மதமும் அரசியலும் மட்டுமல்ல, இணையக் கூடாத பல அம்சங்கள் இன்று பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து நிற்கின்றன. கிரிக்கெட் இன்று விளையாட்டு மட்டுமல்ல. நீங்கள் யாருக்குக் கை தட்டுகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் தேசபக்தி அளவிடப்படுகிறது. படம் பார்ப்பது இனியும் பொழுதுபோக்கு அல்ல. அது அரசியல் செயல்பாடு. உங்கள் உணவு மேஜையும் பூஜையறையும் படுக்கையறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அவை வீதிக்கு இழுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. உங்கள் உடை, காதல், ரசனை, நம்பிக்கை, கற்பனை, செயல் எதையும் இனி நீங்கள் தனித்துத் தீர்மானிக்க முடியாது.சாதி, மொழி, அரசியல், கலை, பண்பாடு என்று நம் வாழ்வோடும் சிந்தனைகளோடும் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் காணப்படும் சிக்கல்களையுமĮ