கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலைக்கும் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் எந்தத் தொடர்புமே இல்லையா? குமரிமுனையில் இருக்கும் வள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியதற்கும் எம்ஜிஆருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா? வள்ளுவர் சிலைக்காக நட்டுவைக்கப்பட்ட அடிக்கல் தற்போது எங்கே இருக்கிறது? வள்ளுவர் சிலையில் வரலாற்றில் எம்.ஜி.ஆரின் பெயர் மறைக்கப்பட்டுவிட்டதா? எம்ஜிஆரின் பங்களிப்பு மறுக்கப்படுகிறதா? கருணாநிதி பெயர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறதா?
உண்மையில், திருவள்ளுவருக்குச் சிலை வடிக்க விரும்பியது யார்? அதற்கான அறிவிப்பை வெளியிட்டது யார்? யாருடைய ஆட்சியில் சிலை வடிவமைப்புக்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன? யாருடைய ஆட்
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.