சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று.
'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு' என்று சொல்லியிருப்பார்களேயானால், அது சரியாக இருந்திருக்கும்.
உணர்வு என்பது இயல்பானது. அது, யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே நமக்குள் தோன்றுவிது. தானாக ஊற்றெடுப்பது. அந்த உணர்வை, அவசரமான ஆத்திரத்தில் தணித்துக் கொள்வதற்கும் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அது கிட்டத்தட்ட ஒரு மிருகத்தின் செயல்பாட்டை போன்றதுதான். மிருகங்கள் ஒருபோதும் எதைப்பற்றியும் மற்ற மிருகங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்பதில்லை......