செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்து தன்னை நோக்கி வாளும் கையுமாக வந்த பத்து வீரர்களையோ சிறிதளவும் லட்சியம் செய்யாமலும், கையிலேந்திய சிலையையோ, அத்துடன் இணைந்து நின்ற பாம்பு ரத்தமும் புற்று மண்ணும் ஒட்டிய சிலையையும் அந்த அழகியையும் மாறி மாறி நோக்கினான் சில விநாடிகள். அப்படி அவன் அசட்டையுடன் காலதாமதம் செய்ததால் அவனை நெருங்கிவிட்ட பத்துக் காவலரும் தங்கள் வாட்களின் நுனிகள் அவன் உடலில் படும்படி செய்துங்கூட அவன் நின்ற நிலையிலிருந்து அகலாமல் இடது கையிலிருந்த சிலையிலிருந்து தனது குறுவாளை வலது கையால் எடுத்து ப
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்திருந்தாலும் கண்ணழகியை அப்படியே ஒத்திருக்கும் மோகனச்சிலை, புலி மச்சம், சற்றும் தவறாத வான சாஸ்திரம், தாணு ரவியின் செயற்பாடுகள் என நம்பமுடியாத பல விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும் கதையில் வேகமும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமான திருப்பங்களும் இருப்பதால் ஒருமுறை வாசிக்கலாம்.
It was really nice. Eventhough the story is short, I never felt bore while reading this book. And the story narration is really good. This is the first sandilyan book I read, he proved that he is one of the best author in tamil language
First time, சாண்டில்யன் Sir's novel isn't that interesting compared to other novels of his. Perhaps this was written during his early years? Or maybe I've mistaken?
This entire review has been hidden because of spoilers.
சாண்டில்யனின் மோகனச்சிலையின் வேகம் சொல்லற்கரிது! படிக்கும் அத்துணை இதயங்களையும் ஓர் கதாபாத்திரம் கவர்ந்திழுக்கும் என்று தெரிந்தே அந்த கற்பனை கதா பாத்திரத்திற்கு இதயகுமாரன் என்று பெயரிட்டுள்ளார் சாண்டில்யன். ஆரம்பித்த சில நிமிடங்களில் கதையின் வேகம், நம்மை விரைவாக தொற்றிக்கொள்ளும்..
கரூர் என்கிற வஞ்சி மாநகரத்தை இடைகாலச்சோழர்களில் முதல்வன் விஜயாலயன் கைப்பற்றிய விஷயத்தையே மிக சாதாரணமான ஒரு நிகழ்வில் மிக எளிமையா சொல்லி, வாசிப்பவர்களை "ஆஹ் !" என சொல்ல வைத்துவிடுவார்... கி.பி 9ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழ வம்சத்தை நிலைநிறுத்த தொடங்கும் காலகட்டம் தான் கதைக்களம். கண்ணழகி, அச்சுத பேரரையர், மாரவேள், இளையவேள், ஸ்தாணு ரவி, சங்கரநாராயணன், பெரும்பிடுகு முத்தரையர், மாறன் பரமேஸ்வரன் மற்றும் விஜயன் (இதயகுமாரனின் புரவி) இவைகள் தாம் முக்கிய பாத்திரங்கள் என்றாலும் ஆதித்யன், விஜயாலயன் மற்றும் பெரும்பிடு முத்தரையர் முக்கியமான வரலாற்று தலைவர்கள்...
கதையின் நகர்வு தொடங்கிய உடனே அடுத்தடுத்த மர்ம முடிச்சுகளை அடுக்கி கொண்டே போவதும், பிறகு முற்பாதியில் சில முடிச்சுகளும், பிற்பாதியில் பல முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டாலும், பெரும்பிடுகு மீண்டும் ஒரு மர்மத்தை கதையின் கடைசி வரை இழுத்து வருகிறார்... நிறைய மர்மங்களை கையாண்டதால் என்னவோ மாரவேல் மற்றும் ஸ்தாணு ரவியின் தொடர்பை விவரமாக சொல்ல மறந்துவிட்டார் ஆசிரியர்.. மாரவேல் சாதாரண படைத்தலைவன் மற்றும் சிற்றரசன், அவனுக்கு சேரரில் புகழ்பெற்ற ஸ்தாணு ரவியின் பழக்கமும், அதுவும் இரத்தின பதக்கங்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம் எப்படி வந்தது என்பது அவிழ்க்கப்படாத ஓர் முடிச்சு...
மற்றபடி மோகனச்சிலையாம் கண்ணழகியை இளஞ்சேட் சென்னி என்ற சோழன் தந்ததால் வடித்ததாய் சொல்லும் சாண்டில்யன், அதே மோகனசிலையை (கண்ணழகி) அவர் எழுத்தால் அங்கம் அங்கமாக வடித்திருக்கிறார்.. மோகனசிலையை படிப்போருக்கு ரசம் சொட்டும் காதல் உரையாடல்களிலும், உடல் கூசும் காதல் சரசங்களையும் சாண்டில்யனின் எழுத்துக்களால் மனக்கண்ணில் பார்ப்பதற்கு ஆண்களாயிருந்தால் ஆர்வமும், பெண்களையிருந்தால் கூச்சமும் வருமென்பதில் சந்தேகமில்லை..
சோழர்கள் முத்தரையர்களை வீழ்த்தி தங்கள் எழுச்சியின் அடித்தளத்தை அமைத்ததில் முக்கிய பங்கு வகிக்கும் இதயவர்மனையும் மோகனச்சிலையான கண்ணழகியையும் இவர்களுக்கு இடையே உண்டாகும் காதலை மயக்கம் தரும் வகையிலும் சுவாரஸ்யமாகவும் கூறியிருக்கிறார்
Good one time read... The story revolves around Vijayalaya Chozha, who promotes the Chozha empire to a strongest Samrajyam !!..War sequences are crisp and short and ended very soon... Giving rating 4!!
It's very intresting historical story telling about vijayalaya chozhan, ahitha chozhan and kalapirar mutharaiyar history ended by vijayalayan and his son aadhitha chozhan.