எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது கேள்ளி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந் தெடுப்பமு?எஞ்சினியரிங் படிப்பில் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. யாரிடமவது ஒவ்வொரு விதமாக, அவர்களுக்குத் தெரிந்த பிரிவுகளை சிபாரிசு செய்வார்கள். இந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டுமானல் உங்களுக்கே இந்தத் துறை பற்றி நன்றாகத் தெரியவேண்டும்.எஞ்சினியரிங் படிப்பு என்பது என்ன? ஒவ்வொன்றிலும் எப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற எல்லா அவசியமான வினாக்களுக்கும் விளக்கமாக பதில் சொல்கிறது இந்நூல்.
கும்பகோணத்தில் பிறந்த பத்ரி சேஷாத்ரி நாகப்பட்டினத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்து 1991 இல் சென்னை இந்தியத் தொழிநுட்பக் கழகத்தில் இயந்திரவியலில் இளநிலைப் பட்டமும் 1996 இல் அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். கிரிக்கின்போ என்ற கிரிக்கெட் விளையாட்டுக்கான இணையத்தள தகவல் நிறுவனத்தை உருவாக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர். 2004 ஆம் ஆண்டில் நியூ ஒரைசன் மீடியா[3] என்ற தமிழ்ப் புத்தகப் பதிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தற்போது அதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருக்கிறார். சிறுவர்களுக்காகச் சில அறிவியல் புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள இவர், சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். அம்ருதா பத்திரிகையில் தொடர்ந்து அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல், சமூகம், பொருளாதாரம் தொடர்பான நண்பேன்டா என்ற வாராந்திர விவாத நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறார்.