தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை.
அந்த குறையைப் போக்கும் வித்தியாசமான நூல் இது.
பயணக் கட்டுரை என்பது பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு அல்லது இடத்திற்குச் சென்று வந்த அனுபவத்தை, அங்கு கண்டவற்றையும் உண்டவற்றையும் பற்றி பேசுகிற சுய அனுபவப் பதிவுகளாக அமைந்திருக்கும்.
ஆனால், இந்த நூல் பயணத்தை வரலாற்றின் வெளிச்சத்தில் அணுகுகிற நூல். நாம் அன்றாடம் உண்ணுகிற உணவு, தினம் தினம் காண்கின்ற விலங்குகள், பறவைகள், தாவரங்கள், வாசித்து மகிழ்ந்த இலக்கியம், கேட்டு நெகிழ்கிற இசை, பல பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஏன் சில விழுமியங்களே கூடப் பயணங்கள் நம் மீது ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாக நேர்ந்தவை. அந்தப் பயணங்கள் நேற்றோ அல்லது நெடுங்காலத்திற்கு முன்போ நிகழ்ந்தவைகளாக இருக்கலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால் அறிவியலுக்கு நிகராக வாழ்வின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்த சிறப்பு பயணங்களுக்கு உண்டு.
மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இருக்கிறது. அதை திரு. இறையன்புவின் வழி தரிசிக்கும் போது அந்த ஆச்சரியம் பல மடங்காக விரிகிறது, தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல. அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன, ஒரு நுண்ணுயிரை சூட்சம தரிசினியின் மூலம் காண்பதைப் போல.
அது திரு. இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை. கவிதையானாலும், கதையானாலும், கட்டுரையானாலும், உரையானாலும், ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு. நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில் சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை (Mughal Miniatures) போன்றது அவரது அணுகுமுறை.
சுவாரசியமும், விவரிப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்பனை மட்டுமல்ல உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு இந்த நூலே சாட்சி.
இந்த ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலம் நீங்கள் பல புத்தகங்களைப் படித்த பயனைப் பெற முடியும் என்பது உறுதி. ஏனெனில் திரு. இறையன்பு இந்தக் கட்டுரைகளை எழுத மேற்கொண்ட முயற்சியின்போது பல நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அந்தக் குறிப்புகளை மற்ற நூல்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொண்டார், பின்னர்தான் அவற்றை உரிய இடத்தில் உரிய முறையில் கட்டுரைகளில் பயன்படுத்தினார்.
இந்தக் கட்டுரைகளை எழுத அவர் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது, வணங்கத்தக்கது. அரசுப் பணியில் ஒரு மிக உயர்ந்த பொறுப்பில் பல பணிகளை ஆற்ற வேண்டிய சூழலில் இருந்தபோதிலும் இதற்கென முக்கியத்துவம் கொடுத்துத் தேடித் தேடி படித்து உழைத்து இந்தக் கட்டுரைகளை அவர் நமக்குத் தந்தார். அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அது அவர் ‘புதிய தலைமுறை’ யின் மீது வைத்திருந்த அன்பு. அதற்குத் தலை வணங்குகிறோம்.
‘புதிய தலைமுறை’ வார இதழில் 45 வாரங்கள் வெளிவந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை வளர்த்தெடுப்பது என்பது ‘புதிய தலைமுறை’ யின் நோக்கங்களில் ஒன்று. ‘புதிய தலைமுறை’ யே ஒரு வித்தியாசமான முயற்சிதான். நான் முன்பு சொன்னது போல இந்த நூல் இதுவரை தமிழில் அதிகம் இல்லாத வகையைச் சேர்ந்த நூல். இதனை வெளியிடுவதில் புதிய தலைமுறை மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.
V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .
Irai Anbu has been a motivational speaker and hosted a show named Kalloori Kaalangal ( Tamil: கல்லூரி காலங்கள் ) in DD Pothigai in which he shared his experiences about his college life. He has written more than 150 books.
Book 36 of 2021 புத்தகம் : 10000 மைல் பயணம் எழுத்தாளர் : வெ.இறையன்பு இ.ஆ.ப பதிப்பகம் : புதிய தலைமுறை வெளியீடு பக்கங்கள் : 264 நூலங்காடி : ஈரோடு புத்தக கண்காட்சி
💥 பயணக் கட்டுரைகள் / அல்லது பயண அனுபவ நூல்களோ பெரும்பாலும் இடத்தைப் பற்றியும், பிரசித்தி பெற்ற இடங்களை தெரிந்துக் கொள்ளும் வண்ணமாகத் தான் இருக்கும்.
💥 இந்த புத்தகம் மாறுபட்டது. பயணத்தின் மூலமாக நிகழ்ந்த சரித்திர / பொருளாதார நிகழ்வுகள் , வாழ்வியல் மாற்றங்கள் குறித்துத் தெளிவாக காணலாம்.
💥 மூன்று வேளை உணவு மட்டும் ஒரு நாள் போதாது, நிச்சயமாக குளம்பி / தேநீர் நமக்கு இருந்திட வேண்டும். அந்த காபி / தேயிலை தோட்டத்தின் கதைகளை படிப்பது நிச்சயம் பிரமிப்பே.
💥 விதைகளின் பயணம் படிப்பதற்கு மிகுந்த சுவாரசியம் உடையதாக இருந்தது.
💥 செட்டிநாடு என்னும் பெயரைக் கேட்டாலே அசைவ உணவிற்கு பெயர் போனது என்று சொல்லிவிடலாம். அவர்கள் ஒரு காலத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தார்களாம், பாண்டிய நாட்டிற்கு இடம்பெயர்ந்ததற்கு பின்னால் அவர்கள் 'அசைவ' உணவிற்கு மாறிவிட்டார்கள்.
💥 Sandwich = Earl of sandwich என்பவர் சூதாடும் போது, எழுந்து செல்ல மனமில்லாமல் , 2 ரொட்டிக்கு நடுவில் மாமிச துண்டு வைத்து சாப்பிட்டாரம். Sandwich உருவான கதை.
💥 வெள்ளை சர்க்கரை - இன்று சாப்பிடும் ஒவ்வொரு ஸ்பூன் சர்க்கரையிலும் பல அடிமைகளின் ரத்தத் துளிகள் உள்ளது என்பதை உணர வேண்டும்.
💥 பிரியாணி - இன்று அதிக மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இதை சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக பாபருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
💥 கொலம்பஸ் - என்னும் பெயரைக் கேட்டவுடன், ஆஸ்கர் நாயகனின் பாடலும்/ அவர் கண்டுபிடித்த அமெரிக்காவும் நினைவு வரும். ஆனால்தான் வந்திறங்கிய தீவுகளில் இருக்கும் மக்களை கிறித்தவர்களாக மாற்ற அவர் முயற்சி செய்தார் என்னும் குறிப்புகளைப் பார்க்க முடிந்தது.
இன்னும் எண்ணற்ற தகவல்கள், வாசித்து பாருங்கள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading ….. Subasreenee Muthupandi ❤
It is an essay compilation of different spices, animals, condiments that has been imported and exported across the world. It also emphasis on travelling. It gives you a brief history about the culture, tradition of various countries across the world.
It was a gift for my dad and happen to see it in his shelf! As a travel enthusiast I got excited about this book and I have to say that I was justified. It's a collection of articles put together as a book, so not a fun read but ya its something a traveller would love to know how travel changed the world we are now. Loved it. Go for it only if you are a travel enthusiast.
Very interesting book.nicely researched, though not much depth. There are very few mistakes.என்னுடைய பள்ளி காலங்கள் முதலே IAS அவர்களின் காஞ்சிபுரம் மாவட்ட பணியினை பற்றி படித்துள்ளேன். மாணவர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் நல்ல வழிகாட்டி அவர்.
This is good book that gives brief view about the domestic animal and agricultural crops rotation and distribution. We get to know about the origin of vegetables, spices & crops that are in use in India. Over all a very good book and an excellent narration by the author.