அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக்கொள்வது? அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர் முன்வைக்கும் பண்பாட்டிலிருந்து, அவர் கண்டடையும் தொன்மத்திலிருந்து நாம் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளமுடியும்?
அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலூக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி. தருமராஜ். அயோத்திதாசரை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கு அவர் வகுத்துக்கொடுக்கும் ஆய்வுச்சட்டகங்கள் புதுமையானவை, முக்கியமானவை.