Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
சேர மன்னன் ரவிவர்மன், பாண்டிய வீரன் இளவழுதி மற்றும் புலவர் உதவியுடன் வீரபாண்டியனையும் தமிழகத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ முயன்ற குஸ்ரூ கானையும் எங்ஙனம் வெற்றி கொள்கின்றான் என்பதை விவரிக்கின்றது சேரன் செல்வி நாவல். திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான கதை என்றாலும் கதாநாயகன், கதாநாயகி, மன்னன் ஆகிய கதாபாத்திரங்களின் பாத்திரப் படைப்பு சாண்டில்யனின் ஏனைய நாவல்களில் வரும் முக்கிய பாத்திரங்களை ஒத்திருந்தது 😒. போர் வர்ணனை, இளவழுதி - அஜ்மல் கான் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் போர்த்திட்டங்களை மாற்றிக் கொள்ளும் விதம் அழகு. பெண் வர்ணனை, காதற் காட்சிகள் அதே பழைய பாணியில் அமைந்து எரிச்சலூட்டின 👎. பொழுதுபோக்குக்காக ஒருமுறை வாசிக்கலாம்.
Another master piece,,,kilji- raviverman kulssekaran link is not known earlier . Author with his own style brought Veerapandian & sundarapandian. The new take away is , to go and check at Poonamallee Perumal temple about the inscription about the Cheran king. 👍👍
சேர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை சேரன் செல்வி. இந்த கதையோடு சேர்த்து ராஜயோகம் நிலமங்கை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் நடப்பதை என்பதால் மூன்று கதைகளையும் தொடர்ச்சி போல் எழுதி இருக்கிறார் இது மிகவும் பிரமிக்க வைக்கிறது.
சேரன் செல்வி இந்த கதை 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது வடக்கே அலாவுதீன் கில்ஜி தில்லியை ஆண்டு கொண்டு இருந்த சமயத்தில் நடக்கிறது மாலிக் கபூர் பாண்டிய நாட்டை அழித்து விட்டு தில்லி சென்று விட்டான் இருந்தாலும் அதன் பின்னர் ஒரு வலுவான இராஜ்ஜியத்தை உருவாக்க முயல்கிறான் குஸ்ரூகான் அவனை எப்படி எதிர்கொண்டு சேர மன்னன் வெல்லுகிறான் என்பது வரலாறு பாண்டிய நாட்டின் வீரன் சேரனுடன் இனைந்து பாண்டியனையும் சேரன் மகளையும் வெல்லுவதே சேரன் செல்வி கதை இதில் எந்த அளவு உண்மை எந்த அளவிற்கு கற்பனை என்று தெரியவில்லை ஆனால் இறுதியில் ரவிவர்மன் போரில் வென்று இருந்தாலும் குஸ்ரூகான் தில்லிக்கே சென்று இருந்தாலும் மீண்டும் குஸ்ரூகான் தில்லியில் இருந்து பெரும் படை உடன் வந்து சேர மன்னனை சந்திக்கிறான் இதில் சேர மன்னர் தோல்வியுற்றார் இது சேரன் செல்வியில் கிடையாது வரலாற்றில் உண்டு சாண்டில்யன் கூட இறுதியில் மீண்டும் குஸ்ரூகான் தில்லியில் இருந்து வருவான் என்று சேர மன்னரே குறிபீடுவது அமைத்து இருக்கிறார்
வரலாறு வீரம் காதல் ஆகிய உணர்ச்சிகளை இனைத்து எழுதி இருக்கிறார் ஆனால் எப்போதும் போல சாண்டில்யன் காம வர்ணனையை வெறுப்பை ஏற்படுத்துகிறது ஆனால் மிகுந்த அருமையான கதை சாண்டில்யன் இதை ஒரு குறு நாவலாக கூட எழுதி இருக்கலாம் எதற்காக இத்தனை நீளமாக எழுதினார் என்று தெரியவில்லை இந்த கதை விட சாண்டில்யன் சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார் அதனால் சாண்டில்யன் கதைகளை படிக்க வில்லை என்றால் இந்த கதை முதலாக படித்து விடுங்கள் முதல் முறை படிக்கும் போது அஹா என்று இருக்கும் கடல் புறா யவனராணி கன்னிமாடம் ஆகியவை படித்த இந்த கதை படித்தால் வெறுப்பாக இருக்கும்
Another masterpiece from சாண்டில்யன் Sir that's very interesting & thrilling to read. Just that last 2 chapters went at thunder speed. But this is way better than most other multi book novels
This entire review has been hidden because of spoilers.