நக்கீரன் தனது எண்ணங்களை ஆட்டோ சங்கரின் மூலமாய் வெளிப்படுத்தியது போன்ற பிம்பமே எனக்கு உருவானது. 6 கொலைகளை செய்ததாய்க் கூறப்படும் சங்கர், ஒரு கொலை மட்டுந்தான் அவன் செய்ததாகவும், மற்றதெல்லாம் தனது கூட்டாளியான பாபு தன்னையும் மீறி சூழ்நிலையால் கொலை செய்தானெனவும் தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
வெவ்வேறு காலகட்டங்களில் 5 கொலைகளையும் செய்ய சூழ்நிலையால் தெரியாமல் நிகழ்ந்துவிட்டதென யாராவது சொன்னால் நம்ப இயலுமா?
சென்னையில் தற்போது பிரபலமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களால் மக்கள்கூட்டம் நிறைந்த பகுதிகளில் அன்று நடந்த ஒரு சாராயக்காரனின் கதை