I remember watching this as a serial when in school and someone told me this is not for kids. Obviously that made it a must know - but sadly there was no means. After so many years, when I finally read the book it was underwhelming.
The basic gist of the story is about the fate of two people Meenakshi and Sundaresan who are, without warning, hit with truth bombs and societal ostracization. Meenakshi, the daughter of a daasi saint, jumps into the river since she does not know who her father is. Sundaresan, the son of a Deekshatar (high brahmin) jumps into the water to rescue her.
What irked me the most was the least effort it took to break secrets guarded for years. I mean, everyone knew it all along and continued to ignore the facts, hoping it will go away. If it was so easy, why subject the characters to so much pointlessness?
The setting of the book, at the time of Daasis, is one of maximum caste oppression and patriarchy. That I understand as the reality of the times. However, the characters written with honorable intentions, set the wrong type of "strong". Women are always ready to sacrifice and the men are mostly leering or protecting the women. A man's point of view was most evident in assigning the motives for each women - centered on the men.
புத்தகம் : கிருஷ்ணதாசி எழுத்தாளர் : இந்திரா செளந்தர்ராஜன் பதிப்பகம் : திருமகள் நிலையம் பக்கங்கள் : 272 நூலங்காடி : Bookwards
💫பெற்றவர்களின் நல்லது, கெட்டது இரண்டையும் பிள்ளைகள் சுமந்து ஆக வேண்டும் . இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை . இதற்கு மீனாட்சியும் விதிவிலக்கில்லை.
💫துரோகத்தால் வேசி வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறாள் மனோன்மணி. அந்த பழியில் இருந்து மீள முடியாமல் அந்த வாழ்க்கையை தொடர்கிறாள். இதில் துளியும் சம்பந்தம் இல்லாத, கிருஷ்ணவேணியும் மீனாட்சியும் பலியாகின்றனர். உபன்யாசத்திற்கு பெயர் போன தீட்சிதர் குடும்பத்திருக்கும் மனோன்மணிக்கும் என்ன சம்பந்தம் ? - இதுவே கிருஷ்ணதாசி.
💫2000 – களின் தொடக்கத்திலே வெளிவந்த தொடரை பார்த்திருந்தீர்கள் என்றால் , புத்தகத்தை படிக்காமல் இருப்பது நல்லது .
💫நான் வாசிக்கும் போதே, ஒவ்வொரு பக்கத்திலும் ஜெமினி கணேசனும் நளினியும் தான் தெரிந்தார்கள். வாசிக்கும் அனுபவத்தை அது கெடுக்கக் கூடும் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
பள்ளி படிக்கும் போது பார்த்த தொடர், கதையோ கதைக்களமோ அதிகம் நினைவு இல்லை எனினும் காதல்மதி எழுதிய அந்த தலைப்பு பாடலின் வரிகளும், அதன் நடனமும் இன்றும் நினைவில் உள்ளன.இந்த புத்தகம் தழுவிய தொடர் அது.
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் தீட்சிதர் அவரின் ஒரே தவப்புதல்வன் சுந்தரேசன். அதே சமூகத்தில் தேவதாசியாக வாழ்ந்த மனோன்மணிக்கு, சேற்றில் முளைத்த செந்தாமரையாக நிர்மலமான குணமுள்ள மகள் கிருஷ்ணவேணியும், பாட்டியின் கரைபடிந்த குணத்தின் சிலுவையை சுமக்க நேரும் பேத்தி மீனாட்சியும்.
காலத்தின் சதிராட்த்தில் தப்பித்தவர் யார்?
சம்பந்தமற்ற இருவரையும் காதல் ஒன்றிணைக்கும் முன்னரே.. அவர்களின் பிறப்பின் ரகசியம் ஒன்றிணைத்ததா? பிரித்ததா? என்பது தான் கதை.
ஆண்பிள்ளைக்காக ஏங்கும் தீட்சிதர் அவர் மனைவியும் நம் சமூகத்தில் நாம் கடந்து வந்திருக்கும் அன்றாட மனிதர்களாக தோன்றுகிறார்கள்.கதையின் இறுதியில் ஒரு நொடியில் மனமாற்றம் என்பது கதைக்காக சற்று அவசரமாக நிகழ்ந்தாக தோன்றியது.
குடும்பத்துக்காக தன் ஆசைகளை தியாகம் செய்யும் கோபாலன், அவருக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் கிருஷ்ணவேணி என ஆழமான கதைமாந்தர்கள்.
தொடரின் நளினி அவர்கள் மனோன்மணியாக, தீட்சிதராக வரும் ஜெமினி கணேசன் அவர்களை கண்டதும் புடவையை ஒரு உதறு உதறிச்செல்லும் காட்சி மிகவும் பிரபலமானது.அது போன்றவை புத்தகத்தில் இல்லை. கதையும் பெரிதும் மாறுபட்டது, தொடரைக் காட்டிலும் எளிமையானது.
எல்லா பாகத்தின் தொடக்கத்திலும் வரும் புதுக்கவிதைகள் புத்தகத்துக்கு மேலும் அழகூட்டுகிறது.