Jump to ratings and reviews
Rate this book

தோல் [Thol]

Rate this book
டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடமை இயகத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்ஸிம் கோர்க்கி முன்னெடுத்த சோசலிச யதார்த்தவாதம் தமிழ் நாவல் உலகில் விழுதுவிட்டு நிற்பதற்கு இந்நாவல் ஒரு சான்று. 2012ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நாவல் இது.

712 pages, Hardcover

First published January 1, 2010

11 people are currently reading
205 people want to read

About the author

D. Selvaraj

3 books4 followers
D. Selvaraj (Tamil: டி. செல்வராஜ்; 14 January 1938 – 20 December 2019) was an Indian writer who wrote novels, short stories, and plays in the Tamil language. A lawyer by profession, he was involved in various Communist and left-leaning writers' organisations such as the Democratic Writers Association of India and the Tamil Nadu Progressive Writers Association (TNPWA), of which he was an executive committee member. He received the Tamil Nadu Government's literary award for the best novel of 2011 for his work on tannery workers of Southern Tamil Nadu titled Thol. He did the field work for Thol for a decade before writing it. The novel was awarded the Sahitya Akademi award for Tamil in 2012.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (44%)
4 stars
13 (24%)
3 stars
11 (20%)
2 stars
4 (7%)
1 star
2 (3%)
Displaying 1 - 10 of 10 reviews
Author 2 books16 followers
September 29, 2020
தோல் என்னும் பெயருடனும் , தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய புத்தகம் என்கிற அறிமுகத்துடன் ஆரம்பிக்கும் இந்த சாஹித்ய அகாடமி விருது பெற்ற இந்த புத்தகம் நூறு , நூற்றியிருபது பக்கத்துக்கு அப்புறம் ஒரு கம்யூனிச சித்தாந்த , தொழிற்சங்க பிரெச்சனைகளை பற்றி பேசக்கூடிய ய புத்தகமாக உருமாறி விடுகிறது . இந்த கதைக்கான கருவை தோல் பதனிடும் தொழிலாளர்களிடமிருந்து ஆரம்பிக்காமல் , மில் தொழிலாளர்களிடமிருந்தோ அல்லது மிளகாய் அளக்கும் தொழிலார்களிடமோ இருந்து ஆரம்பித்திருந்தாள் கூட முடிவிலா கதையின் ஓட்டத்திலோ எந்தவொரு மாற்றமும் இருந்திருக்காது .இந்த புத்தகம் சாஹித்ய அகாடமி விருதுக்கு பெற தகுதியுள்ள புத்தகமா என்கிற கேள்வி படித்த பல பேரிடம் இருக்கிறது . இலக்கியத்திற்கான விருது என்பது அப்போது வாழ்ந்த சமூகத்தின் வாழ்க்கை முறை , அவலங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் இலக்கியர்த்திக்கு கொடுக்கபடுபவை (இலக்கியத்திற்கான வரவுகோள் பல. அதில் முக்கியாயமானது இதுவென்று நான் கருதுகிறேன் ) . அதன்படி பார்த்தால் இந்த புத்தகம் விருதுக்கு மிக தகுதி வாய்ந்த புத்தகம் என்றே என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும் .
Profile Image for Mahesh.
3 reviews1 follower
December 15, 2020
So is this the new standard for Sahitya Academy? Makes me sad.
While it is a sensitive topic with inside information, it is such a boring read. Author has left / communist views. Presents some facts. Other than that, nothing else to do with an award winning fiction.
Profile Image for Arun Bharathi.
102 reviews2 followers
October 4, 2022
டி. செல்வராஜ் எழுதிய "தோல்" எனும் நாவல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வியலை பதிவு செய்து, நம்மை அவர்களின் உலகுக்கு இழுத்துச் செல்கிறது. அடிமை வாழ்விலிருந்து விடுபட அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும், சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும் அறவழி போராட்டங்கள் மூலமாக எவ்வாறு தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கின்றனர் என்பதே இந்நாவலின் மையக்கரு.

பல்வேறு ஊர்களிலிருந்து பிழைப்புக்காக வந்த மக்கள் முறி எழுதி கொடுத்து தோல் ஷாப்புகளில் சேர்வது வழக்கம். வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், கூலி அனைத்தும் அன்றாட தேவைகளுக்கும், சாராயத்துக்கும் தீரும் நிலையில் வட்டியும் கட்ட முடியாமல், அடிமைகளாக மரணிப்பதே இவர்களின் வாழ்க்கை. சாராயம் அவர்கள் உடல் வலியைப் போக்கிக்கொள்ள அத்தியாவசியமாகிறது. தோல் பதனிடும் முறையால் அவர்கள் நோயுற்று மரணிப்பதும் சகஜமான ஒன்று. ஊருக்குள் மாடு செத்து விழுந்தால் வந்து தூக்க கீழ்சாதியினரே பணிக்கப்படுவர். தோல் ஷாப்புத் தொழிலாளர்களும் அதே சாதியினர் தான். வர்க்க பேதம், சாதிய அடக்குமுறை இரண்டையும் இம்மக்கள் அனுபவிக்கும் அவலம். தீண்டாமையின் உச்சமாக காற்று கூட சேரியின் வாயிலாக போகாமல் ஊருக்குள் வருமளவுக்கான திட்டமிடல் ஊரையும் சேரியையும் பிரிப்பதில் இருந்திருக்கிறது.

தோல் ஷாப் ஒன்றில் அபலைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் முதலாளியின் மைத்துனனை ஓசேப்பு எனும் தொழிலாளி தாக்குகிறான். முதலாளியின் அடியாட்கள் அவனைத் தேட ஆரம்பிக்க, வெளியூருக்கு தப்பிச் செல்ல எத்தனித்து ஓசேப்பு இரயில் நிலையத்தின் பொது கழிப்பறையில் மறைகிறான். பராமரிப்பில்லாத அந்த கழிவறையில் தேங்கி நிற்கும் மலத்தை சாக்கடையில் இருந்து வெளிவந்த பன்றி சுவைக்கிறது. அந்த காட்சியும், அந்த நாற்றமும் அவனை வெளியே துரத்தியிருக்க வேண்டும். அது தான் வாசகனின் எதிர்ப்பார்ப்பும். ஆனால், மலக்கழிவின் வாடை குடலைப் பிடுங்கினாலும், தோல் ஷாப்பின் ரத்தம் கலந்த நிணக்கழிவின் அழுகல் வாடையை விட மோசமாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு காட்சி தோல் ஷாப்பு வேலையின் கடினத்தையும், கொடூரத்தையும் விளக்கி நம்மை கலங்கடிக்கிறது.

அடியாட்களிடம் பிடிபடும் ஓசேப்புக்கு ஆதரவாக வரும் கிருத்துவ பாதிரியாருடன் சேர்ந்து தொழிலாளர்கள் திரள்வதே தங்கள் முதலாளிகளுக்கெதிராக அவர்கள் எழுப்பும் முதல் குரல். தோல் ஷாப்பில் நடக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் எதிராக குரல் கொடுக்கும் தொழிலாளர்களை ஒன்றிணைக்க தொழிற்சங்க அமைப்புகள் உருவாகின்றன. அவை அவர்களின் ஊதிய உயர்வு, முறி ரத்து ஆகியவையோடு அவர்கள் சுயமரியாதையையும் மீட்டெடுக்க உதவுகின்றன. அனைவரும் ஒரு அமைப்பாய் அதிகார அத்துமீறல்களையும் மீறி முதலாளித்துவத்தையும், சாதிய முரணையும் சட்டத்தின் துணை நின்று எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதே நாவல் நெடுக பரவிக் கிடக்கிறது.

உயர்சாதி வக்கீல் சங்கரன், சுப்புவாடன் போன்ற துப்புரவு பணியாளர்கள், ஓசேப்பு போன்ற தோல் ஷாப் பணியாளர்கள் சங்கத்தில் இணைந்த பிறகு அவர்களுள் நிகழும் உளவியல் ரீதியான மாற்றங்களை பற்றிய விவரணை தொழிற்சங்கங்களின் பலத்தை பிரதிபலிக்கிறது. அனைவரையும் சமமாய் பார்த்தும் சேரி தெருவின் சகதிக்காடான நிலை, தோல் பதனிடும் மற்றும் மலம் அள்ளும் பணியாளர்கள் மீது வீசும் நாற்றம், அவர்களின் அழுக்குத் தோற்றம் அனைத்துக்கும் பழக சங்கரனுக்கு காலம் தேவைப்டுகிறது. சுப்புவாடன் போன்ற துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் சாதியின் விளைவாக வரும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவர முடியாமல் சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பு தடுக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக இவ்விருவர் நடுவே உடைபடாத மதில்களை "தோழர்" என்ற ஒற்றைச் சொல் உடைத்தெரிகிறது.

நாவலில் தனிமனித நாயக சாகசங்கள் ஏதும் இடம்பெறாது, உண்மைக்கு நெருக்கமாக, உணர்வு பூர்வமாக அமைகிறது கதையின் போக்கு. தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே நாவலின் நாயகன், அமைப்புக்கான கொள்கையின் துணையோடு நடத்தப்படும் சட்ட போராட்டங்களே சாகசங்கள்.

பொதுவுடைமை இயக்கங்களின் தேவையை உணர்த்தும் இந்நாவல் பல இடங்களில் மாக்ஸிம் கார்கியின் "தாய்" நாவலை நினைவூட்டுகிறது.
188 reviews4 followers
February 7, 2013
This book thol got very familiar after winning "Sahithya academy award'. This book focusses more on group of people who work in Leather companies to make the raw skin of goat and cow to more usable form. The story stimulates the intense feeling of leather company owner who behave very cruel to the company workers. good read..
Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews24 followers
November 19, 2019
தமிழ் இலக்கியங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் இன்னல்களை மட்டுமே பேசுகின்றன எனவும் அவர்களின் எழுச்சியை பற்றி பேசுவதை தவிர்த்து விடுவதாகவும் முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பது இந்த நாவல் பயணிக்க போகும் திசையை நமக்கு முன்னரே உணர்த்திவிடுகிறது. அதற்கு ஏற்றார் போல் நம் இரக்கத்தை கோரும் எத்தனையோ வாய்ப்பிருந்தும் பிரச்சனை, அதன் விளைவுகள், அதற்கு மக்கள் ஆற்றும் எதிர்வினை என்றே நாவலை வடித்திருக்கிறார் செல்வராஜ்

தொழிலாளர் ஒடுக்குமுறை, பொதுவுடைமையின் உதவியுடன் அவர்கள் மீளுவது என்ற கதையை எங்கும் பொருத்தி விடலாம். ஆனால் தோல��� என்ற தலைப்பு வைத்ததற்கு இன்னும் அதிகமாக அந்த தொழில் சார்ந்த இன்னல்களை பேசியிருக்கலாம்

ஒரு கட்டத்தில் சங்கரனையும் அவர் தம் சுற்றத்தையும் சுற்றியே கதை நகர்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவிய ஆண்டைகளின் கதையை பேசுவதற்கு தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே செல்வராஜ். நீங்கள் பாண்டிசேரியின் தங்க பறையனின் வரலாறையும், சக்கிலிய மக்கள் அங்கு வந்து சேர்ந்த கதையையும் இன்னும் விரிவாக பேசியிருக்கலாம்

நாம் ஒன்றும் சாகித்ய அகாடமி விருது வாங்கிய அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்தவர் இல்லை. ஆதலால் பிறரை போல் இதை ஒப்பிட்டு அவ்விருதுக்கு இந்த புத்தகம் தகுதியானதா என்ற விவாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை.
Profile Image for Nandhakumar.
15 reviews1 follower
March 11, 2018
I really had different opinion on communism before reading this book. After this I kind of started to believe that communism is a very much needed thing in our society.
The best thing about this book is author combined communism with a story which is almost based on a real life incidents and the story runs in a place where most of the people doesn't know what is communism.
And the book talks about many things starting from love to sacrifice. But not in a great detail though. And I think that is one advantage because of that book never changes track.
Overall : Educating entertainer.

I just don't understand one ritual used by author in this book is that almost all negative character in this books are wierd looking or scary looking. I mean why? Does author tries to convey that good looking persons don't do bad things or due to their bad looks people turned into some psychotic nature?
Profile Image for KARTHIKEYAN  RAJAMANICKAM.
26 reviews1 follower
July 14, 2023
தோல் தொழிலாளர்களின் வாழ்க்கை. அடிமை முறையிலிருந்து எழுச்சி பெற்று சமூக வெற்றியை வர்ணிக்கும்
இலக்கிய பதிவு.
Profile Image for Yuvaraj Ravichandiran.
15 reviews
October 12, 2016
The book describes the life of workers in factories during 1950-60. The way the novel evolves can show us the need of brotherhood between fellow workers under socialist view. It can show us some unheard truths which we need to know.
Profile Image for Jagan Sagaya Nathan.
26 reviews2 followers
April 20, 2020
அருமை அழகு வீரம் கனவு எல்லாம் உண்டு
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.