ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
A beautiful exploration of questions we face and ask in day-to-day life. No,not lofty ones like "What is the velocity of light in air?" but introspective questions like "Am I beautiful?","What can a single person do against all the injustice?","Why do people lie all the time","why so serious?" etc.The author's lyrical prose borders on the verge of being preachy but such tendencies are reined in by a mix of poignant anecdotes,entertaining stories and self-introspection.
The book leaves us with some striking images like an unemployed youth sitting with his back to the sea as he is ashamed to face the waves,a working woman in tears of hunger as the contents of her lunch box are spilled in a crowded electric train and an IAS aspirant who was once the toast of his college now serving as a bill cashier in a nondescript hotel.
சில வருடங்களுக்கு முந்தியே வாங்கிய புத்தகம். 100 பக்கங்கள் தானே இருக்கு அப்பறம் படிச்சிக்கலாம்னு தள்ளிப் போட்டது அப்படியே புத்தக அலமாரியில் மறைந்து போச்சி. இந்த ஞாயிற்றுக் கிழமை படிக்கச் எடுத்தேன்.
நம்ம வாழ்க்கையில் சந்திக்கிற, சந்தேகிக்கிற சில கேள்விகளை முன்வைத்துத் தனி தனியா கட்டுரைகளை எழுதி இருக்கிறார் எஸ்.ரா. அத்தனை கட்டுரைகளும் தன் சொந்த வழக்கை அனுபவம். தன் வாழ்க்கையில் சந்திச்ச சகா மனிதர்கள் அனுபவம், உலக நாட்டுக் கதைகளை வைத்து பதில் தேடுற முயற்சியே இந்தக் கட்டுரை தொகுப்பு.
அதல்லாம் இருக்கட்டும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தான் என்ன? எதற்குமே நேரடியான பதில்கள் இல்லை, எல்லாக் கேள்விகளும் இன்னும் பல கேள்விகளை முன்வைக்கிறது. இப்படி முன் வைக்கப்பட்ட கேள்விகளை பின் தொடர்ந்து போன பதில்கள் எல்லாமே நம்மிடம் மட்டுமே இருக்கிறது.
எனக்கு இணக்கமான சில கேள்விகள்:
பசித்த வேளை : - "உன்னால ஒரு வேளைச் சாப்பாடு போடா முடியுமா?"
பெரிதினும் பெரிது கேள் : - "வீட்ல சும்மாவே இருந்த எப்படி?"
படிப்பை முடிச்சிட்டு வேலை இல்லாம வீட்ல இருக்கிற எல்லா ஆண்களும் எதிர்கொள்ற கேள்வி. அவன் படுற அவமானம், பிரச்சனை, புறக்கணிப்பு, தன்மேலேயே இருக்கிற Self doubts.
"வேலையின் வழியாக மட்டுமே நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் இத்தனைக்கும் காரணமோ?" - இந்தக் கேள்வி நம்ம வாழ்க்கையை அளவிடற அளவு கோலை தகர்தெரியுது.
"வாழ்வை எதிர் கொள்வதற்கான துணிச்சலை நம் கல்வி முறை கற்று தருவதில்லை"
இந்தப் புத்தகத்தை படிக்கும் போதுதான் என் மனசுல ஒரு கேள்வி எழுந்துச்சி, கேள்விகளே இல்லாத உலகம் எப்படி இருக்கும்? ரொம்பவே அபத்தமா, blantஅ இருக்கத் தான் வாய்ப்பு அதிகம். பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை அப்படித்தான் இருந்தேன், கல்லூரி படிக்கும் போது சில கேள்விகள் அந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் இன்னும் கேள்விகளே சேர ஆரம்பித்தது. இப்போது திரும்பி பார்த்தா கூட, புத்தக அலமாரில பாடிக்காம சேந்து பொய் இருக்கிற புத்தகங்கள் போலக் கேள்விகள் சேர்ந்து இருக்கு. என்னைக்கோ ஒரு நாள் படிச்சிடுவோம், அதே போல என்னைக்கோ பதிலும் கிடைக்குமென்று ஒரு நம்பிக்கை.
A satisfactory book for a quick read. Few were thought provoking. The book follows the structure, a wrapper to the hand picked story from various region of the world.
Life is filled with questions and so is this book with all the common questions— you keep asking yourself often. It's so thoughtful and mesmerizing how a human brain can think. Looking forward to read the other works of the author.
"என்னை எதுக்கு படிக்க வெச்சிங்க?" "என்ன ஊரு இது மனுஷன் வாழுவானா?" "எனக்குன்னு யாரு இருக்கா?" "ஒரு ஆளால என்ன செய்ய முடியும்?"
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் நூற்றுக்கணக்கான கேள்விகளை சுமக்கிறான். கேள்விகள் இல்லாத மனிதனே இல்லை. நம் எல்லோருக்கும் பொதுவாக இருப்பவை இந்த கேள்விகள் மட்டும் தான். இந்த கேள்விகளின் முன்னால் சாமானியனும், ஜனாதிபதியும் ஒன்றே. கேள்வி கேட்பவன் இதற்கான பதிலை எதிர்பார்ப்பது கூட இல்லை. பதில் இல்லாத இந்த வினா எழுப்பும் மௌனத்தை உற்று நோக்குகிறான்.
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தான் என்ன என்று பார்த்தால், எதற்குமே நேரடியான பதில்கள் இல்லை, எல்லாக் கேள்விகளும் இன்னும் பல கேள்விகளை முன்வைக்கின்றன. கேள்வி ஒரு சாவி. அதனால் திறக்கப்படும் கதவுகள் ஏராளம். இந்த கேள்விகளுக்கான பதில்களை யாசிப்போம்.
நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பல கேள்விகளை ஆராய்ந்து , கேள்விகளின் உள்ளே சென்று , ஏன் இந்தா கேள்விகள் எழுகின்றது , கேள்வி கேட்க வைக்கும் உந்து சக்தி எது என்ன பலவற்றை அறியிந்துள்ளார். கேள்வி ஒட்டிய சிறு கதைகள் அருமை.
This book is very interesting book and author talks about people questions in a day to day life . He says a perfect answer for these life questions . Each question and answer has a real impact in everyone's life . Highly recommended for everyone ✨✨
நான் வாசிக்கத் துவங்கிய காலத்தின் முதல் புத்தகம் இதுவே. அந்த நாள் இன்றும் நினைவில் எழுகிறது. அன்றாடத்தின் எளிய கேள்விகளின் வழியே சிந்திக்கத் தூண்டும் இந்நூல் வாசிப்பின் மீது பெரும் ஆர்வம் விதைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். எளிய நடையிலான சிறிய புத்தகம்
It is an excellent book of questions which we all think someday. Authors insights on the questions and stories added make it perfect. All his books are wonderful. I was about to give four stars but changed because of the last chapter.