கடவுள் உலகையும் உலகின் உயிர்களையும் படைத்தார்!’இப்படி ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அல்லது நிஜமாகவே உயிர் எப்படித் தோன்றியிருக்கும் என்று கடவுளை மறந்துவிட்டு யோசித்துப் பார்க்கலாம்.சிக்கல் என்னவென்றால் ஜீனோம், குரோமோசோம், ஏடிஸிஜி, டிஎன்ஏ, ஆர்என்ஏ என்று ஏதேதோ கிரேக்க எழுத்துகளைக் கொண்டு வந்து குழப்பி, வதக்கி, பிழிந்து எடுத்துவிடுவார்கள்.ஒரே ஆச்சரிய விதிவிலக்கு, சுஜாதா! யாரோ சிலருக்கான அறிவியலை, எல்லோருக்குமான அறிவியலாக மாற்றும் முயற்சியில் சுஜாதா பெற்றிருக்கும் வெற்றி தனித்துவமானது.உயிர் எப்படித் தோன்றியிருக்கும் என்னும் கேள்வியை, ஒரு துப்பறியும் நாவலைவிடவும் சுவாரஸ்யமாக அணுகமுடியும் என்பதை ஜீனோமில் சுஜாதா நிரூபித்திருக்கிறார்.ஈடுஇணையற்ற இன்டலெக்சுவல் விருந்து.
Hephzibah Jesudasan was born in 1925 in Pulipanam, in Nagercoil district, in Tamil Nadu, India. She had her early education in a village school and later went to Burma with her father for a few years. She was "not considered a good student, especially by her Tamil teachers who thought she did more harm than good to the language". On completing her BA Honours in English from Maharaja's University College, Trivandrum, she worked as an English professor. She married Prof. C Jesudasan who was responsible for her interest in Tamil. Hephzibah Jesudasan is the author of several novels.
From Tamil Wiki: தமிழ்நாடு குமரி மாவட்டம், தக்கலை, புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பர்மாவில் பிறந்தவர். இவரது தந்தை பர்மாவில் மர வணிகராக இருந்தவர். இரண்டாம் உலகப்போரை அடுத்து இவரது குடும்பம் நாகர்கோயிலில் குடியேறியது. ஹெப்சிபா நாகர்கோயில் டதி பள்ளியில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றினார்.
ஹெப்சிபா சாதாரணக் கொத்தனாரின் மகனான தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். கணவரின் தூண்டுதலால் ஹெப்சிபா புத்தம் வீடு என்ற தனது முதலாவது புதினத்தை எழுதினார். இப்புதினம் தமிழின் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாக இன்றும் கருதப்படுகிறது. புத்தம் வீடு மலையாளத்திலும் ஆங்கிலத்தில் "லிசீஸ் லெகசி" (Lissy’s Legacy) என்ற பெயரிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. பேராசிரியரின் துணையுடன் ஹெப்சிபா Countdown from Solomon என்ற அவரது பெரிய இலக்கிய வரலாற்று நூலை நான்கு பாகங்களாக எழுதி முடித்தார்.
வாசிக்க ஆரம்பித்தபோது சாதாரணமாக தோன்றிய ஒரு கதை. படிக்க படிக்க மனதிற்குள் பல விஷயங்கள் வந்துபோயின. வெறும் ஒரு காதல் கதையாக மட்டும் இதை பார்த்துவிட முடியாது. கதை நடக்கின்ற காலகட்டம் என்று தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும் சுதந்திரம் அடைவதற்கு முன் என்பது நமக்கு புலனாகிறது. அந்த காலகட்டத்தில் பெண்களின் நிலைமையை தத்ரூபமாக ஹெப்சிபா அவர்கள் எழுதியுள்ளார். லிசி பள்ளிக்கு அனுப்ப பட்டாலும் வயதுக்கு வந்த பிறகு அவளது படிப்பை நிப்பாட்டி வீட்டுக்குள் அடைக்கப்பட்டாள். வயது வந்ததற்கு ஒரு குற்றமா? இது ஒரு சிறையில் அடைப்பது போன்ற வாழ்க்கை என்பதை லிசி யோசிக்கிறாள். அந்த குடும்பத்தின் ஆண்கள் பெருமை பேச மட்டுமே லாயக்கானவர்களாய் வந்து போகிறார்கள். அவளது தாத்தா கூட அப்படி தான் என்றாலும் அவள் மேல் கொள்ளை ஆசை அவருக்கு. லிசி மற்றும் அவர் தாத்தா இடையேயான இந்த அன்பை அழகாக காட்டியுள்ளார் ஹெப்சிபா அவர்கள். பாட்டி, சித்தி, அம்மா என்று புத்தம் வீட்டு பெண்கள் அனைவருமே வீட்டின் நான்கு சுவர்களை மட்டுமே அறிந்தவர்கள். தேவாலயம் செல்வதற்கு மட்டும் வெளியே செல்கிறவர்கள். அம்மா சித்தி, அப்பா, சித்தப்பா இவர்களிடையே ஏற்படும் மனஸ்தாபங்களை ஆழமாக காட்டப்பட்டுள்ளது. அப்பாவின் குடிப்பழக்கம், சித்தப்பாவின் ஊதாரித்தனம் மற்றும் கோபம் என்று கதை முன்னே நகர நகர உறவுகள் தடம் மாறி போகிறது. லிசி தனது சித்தியோட பெண் லில்லி மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அவர்களிடையே இருக்கும் அன்பு வயது ஏற எப்படி மாறுகிறது என்று காட்டும் தருணங்கள் அழகு. தனக்கு தானே லிசி அழும் தருணங்கள் எதார்த்தமானவை.
படிப்பு, வரன் தேடல், பெண் பார்க்கும் படலம், நிராகரிப்பு இதில் எல்லாம் பகடைக்காய் போல அவள் அலைக்கழிக்க படுகிறாள். இதில் மலரும் காதல் மிக அழகாக உள்ளது. இரண்டு பேரும் கிருத்துவர்கள் என்றாலும் ஜாதி அந்தஸ்து எல்லாம் பார்க்க படுகின்றது. அதையும் மீறி அவர்களுக்குள் வரும் காதல் அதனை அவர்கள் வெளிக்காட்டும் விதம் நேர்த்தியாக இருந்தது. கதையானது வேகமான ஒரு வாசிப்பை அளித்தது. 200 பக்கங்களுக்கும் குறைவாகவே இருந்தாலும் பல விஷயங்களை சொல்லியுள்ளது. எழுத்தின் நடை மிகவும் சாதாரனமாக ஆனால் ரொம்பவும் தாக்கமுள்ளதாக பட்டது எனக்கு. குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் எனக்கு அதில் வரும் இடங்கள், மக்களின் வாழ்க்கை, வட்டார வழக்கு இதெல்லாம் வெகுவே ரசிக்க முடிந்தது. கதையின் போக்கில் என்னை கதைக்குள் இழுக்க அது ஒரு முக்கியமான காரணியாக இருந்தது.
எல்லோராலும் வாசிக்க படவேண்டிய ஒரு புதினம் இந்த 'புத்தம் வீடு'. ஒரு காலகட்டத்தில் குடும்பங்களில் நிலவியிருந்தகட்டுப்பாடுகள், ஆணாதிக்கம் கொண்ட குடும்பங்களில் பெண்களின் நிலைமை, குடும்ப உறவுகள், காதல் என்று பல விஷயங்கள் லிஸியின் பார்வையில் சொல்ல பட்டிருக்கிறது. ஹென்றி, கல்யாணி இவர்களை போல் இனி லிசியும் என் மனதிற்கு மிகவும் இணக்கமான ஒரு கதாபாத்திரமாக இருப்பாள்
I have not read many books by women in Tamil, and this novel succinctly encapsulates the rural Tamil female experience in all its orthodoxy, loneliness, boredom, and hard labour. Though it is set in the pre-independence era, it could easily take place today given how little things have changed.
The titular house is a grand old one in decay where the family lives in a shell of continuous gloom. The wealth is steadily lost, the men are alcoholics, and the women turn slowly bitter. Lizzy, the protagonist, slips too soon from a happy, carefree childhood to an almost incarcerated adolescence thanks to the restrictions places (especially) on wealthy/upper caste women. Her sister Lilly grows from a sweet child into a conservative girl who is determined to uphold the family prestige at any cost, even if it means humiliating her dear sister who brought her up. A potentially gainful alliance and a romance with a lower class man complicate the proceedings in the novel, and hurry the novel to its end.
The emptiness of Lizzy's life and her toying with the idea of suicide were very painful to read, and the unrelenting bleakness of her life is the lived reality of millions of Indian women, pulverized by the weight of honor placed on their shoulders.
I liked the subtle shifts in prose, swinging between playful and sombre. It was an engaging and light read, also informational about the Naanjil culture. It was also progressive for its time. The author bio at the end was very refreshing, and one of the best I've read in a while. The introduction by Ambai emphasizes the outsize impact of this lean novel, making a great case for why this should be celebrated.
எளிமையான கண்ணியம் நிறைந்த காதல் கதை. ஆண்களால் ஒடுக்கப்பட்டு அவர்களின் செயல்களால் சிறைப்பட்டுக் கிடக்கும் பெண்களின் நிலையை உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்லும் கதை. கதையில் வரும் எல்லா பெண்களின் துயரங்களுக்கும் ஒரு ஆண் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாய் இருக்கிறான். லிஸி வைத்திருக்கும் குயில் போல, கூண்டிலே அடைப்பட்டு மரித்துப்போகும் வாழ்வு விதிக்கப்பட்டிருக்கும் அப்பெண்களில், லிஸி விதிவிலக்காய் எவ்வாறு அமைகிறாள் என்பதை மயிலிறகின் வருடலாய் அன்பு வழியே எடுத்துரைக்கிறது. வட்டார மொழியின் வசீகரம் கூடுதல் மகிழ்ச்சி தருகிறது.