மனித வாழ்வை சீர்படுத்தவும், மண்ணில் நல்ல வண்ணம் வாழவும் இறைவனின் மீதான பக்தியே உதவுகிறது. பக்தி என்பது கோவில், கோவிலாகச் செல்வது அல்ல. நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாக, நல்ல எண்ணங்களுடன், சிந்தனைகளுடன், பரம்பொருள் ஒன்றே என்ற நம்பிக்கையுடன் நடப்பதே.
அதைத்தான் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமும் நமக்குப் பெரியவர்கள் உணர்த்திச் சென்றுள்ளார்கள். நம் இதிகாசங்களும், புராணங்களும் வெறும் பொழுது போக்கிற்காக எழுதப்பட்டவை அல்ல. மனித வாழ்வை செம்மைப்படுத்த, பல அரிய கருத்துக்களுடன், பக்தி பூர்வமாக எழுதப்பட்டவை.