Jump to ratings and reviews
Rate this book

மன்னன் மகள் [Mannan Mahal]

Rate this book
இ ரவு மூன்றாம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்ததால் பாதி தேய்ந்துபோய் இரண்டாக வெட்டப்பட்ட பெரிய வெள்ளி நாணயம்போல், வான வீதியில் உதயமான கிருஷ்ண பட்சத்துச் சந்திரன், அதுவரை பிரமாதமாக ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் கொட்டத்தை அடக்கிப் பூமி மீதும் தன் குளிர்க் கிரணங்களை உதிர்க்கவே, கோட்டைக்குள்ளிருந்த நந்தவனப் பிரதேசம் மிக ரம்மியமாகக் காட்சி அளித்தது. எதிரே நின்றவாறு தன்னை அழைத்த அந்தப் பேரழகியை நோக்கி நகர்ந்த கரிகாலன், அவள் அழகிற்குத் தகுந்த சூழ்நிலையும் அங்கே நிலவியிருப்பதைக் கண்ட ஆச்சரியத்தில் சுற்றிலும் ஒரு முறை தன் கண்களை ஓட விட்டான்.
ஆகாயத்தை அளாவி நின்ற பிரும்மாண்டமான கோட்டைச் சுவர் வெகு தூரம்வரை வளைந்தோடுவதையும், இருபது அடி தூரத்துக்கு ஒருதரம் மேலே ஏறிச் செல்லப் பெரிய பெரிய படிகள் சுவரை அணைத்து நிற்பதையும் கண்ட கரிகாலன், ஏதோ பெரிய போர் அரணுக்குள் தான் இருப்பதைத் தெரிந்து கொண்டான். சுவரின் உச்சி மட்டம் இருந்த மாதிரியிலிருந்தும், தொலை தூரத்திற்கப்பால் இருந்த சுவரின் ஒரு பகுதியில் ஆயுதம் தரித்த வீரர்கள் பாராக் கொடுத்துக் கொண்டு நின்ற திலிருந்தும், சுவர் சுமார் நான்கடி அகலத்துக்காவது நிர் மாணிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் கரிகாலன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். யுத்த சாத்திரத்தை நன்றாக அறிந்த அவனுக்கு இந்தக் கோட்டை சாளுக்கியர்களின் போர் பாதுகாப்பு முறைப்படி அமைக்கப்பட்டிருக்கிறதென்பதையோ, ஆகவே தான் கீழைச் சாளுக்கியர் களின் மிக முக்கியமான ஒரு கோட்டைக்குள் சிக்கியிருப்பதையோ அறிய, அதிக நேரம் பிடிக்கவில்லை.சாளுக்கிய வீரர்களிடமிருந்து தப்பிய தன்னை விதி உந்தி, சாளுக்கியர் களின் கோட்டைக்குள் சிக்க வைத்தது எத்தனை விந்தை என்று நினைத்துப் பெருமூச்சொன்றும் விட்டான். அத்தனை ஆபத்தான நிலையிலும், அந்தக் கோட்டையின் அழகையும், சாளுக்கியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நந்தவனப் பிரதேசத்தின் வனப்பையும் ரசிக்கா திருக்கக் கரிகாலனால் முடியவில்லை.
கோட்டையும், கோட்டைக்குள்ளிருந்த கட்டடங்களும் நந்தவனத்தின் பெரிய மரங்களும், சிறிது செடிகளும், செடிகளையும் மரங்களையும் தழுவி நின்ற கொடிகளும் வெண்ணிலவிலே கண்ணைப் பறிக்கும் எழிலுடன் விளங்கின. கோட்டைச் சுவரை அடுத்து நின்ற பெரிய நந்தவனத்துக்கு அப்பால், தூரத்தே தெரிந்த பிரும்மாண்டமான கட்டடமும் அதன் ஸ்தூபிகளும் நிலவைக் கிழித்துக் கொண்டு எழுந்த பல பாணங்கள் போல் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பி நின்றன. அந்தக் கட்டடத்தையும் நந்தவனத்தையும் பிரித்து நின்ற சிறிய இடைச்சுவர், தான் அந்தக் கட்டடத்தைப்போல் அத்தனை உயரமில்லையே என்ற துக்கத்தால் உள்ளம் கறுத்து அந்தக் கருமைக்கு அடையாளமாகத் தன் கறுப்பு நிழலைத் தோட்டப் பகுதியில் பாய்ச்சி நின்றது. சுற்றிலும் ஓடிய பெரிய கோட்டைச் சுவர்கூட தனக்குக் கீழே இருந்த ஆயுத அறைகளை மறைக் கும் நோக்கத்துடன் பக்கவாட்டில் நிழலை ஆங்காங்கு வீசி, கறுப்புத் திரையைப் பல இடங்களில் விரித்திருந்தது. நந்தவனத்தின் மற்றோர் ஓரத்திலிருந்த பெரிய மரங்கள் கரிகாலனுக்கு அபயம் அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தாலோ என்னவோ, தங்கள் இருப்பிடத்துக்குள் சந்திர கிரணங்களை வரவிடாமல் தடுக்க முயன்றன. இருப்பினும் வெண்மதிக்குத் துணையாய் நின்ற ஒரு சில கிளைகள் மட்டும் இப்படியும் அப்படியும் காற்றில் அசைந்து, இலைகளின் இடுக்குகளின் வழியாகக் கிரணங்களை உட்புகவிட்டு, “தப்பி வந்த திருடன் இதோ இருக்கிறான்” என்று காட்டிக் கொடுக்க முற்பட்டன.

716 pages, Hardcover

First published March 1, 1961

115 people are currently reading
1748 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
252 (43%)
4 stars
191 (32%)
3 stars
93 (16%)
2 stars
21 (3%)
1 star
23 (3%)
Displaying 1 - 29 of 29 reviews
Profile Image for Elayaraja Subramanian.
129 reviews8 followers
September 4, 2021
அட்டகாசம்..!!

என ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். அத்தனை அற்புதமாக இந்த மன்னன் மகளை உருவாக்கியிருக்கிறார் சாண்டில்யன்.

நான் வாசிக்கும் முதல் சாண்டில்யன் நாவல் இது தான். பலமுறை இவர் குறித்தும் இவரது நாவல்கள் குறித்தும் அங்கங்கு வாசித்திருப்பினும் ஒரு நாவல் கூட வாசிக்காமலேயே இருந்தேன். சமீபத்தில் எங்கள் ஊர் நூலகத்தில் இவரது நாவல்களைத் தேடிப்பார்த்து இல்லாமல் போகவே நூலகரிடம் கேட்ட போது புது புத்தகங்கள் நிறைய வருவதால் இடம் போதாமை காரணமாக பழுதடைந்த பழைய புத்தகங்களை எல்லாம் மூட்டைக்கட்டி மேலே இருக்கும் அறைகளில் கிடப்பில் போட்டிருப்பதாகவும் அதிலே இவரது புத்தகங்களும் கிடக்கும் எனக் கூறிவிட்டார். ஆனால் இவரது புத்தகங்களில் பெரும்பாலானவை கிண்டிலில் இருப்பதை பார்த்ததும் உற்சாகம் பீறிட்டுவிட்டது.

முதலில் நான் வாசிக்க நினைத்த இவரது நாவல் கடல் புறா தான். ஆனால் சமீபத்தில் பெப்பர்ஸ் டிவி யூடியூப் தளத்தில் "படித்ததில் பிடித்தது" நிகழ்ச்சியில் ஜெயமோகன் மன்னன் மகள் குறித்து சிலாகித்துப் பேசியதைப் பார்த்ததும் முதல் நாவலாக இதை வாசிக்க முடிவெடுத்தேன்.

நாகப்பட்டினம் கடற்கரையோரம் வீற்றிருக்கும் சூடாமணி புத்த விஹாரத்தில் ஐந்து வயது முதலே வளர்ந்தவன் கரிகாலன். காவி உடை தரித்து அங்கிருக்கும் மற்ற புத்த பிக்ஷுக்களை போலவே தோற்றமளித்தாலும் போர்ப் பயிற்சி, வாள் பயிற்சி, வில் பயிற்சி, தேகப் பயிற்சி என ஒரு போர் வீரனுக்கு தேவையான அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவன். சாஸ்திரம், வரலாறு என அனைத்தும் படித்து புத்திஜீவியாகவும் இருக்கும் இருபது வயது கடந்த இளைஞன். சிறுவயது முதலே புத்த விஹாரத்திலேயே வளர்ந்த கரிகாலனுக்கு அவனது பெற்றோர் குறித்து எந்த விபரங்களும் தெரியவில்லை. அதனால் அவனது பிறப்பு சார்ந்த மர்மம் குறித்து தெரிந்து கொள்ள தான் அத்தனை வருடங்கள் உண்டு உறங்கி வளர்ந்த சூடாமணி விஹாரத்தை விட்டு அவனை அங்கே வளர்த்த தலைமை பிக்ஷுவின் ஆசியோடும் அவனிடம் ஒப்படைக்கும் படி அவரிடம் கொடுக்கப்பட்ட ஒரு பச்சைக்கல் பதித்த மோதிரத்தையும் பெற்றுக் கொண்டு அவனை அங்கே சிறுவயதில் விட்டுச்சென்ற சோழப் பேரரசின் படைத்தலைவன் அரையன் ராஜ ராஜனை காணச் செல்கிறான். பிறப்பு மர்மம் குறித்து அறிந்து கொள்ள நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்திலிருந்து கிளம்பும் கரிகாலன், அவனது பயணத்தில் ஆபத்துகளையும், அதிர்ச்சிகளையும், காதல்(களையும்) சந்தித்து ராஜேந்திர சோழப் பேரரசினை கங்கை வரை கொடி நாட்டச்செய்து நாடேப் போற்றத்தக்க மாபெரும் படைத்தலைவானாய் உருவெடுக்கும் சாகசக் கதையே இந்த மன்னன் மகள்.

நாவலை வாசிக்கத் தொடங்கும் போது நீள நீளமான வர்ணனை கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியது. அதுவும் ஒரு சில பக்கங்களே. பிறகு அந்த செந்தமிழ் வர்ணனைகள் பிரமாதமாக தோன்றின. கதையின் நாயகியான நிரஞ்சனாதேவியையும், படைத்தலைவன் அரையன் ராஜ ராஜனின் மகளான செங்கமலச் செல்வியையும் வர்ணிக்கும் வர்ணிப்பில் தலைவரிடம் இளமை கொப்பளிக்கிறது. என்ன ஒரு ரசனையான மனிதர் என மனதில் தோன்றாமலில்லை. அதுவும் அப்பெண்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் விதவிதமாக வர்ணிக்கிறார். அதே போல போர்காட்சியை விவரிக்கும் போது தலையற்ற முண்டங்களையும், ரத்தமும் வீரர்களின் கால்களில் மிதிபட்டு நைந்து கிடக்கும் மனித அங்கங்களையும் கண் முன்னே நிறுத்துகிறார்.

பொன்னியின் செல்வனில் சாகசங்கள் செய்யும் வந்தியத்தேவனுக்கு சற்றும் சளைத்தவனில்லை என்பது போன்றே கதையின் நாயகனான கரிகாலனை படைத்திருக்கிறார் சாண்டில்யன். குறைகள் என்பது மருந்துக்கும் அவனிடம் இல்லை. எத்தகைய பேராபத்தாக இருந்தாலும் அவன் கற்றுத் தேர்ந்த சாஸ்திரங்களின் உதவியோடு வாயிலேயே வடை சுட்டுவிட்டு கிளம்பி விடுகிறான். அதனாலேயே அவன் ஒவ்வொரு ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் போதும் எப்படியும் தப்பிவிடுவான் என்று தோன்றிவிடுகிறது. ஆனால் அவன் தப்பிக்கும் முறைகளே வாசிப்பவனின் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன. அடுத்தடுத்து திருப்பங்கள் கதையில் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. "அட" போட வைக்கும் ஏரியாக்கள் நாவலில் ஏராளம்.

தமிழில் அட்டகாசமான ஒரு வரலாற்று நெடுந்தொடராக எடுப்பதற்கான அம்சங்கள் அத்தனையும் கொண்ட நாவல். ஆனால் எடுக்கமாட்டார்கள் அப்படியே எடுத்தாலும் ரசிக்கும் படி எடுக்கமாட்டார்கள் என்பது தான் தற்போதைய எதார்த்தம். அதனால் நாவல் கொடுக்கும் வாசிப்பனுபவத்திலேயே திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான்.
Profile Image for Tamil Isai (தமிழிசை).
34 reviews4 followers
April 15, 2018
Mannan mahal is a nice novel. Always sandilyan writings are awesome. Again it's about rajendra and araiyan rajarajan. A new character karikalan is a hero of the story. The awesome book having history of chola's.
Profile Image for Varun Ragul.
23 reviews
April 27, 2021
1 book only. Very interestingly narrated script by sandalian. Goes very fast and good book about cholas
Profile Image for Fareej Mohamed.
3 reviews2 followers
December 13, 2016
வழக்கம்போலவே கற்பனைகளை அதிகம் கலந்த சாண்டில்யனின் வரலாற்று நாவல்! உண்மைப் பாத்திரங்களைவிட கற்பனைப் பாத்திரங்களை உயர்வாகக் காட்டுவது நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. ஆனால், சாண்டில்யன் நாவலில் இருக்கக் கூடிய அத்தனை அம்சங்களும் இருந்து இந்த நாவலைச் சோபிக்க வைக்கின்றன. ஆக்சன் படம் பார்த்த ஒரு திருப்தி ஏற்படுகிறது.
Profile Image for Ajay Vinodh.
Author 2 books1 follower
January 10, 2021
One of the best novel I ever read. I astonished about the plot. Author used historical background & his imagination to give a wonderful experience. Protagonist Karikalan’s journey towards find his identity & parents takes him into war field. Fate turns him from refugee to Captain of great Chola Army. Author used several historical reference throughout the story so it’s hard to differentiate story & real. A beautiful love tale between Karikalan & Princess Niranjana Devi were portrayed in the way we can experience ourselves into their shoes.
Unexpected Triangle love plot adds more nail biting moments.
War strategy used in the story brings a real battlefield with millions of Artillery, Archers, Chariots & Chola’s Famous Elephants Battle Wings in front of our eyes.
Author used less explanation about the disgusting act of killing fellow human beings that makes this novel great.
Sacrifice of kings & captains makes us feel pity about them. How patriotic men & women served in The Great Cholan Army bring goosebumps to us.
Raja Rajandren Cholan & his dream to take his emperor to Ganga River made possible with his Patriotic Army.
Also, this books explains how humble Raja Rajandren was and his wealthy kingdom.
I don’t know Time Machine may possible in future or not but this kind of books would take you back to the past.

Author: Saandilian
Profile Image for Manju Senthil.
46 reviews4 followers
October 18, 2021
Mannan Magal is another feast for historic fiction lovers 😇 The story travels around Rajendra Chola's expedition to conquer the kingdom around the Ganges 🥳

The regular Sandilyan techniques to grasp readers is available in this book also, like 2 women falling in love with the protagonist, exaggeration of the tactics handled by the hero, objectifying women in the name of glorification, etc. 🤦🏻‍♀️

Though I'm not a big fan of Sandilyan, I liked this book better than his previous other works which I have read already (Kadal Pura and Yavana Rani)💐
I liked Karikalan better than Illanchezhiyan and Illayapallavan💖
The plot starts with the suspense around Karikalan's birth in the first chapter and revealing it at the end was really interesting👏🏽
Many characters like Devi, Selvi, Arayan Rajarajan, etc would capture our hearts for sure 🎉

On the whole, this book is worth your time if your genre is historic fiction😎
Profile Image for Arun Prakash.
153 reviews
August 24, 2025
I feel in love with this book from the beginning. It was not as fast paced and thrilling as Kadal Phra, but nevertheless, it had a magnetic aura that pulled me feel into this world where Karikalan ruled with his brilliant strategies and the other characters doing their roles perfectly well. The flow was awesome! The last hundred pages were just perfect with poignant writing and revelations.

-----

சாண்டில்யன் அவர்களுடைய மன்னன் மகள் ஒரு அருமையான வாசிப்பு. கரிகாலன், அரையன் ராஜ ராஜன், ராஜேந்திர சோழன், இன்னும் சில பாத்திரங்கள் மனதைத் தொட்டன. நெகிழ்வு, பெருமை, சுவாரசியம் என்று அனைத்து உணர்வுகளையும் தூண்டும் விதமாக உள்ளது கதை.

தந்திரங்கள், போர்க் காட்சிகள் எல்லாம் தூள் கிளப்பின! நாகர்கள் போர் மட்டுமே இதில் விவரிக்கப் பட்டுள்ளது - சிறப்பான காட்சிகள். கரிகாலனின் ரகசியத்தை இறுதி வரை பெரும் எதிர்பார்ப்புடன் நகர்த்தியது பாராட்டத் தக்கது.

மொத்தத்தில் ஒரு புத்துணர்ச்சி அளித்த புத்தகம்!
Profile Image for Sathiyaraj Sriramamoorthy.
6 reviews5 followers
January 21, 2019
மன்னன் மகள் - சாண்டில்யன்
சாண்டில்யன் புதினங்களின் கட்டாயம் படிக்க வேண்டிய புதினம்.

புத்த விஹாரத்தில் ஆரம்பிக்கும் கதை புத்த விகாரத்தில் முடிகிறது. வழக்கம் போல் சாண்டில்யனின் கதைகளில் வரும் காதல் வசனங்களும் காதல் காட்சிகளும் சற்று குறைவு தான். போர் தந்திரங்கள், கதையின் போக்கு, மைய கதாபாத்திரத்தின் பயனம் அனைத்தும் எங்கும் சுவாரஸ்யத்தை குறைக்கவே இல்லை. கதையை இன்னும் சற்று நீட்டித்து இருக்கலாம். கதையை முடிக்க வேண்டும் என்று முடித்தார் போல் இருந்தது சற்று பின்னடைவு. கதையைவிட காட்சிகளை விளக்குவதில் அதிக பக்கங்கள் செலவாகிவிட்டது. காட்சிகளை விளக்குவதற்கும் ஒரு முற்று புள்ளி இருந்து இருந்தால் புதினம் அருமையாய் சிறந்ததாய் இருந்துருக்கும்.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
April 25, 2020
சாண்டில்யனின் சுவாரஸ்யத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத நடை புத்தகத்தை கீழே வைக்கவே விடாது. ஒவ்வொரு முறையும் ஒரு பத்து நிமிடம் புத்தகத்தைப் படித்துவிட்டு வேறு எதுவும் வேலையை பார்ப்போம் என்று தான் எடுப்பேன் ஆனால் அப்படி எடுக்கும் போதெல்லாம் ஒருபோதும் 50 பக்கங்களாவது என்னை படிக்கச் செய்துவிடும் இந்த புத்தகம்.
7 reviews1 follower
January 3, 2022
வழக்கம்போல தன் தமிழ் திறமையினால் வாசிப்பவர்களை இழுத்துக் கொண்டார்.. கதை என்னமோ விறுவிறுப்பாக தான் சொல்கிறது ஆனால் logic அத்துமீறல்கள் உள்ளன. கதாநாயகன் தான் யார் என்பதை கொஞ்சம் கூட வாசிப்பவர்களை யுகிக்க முடியாதவாறும் சுவாரசியம் குரையாதுவாறும் ஆசிரியர் எழுதியுள்ளார். இந்த நூலை எழுதும்போது ஆசிரியருக்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை நூலை அவசர அவசரமாக முடித்து விட்டார்
Profile Image for VINOTHKUMAR K.
50 reviews
April 6, 2025
The book follows a fictional character during the Rajendra Chola’s northern invasion up to Ganges. The story started really well giving lot of time for characterisation. Book was going very well and all of the sudden it rushed to end. Didn’t expect the book to wind up all of the sudden like that leaving lot of characters to hung midway. It was published in weekly magazine and half the way through publication he might wanted to end the story suddenly. It should have been a better ending.
Profile Image for Samwise Brave.
3 reviews
January 21, 2019
மிகவும் சுவாரசியமான கதை. ஒவ்வொரு அத்தியாயமும், கதையில் திருப்பங்களை பெருக்கிக் கொண்டு செல்கிறது. நல்ல கதாபாத்திரங்கள். சிறிய, சுவையான ஒரு புதினம்.
Profile Image for B.h..
7 reviews1 follower
February 19, 2019
நல்ல புத்தகம்... ஆனால் முடிவு யுக்கிக.. முடிந்தது..
15 reviews
August 1, 2021
Diz novel makes Sandilyan's Fan .
But plot story Twist not acceptable... By all and but content have over_imagination...
19 reviews
April 27, 2025
Mannan Magal novel is set during the reign of Rajendra Cholan-I when his forces are getting ready for the Ganges campaign. A young man raised in the Nagapattinam Sudaamani Viharam embarks on a journey of finding the identity of his parents. He gets way laid to the Eastern Chalukya country where he pledges to help the princess Niranjana Devi to free her country from the Western Chalukya control. He gets himself into the politics between the Chalukyas and Cholas and ends up playing a hand in the Ganges campaign. In the end he learns his birth secret and helps free the Eastern Chalukyas. His journey and his birth secret are the core of this novel. The novel is pacy keeping our interest intact. The usual Sandilyan romance angle is somewhat less in this novel. The author portrays the lead character, Karikalan as super intelligent and practical who is able to handle any situation with just knowledge gained from reading books. This feels too far fetched as he is able to outsmart the chief commander of the chola army and western chalukya king. The sub plots like the Eastern Chalukya problem and the Ganges campaign could have been a separate story on their own. An interesting read if we overlook some of the minor shortcomings.
Profile Image for Navaneeth Reguraj.
1 review1 follower
March 19, 2017
i been looking this book for a while . I really love to read tamil historic novels. I recommend all Tamil people to read this book.
7 reviews
June 6, 2024
This is a fantastic story that I thoroughly enjoyed. Set in the Vengi Kingdom with the Chalukya and Chola kingdoms as the backdrop, it follows a man who embarks on a journey to discover his true identity and becomes entangled in a significant political intrigue for the sake of the woman he loves. The narrative bears some resemblance to Ponniyin Selvan in parts.

The characterizations of Karikalan and Niranjana are particularly well-done, and the antagonist characters are equally compelling. We also get to meet our beloved Vandiyathevan. This medium-sized book is filled with romance and political twists, making it a must-read for Sandilyan fans.
7 reviews
December 8, 2012
Story revolves around many historic events. It starts very well but in the middle it looses the track and deviated a lot in the end. It could be because it was written for a weekly magazine.
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
சாண்டில்யனின் எழுத்துக்களில் சுவாரஸ்யத்துக்கும் திருப்பங்களுக்கும் பெண்மைக்கும் குறைவு இல்லை என்பதற்கு மற்றொரு சான்று
Profile Image for Veda Balan.
3 reviews
June 28, 2016
As usual a good read by Sandilyan. Also the history across south asian regions and the people influencing the cultures and vice versa were interesting to know...
Profile Image for Saki.
996 reviews58 followers
January 8, 2015
3.5 stars
It was OK. The plot was good but not good enough. Romantic scenes needed more base. The ending was quiet unattractive. The big bad twist was so not cool.
Displaying 1 - 29 of 29 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.