ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவு நாவல் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. தமிழகத்தின் சுற்றுச்சூழல் அழிவைப்பற்றி எழுதப்பட்ட முக்கியமான நாவல் இது.
ரப்பர் இந்நாவலில் ஒரு குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரப்பர் வாழையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ரப்பர் அன்னிய மரம். அதன் ரத்தத்தை உறிஞ்சி மக்கள் பொருட்களை தயாரிக்கிறார்கள். அது மண்ணின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. வாழை அப்படி அல்ல. ரப்பர் இங்கே வணிகப்பயிராகவும் வணிகமயமாதலின் அடையாளமாகவும் உள்ளது
காட்டில் கூலி வேலைக்கு வந்த பொன்னு என்ற கதாபாத்திரம் மெல்ல மெல்ல காட்டை ஆக்ரமித்து ரப்பர் வேளாண்மை செய்து பொன்னு பெருவட்டன் ஆக மாருவதும் அவருக்கு அடுத்த தலைமுறையில் செல்வம் உருவாக்கும் சீரழிவுகளால் அக்குடும்பம் வீழ்ச்சி அடைவதும் அதில் ஒருவன் மட்டும் ஒரு மனசாட்சியின் விழிப்பை அடைந்து உண்மைகளை திரும்பிப்பார்க்க தயாராவதும்தான் கதை.
ரப்பரின் ஆரம்பமே ஒரு பண்னை வீட்டுக்குள் கார் நுழைவதிலிருந்து ஆரம்பிக்கிறது.ஒரு மிகப்பெரிய குடும்பத்தின், மிகப் பணக்காரக் குடும்பத்தின் அழகை வர்ணித்துக்கொண்டே அது மியூசியம்போல இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.
அவர்கள் எப்படி பெருவட்டர்கள் ஆனார்கள்.. அதற்கு முன்பு அவர்களின் நிலை என்ன? அந்த சூழ்நிலையில் அங்கிருந்த நாடார்களுக்கு நிகழ்ந்ததென்ன?? யார் செய்தது?? அங்கு சமூகத்தில் நடந்த கிறிஸ்தவ மதமாற்றம் குறித்தும் அது அந்த சூழ்நிலையில் எப்படி ஏற்பட்டது என்பதையும் அது எப்படி அவர்களின் வாழ்க்கையில் அந்தஸ்தைக் கூட்டியது என்பதையும், வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றியும் ஏன் அப்படி ஆனார்கள் என்பதையும் அந்த மாற்றங்களில் ரப்பரின் பங்கு என்ன என்பதையும் விவரிக்கிறார்..
பெருவட்டன் குடும்பத்தில் இருக்கும் லிவியும், பிரான்ஸிசும், பெருவட்டத்தியும் (பெருவட்டரின் மனைவி) எதிர் எதிர் துருவங்களாக இருக்க, பெருவட்டன் அரசியல் சதுரங்கத்தில் கானாமல் ஆக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை தகப்பனார் பெரிய பெருவட்டன் சம்பாத்தியத்தில் ஆரம்பித்து இறுதியில் எல்லாவற்றையும் இழப்பதுடன் முடிவடைந்து விடுகிறது.
கங்காணி என ஒருவர் கதையில் பெரிய பெருவட்டரின் ஆரம்பகால நன்பனாக வருகிறார். அவரும், பெரிய பெருவட்டனும் இணைந்துதான் மலையை விவசாய பூமியாக்கி வளம் பெற்றனர். கங்காணி, பெரிய பெருவட்டர் மரணப்படுக்கையில் இருக்க அவரை வந்து சந்திக்கும்போது கங்காணியின் உடல்வலிமை கண்டு, பெருவட்டர் நாணத்தால் அவரை சந்திக்க அஞ்சுவதும், பெருவட்டரின் குடும்பத்தால் அவமரியாதையாக அவரை நடத்தும்போது புதுப்பணக்காரர்களின் வாழ்க்கையும், அதைப்பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் கங்காணியால் தாண்டிச்சென்றுவிட முடிகிறது, அவரது எளிய வாழ்க்கைமுறையினால், முதலாளியின் நிலைகண்டு வருந்துவதும், குழந்தைபோல அழுவதும் மிக இயல்பாய் சொல்லப்படுகிறது.
பணக்காரர் ஆன வழியை இறுதிக்கலத்தில் நினைத்துப்பார்க்கிறார் கிழவர். எதற்கு இவ்வளவு கொள்ளையும், கொலையும் செய்து சம்பாதித்தோம், எதற்காக என்ற எண்ணம் அவரை ஆட்கொள்கிறது. வாழும் காலத்தில் முரடனாகவும், யாருடைய உதவியும் தேவைப்படாத வாழ்க்கையை வாழ்ந்து இருந்த பெரிய பெருவட்டர் இறுதிக்காலத்தில் தனது அடிப்படித் தேவைகளுக்குக் கூட அவரது உதவிக்காக அமர்த்தப்பட்ட குஞ்ஞியின் உதவியில் வாழநேர்வதை நினைத்து சுயபரிதாபம் கொண்டு தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறு வேண்டுகிறார்.
அவர் உயிரோடு இருப்பதால் வீட்டை விற்கத்தயங்குகிறார் பெருவட்டர். அதனால் பெரிய பெருவட்டர் இறக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பெற்ற தகப்பன் சாகவேண்டும் என நினைத்த அந்த எண்ணமே அவரைக் கொல்கிறது. ஆனால் வியாபாரத்தில் தப்பிக்க வேறு வழியில்லை. சொத்தை விற்றால்தான் முடியும் என்ற நிலை..இல்லையெனில் மொத்தமாக முழுகுவதுடன் கடனும் இருக்கும்.
பெருவட்டத்திக்கு (பெருவட்டரின் மனைவி) பல தவறான தொடர்புகள்.பெருவட்டருக்கும், பிரான்ஸிசுக்கும் கூடத் தெரியும். பெருவட்டருக்கு அவளது அழகின்மேல் மோகமும், அவள் தன்னை அவமதிப்பதுகூட அவளது உரிமை எனவும் நம்பத்தலைப்படுகிறார்.
பெருவட்டரின் வீட்டில் வேலைசெய்யும், அறைக்கல் குடும்பத்து பெண்ணான தங்கம் பெருவட்டத்தியால் அவ்வப்போது அவமரியாதை செய்யப்பட்டும் லிவியால் அவ்வப்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டும் அவள் அங்கேயே தொடர்ந்து வேலைசெய்வது அவளது தேவை கருதியே. பெருவட்டருக்கும் அவரை அவமதித்த பழைய எஜமானர்களை மீண்டும் அவமதிக்ககூடிய ஒரு வாய்ப்பாகவே கருதினார். அதை வெளியே சொல்லாவிட்டாலும் மனதில் அதுதான். வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் அவளது அறைக்கல் ராஜவம்சத்தைப்பற்றியும், அது வீழ்ந்ததையும் சொல்லி இன்று வேலைக்காரியாய் தனது வீட்டில் இருப்பதை சொல்ல விரும்பாதவர்போல அனைவரிடமும் சொல்லி விடுவார். பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரது வாழ்க்கையையும் நாவல் விவரிக்கிறது.
பிரான்ஸிஸ், தாத்தாவின் செல்லப்பேரன். படிக்கும் காலத்தில் முரடணாகவும் படிப்பெதுவும் ஏறாமல் பள்ளிக்குச் செல்லாமலும் இருக்க தாத்தாவால் அரவணைக்கப்பட்டு அவனுக்கு ஒரு பாதுகாவலனாகவே விளங்குகிறார். ’படிக்க வேண்டாமா வேண்டாம், விவசாயம் செய்’ என்ற தாத்தாவின் அறிவுரையும் கேளாமல் தான் தோன்றித் தனமாக சுற்றும் பிரான்ஸிஸுக்கு தங்கத்தின் மீதான அனுதாபமும் அவளை லிவி உபயோகப்படுத்துவது தெரிந்தும் அவன்மீது எரிச்சல்படுகிறான். அவனை மதிப்பதாக இல்லை. இதே பிரான்ஸிஸ் தாத்தா படுக்கையில் கிடக்க யாரும் அவரை மதிக்காமல் இருப்பதை நினைத்து உள்ளம் புழுங்குகின்றான். அவனுக்கு உண்மையில் அந்த வீட்டில் எந்த பிடிப்புமில்லை தாத்தாவைத் தவிர. அவர் இறந்துவிட்டால் உடனே வெளியே சென்றுவிடவேண்டியதுதான் என்ற அளவில்தான் வீட்டின்மீதுள்ள அபிமானம். எல்லாக்கெட்ட பழக்கங்களும் கொண்டவன்.
கங்காணியின் பேரனாக வரும் லாரன்ஸ், தாத்தாவைப் போலவே எளிய வாழ்க்கை வாழ்ந்து தனது ந...
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
“ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை, அறுவடை செய்வதில்லை” எனும் பைபிளின் வரியை ரப்பர் நாவலில் முன்னுரையிலேயே படித்தாலும் பிரான்ஸிஸைப் போல் நாவலின் இறுதியிலேயே அதன் அர்த்தங்கள் தடை விலகினார் போல மனதில் இறங்கி சுழல்கிறது.
பொன்னுமணி பெருவட்டரும், பிரான்சிஸும் ஒரு கால மாற்றத்தின் இரு கண்ணிகள்.
நாயர்களின் வீழ்ச்சியும், கிறிஸ்துவ நாடார்களின் எழுச்சியும் அதில் பெரும் பங்கு வகிக்கும் ரப்பர் பண பயிர் தோட்டங்களின் வளர்ச்சியையும் சுற்றி கதை சுழல்கிறது.
பழக்கவழக்கங்களிலும், அதிகாரத்திலும், பண்பாடுகளிலுமிருந்து காலத்திற்கேற்ப விலக முடியாத, மாற முடியாத தலைமுறைகளும் அவர்களின் எச்சங்களுமே அந்த தலைமுறையின் வீழ்ச்சிக்கு காரணமாகுகிறார்கள்.
அப்புக்குட்டி நாயரின் தந்தை ஒன்றுக்கும் உபயோகமில்லாத தேவையில்லாத நிலம் என்று தானமாக கொடுக்கும் நிலமே, உழைப்புக்கு அஞ்சாது, முன்னேற துடிக்கும் பொன்னுமணி பெருவட்டரின் எழுச்சிக்கு ஏதுவாகிறது.
பிறப்பிலிருந்து இறப்பு வரை பெரிய பெருவட்டரின் வாழ்க்கை இருத்தலின் போராட்டமாகவே நகர்கிறது.
சிறுவயதில் பசியால் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் உணவே பிரதானமாக, தங்கை இறந்தபின்புதான் கொன்றுவிட்டோம் என்று குற்றவுணர்வில் புழுங்குகிறார்.
கிடைத்த இடத்தில் ரப்பர் பயிரிட்டு பணம் சம்பாதித்து வசதியை பெருக்கி கொள்வதிலேயே குறியாக இருப்பவருக்கு ரப்பர் மரம் மண்ணிற்கு விளைவிக்கும் கேடுகள் தெரிவது சாத்தியமில்லை. அன்று அவருக்கு அங்கு தன்னை நிலை நிறுத்தி கொள்வதின் போராட்டமே. வசதி வந்த பிறகு தன் அந்தஸ்த்தை நிலை நிறுத்திக்கொள்ள மதம் மாறுகிறார். மதம் தேவையின் பொருட்டு மாறுவதால் அது அவர் வீட்டில் சுவற்றில் மாட்டும் அலங்கார பொருளாகவே இருக்கிறது.
அவர் மகன் செல்லையா பெருவட்டர் அப்பா பெரிய பெருவட்டர் சேர்த்து வைத்த சொத்தை காப்பாற்ற முடியாமல் கடனில் அமிழ்கிறார். அவர் மனைவி தெரேசா எபனின் காதலை தூக்கியெறிந்துவிட்டு செல்வத்திற்காகவே செல்லையாவை திருமணம் செய்து கொண்டவள். தன் அழகின் மேல் பெரும் காதல் கொண்டவள் அதை அலட்சியப்படுத்தும் செல்லையாவால் பாதை மாறுகிறாள். அவர்கள் மகன்கள் லிவி, பிரான்ஸிஸ்.
லிவி, தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு காலத்தில் பெரிய குடும்பம் என்று பெயர்பெற்ற அரைக்கல் வீட்டுப் பெண் தங்கத்திடம் உறவு வைத்துக்கொள்கிறான். அவனால் கர்ப்பமானவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
பிரான்ஸிஸ் ஆரம்பித்திலிருந்தே மன அமைதி இழந்தவனாகவே காட்டப்படுகிறான். தாயின் நடத்தையால் மன அலைக்கழிப்புக்கு ஆளாகி கோபமும், குற்ற உணர்வும் ஒருங்கே கொள்கிறான். தினம் தினம் அவனுள் எழும் பெரும் சஞ்சலங்களே குடியையும் விலை மாதுவையும் நாட வைக்கிறது. அவன் காமத்தையும், கோபத்தையும் குற்றவுணர்வையும் இறக்கி வைக்கும் இடமாக சுமனேசி ஆகிறாள்.
தாத்தா பொன்னுமணி பெருவட்டரின் இறுதிகால நகர்வும், தந்தையின் இயலாமையும், தாயும், லிவியின் செயல்களும் இத்தனை நாள் இருந்த சோம்பேறித்தனத்தை விட்டொழுத்திவிட்டு அவனை அடுத்து என்ன என்பதை நோக்கி நகரவைக்கிறது.
உழைப்பதற்கு காலும் கையும் போதும் என்கிற தாத்தாவின் வார்த்தையும், ஆகாயத்து பறவைகள் விதைப்பதில்லை என்கிற கண்டன்காணியின் பேரன் லாரன்ஸ் சொல்லும் பைபிளின் வார்த்தைகளிலும் தன்னை தானே உணர்ந்து பெரும் திறப்பை அடைந்து லாரன்ஸோடு கை கோர்க்கிறான்.
பொன்னுமணி பெருவட்டர் தன் இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை காண வரும் பெருவட்டரின் தோழனான கண்டன்காணியின் வருகை பெருவட்டரை மட்டுமல்ல நம்மையும் பிரட்டி போடுகிறது. கண்டன்காணியை பற்றிய வர்ணனைகள் அவர் உருவத்தை அசைவுகளோடு அச்சு அசலாக நம்முன் எழ வைத்துவிடுகிறது.
செல்வங்களுக்கும் பாவங்களுக்கும் சேராத அப்பழுக்கற்றவர் தன் தாத்தா கண்டன்காணி என்று கருதுகிறான் அவரது கொள்ளுபேரனான லாரன்ஸ். தான் அவரின் தொடரும் பாரம்பரியத்தின் ஒரு கண்ணி என்கிற பெருமையோடும், பொறுப்போடும், தாத்தாவின் வழியிலேயே சுற்று சூழலிலும், மண்ணின் மீதும் அக்கறை காட்டும் லாரன்ஸும், பேர்பெற்ற அரைக்கல் குடும்பத்தில் பிறந்து வழி மாறி தன் தங்கையையே உருப்படி என்று சொல்லும் குளம்கோரியும் சமுதாயத்தின் இரு முனைகள்.
பக்கவாதம் வந்து சாவை எந்நேரமும் எதிர் நோக்கி ஒரு அறையில் அடைந்திருந்தாலும், தான் சம்பாரித்த வசதிகளும், அந்தஸ்த்தும் சரிவதை அறிந்தே இருக்கிறார் பெரிய பெருவட்டர். அதனாலேயே தன் வாரிசாக பிரான்ஸிஸ் மீது நம்பிக்கை வைத்து அவன் மனமாற்றத்திற்காக காத்திருக்கிறார். நிலைத்து இருத்தலின்(survival) போராட்டமே மனித வாழ்க்கை என்பதை பிரான்சிஸின் மனதில் விதைத்தே செல்கிறார்...“ஆகாயத்தில் ஒரு பறவை.”
இது அவரது முதல் நாவல் என்பதால், கதையாடலில் உள்ள பலவீனம் வெளிப்படையாக தெரிகிறது. ஜெயமோகன் அதிகமாக எழுதுகிறார், ஆனால் அவரது படைப்புகளில் சில மட்டுமே நினைவில் நிற்கும் வகையில் இருக்கின்றன; பல படைப்புகள் முற்றிலும் பலவீனமாகவே இருக்கின்றன.
அவரது பல படைப்புகளிலும், ஒரு குறிப்பிட்ட சாதியை எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களாகவே சித்தரிக்கும் பழக்கம் உள்ளது. இது அவருடைய சாதி சார்ந்த மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் கூட, சாதிப் பெயர்களை குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை; கதைச் சுருக்கத்திற்கும் அது தேவையில்லை. இருந்தாலும், அவர் அதை சேர்த்துக் கொண்டிருக்கிறார்; அதனால் ஒரு சமூகத்தை இரண்டு தலைமுறைக்கு முன்பும் அடிமை நிலை போன்ற நிலையில் இருந்ததுபோல் காட்டுகிறார். அரம் தொகுப்பில் உள்ள வனங்கான் கதையிலும் இதே அணுகுமுறையை அவர் பயன்படுத்தியுள்ளார்.
ஜெயமோகனின் முதல் நாவலாகிய இதுவே நான் படிக்கும் அவரின் முதல் நாவல். ஒருவித மாய வசீகரச் சூழலில், காட்டின் நடுவே, ரெமம்ப்ரான்ட் ஓவியம் கொண்ட செல்வச்செழிப்பான பங்களா ஒன்றில் சாகக்கிடக்கும் ஒரு முதியவருடன் அட்டகாசமான சூழல் வர்ணனையோடு தொடங்குகிறது. இக்கதையின் மிகப்பெரும் பலமே அதன் இட வர்ணனைகள் தான். அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், மரம் சூழ்ந்த புராதானமான, மர்மமான சூழல்களிலும் இக்கதை நடைபெறவில்லையெனில் நான் அதைப் பெரிதும் ரசித்திருக்க மாட்டேன்.
வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து ஒருவன் எழுந்து நிறுவும் சாம்ராஜ்யத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் non-linear ஆக, ரப்பரின் வரலாற்றுடன் பிணைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. நாஞ்சில் நாட்டில் கிறித்துவம் பரவிய வரலாற்றையும், நாடார்களின் எழுச்சியையும் உள் கொண்ட இக்கதை பல புதிய பாத்திரங்கள் நடுநடுவே புகுத்தப்பட்டு, பின் அச்சரடுகளைத் தொடராமல் அந்தரத்தில் தொங்க விடுவதால் முழுமை பெறாத நிலையிலேயே அடங்கி விடுகிறது. பெருவட்டரின் கதையுமே முழுமையாக வெளிப்படாமல், அவர் வாழ்வின் முக்கியத் தருணங்களின் சிதறல்களாக மட்டுமே கூறப்படுவது இதே நிறைவற்ற நிலையை ஏற்படுத்துகிறது. பெருவட்டர் குடும்பத்தில் (மொத்த நாவலிலும் கூட) வரும் எவரும் விரும்பத்தகாதவர்களாக, இருள் நிரம்பியவர்களாகவே உலவி வருவது கதையின் மீது ஈடுபாடு கொள்ள சிறு தடைகளை ஏற்படுத்துகிறது. எனினும், அற்புதமான சூழல் சித்தரிப்புகளும், சுவாரஸ்யமிழக்காத கதையும், ஆங்காங்கே கலைத்திறமை மிளிறும் வரிகளும், முதல் நாவல் என்று நம்பமுடியாத முதிர்ச்சியும், நாஞ்சில்நாட்டு வரலாறும் வாசிப்பைத் தாங்கிச் செல்கின்றன.
ரசிக்கத் தடைகள் - 1) வட்டார வழக்கு. இயல்பான அப்பிரதேசத்து மொழிச்சித்தரிப்பாக இருப்பினும், உரையாடல்களைப் புரிந்து கொள்ள மிகப்பெரும் தடையை இது ஏற்படுத்துகிறது. சில வார்த்தைகளுக்கு ஆங்காங்கே விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் பலமுறை வாசித்து சூழலுக்கேற்ப பொருள் ஏற்படுத்திக் கொள்ளவோ, புரியாமல் கடந்து செல்லவோ தான் முடிந்தது. 2) மாந்தர்கள் அனைவரும் வெறுக்கத்தகுந்தவர்களாகவே இருப்பது. நாவலின் பிரதான பாத்திரங்களாக முன்னிறுத்தப்படும் பெருவட்டரும் ப்ரான்சிஸும் வக்கிரம் பொங்கும் chauvinistகளாகவே இருப்பது மிகவும் பிரச்சனைக்குள்ளானது. 3) திடீர் குழந்தைத்தனம் - இறுதியில் அனைத்தையும் இழக்கவிருக்கும் நிலையில், சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதைப் பார்க்கும் ப்ரான்சிஸ் மனம் புத்துணர்வு பெற்று வாழ்வின் மீது திடீர் விருப்பம் கொள்வதைப்போன்ற ஒரு அபத்தமான திருப்பம் கதையின் மீதான மதிப்பைக் கடுமையாகக் குறைக்கிறது. அனைத்தின் மீதான பற்றையும் இழந்து நாயகன் இறுதியில் துறவியாகப் போகும் முடிவை ஏதோ பெரிய ஆழ்ந்த ஞான முதிர்ச்சியாகச் சித்தரித்துப் புனிதப்படுத்தும் அபத்தமான அந்நாவல்களின் வரிசையில் ரப்பர் கிட்டத்தட்ட சேர்ந்து விடுகிறது.
இவ்வனைத்தையும் விட நெருடியது, கதையில் புதைந்து கிடக்கும் சாதிய வன்மம். மேம்போக்காக கவனித்தால் வெளிப்படாத இவ்வன்மம் புத்திசாலித்தனமாக ஒளிக்கப்பட்டுள்ளது. ரப்பரின் வருகை அந்நிலத்தின் இயற்கையாக வளரும் தாவரங்களை அழித்து நிலத்தை நாசமாக்குவதை நாயர்களின் வீழ்ச்சியுடன் ஒப்பிடுவதன் மூலம் 'இயற்கை'யாக முன் நிலவிய சாதிய அமைப்பிற்கான ஏக்கம் வெளிப்படுகிறது. ஆங்காங்கே வரும் உயர்சாதி மெச்சல் வசனங்கள் இதற்குச் சான்று. காலங்காலமாக நாயர்களால் மிருகங்களைவிடக் குறைவாக நடத்தப்பட்ட, மிகக்குறைந்த மனித மரியாதைகள்கூட மறுக்கப்பட்ட வம்சம் வழி வரும் ப்ரான்சிஸே ஓரிடத்தில் நாயர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள் எனவும், அவர்களில் ஒருவனைக்கூட அவனால் "அடேய்" என அழைக்கமுடியாததைப் பற்றி சிந்திக்கும் இடத்தில் எழுத்தாளரின் சாதீயப்பற்று பச்சையாக வெளிப்படுகிறது. பெருவட்டருக்கு தொடர்புடைய அனைவரும் despicable ஆக சித்தரிக்கப்பட, நாயர் வழி வரும் மிகக்குரூரமான குளம்கோரி எனும் பாத்திரத்திற்குக் கூட வாசகர் மனதில் இறுதியில் பச்சாதாபம் வருவதற்கேற்ப நிகழ்வுகளை contrive செய்திருப்பது அருவருக்கத்தக்கது. கண்டன்காணி என்ற பாத்திரம், காட்டில் அவர் வாழ்ந்த ஆதிவழி வாழ்க்கையால் தெம்புடன் இருப்பதாகவும், "இயற்கை" வழி வாழ்க்கையை உதறி (மீறி) வாழ்வேணியில் உயர்ந்து சுகபோகங்களில் திளைத்த பெருவட்டர் தன் வாழ்வின் இறுதிநாட்களில் குற்றவுணர்வுடன் அலைவதாகவும், அவர் குடும்பம் வீழ்வதாலும் கதை உணர்த்த வருவது என்ன? இது போல இவ்வன்மத்தின் வெளிப்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இக்குறைகளை பொருட்படுத்தவில்லையெனில், எழுத்தின் கவர்ச்சிக்காகவும், அவ்வெழுத்து உருவாக்கும் வசீகர உலகிற்காகவும் தாராளமாகப் படிக்கலாம்.
💫 பெருவட்டர் குடும்பம், ஊரில் மிகப்பெரிய பணக்கார குடும்பங்களுள் ஒன்று. தொழில் செய்து வரும் இவர்கள், ரப்பர் தோட்டத்திலும் முதலீடு செய்துள்ளனர். வெளிநாட்டு கம்பெனியிடம் போட்ட ஒப்பந்தம், ரப்பர் போர்ட் -ன் சட்டம், மாநில ஆட்சி மாற்றம் என எல்லாம் ஒன்று சேர்ந்து, ரப்பர் தோட்டத்தை ஆட்டம் காண்பித்தது.
💫 வீட்டில் உள்ள அனைவரிடமும் எப்போதும் கோவணத்துடன் இருக்கும் பெருவட்டர், மலையிலிருந்து வந்த கண்டன்காணியின் ஸ்பரிசம் பட்டவுடன் பெருவட்டர் மனம் மகிழ்ந்து, அழுதே விட்டார்.
💫 நமது நிலப்பரப்பில் விளையாத ரப்பர் மரங்களை நமது மண்ணில் நட்டது, எவ்வளவு பெரிய தவறு. அதனால் நம் நிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அலசுகிறது - ரப்பர் நாவல்.
💫 சில இடங்களில் மலையாள மொழியை அப்படியே தமிழில் கொடுத்திருப்பதால், படிக்க சற்று சிரமமாக இருந்தது.
ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - இரண்டாவது புத்தகம் இது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Rubber charts the story of people in a multi generational family in a village in Kanyakumari district when the family’s patriarch is dying of old age. Set during the 90s, just about when India had opened her borders for trading this is a familiar theme that we can see used in many pieces in literature. A dying patriarch, the darkness in the family and the changing social landscape around them. I have read a lot of short stories and a few of the novels by Jeyamohan, which I found to be some of the best written in Tamil. This is his first novel. Each chapter follows a character in the family. The novel is extremely bleak and most of the characters live with hatred and hopelessness. Just like the rubber trees that don’t let any other plant grow near them, these characters are extremely unlikable, almost actively shunning any form of companionship. I love depressing, nihilistic depictions of life and this was something I appreciated. The episodes are non linear, jumping from perspective from one chapter to the other and also jumping generations. The novel also contains vivid descriptions of people and places which the author is known for. It has all of his pet themes like elephants, forests, worms and the Neelis. Some of the chapters are terrific; the exquisite detailing of Drace’s (Is that the name?) (So it is Theresa. Thanks Hari.) psychology of an infatuation, the scale of destruction conveyed in the chapter where Ponnu Peruvattar brings down a pristine meadow by setting it on fire, the scene with just children in it but which burns red hot with human malice; all of these amazing chapters come to mind. The language recalls the spectacularly bombastic prose he perfected in stories like ‘படுகை’ and ‘ஊமைச்செந்நாய்’ but the biggest problem I found with the novel was its fleeting nature. This is a short novel and so much life is condensed into vignettes that span generations of time and space. This made me fit more into the shoes of a historian observing the characters from afar than being a part of these people’s lives. Hence the philosophy that Francis experiences at the end of the book felt spurious and campy rather than being a life changing religious moment that it is supposed to feel like. Similarly, the final appeal to be in harmony with the world also does not ring true. Apart from these gripes of mine, I found this to be an astonishingly good debut novel. I still think his short stories are his greatest works yet and Rubber hasn’t made me change my mind.
This entire review has been hidden because of spoilers.
இரண்டு தலைமுறையா நடக்குற சமுதாய வீழ்ச்சி, எழுச்சி, சாதிய பாகுபாடு, மக்களோட வெறுப்பு இதெல்லாம் ரப்பர் வளர்ச்சியோட ஒப்பிட்டு கன்னியாகுமரி-கேரளா வட்டார நடைல வர்ற Non-linear கதை. முதல் நாவலாலோ என்னவோ ஒரு சில காரணங்களால எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜெயமோகன் அவரோட இளம் வயதுல இப்படி ஒரு கதையை யோசிச்சு எழுதியது மிக அருமை.
நிறைய முடிச்சுக்களை விவரிக்காமலே வாசகர் கற்பனைக்கு விட்ட மாதிரியான ஒரு கதை ஓட்டம். பெரும்பாலான கதாப் பாத்திரங்கள் தங்களுக்குள்ள எந்த நேரமும் வெறு���்பும் மற்றவங்க மீது தான் கொண்ட அதிகாரமும் தான் வைத்து சொல்லப்பட்டிருக்கு. அதுனால எந்த ஒரு கதாப்பாத்திரமும் மனசில நிக்காத ஒரு உணர்வு. கதையோட முடிவுல ஃப்ரான்ஸிஸ் மனமாற்றம் ஒரு கதைக்கான முடிவா வைக்கப்பட்டதா மட்டுமே இருந்தது தவிர அதுல ஒரு நம்பகத்தன்மை இல்லை. இதெல்லாம் கதையை நம்மோட ஒன்றிணைந்து ரசிக்க விடாம செய்த சில காரணிகள்.
சமகாலத்தில் எழுதும் எழுத்தாளர்களில் பலராலும் அறியப்பட்டவர் ஜெயமோகன். இவரின் 'யானை டாக்டர்' கதையை மட்டும் வாசித்து பல மாதங்கள் ஆகி இருந்த நிலையில். இவரின் ரப்பர் நாவலை பல வழிகளில் தேடியும் புலப்படவில்லை. எங்கள் ஊரில் உள்ள கிளை நூலகத்தில் பல புத்தகங்களில் கிடையில் புலப்பட்டது. அங்கு என்னை கவர்ந்த பல எழுத்தாளர்களின் புத்தகம் இருந்திருந்த நிலையிலும் நான் இந்த புத்தகத்தை எடுத்து வந்தேன் ஏதோ ஒரு நம்பிக்கையில்; அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
இந்நாவலின் கதை கரு ரப்பர் தோட்டம் வைத்திருக்கும் ஒரு குடும்பம். அந்த ரப்பரின் வணிகத்தில் செய்த ஊழலினால் சிக்கித் தவிக்கும் போராட்டம் ஒரு புறம் இருந்தாலும் அந்த குடும்பத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் நடக்கும் ஒவ்வொரு போராட்டமும் அவற்றின் பின்னணி கதையை மிகவும் ஆழமாக எழுதியிருந்தார். ஜெய்மோகனின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது அதில் இருக்கும் ஒரு ஈர்ப்பு வாசகனை கட்டிப்போட்டு விடுகிறது. இந்நூல் இடம் பெறும் இடம் தமிழ்நாடு தென் மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையில் இருக்கும் ஓர் கிராமம். அவ்வூர் மக்கள் தமிழும் மலையாளமும் கலந்த ஒரு மொழியில் தான் பேசுவார்கள் அதனால் ஆரம்பத்தில் வாசிக்கும் போது அந்த ஊரின் வட்டார மொழி புரிவதற்கு சிரமப்பட்டேன், ஆனால் வாசிக்க வாசிக்க அது ஒரு புது விதமான உணர்வை தந்தது. இதுதான் மொழிகளுக்கு இருக்கும் ஒரு அழகியல் போலும் என உணர்ந்தேன். ஜெயமோகனின் கதை சொல்லாடல் எதார்த்தமாக இருந்தது அந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளை உணர, முடிந்தது ஒவ்வொரு விதமான உணர்ச்சியையும் உணர்ந்தேன். சிறுவர் முதல் வயது முதிர்ந்து படுத்த படுக்கையில் இருக்கும் முதியவரின் உணர்வுகள் வரை உணரக்கூடும். இதில் பல கதாபாத்திரங்களின் வாழ்வியலும் சம்பவங்கள் என்னுடன் வாழும் மக்களின் வாழ்வியலோடு ஒன்றி இருந்தது, இதனால் பல சம்பவங்கள் என் மனதை தொந்தரவு படுத்தியது. கதையின் ஊடாக பல கருத்தியலின் வாக்குவாதங்களும் அருமையாக வடிவமைக்க பட்டது. மனிதன் நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்தால் அவ்வாழ்க்கை என்னவாகும் என்றும், மனிதன் அவனுடைய வாழ்க்கையின் பாதையை மாற்றி வாழ துவங்கும் போது அவனுக்குள்ளாக ஏற்படும் சிக்கல்களும் இப்படி மனிதனின் உள்ளார்ந்த உரையாடல்கள் பலவற்றை அருமையாக கையாண்டு இருந்தார். சமீபத்தில் என்னை கவர்ந்த நாவல்களில் இதுவும் ஒன்று ஆனால் இதுதான் இவரின் முதல் நாவல் என்று பிறகு அறிந்தபோது முதல் நாவலிலேயே அவரின் எழுத்து திறமையை உணர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
Not much of story line, most of the novel moves on describing the characters and the natural beauty. Several characters are left suspended, usage of local tamil slang in good, but it goes to the point of not able to understand the meaning. We could only guess based on the context.
Although this is Jeyamohan's first Novel, but I felt like reading some work by an experienced author. As usual the plot was riveting with lots of characters spanning multiple generations. The Novel is narrated from the perspective of different characters at different points of time. I just wished the Novel had been segmented properly. Sometimes the paragraphs weren't placed properly and it was upto the reader to understand that the previous paragraph was actually the conclusion of a particular incident and that the next para was actually the beginning of a new one. (I am hoping that this issue would have been fixed in the newer editions). The story of Peruvattar & his sons, the evolution of his life, how he builds his empire from nothing and how his sons waste them all due to the elite upbringing. The changing lifestyle of various communities, where the impoverished become the masters and vice versa are narrated in a very interesting manner. There is a also a character called Kaani, Peruvattar's close associate who was there with him when he started building his empire, who lives to see the entire rise & fall of Peruvattar's clan. The Novel has a simple but classical positive ending and one is left with memories of many of the characters that made their appearances throughout the narration.
Rubber is an exceptional novel that vividly portrays the era when the Nadar community recognised the potential of rubber and embarked on large-scale plantation ventures. The narrative beautifully captures the spirit of the community, their rise in wealth, and the transformation of their social status. It’s an engaging and insightful read. However, I respectfully disagree with the author’s portrayal of the rubber tree as an absolute villain. While it is true that rubber is not native to India, the same applies to many of our staple crops—wheat, rice, maize, barley, oats, chilli, and tapioca—all of which were introduced from elsewhere. Moreover, rubber trees play a significant role in carbon sequestration. One hectare of rubber plantation absorbs approximately 81 tonnes of CO₂, which is equivalent to the emissions from burning about 100,000 litres of petrol—roughly half the fuel consumed by a car over its lifetime. This is an important environmental perspective that deserves recognition. That said, as a work of fiction, Rubber remains a remarkable novel—thought-provoking and well worth reading.
ஜெயமோகன் எழுதிய முதல் நாவல் இது. வர்ணனைகளும், சிந்தனைகளும் சுத்த தமிழில் எழுதி உரையாடல்களையெல்லாம் கன்னியாகுமரி வட்டார வழக்கில் எழுதியுள்ளார். படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாலும், எனக்கு அவைகளை புரிந்துக்கொள்ள சற்று நேரம் எடுத்தது.
சொத்து பத்து ஒன்றுமே இல்லாமல் ஒருவர் இட்ட தானத்தின் வழிப்பெற்ற காணி நிலத்தை உழுது விவசாயம் செய்த பொண்ணுமணி பெருவட்டரின் இறுதி நாட்களில் நடக்கும் நிகழ்வுகள்தான் இக்கதை. அவரது மகன் செல்லையா பெருவட்டர், விவசாய நிலங்களை ரப்பர் தோட்டமாக மாற்றியிருந்திருக்கிறார். தற்போது அவரது தொழிலும் ஒரு நெருக்கடியை எட்டியுள்ளது. செல்லையா பெருவட்டருக்கு ஐந்து வாரிசுகள், முதல் மூன்று மகள்களுக்கு கல்யாணம் முடித்து அனுப்பியானது. பின்னால் இரண்டு மகனார்கள் கூடவே இருக்கின்றனர். மூத்தவர் பிரான்சிஸ், இக்கதையின் நாயகன். ஆனால் இவரை அறிமுகப்படுத்துவதென்னவோ இவரது தம்பி லிவிக்குப் பிறகுதான். அதுவும் ஒரு underplayed, gray shade character-ஆகத்தான். இந்த குடும்பத்தில் உள்ளவர்களும், அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்களை பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.
ஆசிரியரின் முதல் நாவல் என்று சொல்லப்படுகிறது ஆனால் காத்திரமான முயற்சி.
கண்டிப்பாக பல படிமங்கள் உள்ளன. ரப்பர் என்பதே ஒரு படிமமாக இருக்கிறது. கதையில் வரும் பெரிய பெருவட்டர் இந்த மண்ணில் வாழ்ந்த கட்டுமரங்கள் உவமைகள் வழியே அது இன்னும் வெளிப்படுத்தப்பட்டிருப்பது மிக அருமை. அவரின் மருமகளும், சின்ன பேரனும் ரப்பர் மரம் போன்றவர்கள் எனலாமா...
இதிலுள்ள அரசியல் பின்புலம்பற்றி சற்று தெளிவில்லை. ஆனால் கண்டிப்பாக மிக முக்கியமான காலமற்றத்தை பதிவு செய்ததில் இந்த நாவல் தனித்துவமானது எனலாம்.
It is quite hard to find a fiction by Je Mo that's not good - atleast as far as I have read him. This novel, his first one, proves that again.
At 200 pages, it spins the tale of a family across three generations, from being into the oppressed community to growing into Wealth & attaining power and respect, only finally to be deprived of all of it again..
As usual, the dialects are so flavourful and delightful to be read.❤️❤️❤️
Ambitious attempt to recount history of the destruction of forests for rubber cultivation and transfer of power to the downtrodden Ponnumani Peruvattar. But lost in no focus on anything. No character is fully developed to understand their motives. Too cynical. Many similarities with the Tolstoy novella The death of Ivan Iliych.
The fact that someone had conceived this story at the age of 22 is unbelievable. Such matured story-telling. Great insight into some societies of Kerala. Overall a good read.
Rubber novel was one of the earliest works of tamil writer jeyamohan. Could find the roots of many of the ideas on which he has written subsequently . Quite nice book
Not impressive as like his "kaadu", "eezham ulagam" novel.. Though good one to read. More over in his first novel itself Mr. Jeyamohan gave a good interest to the reader.
ஜெ.மோ வின் முதல் நாவலாதலால், ஒரு இளம் எழுத்தாளரின் வாட்டார மொழிநடையை கிரகிக்க சில நேரம் ஆகிறது. பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை எனினும் பிற்கால எழுத்துச் செறிவு ஆங்காங்கே தென்படுகிறது.