் சிக்கல்கள் நிறைந்த கதையையும் எப்படி முகம் சுளிக்காமல் வாசகனை படிக்க வைக்கலாம் என்பதுதான்.
கதையின் நடை மிக வித்தியாசமாக இருந்தது. இது நினைவு குறிப்பா இல்லை கதையின் இடத்தில் இருக்கிறோமா என்பதெல்லாம் குறிப்பிட்டு காட்டவில்லை.
வழக்கம்போல் தி. ஜா வின் பெண் கதாபத்திரங்கள்மேல் தீராத காதல் கொண்டு இன்னும் ஒரு கோபாலியாய் விடைபெற வேண்டியுள்ளது...
குடும்பம் மற்றும் திருமணம் சார்ந்த ஒழுக்கத்தையும் சமூக கட்டமைப்புகளையும் 47 ஆண்டுகளுக்கு முன்னமே உடைத்துப்போட்ட ஒரு நாவல் இது. பழமையையும் சம்பிரதாயங்களையும் கொண்ட சமூகத்தில் சமூக விதிகளில் மாற்றங்களையும் புதுமைகளையும் கொண்டு வந்த மிகச் சிறந்த படைப்பு. தமிழில் இதுவரை வந்துள்ள பெண்ணிய புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன்.
கதையின் நாயகி அம்மணி, குழந்தை பருவத்தில் தொடங்கி பதின்பருவம் வரையில் திருமணத்தை தவிர்க்க தேடலுடன் அன்பின் மொத்த உருவமாய் பயணிக்கிறாள். திருமணம் என்ற கட்டமைப்பில் இருந்து விடுபட இருபதாவது வயதில் கோபாலி என்பவரை கண்டெடுத்தாள். மேலும் பட்டாபி, பச்சையப்பன், மரகதம், ப்ரூஸ் ஆகியோருடன் பயணப்படும் அவளின் வாழ்வு தலை வெளுக்கும் வயதில் புது உணர்வு பெறுகிறாள். தமிழ் நாவல்களில் மறக்க முடியாத ஒரு பாத்திரம் அம்மணி.
தி.ஜா அவர்கள் கதை மாந்தர்களின் உருவம் பற்றி வர்ணிப்பதை போல வேறு எந்த எழுத்தாளரிடமும் இந்த அளவு எதிர்பார்க்க முடியாது. பாத்திரங்களை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அவரின் எழுத்தால் அனைத்து பாத்திரங்களும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகிறார்கள். நம் எல்லோர் மனதிலும் அம்மணி போன்ற சுதந்திரமான ஒரு பெண் கற்பனையில் இருந்தாலும் யதார்த்தத்தை மீறிய ஒரு பாத்திரமாகவே அம்மணியை நினைக்கத் தோன்றுகிறது. மரபுகளை மீறினாலும் மனிதநேயம் மிக்க அம்மணி தன்னை மரப்பசு என்று சொல்லி கொள்வது நெஞ்சை உருக்குகிறது.
கமலஹாசன் அவர்கள் பரிந்துரைத்த இந்த புத்தகத்தை ஆர்வமும் நேரமும் இருந்தால் கண்டிப்பாக வாசிக்கவும். தொடர்ந்து வாசிப்போம்.
Here’s an excerpt from Marapasu which you can see take its form in Nenjukulle song from Kadal..
(Conversation between Pattabhi and Ammani when they first meet):
(Ammani asks Pattabhi’s interests in music and dance, and here’s what Pattabhi replies):
“Why do people listen to jalatarangam, but not to the sounds of a cycle bell? ….. They listen to a flute, but not to the cry of an eagle….
….
If there’s a dance performance, people go and watch. Why don’t they care to watch someone walking down to the rice mill with a sack of rice on his head, or someone walking to the vegetable market with a basket, or someone balancing pots of water on her head?”
You can see these lines come to second life in the first minute of this song from Kadal:
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அம்மணியை எப்படி தி.ஜ அவர்களால் படைக்க முடிந்தது என்பது பெரும் வியப்பைத் தருகிறது. உண்மையிலேயே சுதந்திரமானவளாக தன் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதில் முடிவெடுக்கும் உரிமையை முழுதும் தானே கொண்டவளாக இருக்கிறாள் அம்மணி. கற்பிதங்களையும் பொதுப் புத்தியையும் தகர்க்கிறாள். அன்பால் உலகை நிறைக்கிறாள் அம்மணி. தன்னை வளர்த்த பெற்றோரை விட்டுச் செல்கிறாள் இத்தனை ஆண்டுகள் உடனிருந்த கோபாலியை விட்டும் செல்கிறாள் ஆனால் ஒருபோதும் அவள் தன் சுயத்தை விட்டுவிடவில்லை. இவ்வுலகில் உள்ள எல்லோர் கைகளையும் தொட விரும்புகிறாள் அதன் மூலமே மனிதரை அறிய முடியும் என்கிறாள். கை கொடுக்காது கைகளைக் கூப்புவோரைக் கண்டு சினங்கொள்கிறாள். இறுதியில் கோபாலியை விட்டுச் செல்லும் போது கூட ஏன் அப்படிச் செய்கிறாள் எனும் கேள்வி வந்தது எனக்கு. பின்னர் தான் புரிந்தது விடை மிக எளிமையானது என்று. அஃது அவளால் அப்படிப் போக முடியும் அதனால் போகிறாள். இவள் தான் அம்மணி.
This is my first Thi.Janakiraman's book. It's quite challenging for me. The pace is really slow. Probably the slowest in modern Tamil literature. I liked the way he depicts the Brahmin society. Also, it's quite interesting to see a protagonist (a girl from a conservative family ) turning into a communist. Guess it's one of the early Tamil novels which had expressed feminism.
வழக்கமாக இயற்கை வர்ணனை(சுவர்க்கோழி)வார்த்தை ஜாலம், சங்கீத ரசனை ,மற்றும் வரும் கதாபாத்திரங்களை எவ்வளவு அழகாக காண்பிக்கமுடியுமோ அவ்வளவு நேர்த்தி ,எல்லாத்தையும் தாண்டி ஏறத்தாழ 50 வருடத்திற்கு முன்பே முற்போக்கான தொலைநோக்கு பார்வையுடன் தன் கற்பனை வளத்தை அருவி போல் காட்டியிருக்கிறார் ஐயா.தி.ஜா..