Jump to ratings and reviews
Rate this book

மூங்கில் மூச்சு [Moongil moochu]

Rate this book
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு!’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.

A Life experience of a man in and about Tirunelveli

222 pages, Paperback

First published October 1, 2011

20 people are currently reading
80 people want to read

About the author

சுகா

8 books16 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
81 (55%)
4 stars
48 (33%)
3 stars
15 (10%)
2 stars
0 (0%)
1 star
1 (<1%)
Displaying 1 - 12 of 12 reviews
194 reviews9 followers
December 25, 2020
A very funny narration of friends childhood events from Tirunelveli
Profile Image for Selva.
369 reviews60 followers
June 12, 2016
Hilarious ! Totally loved it. Have read it like twice.
Profile Image for Premanand Velu.
241 reviews40 followers
January 13, 2021
நீங்கள் சினிமாவை விரும்புபவரா? உங்களுக்கு இது பிடிக்கும். உங்கள் பால்யகால நினைவுகளை மறக்காமல் திரும்ப அசை போடுவதில் சந்தோசப்படுபவரா? கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். திரையிசையை விரும்பி ரசிப்பவரா? இளையராஜாவை தேடி ரசிப்பவரா? உறுதியாகப்பிடிக்கும். திருநெல்வேலி அறிந்தவரா? ரசித்தவரா? பிடிக்கும்... பிடிக்கும்... இதையெல்லாம் தாண்டி, திருநெல்வேலிக்கே இதுவரை சென்றிராதவரா?
உங்களுக்கு இதற்கப்புறம் அந்த ஊரும், மக்களும், உணவும், மொழியும் மற்ற எல்லாமும் மிக தீவிரமாக பிடிக்க ஆரம்பித்து விடும்.

பொதுவாக திருநெல்வேலி என்றாலே அது எதோ ஒரு வகையில் நம்மைவிட நம் நாவுக்கு மகிழ்வளிக்கும்.
நெல்லை என்று சொல்லும்போதே அல்வாவில் ஆரம்பித்து சொதியில் பிரண்டு இன்ன பிற சுவைகள் நம் சுவை மொட்டுக்களில் ஊறுவது இல்லை?

இதைப்படிக்க ஆரம்பிக்கும் போது , திருநெல்வேலியில் உள்ள உணவுகளையும், அதை பரிமாறும் சைவ உணவகங்களையும், முதலில் அறிமுகப்படுத்தி அந்த உணர்வை கிளறி, நம் இதயத்திற்கு வயிற்றின் வழியே எழுத்தால் ஒரு பாலம் அமைக்கத்துவங்குகிறார், சுகா.
சுகா, பலருக்கும் தெரிந்த பேச்சாளரான நெல்லை கண்ணனின் மைந்தன். தந்தையின் வழியில் செல்லாமல், தனக்கென்று ஒரு பாதையை திரைத்துறையில் அமைத்துக்கொண்டவர். கதாசிரியராக, திரை இயக்குனராக, கதை சொல்லியாக பல தளத்தில் இயங்குபவர். 'சொல்வனம்' தளத்தின் வாசகர்களுக்கு, தன் நெல்லை மணம் வீசும் கட்டுரைகளால், ஏற்கனவே பரிச்சயமானவர்.

தொடர்ந்து, தாயார் சந்நிதி, உபசாரம், வேணுவனவாசம் என்று பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், எனக்கு, இந்த புத்தகம், மிகவும் நெருக்கமானது. நெல்லை சென்றதே இல்லையென்றாலும், சுகா கைபிடித்து அழைத்துச்செல்லும் அவர் சிறு வயது ஞாபகங்கள், சிறு வயது ஞாபகங்களின் பழஞ்சுவையைத் தேடும் மனதுக்கு, ஒரு சக பயணியோடு, ஒரு சந்தோஷமான பயணம் போனது போல் இருக்கும்... அவரின் கதைசொல்லும் நடையிலும், எழுத்திலும் இயல்பாகவே துள்ளும் எள்ளலும் நகைச்சுவையும், நெல்லை மணத்தை சற்று தூக்கலாகவே கூட்டித்தருகிறது.

அவரும், குஞ்சுவும், மீனாட்சிசுந்தரமும் சிறு வயதுக்கே உரிய அப்பாவித்தனத்துடனும், குறும்புடனும், விடலைத்தனமாக செய்யும் செயல்கள், நம் வயிற்றைப் பதம்பார்த்துவிடுகின்றன...
முதல் முதலாக வேட்டி அணிந்த பின் (அங்கே அதை சாரம் என்று சொல்கின்றனர்) அவர்கள் அடிக்கும் கூத்தாகட்டும், கடலைக்குழம்பை, அசைவம் என்று நினத்து தின்று பண்ணும் அளப்பறையாகட்டும், மிதிவண்டி ஓட்டத்தெரியாமல், பெண்கள் முன் அவர்கள் செய்யும் 'சாகசம்' ஆகட்டும், படிக்கும் பொது யாரும் பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், தன்னந்தனியாக சிரிப்பதைப்பார்த்து அவர்கள் நம்மை வேறு மாதிரி நினைத்து விடக்கூடும்.

இதைப் படித்தபின், நெல்லையின் ஒவ்வொரு இடமும் இவர்களின் சாகசத்தைக் கொண்டே நம் நினைவில் நிற்கும். அடுத்த முறை நெல்லை செல்லும் போது ஒருக்கால், அந்த இடங்களுக்குச் சென்றால், சுகாவையும் , அதை விட அவர் நண்பன் குஞ்சுவையும் நினைத்து ஒரு மெல்லிய சிரிப்பு, பிறர் அறியாவண்ணம், உதட்டோரம் வந்து போகும் என்று நினைக்கிறேன்.

சுகா தன் தித்திப்பான, நகைச்சுவையான அனுபவங்கள் மற்றும் எழுத்தால் தனது பால்யகால திருநெல்வேலிக்கு நம்மை கைபிடித்து அழைத்துச்சென்று தாமிரபரணியில் முக்குளிக்க வைத்து விடுகிறார்.. திரும்பி வர இயலாமல் தடுமாறி விட்டேன்... நீங்களும் வந்து பார்க்கலாம்...
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் பிடித்தவர்கள், கண்டிப்பாக அனுபவிக்கவேண்டிய எழுத்து...
Profile Image for Premanand Velu.
241 reviews40 followers
September 2, 2021
நீங்கள் சினிமாவை விரும்புபவரா? உங்களுக்கு இது பிடிக்கும். உங்கள் பால்யகால நினைவுகளை மறக்காமல் திரும்ப அசை போடுவதில் சந்தோசப்படுபவரா? கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். திரையிசையை விரும்பி ரசிப்பவரா? இளையராஜாவை தேடி ரசிப்பவரா? உறுதியாகப்பிடிக்கும். திருநெல்வேலி அறிந்தவரா? ரசித்தவரா? பிடிக்கும்... பிடிக்கும்... இதையெல்லாம் தாண்டி, திருநெல்வேலிக்கே இதுவரை சென்றிராதவரா?
உங்களுக்கு இதற்கப்புறம் அந்த ஊரும், மக்களும், உணவும், மொழியும் மற்ற எல்லாமும் மிக தீவிரமாக பிடிக்க ஆரம்பித்து விடும்.

பொதுவாக திருநெல்வேலி என்றாலே அது எதோ ஒரு வகையில் நம்மைவிட நம் நாவுக்கு மகிழ்வளிக்கும்.
நெல்லை என்று சொல்லும்போதே அல்வாவில் ஆரம்பித்து சொதியில் பிரண்டு இன்ன பிற சுவைகள் நம் சுவை மொட்டுக்களில் ஊறுவது இல்லை?

இதைப்படிக்க ஆரம்பிக்கும் போது , திருநெல்வேலியில் உள்ள உணவுகளையும், அதை பரிமாறும் சைவ உணவகங்களையும், முதலில் அறிமுகப்படுத்தி அந்த உணர்வை கிளறி, நம் இதயத்திற்கு வயிற்றின் வழியே எழுத்தால் ஒரு பாலம் அமைக்கத்துவங்குகிறார், சுகா.
சுகா, பலருக்கும் தெரிந்த பேச்சாளரான நெல்லை கண்ணனின் மைந்தன். தந்தையின் வழியில் செல்லாமல், தனக்கென்று ஒரு பாதையை திரைத்துறையில் அமைத்துக்கொண்டவர். கதாசிரியராக, திரை இயக்குனராக, கதை சொல்லியாக பல தளத்தில் இயங்குபவர். 'சொல்வனம்' தளத்தின் வாசகர்களுக்கு, தன் நெல்லை மணம் வீசும் கட்டுரைகளால், ஏற்கனவே பரிச்சயமானவர்.

தொடர்ந்து, தாயார் சந்நிதி, உபசாரம், வேணுவனவாசம் என்று பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், எனக்கு, இந்த புத்தகம், மிகவும் நெருக்கமானது. நெல்லை சென்றதே இல்லையென்றாலும், சுகா கைபிடித்து அழைத்துச்செல்லும் அவர் சிறு வயது ஞாபகங்கள், சிறு வயது ஞாபகங்களின் பழஞ்சுவையைத் தேடும் மனதுக்கு, ஒரு சக பயணியோடு, ஒரு சந்தோஷமான பயணம் போனது போல் இருக்கும்... அவரின் கதைசொல்லும் நடையிலும், எழுத்திலும் இயல்பாகவே துள்ளும் எள்ளலும் நகைச்சுவையும், நெல்லை மணத்தை சற்று தூக்கலாகவே கூட்டித்தருகிறது.

அவரும், குஞ்சுவும், மீனாட்சிசுந்தரமும் சிறு வயதுக்கே உரிய அப்பாவித்தனத்துடனும், குறும்புடனும், விடலைத்தனமாக செய்யும் செயல்கள், நம் வயிற்றைப் பதம்பார்த்துவிடுகின்றன...
முதல் முதலாக வேட்டி அணிந்த பின் (அங்கே அதை சாரம் என்று சொல்கின்றனர்) அவர்கள் அடிக்கும் கூத்தாகட்டும், கடலைக்குழம்பை, அசைவம் என்று நினத்து தின்று பண்ணும் அளப்பறையாகட்டும், மிதிவண்டி ஓட்டத்தெரியாமல், பெண்கள் முன் அவர்கள் செய்யும் 'சாகசம்' ஆகட்டும், படிக்கும் பொது யாரும் பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், தன்னந்தனியாக சிரிப்பதைப்பார்த்து அவர்கள் நம்மை வேறு மாதிரி நினைத்து விடக்கூடும்.

இதைப் படித்தபின், நெல்லையின் ஒவ்வொரு இடமும் இவர்களின் சாகசத்தைக் கொண்டே நம் நினைவில் நிற்கும். அடுத்த முறை ந��ல்லை செல்லும் போது ஒருக்கால், அந்த இடங்களுக்குச் சென்றால், சுகாவையும் , அதை விட அவர் நண்பன் குஞ்சுவையும் நினைத்து ஒரு மெல்லிய சிரிப்பு, பிறர் அறியாவண்ணம், உதட்டோரம் வந்து போகும் என்று நினைக்கிறேன்.

சுகா தன் தித்திப்பான, நகைச்சுவையான அனுபவங்கள் மற்றும் எழுத்தால் தனது பால்யகால திருநெல்வேலிக்கு நம்மை கைபிடித்து அழைத்துச்சென்று தாமிரபரணியில் முக்குளிக்க வைத்து விடுகிறார்.. திரும்பி வர இயலாமல் தடுமாறி விட்டேன்... நீங்களும் வந்து பார்க்கலாம்...
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் பிடித்தவர்கள், கண்டிப்பாக அனுபவிக்கவேண்டிய எழுத்து...
Profile Image for Nivedha.
61 reviews15 followers
January 26, 2021
நினைவுகளை கிளரியது இந்த புத்தகம்.
Profile Image for Sudharsan Haribaskar.
49 reviews38 followers
June 8, 2013
மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே அவர்களின் பெற்றோர்,கல்வி, வளரும் சூழல்,நண்பர்கள் என பல காரணிகளின் அடிப்படையில் அவரவர்களின் விருப்பங்களும் ரசனைகளும் மாறுபடும்.ஆனால் சில விஷயங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக எல்லோருக்குமே பொதுவானதாக அமைந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு விஷயம் தான் நாம் பிறந்து வளர்ந்த ஊரின் மேல் நாம் கொண்டிருக்கும் 'ஊர்ப்பாசம்'. நீங்கள் யாராக இருந்தாலும் சரி...உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... சமுதாத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி..ஒரு நிமிடம் நமக்கு மிகவும் பிடித்த இடம் எதுவென்று யோசித்துப் பார்த்தால் அது நிச்சயம் நம் சொந்த ஊராகத்தான் இருக்கும்.

ஏனெனில் நம் ஊரின் ஒவ்வொரு தெருவிற்குப் பின்னும், ஒவ்வொரு இடத்திற்குப் பின்னும் நமக்கு ஒரு மறக்க முடியாத கதை இருக்கும்.ஒரு இனிமையான நிகழ்வு இருக்கும்.ஒரு மறக்க முடியாத மனிதர் இருப்பார். முதன்முதலில் சைக்கிள் ஓட்டிப் பழகிய தெரு, முதன்முதலில் குடிபெயர்ந்த வாடகை வீடு, வெயில் மறந்து விளையாடிய மைதானங்கள், பதின் பருவ காதலிக்காக காத்திருந்த தெருமுனை, திருவிழாக் காலங்களில் தூக்கம் மறந்து சுற்றித்திரிந்த வீதிகள், நண்பர்களோடு கும்மாளமிட்ட ஆற்றங்கரை, நீச்சல் பழகிய கோவில் குளம், பால்வாடியிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கூடம்,வீட்டுக்கு தெரியாமல் படம் பார்த்த சினிமா கொட்டகை, இப்படி நினைத்துப் பார்த்து நெகிழ்ந்து போக எத்தனையோ உண்டு.

அப்படி தான் பிறந்து வளர்ந்த ஊரையும், ஊர் மக்களையும் பற்றி மண் மனம் மாறாமல்...ரசித்து..சிலாகித்து.. 'சுகா' எழுதியது தான் இந்த மூங்கில் மூச்சு. சுகா - சுத்தமான 'திருநவேலி'க்காரர்.இப்போது வசிப்பது சென்னையில்.திரைத்துறையில் பணிபுரியும் இவரின் முதல் படமான 'படித்துறை' விரைவில் வெளிவர இருக்கின்றது.பாலுமகேந்திரா பட்டை தீட்டிய வைரங்களுள் இவரும் ஒருவர்.வேணுவனம் என்ற பெயரில் ஒரு வலைப்பூவும் எழுதிவருகின்றார்.வேணுவனம் - இது அவரது வலைப்பூவின் சுட்டி.இவரது 'மூங்கில் மூச்சு' விகடனில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பினைப் பெற்று, பின்பு விகடன் பிரசுரத்திலேயே புத்தகமாக வெளிவந்தது.

திருநெல்வேலி என்றாலே அல்வா,அறுவா,வாலே போலே நெல்லைத் தமிழ் என்று நமது தமிழ்த்திரையுலகம் அடையாளப் படுத்தியிருக்கின்ற வேளையில் நெல்லைத் தமிழ் மணக்க சுகா ஊர்ப் பெருமைகளை எடுத்தியம்புகையில் நமக்கு ஆச்சரியம் மிகும் என்பது உறுதி.வெறுமனே ஊர்ப்பெருமை மட்டும் பேசாமல் அந்த ஊரில் தன் வாழ்வில் சந்தித்த/கடந்து சென்ற பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அழகுற சொல்லியிருப்பது தான் மூங்கில் மூச்சின் தனிச்சிறப்பு.எப்படி அமரர்
திரு.சுஜாதா அவர்களின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’-இன் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரையும் நம்மால் இன்றளவும் மறக்க முடியாதோ..அதேபோல் கனேசண்ணனையும், குஞ்சுவையும், வரதராஜன் மாமாவையும்,சுந்தரம் பிள்ளை பெரியப்பாவையும் நம்மால் மறக்கவே முடியாது.

தாமிரபரணி (தாம்ரவருணி) பெருமையோடு தொடங்கும் முதல் அத்தியாயம் அப்படியே ஒரு நெடும் பயணமாய்த் தொடங்கி பாலுமகேந்திரா, எம்.ஜி.ஆர்-சிவாஜி;ரஜினி-கமல் கால ரசிகர் மன்ற போட்டிகள்,ஆங்கிலம் படுத்திய பாடு, இலங்கை வானொலியில் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த பாடல்கள், பாடல்களுக்கு பின்னாலிருந்த காதல்கள், டூரிங் டாக்கீஸ் சினிமா, திருவிழாக்கால தேவதைகள் துரத்தல்,நெல்லைத்தமிழ், ஐஸ்பால் விளையாட்டு,சென்னையில் வீடு தேடியலைந்த கதை,கேசட்டில் விரும்பி பதிந்த பாடல்கள், நண்பன் குஞ்சு-வின் ரகளைகள்,இளையராஜாவின் இசை, ரிக்‌ஷாக்கார செல்லப்பா மாமா,பாட்டுக் கச்சேரிகள்,குற்றால சீசன்,நெல்லையின் கிளப் கடைகள் (உணவகங்கள்) என பலவாறாகப் பயணித்து காலங்களைக் கடந்து தற்போதைய சுகா-வோடு நம்மை இணைக்கின்றது.

நெல்லை வட்டார வழக்கையும், காலத்தினால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும், நமக்குத் தெரியாத சென்ற தலைமுறை மனிதர்களையும், இசை-உணவு-உடை என பல்வேறு
தளங்களில் அவர்களின் விருப்பங்களையும், மிக அழகாகப் பதிவு செய்திருக்கின்றார் சுகா.மெலிதான நகைச்சுவை இழையோடும்
நடையைக்கொண்டிருந்தாலும் அங்கங்கே நெஞ்சை உலுக்கும் சோகங்களையும் தரத் தவறவில்லை இந்த ’மூங்கில் மூச்சு’.

மொத்தத்தில் 'மூங்கில் மூச்சு' படித்து முடித்தவுடன், "சே... நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கே....எத்தனயோ வித்தியாசமான மனுஷங்க இருக்காங்களே.... கண்டிப்பா நம்ம ஊரப் பத்தியும்..மக்களைப் பத்தியும் நாமளும் எழுதனும்யா " என்று எண்ண வைப்பது தான் சுகாவுக்குக் கிடைத்த வெற்றி.திருவாருர்க்காரனான எனக்கு திருநெல்வேலியைப் பிடிக்கவைத்த/ரசிக்கவைத்த இந்த 'மூங்கில் மூச்சு' நிச்சயமாக ஒரு தவறவிடக்கூடாத புத்தகம்.

புத்தகம்: மூங்கில் மூச்சு
ஆசிரியர் : சுகா
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை : ரூ.95

My blog post on this book : http://ungalsudhar.blogspot.in/2012/0...
Profile Image for Shiva Subbiaah kumar.
67 reviews29 followers
February 27, 2018
Thanks to Suga the author for his nostalgic writing about 'Tirunelveli' in weekly magazine 'Ananda Vikatan' which was later combined and published in paperback format.
Moongi Moochu is an account of life experience and life events of a man in and about a small town. The author speaks about the minute things that should be addressed once in a while like the places he visited from childhood, classic old theatre, friends, relatives, places and people.
3 reviews
January 19, 2023
மூங்கில் மூச்சு

என் வாழ்வை,வாசிப்பை செதுக்கியத்தில் முக்கியமான புத்தகம்.

பெரிய நாவலோ,இலக்கியமோ,எதும் புரியாத கவிதை புத்தகமோ இல்லை. முக்கியமாக சிறுகதை என்ற பெயரில் வரும் பெருங்கதையும் அல்ல.

சுகா(நெல்லை கண்ணனின் மகன்) என்ற திருநெல்வேலி காரரின் வாழ்பவனுங்களை சுவைபட 222 பக்கத்தில், 33 அத்தியாமாக சொல்லியிருக்கிறார்.

இந்த புத்தகம் நேரம் இருக்கும் போதெல்லாம் நினைத்து பார்த்துருக்கிறேன், அந்த அளவிற்கு என் மனதை ஆக்கிரமித்த புத்தகம்.

எதாவொரு பாடல் கொஞ்சம் நீளதா என நினைப்பதைபோல்
நினைக்கவைக்கும் இப்புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும்.

வாழ்பனுவங்களை நேசிக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

பல பிற மொழி சினிமாக்கள்,கவிதைகள்,நூல்கள்,பாடல்கள் என நிறைய தகவல்கள் கொட்டி கிடக்கின்றன்.வாசித்து முடித்தவுடன் மனதில் வீசும் வட்டார வழக்கின் வாசம்.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
January 19, 2022
I really loved Kunju's character throughout the series. Everyone has a friend like Kunju or everybody has some parts of Kunju in them. Apart from that, this essay series takes the readers back to various phases of their life especially their 10 to 20s and also the mid life. Also, I started having a new love for TiRuNaVeLi . @Suka saar, indha review comment enikkaachum padicha, Kunju'va kettadha sollunga.
p.s. i hope it is not a fictional character (perhaps name might be fictional) in your life.
Profile Image for Dinesh Kumar.
64 reviews4 followers
March 12, 2013
Awesome way of narrating life events... U can just enjoy if u r from Tirunelveli..
23 reviews2 followers
June 21, 2019
Interesting Book

Interesting. Easy to read. Structure and language are simple. Facts in it are engaging. Thank you Suga Sir and Tirunaveli
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.