தமிழக வரலாறு முழுமையாக எழுத பெறவில்லை என்பது பெருங்குறையே . இதற்கு காரணம் வரலாற்று ஆவணங்களாக திகழும் திருகோயிற் கல்வெட்டுகள் செப்பேடுகள் போன்றவை இன்னும் பதிப்பில் வராமல் பல்லாயிரக்கணக்கில் உள்ளன இருப்பினும் ஆங்காங்கே வரலாறும் முழுமையாக எழுதபெற்று வருமாயினம் வரலாற்றை அறிய பெருந்துணையாய் அமையும் முனைவர் மீனாட்சி அம்மையார் ,தேவகுஞ்சரி போன்றவர்களின் முயற்சியால் ஆலவாய் நகர வரலாறும் நமக்கு கிடைத்தன அந்நூல்கள் போன்றே தஞ்சை நகர வரலாறு கூறும் இந்நூலும் தமிழக வரலாறு அறிய துணையாய் நிற்கும் என நம்புகிறேன்
இப்பணியில் என்னை ஆட்படுத்திய என் ஆசிரிய பெருந்தகை முனைவர் இரா நாகசாமி அவர்களுக்கு நான் கடிபட்டுள்ளேன்.1994 ஆம் ஆண்டு உலகதமிழ் நாட்டின் முதல் பதிப்பக வெளி வந்து அந்த வருடத்தின் சிறப்பு பரிசையும் வாங்கி சென்றது இப்புத்தகத்தின் பெருமையாகும் இதனை மேலும் செப்பம் செய்து புதிய செய்திகளை இணைத்து அகரம் பதிப்பகத்தால் வெளிவிடப்பட்டுள்ளது.
Kudavayil Balasubramanian (born Kudavayil, Tiruvarur district) is an archaeologist from Tamil Nadu, India. He is former curator and publication manager at Saraswathi Mahal Library located at Thanjavur. He is credited with discovering more than 100 inscriptions, coins, copper plates, sculptures, and paintings now in museums and temples in that state.
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் 1948 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்து குடவாசலில் பிறந்தவர், விலங்கியல் துறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் வரலாற்றுத்துறையில் எம்.ஏ, எம்ஃபில் பட்டங்களையும் கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டில் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் முதுமுனைவர் பட்டமும் பெற்றவர். சிறந்த நூல் படைப்புகளுக்கான அரசின் பரிசுகளை 110ன்று முறை பெற்றவர்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அனந்தக்குமாரசாமி கவின் கலை விருதினை இவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான உ.வே.சாமிநாதய்யர் தமிழறிஞர் விருதினை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். இதுவரை 50 நூல்களையும் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் படைத்தவர்.
Excellent work by the author to comprehensively cover the entire history of Thanjavur from its original flourishing period to its decline in the thirteenth century. Each chapter is an enriching read supported by historic evidences and logical development of hypothesis. The entire book is divided into major parts. The first part covering the history of Thanjavur from 7th century until it's take over by the British.
The second part of the book deals in greater detail about the world heritage site - Thanjavur Brahadeeswarar temple built by the great Chola emperor Raja Raja Chola. All architectural and spiritual aspects of the temple are covered in depth. Moreover, it was astonishing to see how this great temple acted as the socio-economic hub as envisaged by the great king.
The third part explains the transition of kingdom into Nayakkar dynasty, the various contributions done by them and then how Maratha kings took over the Thanjavur administration. Overall, very good read for those who love history.
நுகர் பொருட்களுக்கான விலை நிர்ணயம். 12.5 % வட்டி. வரி நீக்குதல். மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது. பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக பாவித்தது என பொற்காலமாக விளங்கியுள்ளது ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம்...
புத்தகம்: தஞ்சாவூர் எழுத்தாளர்: டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பதிப்பகம்: 384 பக்கங்கள்: அன்னம் நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2018 விலை: 400
💫 தஞ்சாவூர் என்னும் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது பெருவுடையார் கோயில், எஞ்சி நிற்கும் அரண்மனைகளும், சரஸ்வதி மகால் நூலகமும், பூங்காவும் தான். நாம் இப்போது காண்பது வெறும் 5%தான், முன்பு இருந்த பெரிய அரண்மனைகள், மாட மாளிகைகள் எல்லாம் காலத்தாலும் படையெடுப்பாலும் அழிந்து போய் விட்டன.
💫 அப்படி மறைந்து போன ஊரைத் தேடும் வரலாற்று ஆய்வு நூல் இது.
💫 தஞ்சாவூர் என்னும் நகரம் எங்கே அமைக்கப் பெற்றது என்னும் கேள்வியோடு தொடங்கியது இந்தப் புத்தகம். மன்னன் தினமும் வருகிற வாசல், கோயிலுக்கு அருகே இருந்த வணிக போக்குவரத்து போன்ற தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இப்போது எஞ்சி நிற்கும் அரண்மனைகளும் யாவும், சோழர் காலத்தவை அல்ல, அவை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவை என்பது ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது.
💫 மக்களுக்கு அவர்களின் வரிப் பணத்தில் இருந்து செய்யும் நலத் திட்டங்களுக்கே, தங்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை போடுகிறார்கள் இந்நாள் ஆட்சியாளர்கள். பெரிய கோயில் எடுத்த மன்னன் அருண்மொழி, அவன் பெயரை மட்டும் போட்டுக் கொள்ளவில்லை. அந்தக் கோவிலுக்கு உதவிய கடைசி ஆளின் பெயர் வரை கல்வெட்டில் பதித்துள்ளான்.
💫 இந்தப் புத்தகத்தில் 100 பக்கங்களில் தஞ்சை பெருவுடையார் கோயிலின் சிறப்பு, படைப்பு, அங்கு இருக்கும் ஒவ்வொரு சிலை, கல்வெட்டு ஆகியவை பற்றியும் தெளிவாகவும் அழகாகவும் கூறப்பட்டுள்ளது.
💫 இந்தப் புத்தகத்தின் செய்திகளுக்கு நடுவே படங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு.
💫 அனைவரும் வாசிக்க வேண்டிய மிக அற்புதமான படைப்பு இது.
💫 இந்த ஆண்டு நான் வைத்த வாசிப்பு பட்டியலில் Bigboss ல் கமல் அவர்கள் பரிந்துரை செய்த 1 புத்தகத்தை யாவது வாசிக்க வேண்டும் என்று வைத்திருந்தேன். அதன் கீழ் இந்த அருமையான புத்தகத்தை வாசித்து ஆகிவிட்டது .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Detailing to the core with beautiful articulation Tanjavur from 6th century till British Rule , extensive coverage of chola dynasty especially Rajaraja chola’s regime
Don’t miss this if you are a history / archeological enthusiastic