V. Irai Anbu (Tamil: வெ. இறையன்பு) is an IAS Officer, writer, educator, social activist and motivational speaker. He is the current Chief Secretary of Tamil Nadu Government .
Irai Anbu has been a motivational speaker and hosted a show named Kalloori Kaalangal ( Tamil: கல்லூரி காலங்கள் ) in DD Pothigai in which he shared his experiences about his college life. He has written more than 150 books.
இருப்பதை விட்டு அதன் மறுபக்கத்தைத் தேடி அலையும் மனதை திருப்திப்படுத்த ஒருபோதும் இயலாது. தேடியது கிடைத்தாலும் மனம் அதில் லயக்காமல் வேறு ஒன்றை திரும்பவும் நாடத் தொடங்கிவிடும்.
அழிவின் வழியே புதிய துவக்கம் நடைப்பெறுவதால் அவ்வழிவை வெறுத்து அதை விட்டு விலகி செல்லத் துடிக்கும் கால்களுக்கேற்ப இசைந்தோமானால் வாழ்வின் சுவாரசியம் தடைப்பட்டு நிர்மூலமானவற்றையே காண முடியும்.
முப்பது வருடங்களுக்கு மேலாக மரணத்தை நேரடியாகச் சந்திக்காத நசிகேதனுக்குத் தொடர்ந்து நான்கு மரணச் செய்தி கிட்டுகிறது.மனிதனை மிகவும் நேசிக்கும் மனதுடையவனுக்குத் தன்னைச் சார்ந்தவர்களின் இழப்பு அவனின் இயல்பை பாதித்துவிடுகிறது.மரணத்தை விடக் கொடியதான மரணப் பயம் அவனை ஆட்கொண்டு தத்தளிக்க விடுகிறது. தனிமையைத் தேடி மலைப்பிரதேசம் சென்று வந்தவனுக்கு வாழ்வின் கோட்டுபாடுகள் தெளிவான அணுகுமுறையை அவனுக்குப் புரிய வைக்கிறது.
மரணமில்லா வாழ்வை தேடி அலைபவனுக்குக் கொல்லிமலை செல்ல வழிகாட்டுகிறார் ஒருவர்.அங்கே ஞானி ஒருவரின் துணையுடன் செல்ல வேண்டிய பாதைக்காகத் தன்னை ஆயதப்படுத்தும் நசிகேதனுக்கு ஒலைச்சுவடியை தருகிறார் அவர். முழுவதும் படிக்க வேண்டும் என்ற அவரின் வேண்டுகோளை மறந்துவிட்டுத் தனக்குத் தேவையானது கிடைத்தவுடன் அதை அழித்துவிடுகிறான்.
ஞானி முக்தியடைந்த பின் மரணமில்லா பெருவெளியை தேடி பயணப்படுபவன் பல இன்னல்களைக் கடந்து அவ்விடத்தை அடைகிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தோஷம் அங்கே கிட்டவில்லை. அதற்கு நேர்மாறாக அங்கே மரணத்தை விரும்பு அழைக்கும் சூழல் நிலவுவதை உணர்கிறான்.தான் தேடியதை அடைந்தவுடனே அதற்காகத் தான் இழந்தது அதிகம் என்ற துக்கத்துடன் மரணமில்லா பெருவெளியில் உலாவுகிறான் நசிகேதன்.
சாகாவரம் என்பது மிகுந்த கற்பனை நயத்துடனும், ஆழமான தத்துவ சிந்தனையுடனும் எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த நவீன காப்பியம். மரணத்தைப் பற்றிய புரிதலற்ற ஒரு மனிதன், அதற்கான பயத்துடன் தொடங்கும் அவனது பயணம், மரணத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை தேடி அலையும் பயணமாக மாறுகிறது. அந்த வழியில் அவன் சந்திக்கும் நன்மை-தீமைகள், மனதளவிலான பரிணாமங்கள் அனைத்தும் மிக அழகாக, மிக மென்மையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த புதினத்தில் வரும் நசிகேதன் எனும் கதாபாத்திரம், தனது வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருந்து தொடங்கி, முற்றிலும் வேறுபட்ட ஒரு பாதையில் பயணிக்கிறது. அந்த பயணம் நம் மனதை தொடுவதாகவும், ஆழத்தில் சில கேள்விகளை எழுப்புவதுபோலவும் இருக்கிறது. மேலும், கதையின் முடிவு நாம் எதையும் எதிர்பார்க்க முடியாத விதத்தில் நம்மை விரைந்து அடைகிறது — அது ஒரு தாக்கத்தைச் சுமந்து நிற்கிறது.
ஐயா இறையன்பு, கதையின் ஓட்டத்தைத் தாண்டியும், வாசகரின் வாழ்க்கைக்கும் தேவைப்படும் தத்துவங்களை இடைவிடாமல் நன்கு சீராக ஊடுருவி கூறுகிறார். ரசாவதி புதினத்திற்கு பிறகு, என்னை இப்படியாக ஆழமாக யோசிக்க வைத்த, மனதைக் கிளறிய மற்றுமொரு படைப்பு சாகாவரம் தான்.
சாகாவரம் நூல், மரணம், வாழ்க்கை, அச்சம், ஆன்மிகம் போன்ற ஆழமான உணர்வுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு முக்கியமான படைப்பு.
தன் நெருங்கிய நண்பர்களின் இழப்பால், மரணத்தின் மீதான கேள்விகளும் அச்சமும் கொண்டு, மரணமில்லா வாழ்க்கையை தேடிய பயணத்தை தொடர்கிறான் கதையின் நாயகன் நசிகேதன். அப்பயணத்தில் சந்திக்கம் மனிதர்களையும், பயணத்தின் இறுதியில் கிடைத்த "வரம்" பற்றிய கற்பனை கதையே சாகாவரம்.
இந்ந நூலின் சிறப்பம்சம், இதுவரை பிறமொழிகளில் மட்டுமே நாம் கண்ட "Magical Realism" கதையம்சம்/வகை(genre) -ல் இந்நூல் அமைந்துள்ளதுதான். மற்றும் "Depression" (மனச்சோர்வு) பற்றி தமிழில் நான் வாசித்த நூல் இதுவே.
மரணம், மரண பயம் என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதி , மற்றும மரண பயம் நம்மை வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விடாது என்பதை நாவல் வலியுறுத்துகிறது.
புத்தகத்திலிருந்து சில வரிகள்:
“முதல் கடிதம், முதல் குழந்தை, முதல் பணி, முதல் பள்ளியைப்போல முதல் மரணமும் மறக்க முடியாதது. வேண்டியவர்களின் மரணம் நமக்கும் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஞாபகங்கள் நம்மைத் தடவும் போதெல் லாம், அது தழும்பாகத் தட்டுப்படுகிறது. மரணம் வருகிற வயதில் வந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள்."
"இயற்கையின் படைப்பில் தன்னை அசிங்கமாக்கிக் கொண்டவன் மனிதன் மட்டுமே."
"வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய வடிவத்தில் வருகின்றன மரணம் திருவிழா போல."
"எல்லோருமே ஒருவகையில் பிச்சைக்காராகளதான், பிச்சை கேட்கிற நபர்கள் மட்டுமே வேறுபடுகிறார்கள்."
இதுபோல முத்துகள் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்துள்ளன.
ஒருவனுக்கு சாவை பற்றிய அறிவும் பக்குவமும் வராமல் மாறாக பயம் வந்தால் அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிகளில் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் காத்துக் கொள்ள எண்ணி செய்யும் விஷயங்கள் மூலம் அவன் பெறும் அனுபவங்கள்... இறுதியில் மரணத்தை பற்றிய உண்மையான அறிவை அவன் பெற்ற நேரம் அனைத்தும் கை மீறி சென்றுவிட்டது என்பதை அவன் உணர்ந்து கொள்வதே இந்த சாகாவரம்.....
This is a wonderful work from Dr.V.Iraianbu where he emphasizes on the nature of fear in humans, especially the fear of death that drives one to seek self preservation, and to somehow deceive from accepting the reality and the law of nature. This he conveys through the journey of a man who seeks immortality and it is a very good blend of philosophy and nature of emotions of human beings. A book that is bound to stir the hearts of the readers to transform oneself from fear to fearlessness.