தமிழ்ச் செவ்வியல் மரபில் ஆசிரியருக்குள்ள பரிச்சயமும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. தெளிவான, சரளமான நடையில், நேரடியாகப் பேசுவதுபோல் அமைந்துள்ள இக்கட்டுரைகள், வாசகரின் அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யும் ஆழமான பார்வை கொண்டவை.
P. A. Krishnan is an Indian writer who writes in both Tamil and English. He began his career as a teacher of physics and went on to serve many years as an bureaucrat in the Government of India. After a long stint of 30 years, he joined a research organization as the CEO. He later became a Senior Director with a multinational firm.
His most famous novels include The Tiger Claw Tree and The Muddy River which were also re-created by him in Tamil as புலிநகக் கொன்றை and கலங்கிய நதி. He has also written an introduction to Western Painting the first volume of which was published by Kalachuvadu under the title மேற்கத்திய ஓவியங்கள். A contributor to several Indian newspapers and literary magazines, several volumes of his essays have also been collated and published, the most notable ones being Agrahaarathil Periyar (அக்கிரகாரத்தில் பெரியார்) and Thirumbichendra Tharunam (திரும்பிச் சென்ற தருணம்).He is one of the Advisories in awards panel of Tamil literary garden organization.
நண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா !! என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தது. அதில் அவருடைய (எழுத்தாளரின்) தந்தை, நேருவை திட்டாத நாட்களை விரல் விட்டு என்று ஆரம்பித்தது. ஆனால் நேருவின் இறப்பின் போது எவ்வாறு கண்ணீர் விட்டு அவரைப் பற்றி புகழ்கிறார் என்று கூறிவிட்டு, அப்படியே “Judith Brown” எழுதிய “Nehru: A Political Life” புத்தகத்தை பற்றி அழகாக எழுதியிருந்தார். உடனே இந்த புத்தகத்தை முதலில் இருந்து படிக்க ஆரம்பித்துவிட்டேன். பெரும்பாலான கட்டுரைகள் புத்தகத்தை பற்றியது. Eric Ambler எழுதிய The Mask of Dimitrios (மர்ம நாவல்), Bhartrihari & Bilhanan னின் கவிதை தொகுப்பு, Francis Wheen எழுதிய Karl Marx (வாழ்க்கை வரலாறு), John Keay எழுதிய India Discovered (இந்திய தொழ்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி வரலாறு), Paul Johnson எழுதிய The Renaissance, Ramachandra Guha எழுதிய A corner of a Foreign Field (இந்திய கிரிக்கெட் பற்றியது), Leonard A. Gordon எழுதிய Brothers Against the Raj: A Biography of Indian Nationalists Sarat & Subhas Chandra Bose, William Dalrymple எழுதிய From The Holy Mountain (பயணக் கட்டுரை), Tariq Ali எழுதிய The Clash of Fundamentalisms, Alexander Werth எழுதிய Russia at War: 1941-1945, Tracy Chevalier எழுதிய Girl with a Pearl Earring (Johannes Vermeer பற்றிய நாவல்), Richard Dawkins எழுதிய A Devil's Chaplain: Reflections on Hope, Lies, Science, and Love (கட்டுரைகள்), Leonard Mlodinow எழுதிய Euclid's Window என வெவ்வேறு Genre ஐப் பற்றிய புத்தகங்களை வாசகருக்கு உருத்தாத நடையில் அழகாக அறிமுகப்படுத்துகிறார். தமிழில் ஜெயமோகனின் “காடு” நாவலை பற்றியும், அ. முத்துலிங்கத்தின் “அங்கு இப்ப என்ன நேரம்” கட்டுரை புத்தகத்தை பற்றியும், அசோகமித்திரனின் கட்டுரை தொகுதிகள் பற்றியும், சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் பற்றியும் அவற்றை படிக்க தூண்டும் நல்ல கட்டுரைகள். கிரிக்கெட் பற்றி சில கட்டுரைகள், குறிப்பாக வானொலியில் நேரடி வர்ணனை கேட்டது பற்றிய கட்டுரை. இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பற்றிய கட்டுரை போட்டியை பதட்டத்துடன் நேரில் காண்பது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தித்யது. பெரியாரைப் பற்றிய கட்டுரையில் அவருடைய தந்தை, தந்தையின் நண்பர்கள் மற்றும் தன்னுடைய எண்ணங்கள் என வெவ்வேறுவரின் கருத்துக்களை பகிர்துள்ளார். ஓரிசாவின் முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவை சந்தித்தது பற்றிய கட்டுரை இன்னும் இதுபோல் எளிமையாகவும், அன்பாகவும் தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பற்றிய என்னங்களை கிளர்கிறது. புத்தகம், இலக்கியம், தமிழ், அறிவியல், அரசியல், கிரிக்கெட் மற்றும் சினிமா என பரந்து விரிந்த தலைப்புகளில் வாசிப்பு அனுபவத்தை மெருகேற்றும் கட்டுரைகள். . .