‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமல்ல, ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலான அவலம். மும்பையின் காமாட்டிபுரா, கொல்கொத்தாவின் சோனாகாச்சி போல, தமிழ்நாட்டுத் திருநெல்வேலியில் ஜி. நாகராஜன் கற்பனையாய் உருவாக்கிய விலைப்பெண்டிர் தெரு. ‘குறத்தி முடுக்’கின் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத்திணறும் பெண்கள் ஒருபுறம்; சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொண்ட தொழிலுக்கு உடம்பையும் கொஞ்சமும் மங்கிவிடாதபடி தான் அடைகாக்கும் கனவுக்கு மனத்தையும் கொடுத்து நீர் ஒட்டாத இலைபோல வாழும் தங்கம் மறுபுறம்; இருதரப்பையும் ஒரு மாயக்கோடுபோல இணைக்கும் பத்திரிகையாளன் என மூன்று தரப்புகளின் சங்கமம் இந்தக் குறுநாவல். மேலோட்டமாகத் தென்படும் உரையாடல்களில், பாத்திரங்களின் அகஉலக ஆழத்தை நுட்பமாகச் சித்திரிப்பதில் அலாதித்திறன் கொண்டவர் ஜி.நாகராஜன் இன்றைய சுதந்திரத்தைத் தமிழ்ப் புனைகதை எட்டியிராத காலகட்டத்தில் ‘குறத்தி முடுக்’கை எழுதியிருக்கிறார் என்பது அவரது தீரத்துக்கும் கரிசனத்துக்கும் சான்று. பொதுவாகவே ஜி. நாகராஜனின் படைப்புகளில் ஒருவிதக் கைப்புச்சுவை உண்டு. ‘குறத்தி முடுக்’கிலும் நிராசையின் குரல் ஓங்கித்தான் ஒலிக்கிறது. ஆனால் அதையும் மீறி, மனித மனத்தில் இயற்கையாக ஊற்றெடுக்கும் வாஞ்சையும் கம்பீரமும் இந்தக் குறுநாவலில் முன்நிற்கின்றன.
ஜி. நாகராஜன் (G. Nagarajan) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது.
வள்ளிக்குறத்தி முடுக்கில் செயற்கையாக இருட்டடிக்கப்பட்ட பாலியல் தொழில் நடக்கும் தெருவிற்கு அடிக்கடி வந்து போகும் கதை சொல்லிக்கும் அங்கு வசிக்கும் தங்கத்திற்கும் இடையேயான உறவு. வாழ்க்கையை பற்றிய எதிர்மறை எண்ணங்கள், சமுதாயக் கட்டுப்பாடுகளைப் பற்றி எழும்பும் கேள்விகள், அவை சரி, சரியில்லை என்று தனக்குள்ளே தர்கித்து ஆராய்ந்து அறிய முயற்சிக்கிறார் கதை சொல்லி.
குறத்தி முடுக்கில் வசிக்கும் மரகதம், செண்பகம், தேவயானை, தங்கம், அங்கு வந்து செல்லும் கதை சொல்லி இவர்கள் அனைவருமே அமைத்துக் கொள்ள முயற்சிக்கும் வாழ்க்கை ஒன்று அடைவது வேறு.
தங்கம், மரகதம், செண்பகம், தேவயானை என்று பெண்கள் அனைவரும் உடலை அலட்சியப்படுத்தி மனதால் வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.
தன்னிடம் வருபவர்களிடம் எல்லாம் பணம் வாங்கி தன் காதலனுக்கு தந்து அவன் காதலை யாசிக்கும் மரகதம். அவன் தன்னிடம் பணத்துக்காகவே வருகிறேன், அதற்காக ஏமாற்றுகிறான் என்றறிந்து மனமுடைகிறாள்.
யாருமில்லாத தனக்காக, ஒரு குழந்தையைப் பெற்று கொள்ள நினைத்து முடியாமல் போகும் செண்பகம்.
தற்கொலை முயற்சி செய்யும்போது அதுவே விபத்தாகிப் போகும் பதினைந்து வயது தேவயானை.
காதல், திருமணம், குடும்பம் போன்றவற்றில் எதிர்மறை எண்ணங்களுள்ள கதைசொல்லி, பின்னர் தங்கத்தின் மேல் ஆசைக் கொண்டு கல்யாணம் செய்யக் கேட்கிறார். ஆனால் தங்கம் ஏற்கனவே திருமணமாகி இரு பிள்ளைகளுக்குத் தகப்பனான நடராஜனை காதலித்து வந்தவள் பின்பு அவனோடு சென்று விடுகிறாள்.
தன்னால் தான் நடராஜன் அவன் குடும்பத்தினரை துன்புறுத்தினான், அவர்களிடமிருந்து பிரிந்தான் என்ற குற்றவுணர்வு இருந்தாலும், கதை சொல்லி அவளைத் திருமணம் செய்யக் கேட்டதற்கு மறுத்துவிட்டு நடராஜனை திருமணம் செய்து கொள்ளாமலே அவனைக் கணவனாக ஏற்றுக் கொண்டு அவனோடு வாழ்கிறாள் தங்கம்.
கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி சொல்லும், "காதலுக்கு மணவாழ்க்கையின் அனுகூலங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு அர்த்தத்தைக் கற்பிப்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம்." என்கிற இந்த வாதத்தை இக்கதையில் வரும் தங்கம் தகர்த்தெரிகிறாள். மணவாழ்க்கையையோ அது தரும் பாதுகாப்பையோ, அதன் தேவையையோ அவள் எதிர்ப்பார்க்கவேயில்லை.
தங்கத்தை மறக்க முடியாமல் வேறு ஊருக்கு மாற்றலாகி போக முயற்சிக்கும் கதை சொல்லி எதேச்சையாக அவளைச் சந்திக்கிறார். அவள் வறுமையை சுட்டி காட்டி அலட்சியமாகப் பேசுகிறார், இருந்தும் அவள் காதல் நடராஜனிடமே இருக்கிறது என்று அறிந்து மனமுடைந்து திரும்புகிறார்.
Subject : Telling the reality of sex workers in 1950’s
He has not written any imagination or unreality like மானே,தேனே,பொன்மானே...
All the characters speaking here is true words from the heart. Example : என்னை பொறுத்தமட்டில் என் காமத்தை நான் விலைமாதர்களிடத்து தீர்த்துக்கொள்ளமுடியும்வரை திருமணத்தைப்பற்றி நினைக்கமாட்டேன்குடும்ப வாழ்க்கை செளகரியங்கள் எல்லாம்எனக்கு வேண்டாம்; காதல் என்ற பைத்தியமெல்லாம் எனக்கில்லை.மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்; #குறத்திமுடுக்கு
சமுதாயத்திற்கு பயந்து கள்ளத்தனமாக தன் வயிற்றிக்கு கிழ் வரும் பசியை போக்கும் இடத்தில் எழும் காதலையும் மற்றும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையை இந்த குறுநாவலில் non-linearஆக ஜி.நா கதையை நகர்த்தி படிக்கும் வாசகனை குறத்தி முடுக்கில் சற்று நேரம் உலாவ விடுகிறார்.
குறத்தி முடுக்கு ஒரு ஆழமான கதை. நாம் மோசமாக நினைக்கும் ஒரு செயல் இயற்கையாக தோன்றுகிறது. அது சரியா, தவறா என்பதைவிட அதை எவ்வாறு நம் புரிந்துகொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் என்னும் பல விஷயங்களை திரு.நாகராஜன் அவர்கள் குறத்தி முடுக்கு வழியாக சொல்கிறார். நமக்கான ஆய்வு புத்தகம் இந்த குறத்தி முடுக்கு.
குறத்தி முடுக்கு - ஜி. நாகராஜன் ⠀⠀ குறத்தி முடுக்கு மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்ட நாவல்.தற்போது விலை மாந்தர்கள் பற்றிய அறிவு திரைப்படம் வாயிலாகவும் சமூக வலைதளங்களில் வாயிலாகவும் நமக்கு சிறிதளவு கிடைத்துள்ளது. ஆனால் நாவல் எழுதப்பட்ட காலமாகிய 1963ல் எவ்வகையான தெளிவு மக்களிடையே இருந்து இருக்கும் என்பது கேள்வியை! ⠀ விலை மாந்தர்களின் வாழ்வியலை கதை களமாக எடுத்து கொண்டது நாகராஜனின் தனிமையான பன்மையை.பல உண்மைகளையும் நிகழ்வுகளையும் யதார்த்தமான எழுத்தின் மூலம் பதிவு செய்து அவர்களின் வாழ்வியலை அறிய செய்கிறார் ஆனால் இன்னும் ஆழமாக சில நிகழ்வுகளை பதிவு பன்னி இருக்கலாம். ⠀⠀ மரகதம் தங்கம் செண்பகம் தேவையானை ஆகிய கதாபாத்திரங்களின் வாயிலாக நம்மை அவர்களின் உலகுக்கு அழைத்து சென்று சுற்றி காட்டி விட்டார்.
ஜி. நாகராஜன் அவர்களின் முதல் சிறுநாவல் "குறத்தி முடுக்கு".
சரி, குறத்தி முடுக்கு என்றால்? கற்பனையில் உருவாக்கிய விலைமாதர்கள் தெரு.
முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மையான எழுத்தாளர் ஜி.நாகராஜன் என்பது ஒரு சில பத்திகள் படிக்கும் போதே நமக்குப் புரிந்து விடுகிறது.
வேசிகளை பாவப்பட்ட ஜென்மங்களாகவோ அல்லது புனிதர்களாகவோ மற்ற எழுத்தாளர்கள் தங்கள் புனைவில் வரையறுக்கும்போது, ஜி.நா. அவர்கள் விலைமாதர்களி��் வேதனைகளையும், மாறுபட்ட அனுபவங்களையும் சொல்லியிருக்கிறார்.
" மனிதன் தான் ஆசைப்படும் வாழ்க்கை ஒன்று. ஆனால, கிடைக்கும் வாழ்க்கை ஒன்று. " இது, சாதாரண மனிதனுக்கும் நடக்கும். பெரும் பாதிப்போடு, பல கதைகளோடு சமூகத்தால், ஆசையால் ஒரு அவலநிலைக்குத் தள்ளப்படும் " விலைமாதர்களுக்கு " ஆசையென்பதே பலமுறை தோற்கடிக்கப்பட்ட பல கனவுகள் தான் போலும்.
சென்பகம், தேவயானை, தங்கம் என பலரும் இருளில் கண்டுகொள்ளப்பட்டும் வினாவாக " அவர்கள் அப்படித்தான், அவர்களுக்கு அப்படித்தான் " என போய் விடுகிறார்கள்.
பெயரில்லாத அந்த பத்திரிகை நிருபர், கூறும் சில வார்த்தைகள்;
" மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும்போது, வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. "
" என்னைப் பொறுத்தமட்டில் என் காமத்தை நான் விலைமாதர்களிடத்து தீர்த்துக்கொள்ள முடியும்வரை திருமணத்தைப் பற்றி நினைக்கமாட்டேன். "
ஆசிரியர் - ஜி நாகராஜன் குறுநாவல் காலச்சுவடு பதிப்பகம் 95 பக்கங்கள்
உலகில் எழுதப்படும் அத்தனை கதைகளும் இவ்வுலகில் எங்கோ ஓர் மூலையில் வசிக்கும் ஒரு வாசகனை நோக்கியே எழுதப்படுகின்றன. அது அவனுக்கான கதை என்று அவனுக்கும் அந்த எழுத்தாளனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய உள்ளுணர்வு. இது ஒரு வித வினோதமான, அற்புதமான, ஆச்சர்யமான, உணர்வுபூர்வமான, உண்மையான ஓர் பந்தம். அந்த பந்தத்திற்கு பெயரும் கிடையாது, வெளிஉலகில் இருந்து பார்க்கும் கண்களுக்கு அது புரிவதும் கிடையாது. அப்படி ஓர் உணர்வு, ஓர் பந்தம் எனக்கு பெண்களை தனித்து எழுதும் ஒரு சில எழுத்தாளர்களிடம் மட்டுமே ஏற்படும். குறிப்பாக தி ஜானகிராமன், ஜெயகாந்தன், அந்த வரிசையில் இப்பொழுது ஜி. நாகராஜனும் இனைந்து விட்டார். இல்லை இல்லை நான் அவருடன், அவர் கருத்துக்களுடன் என்னை இணைத்துக்கொண்டேன். குறத்தி முடுக்கு வழியே என்னை கரம்பிடித்து அழைத்து சென்று என் வாசிப்பு பயணத்தில் ஒரு நீங்கா துணை பயணியாகிவிட்டார்.
குறத்தி முடுக்கு ஒரு தனி உலகம். இவ்வுலகம் பெரிதாக எங்கும் பேசப்படாது. ஏனெனில் இது இருள் சூழ்ந்த, சரியாக சொல்லவேண்டுமென்றால் நம் ஆண் சமூகம் ஒன்று சேர்ந்து குறிப்பிட்ட பெண் சமூகம் சுற்றி உருவாக்கிய ஒரு செயற்கை இருள் சூழ் உலகம். இருளில் தான் ஆண் தன் அத்தனை மிருகத்தனமான உணர்ச்சிப்பெருக்கை வறுமைக்கு விருந்தாகும் ஒரு பெண்ணிடம் கொட்டி தீர்த்து விட்டு நிம்மதி பெருமூச்சுடன் கலைந்து வைத்த தன் ஆடையுடன், தன் மானம், மரியாதை, சமூக அந்தஸ்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டு மீண்டும் தன் ஒளிமிகுந்த வாழ்க்கைக்குள் நுழைந்து விடுகிறான். இந்த இருள் உலகை, தமிழகத்தின் தென் பகுதியில் இருந்த ஒரு குறத்தி முடுக்கை தான் ஜி நாகராஜன் வெட்ட வெளிச்சம் போட்டு அம்பலப்படுத்துகிறார். இக்கதை எழுதப்பட்ட காலம் முற்றிலும் மாறுபட்டது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த இக்கதை நம் நவீன தமிழ் இலக்கியத்தில் என்னை பொறுத்தவரை ரௌத்திரம் மிக்க படைப்பு இதுதான்.
இக்கதையில் குறத்தி முடுக்கு பெண்களுக்கு ஆசிரியர் கொடுத்த பெயர்கள் மிகசிறந்தவை - செண்பகம், தங்கம், மரகதம், மீனாட்சி. இக்கதையில் பல முகியமான இடங்களை ஆசிரியர் நிரப்பாமல் வெற்றிடமாக விட்டுவிடுகிறார். அது வெற்றிடம் அல்ல அந்த இடம் நிரப்ப முடியா அளவு கனமானவை. இக்கதை நம்மை நோக்கி பல கேள்விகளை கேட்கும், இன்று வரை அதற்கு பதில் கிடைத்தா என்பது கேள்விக்குறியே? காதல், திருமணம், இல்லற வாழ்க்கை, ஆண் பெண் உறவு குறித்து பல தர்கங்களை உளவியல் வழியே இக்கதை நிகழ்த்துகிறது. பெயரிடப்படாத ஒரு ஆண் கதாபாத்திரமும் அவன் தினமும் தன் இச்சைக்காக தேடி செல்லும் தங்கம் என்ற பெண்ணறிக்குமான நிகழ்வுகள் தமிழ் இலக்கியத்தில் இதுவரை யாரும் எழுதாத ஒரு உண்மை. " அவன் கைவலி, கால்வலி, மன வலி எல்லாவற்றுக்கும் ஐந்து நிமிடங்களில் நிவாரணம் காண முயலுகிறான் ",........." இனி அவனுக்கு நல்ல உறக்கம் வரும் "......." செண்பகத்துக்கு தூக்கம் வரவில்லை"
ஆம், உண்மைகள் ஊமையாகமல் ஊமைப்படுத்தப்படமல் உண்மையாக உங்கள் கண் முன்னே நிறுத்தப்பட்டால் இப்படிதான் இருக்கும். இதோ இன்னும் சில உண்மைகள் " குறத்தி முடுக்கில் 3 மாத கருவை சுமக்கும் செண்பகம் " காவல்துறை கண்டித்து அனுப்பிய மீனாட்சி தன் சிகை இழந்த சிரத்தை புன்னகையுடன் கண்ணாடியில் பிம்பமாக பார்க்கும் பார்வையில் ஒழிந்திருக்கும் உண்மை குறத்தி முடுக்கில் காதலும் இருக்கும் காதலனும் இருப்பான் ஆனால் அந்த காதல் எதன் மீது என்பது தான் கேள்வி? ஆணின் தேவைகள் இந்த குறத்தி முடுக்கிற்குள் ஒரு போதும் நிராகரிக்கபட்டுவிடக்கூடாது. ஆனால் அதற்கும் விதிவிலக்காக விளங்கியவள் தான் தங்கம். நான் குறத்தி முடுக்கிற்குள் ஒருவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமானால், நான் சந்திக்க விரும்புவது "தங்கம்" என்பவளைத்தான்.
பக்கங்களில் குறைந்தவையாக இருந்தாலும் இந்த புத்தகம் கனமானது. அந்த கனம் எனக்குள் சற்று தொற்றிகொண்டது. உங்களுக்குள்ளம் நிச்சயம் தொற்றிக்கொள்ளும். அந்த கணத்தை இறக்கிவைக்க ஒரு வழிதேடுவோம். அதுவரை குறத்தி முடுக்குகள் இருளுக்குள் இருளுடன் ஓர் இருளாக இருந்துகொண்டுதான் இருக்கும். இதுதான் உண்மை.
குறத்தி முடுக்கு என்பது பாலியல் தொழிலைப்பற்றிய பாலியல் தொழிலாழர்களைப் பற்றிய ஓர் குறுபுதினம். தோழர் நாகராசன் அவர்கள் யாரும் தொடாத தொடத் தயங்கும் கதைக்கருவினை எடுத்து சிறப்பாக கொடுத்துள்ளார். இவரின் கதையில் உள்ள கதைமாந்தர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக நம்முடையே ஏதோ கருத்தை பகிர்பவர்களாக இருக்கின்றனர். திரு. கமல் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு நூலில் பரிந்துரைத்தது. குறத்தி முடுக்கு என்ற பெயரே எனக்கு புதுமையானது. முதல்முதலாக கேள்விப்பட்டது. 1950களில் நடக்கும் இரவு நேர வாழ்க்கையை படமாக்கியுள்ளார். தோழர் நாகராசன் குறுபுதினத்தை ஆரம்பிக்கும்போது இருவேறு தெருக்களைப்பற்றி விவரிக்கிறார் அதில் குறத்தி முடுக்கு இருட்டாகவும் ஆள்நடமாட்டமே இல்லாத பகுதியாகவும் திகழ்கிறது. மற்றொரு தெரு வெளிச்சமாக ஆட்கள் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த இருட்டான பகுதி என்பது அங்கு வாழும் மக்களது வாழ்வும் இருட்டாக இருப்பதையே பிரதிபலிக்���ிறது. இப்புதினம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் மனநிலையையயும் வாழ்வியல் சிக்கல்களையும் அவர்களது சிரமங்களையும் நேர்ப்பாங்கற்ற முறையில் விவரித்துள்ளார். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் இருட்டிலேயே இருப்பார்கள் வெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாதவர்களாகவே இருப்பார்கள். குறத்தி முடுக்கிற்கு வந்துபோகும் ஆண்களும் இருட்டில் வந்து விடியும் முன்பே சென���றுவிடுவார்கள். அவ்வாறு இருக்க நாகராஜன் எவ்வாறு பாலியல் தொழிலாளர்களின் மனதை பிரதிபலித்துள்ளார் என்பது விந்தையிலும் விந்தை. எளிமையான உணர்வுப்பூர்வமான உயிரோட்டமுள்ள நல்ல மொழிநடையுள்ள போலியில்லாத மனிதர்களைப்பற்றிய சிறுபுதினமே இது. இப்புதினத்தின் இறுதியில், காதல் திருமணம் ஆசை மோகம் பற்றி புதிய புரிதல் உண்டாகலாம். இப்புதினத்தை வாசிக்கும் முன்பு முன்னுரையை வாசிக்காது தவிர்ப்பது நல்லது, அது மேலும் ஆர்வத்தை வரவழைக்கும்.
பாலியல் தொழிலாளிகள் என்றாலே பரிதாபப்படுவது , அவர்களை அவர்களின் வாழ்க்கையிலிருந்து காப்பற்றவது என்பது போன்றே பெரும்பாலான நாவல்கள் இருக்கும் . அந்த வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு , நாம் காணாத , காண வேண்டிய ஒரு நிஜத்தை , பாலியல் தொழிலாளிகளின் நிதர்சனத்தை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஜி.நாகராஜன் . ஆகாப்பெரிய வருத்தமோ , அளவில்லாத ஒரு சந்தோசம் மட்டும் தான் தாசி வீடுகளில் கரைபுரைந்து ஓடும் என்கிற பொதுபுத்தியை சல்லி சல்லியாக நொறுக்கி அவர்களும் மனிதர்கள் தான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் நாவல் தான் குறத்தி முடுக்கு . கதை சொல்லப்பட்ட விதமும் , கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதமும் கண்டிப்பாக ஆசிரியர் நாகராஜனை நம் நினைவில் தனித்து நிலைத்திருக்க செய்யும் என்று சொன்னால் மிகையாகாது . கற்பனை கடல் எனவுமில்லாமல் நிஜத்தின் கோரம் என்கிற மிகைப்படுத்தலுமில்லாமல்( இரண்டையும் பயன்படுத்த கூடிய கதைக்களம் இது . இருந்தும் அதிலிருந்து விலகியிருந்த வாசகர்களுக்கு இது தேவை , இது மட்டும் போதும் என்று தேர்ந்தெடுத்து எழுதியதில் ஆசிரியரின் முடிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டியது ) சரியான விதத்தில் கதையை கொண்டு சென்று சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறார் . கதை படித்து முடித்தவுடன் பெரிதாய் ஒரு வெற்றிடமோ , விரக்தியோ படித்தவருக்கு ஏற்படவில்லை , அதே போல் ஒரு சாதாரண படைப்பை படித்திருக்கிறோம் என்கிற சலிப்பையும் ஏற்படுத்தவில்லை . இது போல் பல இடங்களில் நாகராஜன் தனித்து நிற்கிறார் . நிஜத்திற்கும் , கற்பனைக்கும் இடையேயான ஒரு மீறல் எங்கே நடந்திருக்கிறது என்பதை யூகிக்க முடியாத நாவலாக இருக்கிறது . இந்த மாதிரியான படைப்புகள் மிகவும் அரிது . தமிழ் நாவல் ரசிகர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய படைப்பு இது .
குறத்தி முடக்கு என்னும் சொல்லே புதிதாக தான் இருந்தது, கதை பாதி செல்லும் வரை அந்த சொல்லின் அர்த்தம் புரியாமல் பயணிதுகொண்டு இருந்தேன் . இதில் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்கை மையமாக வைத்து எழுதப்பட்டது , அதில் தங்கம் என்னும் பெண்ணுக்கும் கதாசிரியருக்கும் ஒரு காதல் உண்டாக்குகிறு, அந்த காதலின் பயணமும், இரண்டுபேரின் எண்ணங்களும், உரையாடல்களும் கதையை மெதுவாகவும், சுவாரசியமாகவும் நகர்துகிறது, ஒரு இடத்தில் தங்கத்தின் நியாயமான கோபம், அதற்கு அவளின் போராட்டமும் என்னை நிறைவு படுத்தியது, அந்த அரசீற்றம் எனக்குள்ளும் இருக்கவேண்டுமென்று எப்பொழுதும் நாண் ஏங்கியதுண்டு.
இதில் இதுவரை நாம் பார்காத, பார்க்க மறுத்த ஒரு வாழ்வை, அந்த வாழ்வு சார் மக்களை காட்டுகிறது குறத்தி முடுக்கு.
யாரும் எழுத துணியாத ஒன்றை எழுதுவதும், அதை சரிவர நமக்கு சொல்லுவதும் ஒரு புரட்சி, இந்த இடத்தில் ஜி. நாகராஜன் எனக்கு ஒரு புரட்சியாளநாக தோன்றுகிறான்.
ஒரு புதிய வாழ்வை தெரிந்த நிறைவும், அந்த கதை தந்த கசப்பும் எப்பொழுதும் நீங்காமல் ஒட்டிக்கொண்டே இருக்கும்..
A non-linear narrative of the sex workers in the times of G.Nagarajan, this short novel traverses across the lives of various characters. While Nagarajan says that he tells what he intends to convey, it is not that way in the novel. A lot of open ended situations which leads you on an imaginative journey into the narrow lane of kurathi mudukku, this novel is a stark visualization of the lives of the women and the situations in which these women are pushed into the flesh trade. Quite a heavy read.
The nameless protaganist, has no belief in love, visits Thangam, prostitute, and fell in love with her eventually. He approaches Thangam to marry him and later got news that she eloped with someone. G.N. , one of the greatest storytellers in Tamil, conveys the life of prostitutes and it's tragedy through protoganist discourse.
பாலியல் தொழில் இருட்டில் ரகசியமாக நடக்கும் ஒரு தொழில்,பாலியல் தொழிலாழிகளும் ரகசியமாக இருப்பவர்கள் அவர்கள் செய்யும் தொழில் அவர்களின் வாடிக்கையாளர் தவிர்த்து பெரும்பாலும் யாருக்கும் தெரியாது அதனால் அவர்களுடனான அறிமுகம் நம்மில் பலருக்கு இருக்காது. இதில் அவர்களின் எதார்த்தமான வாழ்ககையை எந்த மிகையுமின்றி பதிவு செய்திருக்கிறார்.
1963 ல் எழுதப்பட்ட குறுநாவல், ஜி. நாகராஜன் அவர்களின் கற்பனை (நிஜ உலகத்தில் இப்போதும் நடக்கும் கதை) உலகமே இந்த குறத்தி முடுக்கு. ஆண்களின் இச்சைகாகவும், வயிற்று பிழைப்புக்காக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் மற்றும் ஈடுபடும் சில பெண்களின் கதைகள். செண்பகம், தேவயானை கஷ்டங்கள் நம்மை நிலைகுலையச் செய்யும். தங்கம் தன் பேராசையால் பாதாளம் வரை செல்லும் அவளது வாழ்க்கை.
When i finished the book, felt a impact in my heart. The writing was such that you want to complete the book in a single stretch. Can understand why G Nagarajan is celebrated by literature writers. Philosophical content in the book was very simple but very powerful. Must read for any literature lovers.
Suggestions sometimes surprise you. My friend suggested this book to read. Am surprised the layout of the book handled by the author G Nagarajan in 1963. Anyone want suggestions what to read. Read this first.♥️
g.nagarajan namma daily life la romba satharanama pakkura characters ku oru emotions kodutha epdi Iruku athu pola tha intha book avlo alaga oru visiyatha avlo theliva sonnaru oru idathula thangam character kitta reporter avaroda possessiveness ah avlo alaga solliruparu must try
என்ன சொல்ல?! சமூகத்தில் நடப்பதை அப்படியே எழுதியிருக்கிறேன். ஏன் இப்படி நடக்கிறது? என்று கேள். ஏன் எழுதுகிறாய் என்று கேட்காதே" என்கிறார் ஆசிரியர். நான் அவர் கட்சி தான்...
This entire review has been hidden because of spoilers.