விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.33 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் காவலரண்கள் என்ற ஒரு மனிதன் அவர்களது தனி ஈழக் கனவு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை. அவரது இழப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க சிலர் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். உலகில் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையில் எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் இருந்திருக்கின்றார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் மிகவும் வித்தியாசமானவர்கள் அவர்களிடம் கடற்படை, விமானப்படை கூட உண்டு.ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு கடற்படை, வான்படை இரண்டையும் வைத்திருக்கும் அளவுக்கு உருமாறியது எவ்வாறு ,5 பேர் கொண்ட இயக்கம் 25 ஆயிரம் வீரர்களாக மாறியது எவ்வாறு,மேலும் பல்வேறு தளங்களில் கொடூரமான கொலைகள்,குழந்தைப் போராளிகளை படையில் வைத்திருப்பது,இலங்கை ராணுவத்துக்கு எதிரான தங்களது போரை நடத்த புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மிரட்டி பணம் வசூல் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது. இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் மொழி பிரச்சினை, இந்தியாவின் தலையீடு ஆகியவற்றை எளிமையாக புரியும் வகையில் தருகிறது இந்தப் புத்தகம்.