நெஞ்சுரமிக்க போராளியின் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் மனௌறுதியும் சற்றும் குலையாமால் மரண தண்டனையை அவல மனநிலையை அதனேயே பதிவாகியிருக்கும் வரலாற்று ஆவணம் இந்நூல்
ஒரு கம்யூனிஸ்ட் போராளி 5-3-1948 முதல் 30-12-1964 வரை தடுப்புக்காவல் சட்டப்படி வேலூர் சிறையில், கொலைக் குற்றவாளியாக மாற்றப்பட்டு கோவை, சேலம், திருவனந்தபுரம், விய்யூர் ஆகிய சிறைகளில், பின், பாதுகாப்பு சட்டப்படி கடலூர் சிறையில் வைக்கப்பட்டு, பல பேருடைய ஆதரவால், மரண தண்டனையிலிருந்து மீண்டு வந்த தன்னுடைய இன்ப,துன்பங் கலந்த வாழ்க்கை அனுபவங்களில் முதல் இரண்டு ஆண்டில் நிகழ்ந்ததை மிகைப்படுத்தாமல் அப்படியே நம்முன் மிகவும் எளிய நடையில் எழுதி வைத்திருக்கிறார்.
ஒரு பதினான்கு அத்தியாயத்தில, தன் கதை, தன் சுயமரியாதைக்கான உண்ணாவிரதம், சிறையில் பீடிகளுக்கு உள்ள மதிப்பு எங்கெங்கெல்லாம் மறைப்பார்கள், தூக்கு தண்டனை கைதி எப்படி தன் கடைசி நாளை எதிர் நோக்குவான் என இன்னும் பல நுணுக்கமான செய்தியோடு நம்மை சந்திக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் போராளி என்பதையும் தாண்டி, ஒரு சாதாரண மனிதன் தான் சிறையில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எப்படி கையாண்டிருக்கிறார், எனவும் பார்க்க தூண்டுகிறது.
அகப்பட்டுக் கொண்டேன்: லாக்கபில் ஒரு பத்தடி நீளமும், ஐந்தடி அங்குலமும், இரவு பகலென வித்தியாசங்கள் இன்றி, கும்மிருட்டில் பாலன் அவர்கள், ஒரு வழக்கில் சந்தேக கைதியாய் அகப்படுகிறார். வழக்கம் போல் போலீஸ்கார்ர்கள் மிரட்டுவதையும், இவர் ஒரு ' கம்யூனிஸ்ட் ' என தெரிந்ததும், இவருடைய பையை அலசி ஆராய்கிறார்கள். புத்தகங்கள் மட்டுமல்லாது பல விடயங்கள் கிடைக்கின்றன. சிறைக்குள் வசதி வேண்டாத போதும், ஒரு மனிதனை, பாலனை ஈக்கள், கொசுக்கள், மூட்டைப் பூச்சிகள், சீலைப் பேன்கள் இவருக்கு அதீத தொல்லை கொடுத்து வரவேற்றன.
இது கொலைச்சோறுதானா: பின், அடுத்த நாள் சூரிய உதயம். ஆனால், பாலன் மட்டும் வெளியே வரமுடியவில்லை, மலங்கழிக்க கூட அனுமதிக்க வில்லை. பின், காலை கடனை கழிக்க துணையாய் ஒரு போலீஸ். இந்த ஆதங்கம் குறைந்து, இவருக்கு ஓர் எடுப்புச் சாப்பாடு கொடுத்து நிறைய கரக்க முயன்றார்கள். இவரோ, ' இது கொலைச்சோறுதானே? என்று கேட்டு, பின் உணவு முடிந்து சித்ரவதை தொடங்கியது. ஏனென்றால், ' தெரியாது ' என்ற பதிலை போலீஸ்காரர்கள் அவரிடம் இருந்து விரும்பவில்லை. உன் மீது ' கொலை வழக்கு ' போடப்பட்டிருக்கிறது என கூறி, பல உண்மைகளை, கட்சி சார்ந்த ரகசியங்களை கேட்டார்கள். ஆனால், கொடுத்த சித்ரவதையில் இவர் தரையில் விழுந்துவிட்டார்.
சிறைவாசம்: பாலன் கோவை மத்திய சிறைச்சாலையில், இங்கு தான் நாம் வியப்புடையும் வண்ணம், சிறையில் உள்ள கைதிகளுக்கு " பீடி " எவ்வளவு மன ஆறுதல் என்பதையும், அதை உள்ளே கொண்டு செல்ல முற்படும் முயற்சிகள் எழுதப்படுகிறது. இவர் சொல்லுகிறார், " ஒரு கைதி ஐந்நூறு பீடிகள் வரையில் தனது ஆசனவாய்க்குள்ளே திணித்து வைத்தது உண்டு ". அவர் இதை எப்படி என விவரித்தும் சொல்கிறார், ' நல்ல இளம்தளிர் வாழையிலையை எடுத்து, நன்றாய் விரித்து, பீடியை பத்துப்பத்தாக சுற்றி நீளமாக அடுக்கி வைக்க வேண்டும். இன்னும் சில முறைகளுக்கு பின், இன்னொருவரின் உதவியுடன் அதைச் சிறிது சிறிதாய் ஆசனவாய்க்குள்ளே நுழைத்துவிட வேண்டும் ". இப்படி மிகவும் வருத்தி கொண்டு போவது, சிறையில் இதற்கு இருக்கும் விலை மதிப்பே காரணம். பாலன் விலைவாசிப் புள்ளியையும் நம்மிடம் சொல்கிறார், 8 அவுன்ஸ் பால் - 4 பீடி 4 அவுன்ஸ் மாமிசம் - 5 பீடி நிலக்கடலை உருண்ட சோறு - 2பீடி என இன்னும் நிறைய சொல்கிறார். சிறைக்குள் நாணயங்கள் கொண்டு வரும் முறையும் ஆச்சரியப்படுத்தும். ' சில கைதிகள் தொண்டைக்குள்ளாகவே ஒரு பகுதியில் குழி உண்டாக்கி, வைத்துக் கொண்டு வருவார்கள். இதனை, பின் சரியாக அந்த தொண்டைப் பகுதி இடத்தில் பார்த்து அடிக்க தெரிந்தவர்களை வைத்து எடுப்பார்கள் '. பின்னர், " கண்ட்ம்டு பிளாக் " ( Condemned Prisoners Block ) பற்றி நமக்கு தெளிவாய் கூறுகிறார். அதாவது, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைப் பூட்டி வைப்பதற்கான இடம் தான் இது. இந்த பிளாக் சிறைச்சாலையில் எவ்வளவு முக்கியமான பகுதியென இவர் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆறு தூக்கு கைதிகளுக்கு ஒரு காவலாளி கட்டாயம், ஆறுக்கு மேல் ஒருவர் இருந்தால் கூட அவருக்காக இன்னொரு காவலாளி நியமிக்கப்படுவார்கள் என ஒரு ' சிறைக்குள் ஒருவன் தூக்கு தொங்கிய பின் நிகழ்ந்த கெடுபடிகளை ' விளக்குகிறார்.
அளந்து கொடுக்கும் படி: பாலன், சிறைக் கைதிகளுக்கு தரமான, சட்டத்தில் இருக்கப்பட்டுள்ள அளவாவது கொடுக்க வேண்டும் என ஒரு வாரம் தாண்டியும் உண்ணாவிரதம் இருக்கிறார். பின், பதினான்கு நாள் கழித்து, இவர் வேண்டுகொள் படி சாப்பாடும், படிக்க புத்தகங்கள், பத்திரிக்கைகள் என வழங்கப்பட்டது.
இதுதான் சிறைச்சாலை: இருக்கும் சிறையிலே, ஓரமாய் படுக்கைக்கு இடமும், இந்தபக்கம் ஓரமாய் சிறுநீர் கழித்து வைக்கும் சட்டி என நாற்றத்துக்குள் மனதளவில் எவ்வளவு வேதனை என்பதை மிக யதார்த்தமாய் பதிவு பன்னப்பட்டிருந்தது. சிறைக்குள் மாமிசம் இல்லாததால் கைதிகள் படும் அவலத்திலும், ' காகங்களுக்கு ' மவுசு ' கூடி தான் இருக்கிறது. திருட்டுத் தனமாய், காக்கையை பிடித்து சிறையிலே சமைத்து அதனை வியாபாரமும் ரகசியமாய் விநியோகிக்க படுகிறது என்பது ஒரு நகையாய் இருந்தாலும், உளவியல் பாதிப்பை புரிந்து கொள்ள முடிகிறது.
தனிமை கொடிது: சிறைக்குள், துன்பமான சமயங்களில் பாலன், சிறை நூலகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள் இரவு 12மசி வரை படித்தது தான் தனக்கு ஓரளவு மனதளவில் அத்தனையையும் மறக்கடித்தது என புத்தகத்தின் முக்கியத்துவத்தை புரிகிறார்.
பின்னர், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட மூன்று நபர்களின் குற்றங்களின் பின்புலம், உளவியல் பிரச்சினைகள், இறுதி நொடியில் நேரும் சந்திப்புகள் என சில அத்தியாயத்தில் தெள்ளந்தெளிவாய் எழுதியிருக்கிறார்.
பின்னர், தன்னுடைய மரண தண்டனையை நிறைவேற்ற விடாமல் ஓயாது உழைத்தவர்களை குறிப்பிடுகிறார், இது, ஒரு வரலாற்று நிகழ்வே.
ஆம், தன்னுடைய உயிர்க்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் கிளர்ச்சியை உண்டு பன்னி, 91 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டதையும்; ரஷ்ய, சீனா முதலிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும், அன்றைய ' பிரதமர் நேருவிற்கு தந்தி அனுப்பியதை பற்றி ' கூறுகையில் ஒரு மனிதனின் உயிர்க்கு, புரட்சி அர்ப்பணிப்புக்கு இவ்வளவு மரியாதை அந்த காலத்தில் என நெகிழ்ந்து போய் விட்டேன். ஏன், நம்முடைய எம்.ஆர்.ராதா திராவிட கழக கொடியை கையில் ஏந்தி ஒரு குதிரை மீது அமர்ந்து கொண்டு கோவை நகரில் மாபெரும் ஊர்வலத்தை இவருக்காக நடத்தியிருக்கிறார் என்பதை படித்த போது, சிலிர்த்தேன்.
பிறகு என்ன? மரண தண்டனை ரத்தானது.
இது ஒரு தனி நபரின் அனுபவங்கள்படி ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாகவும், சிறைக் குறிப்புகள் பற்றிய முக்கியமான புத்தகமாக விளங்குகிறது. படியுங்கள், நிறைய அறிந்து கொள்ளலாம்.
This is one of the foremost works in India describing the prison life in its details. The real stories of those waiting for the gallows, told by the author—who himself is a death row convict—is haunting and made me to realise how fortunate we are to spend our free lives. The author us laced this haunting piece with some side-splitting humour too. As an aspiring author, I take some messages from this work on writing. The main message I take is to feel it first and then write or write only what you feel.
I will always be indebted to the author C.A.Balan for his superb translation of Malayalam works in Tamil such as Thakzhi’s Kayiru and S.K. Pottekkatt’s Oru Gramathin Kathai.
இந்த புத்தகம் ராணிமுத்துவில் சுமார் 38 வருஷம் படித்தேன் மீண்டும் படித்தேன் மீண்டும் மீண்டும் அந்த புத்தகத்தை யாரோ திருடி போய் விட்டார்கள் ஒரு 20 வருஷம் முன்பு சென்னை சென்ற போது செண்டிரல் ரோட்டு ஒரம் பழைய புத்தக வியாபாரியிடம் சொல்லி இரண்டு தினங்களில் இந்த புத்தகம் வாங்கி தந்தார் அதையும் யாரோ திருடி போய் விட்டார்கள் இப்போ தூக்குமர நிழலில் படிக்க முயர்ச்சிக்கிறேன்