காஞ்சியை பல்லவ மன்னர்கள் ஆண்ட காஞ்சி மாநகரை மையமாகக் கொண்டுள்ளது. திருத்தணி- வேளஞ்சேரி செப்பேடுகள் கூறும் வம்சாவளியின் அடிப்படையில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் அபராஜிதவர்மனைப் பற்றிய கதை. சமகால சேர சோழ பாண்டியர்களை உள்ளடக்கிய கதை. முப்பெரும் பேரரசுகளின் படைத்தளபதிகளையும் அவ்வவ் நாட்டு இளவரசர்களுடன் இணைந்து கூட்டணிகளை உருவாக்கியிக்கும் அற்புத கதை. பிற்காலப் பெரும் போர்களுக்குச் சமமாகக் கருதப்படும் திருப்புறம்பியம் போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கதை
பாண்டிய முரசுக்கு அப்புறம் ஒரு எதிர்பார்போடு இதை படிக்க ஆரம்பித்தேன். இழுவையா இருக்கிறமாதிரி இருக்கு. இதுதான் அவர் எழுதிய முதல் நாவலாம். அதுனால தான் இப்படி இருக்கோ? எந்த வார்த்தையில் ஒரு அத்தியாயம் முடிகிறதோ அதே வார்த்தையில் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார். சுனாமி பற்றியும் சொல்லியிருக்கிறார். அதைத்தவிர வேறெதுவும் புதுசாயில்லை. அந்த காலத்திலேயே நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தினார்களா? சாண்டில்யனுக்கு போட்டியா இந்நாவலை எழுதியிருப்பார் போலிருக்கு. ஒரே காம நெடி.