நள்ளிரவு. நடுநடுவே வானத்தில் பளீர் பளீர் என்ற மின்னல். 'வானம் ஒரு தந்தை. பூமி ஒரு தாய்; தாய்க்கும் தந்தைக்கும் இடையே உள்ள அன்புப் பிணைப்பு நான்' என்று அறிவுறுத்தியபடி மின்னல் மின்னிக் கொண்டிருந்தது. ஒரு பரந்தவெளி. அதன் நடுவே ஒரு வீடு. தனிமையிலே தவமிருக்கும் வீடு. தவமிருக்கும் முனிவர் மனத்திலே அமைதியிருக்கும்; ஆனந்தமிருக்கும். ஆனால் இந்த வீட்டிலே அமைதி இல்லை; ஆனந்தம் என்ற உணர்ச்சி விடுமுறை எடுத்துச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன.
Javar Seetharaman alternatively spelled as Javert Seetharaman or Javar Sitaraman or Jawar Seetharaman (Tamil: ஜாவர் சீதாராமன்) is a Tamil author, script writer and actor. N Seetharaman was a lawyer from Trichy. He joined Gemini Studios to pursue a career in films. Besides acting, he also wrote the script and dialogues for a number of Tamil and Hindi Films. He came to be called as Jawar or Javert due to his memorable portrayal of Javert in the 1950 Tamil film, Ezhai Padum Padu based on Les Misérables by Victor Hugo.
ஊளையிடும் வீணையும், மூக்கைத் துளைக்கும் மல்லிகை நாற்றமும் ஒரு மனிதனின் மனதை மயக்க முடியுமா? தனது கண் பார்வையை வைத்து இன்னொருவரை வசியம் செய்ய முடியுமா?
தனது அம்மாவின் சாவிற்குப் பிறகு கொடூரமான தந்தையிடம் இருந்து விலகி திருச்சியில் மாமா உடனும் அவரது மகள் சீதா உடனும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறான் ராமநாதன். தந்தையின் சாவு அவனுக்கு புதிய உறவுகளை அளிக்கிறது. முதல்முறையாக அப்பொழுது தான் அவனுடைய ஒன்றுவிட்ட தம்பி திலீபனையும் அவனது தாயார் மீனாட்சியயும் சந்திக்கிறார். திலீபனின் அமைதியும் அறிவும் சீதாவை அவன்பால் ஈர்க்கிறது. நிறைய போராட்டங்களுக்கு பிறகு சீதாவின் தந்தை, ராமலிங்கம், அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். எல்லாம் சீராக சென்று கொண்டிருக்கும் சமயத்தில் திலீபனின் மனதில் தோன்றி அவனை இம்சைப்படுத்தும் ஆனந்தி யார்? ஏதோ ஒரு சக்தி திலீபனை அவனது இயல்புக்கு மாறாக அவனை நடக்க செய்கிறது. சீதாவுடன் தொடங்கவிருக்கும் பொன்னான வாழ்க்கையை இழக்கும் தருவாயில் திலீபன்.
அவனை தாக்குவது மனநோயா, இறந்த அவனது தந்தையின் சாயலா, கொடிய எண்ணம் கொண்ட சில மனிதர்கள் செய்யும் சூழ்ச்சியா?
ராமநாதனால் இந்த புலன்களுக்கு அப்பார்பட்ட மாயையிலிருந்து அவனது தம்பியை காப்பாற்ற முடியுமா?அல்லது இந்த முயற்சியில் தன்னையே இழப்பானா?...
அரை நூற்றாண்டுக்குப் பிறகும் திகிலூட்டும் வகையில் அமைந்திருக்கும் எழுத்தாளரின் வர்ணனைக்கு வாழ்த்துக்கள்!
ஒலிபுத்தகமாகக் கேட்க நேர்ந்தது. பேய் கதையைப்போல ஆரம்பமாகி, பூராவும் ரத்தக்களரியாக முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக, அன்னையை இழந்த குழந்தையின் கதையாக மாறி, காதல் கதையாக மாறி, போலீஸ் கதையாக மாறி, ஆச்சர்யமளிக்கும் வகையில் அறிவியலையும் புகுத்தி நல்லதொரு படைப்பை தந்திருக்கிறார் திரு ஜாவர்.
ராஸ்புதின், சித்தர்கள் மற்றும் பலர் வருகிறார்கள். இறுதியில் உருவம் மாறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஆங்கிலத்தில் body swapping trope என்பார்கள். மனதில் இருப்பதை சொல்வது சரி . பொதுவாக யாராவது mind reading செய்தால் கடவுள் என்று அழைக்க தோன்றும். யாரும் விரும்ப மாட்டார்கள்.
This entire review has been hidden because of spoilers.
பல வருடங்களுக்குப் பிறகு, திடிரென்று இந்தக் கதை ஞாபகத்துக்கு வந்தது.இதை முதலில் டிடியில் சிரியலாக ஒவ்வொவொரு வாரமும் வெளிவந்த போது பார்த்தேன். ஆக்ட்ரெஸ் வினோதினி அவர்கள் ஆனந்தியாக நடித்து இருப்பார்கள். ஊட்டியில் ஒரு பெரிய பங்களாவின் ஹாலின் நடுவில் விநோதினியான ஆனந்தி வீணை வாசிக்கும் காட்சியை நினைக்க , இப்பொழுதும் பயம் குறையாமல் வயிற்றில் கலவரத்தோடு பார்த்த அந்த ஞாபகம் இருக்கிறது. அதே போல் புத்தகம் படிக்கும் போதும்.
ஊட்டி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? குளிர்ச்சியான மலைப் பிரதேசம், வளைந்து வளைந்து செல்லும் பெல்பிண்டுகள் நன்றாக அடர்ந்து வளர்ந்த யூகலிப்டஸ் மரங்களின் வாசனைகளும், பசுமையான நினைவுகளும்தான்.
ஆனால் இந்த புத்தகம் நீங்கள் படித்து விட்டேர்களேயானால், அந்த நடுநிசி ராத்திரியும் மல்லிகைப்பூவின் மணமும், அந்த வீணையின் ராகமும் அந்த குளிர்ந்த காற்றும் நம்மை பயமுறுத்தும். நீங்கள் அடுத்த முறை ஊட்டிக்கு செல்லும் போது இந்த நினைவலைகைளை புத்தகம் தர மறப்பதில்லை. அந்த அளவுக்கு இந்த நாவலின் கதை அமைந்துள்ளது.
பணக்காரரான ராமலிங்கம், தன் ஒரே மகள் சீதாவுடன் மனைவியை இழந்து வாழ்த்து வரும் நிலையில், கணவனின் கொடுமையில் வாழ்ந்த தங்கையின் கடைசி அழைப்பு வர, அவளின் வேண்டுகோளுக்கிணங்க, அவளின் மகனாகிய ராமநாதனையும் சீதாவோடு வளர்க்கிறார். அவனை மருமகனாக்கி தன்னுடன் வைத்துக் கொண்டு மகளோடு சேர்ந்து ஒரே வீட்டில் சந்தோசமாக வாழ நினைக்கிறார். வருடங்கள் ஓட எல்லாம் கைகூடி வரும் நிலையில், தங்கை கணவனின் இரண்டாம் மனைவியும் அவரது மகன் திலீபனும் குடும்பத்தில் ஒருவர் ஆக, சீதாவின் மனமோ திலீபனையே சுற்றி வருகிறது. ராமநாதனும் சூழ்நிலையை புரிந்து கொண்டு மாமாவிடம் விளக்கி, இருவருக்கும் கல்யாணம் என நிச்சியக்கப்பட்ட நிலையில், ராமலிங்கம், தனது புதிய மருமகனுக்காய் ஊட்டியில் எஸ்டேட் ஒன்று வாங்குவதற்கு ராமநாதனையும் திலீபனையும் அனுப்ப, ஆனந்தியை சந்தித்த பிறகு, அதற்கு அப்பறம் நிகழும் திலீபனின் மாற்றங்கள், ஆவியா, கண்பார்வை வசியம் என பல நிகழ்வுகள் ராமநாதனுக்கு புரியதா புதிராய் இருக்க குடுப்பதிற்குள் குழப்பங்கள் நிகழ்கிறது.
இந்த குழப்பங்கள் எல்லாம் யாரால் எதற்காக என்று ராமநாதன் கண்டுபிடிப்பதும், பிறகு வரும் பிரச்னைக்கு அவன் எடுக்கும் முடிவுகளும் அடுத்தடுத்து வரும் பக்கங்களில் கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் திரு.ஜாவர் சீதாராமன் அவர்கள் கதையை கொண்டு சென்று இருக்கும் விதம் அற்புதம், .
இதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் முக்கியமான கதையின் விரிவாக்கத்தை ஒரு கடிதத்தின் முலமாக அழகாக கொண்டு போக முடியும் என்று நிரூபித்து இருக்கிறார்.