நீள் விரிக்கையில் அமர்ந்து நாடியில் கைக்குற்றி ஒற்றை புருவம் உயர்த்தி இமைகள் இடுங்க மனையாளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்த அதிருன் தீடிரென்று "ஐ திங்க் யூ ஆர் பிரக்னென்ட் தாரணி" என்றவுடன்,
தன் செவியில் விழுந்த செய்தியில் செய்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு சட்டென்று உறைநிலைக்கு சென்றுவிட்டாள் தாரணி.
ஆனால் சடுதியில் தலையை உலுக்கி வெளிவந்தவளின் முகம் மலர்ந்து விகசிக்க 'நிஜமா?' என்பது போல் விழிகள் பனிக்க கணவனை நோக்கி திரும்பியவளின் கரங்களோ தன்னையறியாமல் புடவையின் மீதே தன் வயிற்றை பற்றிக்கொண்டது.