திருமங்கலம் ஃபார்முலா. தமிழ்நாட்டின் சமகாலத் தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத பேசுபொருள். ஆம், வாக்குறுதிகளைச் சொல்லி வாக்குகளைக் கவர்வது போய் வாக்குகளைக் கவர்வதற்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கத் தொடங்கிய கலாசாரத்துக்கு தற்போது சொல்லப்படும் அடையாளப் பெயர்தான் திருமங்கலம் ஃபார்முலா.உண்மையில், திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்னால் எந்தவொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணம் தரப்படவில்லையா என்று கேள்வி எழலாம். உண்மையில், திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு வெகுகாலத்துக்கு முன்பே வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் மோசமான கலாசாரம் முளைவிட்டு விட்டது. அதன் வளர்ச்சி வெளியே தர ஆரம்பித்தது திருமங்கலம் இடைத்தேர்தலின்போதுதான்.