Jump to ratings and reviews
Rate this book

கோணல் பக்கங்கள் 1

Rate this book
எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல்

பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை

வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும்

விவாதிக்கப்பட்டது.

இந்தக் கோணல் பக்கங்களின் கட்டற்ற சுதந்திரத்தைப்பற்றி அப்போது பலரும் குறிப்பிட்டார்கள். கோணல்

பக்கங்களின் பளீரென்ற உண்மைத்தன்மை பலரையும் பலவிதத்தில் பாதித்தது. பல விதமான வசைகளையும்,

அதற்கு ஈடான பாராட்டுகளையும் குவித்தது.

சிறு பத்திரிகைகளுக்குப் பிறகு 2002 ஜனவரியிலிருந்து விகடன் இணைய தளத்தில் வெளிவந்தபோது,

உலக அளவில் பரவலான கவனிப்பையும் பெற்றதால் இதற்கென்றே பிரத்தியேகமான இணையதளம் ஒன்றும்

(www.charuonline.com) தொடங்கப்பட்டது இதன் சிறப்பாகும்.

விகடன் இணையதளத்தில் வெளிவந்த பக்கங்கள் மட்டுமே “புத்தக வடிவில்” மூன்று பாகங்களாக

வெளிவந்திருக்கின்றன.

272 pages, Paperback

First published January 1, 2013

15 people are currently reading
201 people want to read

About the author

Charu Nivedita

84 books178 followers
Charu Nivedita is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of the Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (30%)
4 stars
26 (35%)
3 stars
21 (28%)
2 stars
3 (4%)
1 star
1 (1%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Muniraja Murugan.
3 reviews
April 14, 2017
ஒரு தலைப்பை எடுத்து அது பற்றி ஆழமாக விவரிப்பது ஒரு வகை கட்டுரை என்றால் பலதரப்பட்ட விஷயங்களை அறிமுகம் மட்டும் செய்துவைத்து வாசகர்களை அது அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டுவது மற்றொறு வகை. கோணல் பக்கங்கள் இரண்டாம் வகை. இதில் சாரு கூறும் பெரும்பான்மையான சினிமாக்களும் புத்தகங்களும் நான் கேள்விபடதாவை. இவற்றை வாசித்துவிட்டு அப்படியே செல்லலாம் அல்லது அந்த சினிமாக்களை தேடிப்பிடித்து பார்க்கலாம். புத்தகங்களை வாசிக்கலாம்.இக்கட்டுரை தொகுப்புகள் பயனுள்ளதா இல்லையா என்பதை வாசகர்களின் செயல்பாடு தான் முடிவு செய்யும்.
Profile Image for Guru Guru.
38 reviews17 followers
July 13, 2014
நல்ல கட்டுரைகள், எல்லாத்தையுமே தொட்டிருக்கிறார். தென் அமெரிக்க எழுத்தாளர்களுக்கு சொம்படித்திருக்கிறார். நல்ல வேகமான லேசான வாசிப்பு, பெருசா மனசுல எதுவும் நிக்கல.
Profile Image for Krishnakumar Mohanasundaram.
714 reviews5 followers
January 23, 2024
Prose from Charu's blog, quite old, from around early 2000's. But that doesn't affect the charm one can find in Charu's fluid writing.

It keeps you at a steady pace, page after page, letting you savour the breezy writing. Filled with interesting content that spans from his usual blabbering about being a Tamil writer to latin American writers, to his Europe visit, to music, to literature, to snippets, to gossips, to experiences, to overly exaggerated self praising and life events, to body, to health, to alcohol, to writing, to family, to Gujarat riots and many other randomly chosen subjects.

The name is a perfect fit - could be translated to - scribbled pages or pages of scribblings.

A quick and fun read!! Typical Charu 👌👌👌
Profile Image for Vinoth Jeevanesan.
35 reviews3 followers
May 23, 2018
சாருவின் எழுத்தின் மேல் எனக்கு அதீத ஆர்வம் உண்டு என்றால் அதற்கு காரணம் அவர் ஒரு புரிந்துக்கொள்ள இயலாத தற்கால "ஆண்" எழுத்தாளர்.

அவருடைய எழுத்து எனக்கு ஜீரோ டிகிரி இல்தான் அறிமுகமானது. என் நண்பர் அதை படிக்க பரிந்துைரைத்திருந்தார்.

சத்தியமா என்னால 30 பக்கத்துக்கு மேல படிக்க முடியல. கல்கி, ஜெயமோகன், ஜெயகாந்தன் எழுத்தெல்லாம் படிச்ச எனக்கு ஜீரணிக்க முடியாத அளவுக்கு அவருைடைய எழுத்து தாக்கத்த தந்துச்சு.

இப்படியும் எழுதுவாங்களா..... இதுவும் படைப்பானு வியப்பா இருந்துச்சு...

ஆனால், கோணல் பக்கங்கள்ளஅவருடைய மற்றொரு தளத்த தந்திருக்கார். ரசிச்சு படிச்சேன்.

அவருடைய வெளிப்படையான, தைரியமான எழுத்துதான் திரும்பவும் நிருப்பிக்கிறது, அவரொரு "ஆண் " எழுத்தாளர் என்று .

நிறைய தகவல்கள், பல அறிமுகங்கள், சில சாடல்கள், ஆண்மையான வெளிப்பாடுகள், வாசகன் அனுபவிக்க பல இருக்கிறது.

திரும்பவும் சாருவிடம் எனக்கு ஒரு வியப்பு, கோணல் பக்கங்கள். மிகு நேர்த்தி.
Profile Image for இரா  ஏழுமலை .
141 reviews8 followers
January 8, 2022
சாருவின் எழுத்துகள் சமுக அவலங்களை எள்ளல் உடன் முன் வைப்பவை , அந்த வகையில் இந்த கோணல் பக்கங்கள் அவலங்களை பகடியோடு பதிவு செய்கிறது . குறிப்பாக சமுக ஏற்றத்தாழ்வுகள் , வேறுபாடுகள் , உழல்கள் , கிராமம் , நகாரம் , உலக சினிமா , உலக எழுத்து, பயணங்கள் , பாலியல் குற்றங்கள் என்று அனைத்தயும் கொண்டுவந்து குவிப்பவை .அவரை மேலோட்டமாக வாசிப்பவர்கள் அடைய ஏதும் இல்லை என்று தோணலாம் , எளிமைக்காக அவர் புரம்தள்ளப்படலாம் ஆனால் இலக்கிய புடாகரமான மொழியை எளிமை படுத்தி உடைத்தவர். அவரை புரிந்துகொள்ள இன்னும் காலம் தேவைபடலாம் ஆனால் அவரை தமிழ் இலக்கிய உலகம் முற்றாக ஒதுக்கிவிடமுடியாது .
Profile Image for Dineshsanth S.
193 reviews42 followers
November 6, 2014
3.5/5
சாருவின் எளிமையானதும் சரளமானதுமான மொழிநடை காரணமாக சாருவின் கட்டுரைகளை எனக்குப் பிடிக்கும்.இத் தொகுப்பிலும் பல நல்ல கட்டுரைகள் இடம்பெற்றுள்ள அதேவேளை கடவுளிடம் பேசினேன் போன்ற சில மொக்கைக் கட்டுரைகளும் இடையிடையே வந்து போகின்றன.இக் கட்டுரைகளின் வெளிப்படைத்தன்மை பற்றி பல வாசகர்கள் சிலாகித்ததாக சாரு இரண்டோ மூன்று இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.ஆனால் எனக்கென்னவோ பல கட்டுரைகள் போலித்தனமானவையாகவே(Hypocrisy)இருப்பதாகத் தோன்றியது. ரசித்த சினிமாப்படங்களைப் பற்றி சில இடங்களில் விலாவாரியாக எழுதியிருக்கும் சாரு Pablo Neruda,Marquez,Llosa...என்று ஒருதொகை எழுத்தாளர்களை குறிப்பிட்டாலும் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகள் பற்றியோ அவர்களின் எழுத்துகளில் ரசித்த விடயங்கள் பற்றியோ எதுவுமே குறிப்பிடவில்லை.Dictionary of Kazars என்ற பெயர் மட்டும் இரண்டு இடங்களில் வருகின்றதே ஒழிய அந்நூலை பற்றிய வேறு தகவல்கள் ஏதும் இல்லை :(
Profile Image for Mahesh.
5 reviews18 followers
June 9, 2014
Bought this book - a compilation of articles published in various magazines - without any expectation.So did the experience after reading the book; nothing great either in content or in writing style.The articles lacked depth and the writer couldn't come off from Sujatha's influence.
Profile Image for Karthik Aravind.
1 review8 followers
May 15, 2017
the another wonder of charunivedita....
always you rocking charu...
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.