Jump to ratings and reviews
Rate this book

அசுரகணம்

Rate this book
க. நா. சு. நாவல்களில் மிகவும் சிறந்ததாக நான் கருதுவது, ‘அசுரகணம்’. அசுரகணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். இப்படைப்பில் புற நிகழ்வுகள் வெகு சொற்பம். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஓர் இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ணவோட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஒரு எண்ணம் எழுந்து, அது அதன் எல்லா பக்கங்களிலும் விரிந்து பரவி வியாபிக்கிறது. காதல்–காமம் என்ற பீடிப்புகளின் சுழல் பாதையில் விரியும் நாவல். மனித மனத்தில் எவ்விதப் பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. அவ்வகையில் தமிழில் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று ‘அசுரகணம்’.

- சி. மோகன்

112 pages, Unknown Binding

First published January 1, 1959

2 people are currently reading
54 people want to read

About the author

க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.

க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.

நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (38%)
4 stars
26 (45%)
3 stars
6 (10%)
2 stars
3 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for P..
528 reviews124 followers
September 4, 2021
Quite a brilliant philosophical novel in Tamil, written at a time when serialised stories passed off as novels. I'm not surprised, as Poithevu was written in 1945. This novel is the product of a very Indian mind grappling with Western ideologies. The result is an intriguing story about an Individual here in 20th century India where people are supposed to blur in to a whole and not stand out.
Profile Image for Yadhu Nandhan.
258 reviews
February 21, 2022
இந்த நாவல் எழுதப்பட்ட விதம் வேறு எங்கும் நான் படித்திராதபடியாக என்னை மிகவும் கவர்ந்தது. இந்த புத்தகத்தின் முன்னுரையில் இக்கதையின் "புற நிகழ்வுகள் மிகவும் சொற்பம், அக நிகழ்வுகளே அதிகம்" என்று எழுதப்பட்டிருக்கிறது அது எவ்வளவு உண்மை என்பது இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது தெரிகிறது முழுக்க முழுக்க சிந்தனைகளினூடே பயணிக்கிறது இந்தக் கதை.

நமது மனம் என்பது எவ்வளவு ஆழமானது அது எத்தகைய சிந்தனைகளை கொண்டு வரக்கூடியது அது தன்னிச்சையாக தன் போக்கில் எப்படி எப்படியெல்லாம் இயங்கக்கூடியது என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் நம் மனதில் சிந்தையை கிளப்பி விடுகிறது இந்த புத்தகம் ஏனென்றால் இந்த புத்தகம் மையக் கதாபாத்திரத்தின் எண்ணங்களின் உடனான நமக்கு நிகழும் ஒரு உரையாடலை போலவே நகர்கிறது. அப்படிப்பட்ட கதைப் போக்கும் எழுத்துமே இன்னும் இன்னும் என்று மேலும் படிக்க செய்யும் படியாக உள்ளது.

Experimental writing என்று இந்த நாவலை சொல்கின்றனர் அப்படி என்றால் இதை ஒரு வெற்றி என்றே நான் எண்ணுகிறேன்.

ஆனாலும் இந்த எண்ணங்களின் ஆழத்தினை புரிந்து கொள்ள ஒரே ஒரு முறை வாசிப்து இந்தப் புதினத்திற்கு போதாது என்று நினைக்கிறேன்.
Profile Image for Harikrishnan.
74 reviews8 followers
March 8, 2021
சிந்தனைகளில் தோன்றிய அனைத்தையும் சொல்ல முயற்சிக்கிறார்.
மீண்டும் ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.
Profile Image for Pari Tamilselvan.
15 reviews8 followers
May 26, 2021
மனித சிந்தனைகள் எதற்கும் ஒரு முடிவுமே கிடையாது.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒன்றும் தெரியாது என்கிற முடிவுக்கு வர இவ்வளவு சிந்தனைகள் எதற்கு?
Profile Image for Naren.
75 reviews1 follower
Read
October 8, 2024
Man knows how to dump his philosophies and information he know through character with his finest writing
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.