Jump to ratings and reviews
Rate this book

மலர்ச்சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்) [Malarcholai mangai]

Rate this book
சரித்திர நவீனத்தின் பிதாமகரான கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் சரித்திர நவீனத்துக்கு, இந்த மலர்ச்சோலை மங்கை புதினம் முன்னோட்டம். பொன்னியின் செல்வனில் வரும் வந்திய தேவன், ரவிதாசன், குந்தவை, சுந்தரச் சோழர் போன்ற பல கதாபாத்திரங்களின் இளமைக் காலம் இந்த சரித்திர நவீனத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனின் காலகட்டத்துக்கு முன் நடந்த பல நிகழ்வுகளை கல்கி தனது புதினத்தில் பல இடங்களில் கோடிட்டு காட்டியுள்ளார். அந்தச் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை பற்றி இந்த பெருங்கதையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக

* வந்தியத்தேவன் ஏன் ஆதித்த கரிகாலனை காஞ்சியியல் போய் பார்க்க வேண்டும்? என்று பொன்னியின் செல்வனைப் படிப்பவர்களுக்கு தோன்றும். அதற்கான விளக்கம் இந்த கதையில் இருக்கிறது.

* ரவிதாசன் யார்? அவன் செயல்களுக்கு என்ன மூல காரணம் என்று பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் எண்ணி இருப்பார்கள். ரவிதாசன் யார் என்பது பற்றி வித்தியாசமான கோணத்தில் இந்த புதினத்தில் சொல்லப்பட்டுள்ளது.

* ரோஹண நாட்டில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டிய மணிமகுடம், இந்திர ஹாரம் உண்மையில் அங்குதான் வைக்கப்பட்டு இருந்ததா? ஏன் பலமுறை சோழர் படைகள் அதை முற்றுகை இட்டும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை? என்ற எண்ணம் பலருக்கு வந்து இருக்கும். அதற்கு பதிலும் இந்த புதினத்தில் உள்ளது.

இது போன்ற பொன்னியின் செல்வனில் வரும் பல விவரங்களுக்கு விடைகளை எனக்கு தெரிந்த அளவில் இந்த சரித்திர நவீனத்தில் கொடுத்துள்ளேன். அந்தக் காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் பற்றி பல இடங்களில் இந்தப் புதினத்தில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

மதுரை வேளூர் யுத்தத்தின் முடிவில் ஆரம்பிக்கும் இந்த நவீனம், மாறவர்மர் மற்றும் வீரபாண்டியன் வாழ்வில் நடந்த பல வீரச் செயல்களையும் சரித்திர சம்பவங்களையும் கடந்து வந்திய தேவன், வீராணம் ஏரிக்கு வந்து சேரும் பொழுது முடிவடைகிறது.

696 pages, Hardcover

17 people are currently reading
272 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (29%)
4 stars
13 (27%)
3 stars
7 (14%)
2 stars
8 (17%)
1 star
5 (10%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Saravanan.
356 reviews20 followers
October 9, 2017
எனக்கு வரலாறு அதிகம் தெரியாது. ஆனால்,

1. இதுவரை நான் படித்த வரலாற்று நாவல்களில், இதில் வரும் பொறுப்பில்லாத ஒரு தூதுவனை போல் எந்த ஆசிரியரும் படைத்ததில்லை.
2. வேங்கியில் தெலுங்கு? பொன்னியின் செல்வன், உடையார் போன்ற நாவல்களில் தெலுங்கு என்று ஒரு வார்த்தையை படித்தாக ஞாபகமில்லை.
3. பராந்தகர், நடுநிசிக்கு அர்த்தஜாம மண்டபத்துக்கு வந்து விடு என்று சொன்னார். அதோடு போச்சு. அவர்கள் சந்தித்தார்களா?
4. உதவி நாடி வேங்கிக்கு வந்த பாண்டிய மன்னன், பாண்டிய மன்னனின் உதவிக்கு வந்த இலங்கை படை வேங்கியில் பயிற்சி, தளவாடங்கள் சேகரிப்பு என்று பத்து வருடமாக தங்கி இருக்கிறார்கள். கொஞ்சமாவது அடுக்குமா? இந்த பத்து வருடமாக போர் வருகிறது போர் வருகிறது என்று சோழ மன்னன் ஏரி கூட காட்டாமல் இருந்தானா?
5. வேங்கியில் இலங்கை வீரர்களுக்கு கார சாப்பாடு முதலில் பிடிக்கவில்லை, அப்புறம் பழகிடுச்சு. அந்த காலத்திலேயே இப்படியா?

150 பக்கங்கள் கூட இன்னும் படிக்கவில்லை. அதற்குள் இப்படியா? (செப் 19, 2017)

6. கப்பல் பயணத்தினால், பாண்டிய மன்னனுக்கும், அவனின் உதவாத ஆபத்துதவிக்கும், ஈழ வைத்தியர் இரவு மருந்து கொடுக்க, காலையில்
மன்னன்: வைத்தியர் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்தது. உனக்கு?
ஆபத்துதவி: ஆம் மன்னா, வைத்தியர் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்தது.
வைத்தியரிடம்,
மன்னன்: நன்றி வைத்தியரே, நீங்கள் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்தது.
ஆபத்துதவி: ஆம் வைத்தியரே, நீங்கள் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்தது.
ஈழ மன்னனிடம்,
மன்னன்: நன்றி மன்னவா. உங்கள் வைத்தியர் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்தது.
ஆபத்துதவி: ஆம் மன்னவா. உங்கள் வைத்தியர் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்தது. வரலாற்று புதினம் எழுதுகிறேன்னு தொலைக்காட்சி தொடரில் கூட இப்படி ரம்பம் போட மாட்டார்கள்.
7. அய்யப்பன் கோவில் தஞ்சையில்?
Author 12 books6 followers
May 18, 2013
It is excellent novel delaing with historical incidents of chola and pandiya empire and prequel to Ponniyin selvan
2 reviews
May 30, 2021
The story of Malarcholai Mangai is not fascinating as much as the name of the novel. Author can write this same story in half size as he had written, but he was explaining everything like that he is saying story for small kids. There was not even big twists in this story, but he had written something in the way that he has to make some twists, but it hadn't worked.

Most importantly don't read this book as a prequel to ponniyin selvan. This author said every twists in ponniyin selvan in a very common way. "Malarcholai Mangai is a spoiler to Ponniyin Selvan".
Profile Image for Manju Senthil.
47 reviews4 followers
August 5, 2020
Very religiously the author has followed Kalki's plot.
But the bravery of certain princes like Raja Aadhithar and Aadhitha Karikalar were not spoken much which is very disappointing.
Only the battle of Thakolam (Raja Aadhithar's death) is worthy to be read.
Profile Image for Nivethitha Ramamoorthy.
25 reviews
August 11, 2024
I read the 5th edition by vanathi pathipagam from Feb 2023.

The story is set as a prequel to Ponniyin Selvan. However most of the story revolves around Maaravarman Pandiyan, enhancing his character mostly. The author has tried to reach the bar Kalki had set. Nevertheless, I find the timeline of the story quite off. He could have mentioned if parallel events were happening simultaneously. The calculation of years was almost always wrong.

*Since the book was written half a decade after Kalki’s Ponniyin Selvan, the author could have arranged the story line to match PS. Maybe I forgot about certain plot in PS. I found the book to have some contradictions to plot line when comparing it with PS, because there are some cross over of story between both the books.

*The author could have mentioned about Arinjaya Chozha’s wedding and birth of Sundara Chozhan instead of just stating it in story. This could give the readers a sense of how many years had passed. People were born and characters were introduced in a haphazard manner.

*There was repetition of passage regarding the story behind Pandiya’s inheritance of Lord Indra’s pearl necklace. Such mistakes makes us question the credibility of the editors and publishers as well.

*The book was split into two halves. The first half was decent enough. It kindled a slight interest in the readers. However from the second part the book fell down drastically. Too many people died and the death never felt honourable or readers won’t even feel slight remorse at these death. I remember crying when characters in Kalki’s books. Here the author failed to create connection between characters and readers.

*All of a sudden Mangai - daughter of Paranthaka Chozha 1 is portrayed as wise and courageous woman. There was no indication of it in the first half of the book.

*I could be wrong here but according to Wikipedia the queen of Sundara Chozhan was Vanavan Maadevi but the author had mentioned that Villavan Maadevi as his wife. What should be noticed was that wife of Paranthaka Chozha 1 was Villavan Maadevi as well.

* The last few chapters of story was rushed giving the book a very bad ending.

*I still couldn’t decipher why the book was named Malarchozhai Mangai.

The plot line of the story was too good. If the author had paid some attention to the writing, this book would have reached heights.

It was engaging for 30% of the time and the rest was quite predictable. The author could have avoided spoiling the hidden messages in Ponniyin Selvan.

I would recommend new readers to read the first half of the book (pg 337 in 5th edition of the book) read Ponniyin selvan all 5 parts and then read the rest of the Malarchozhai Mangai. The Kalki’s Magnum Opus - Ponniyin Selvan will lose the charm if you finish reading Malarchozhai Mangai before starting PS. This would be gravest mistake a reader could do.

For music lovers and people who saw PS movie- the lyrics of the song - Vanathi’s Message is written in this book and you can find it in Pg 582. You can maybe play the music while reading it.

You can read this book if you are willing to ignore the timeline mistakes. I would definitely re-read this book if the author or editors make all the necessary changes.
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.