விளக்கும் வெளிச்சமும் 2 சிறுகதைகள் - அமன், மறைவு. (2020) 2 நெடுங்கதைகள் - பயம், விளக்கு. (2022) 2 குறுநாவல்கள் - காவி, வெளிச்சம் (2022)
நீளமாக சொல்லப்படும் கதை நாவலாகிறது.
இரண்டு சிறுகதைகள் இரண்டு நெடுங்கதைகள் இரண்டு குறுநாவல்கள் என்று, கதை சொல்லலின் அனைத்து வடிவங்களிலும் ஒரு பாத்திரத்தின் அறுபதாண்டுகால வாழ்வை, வெவ்வேறு பகுதிகளாகச் சொல்லியிருக்கிற விசேஷமான தொகுப்பு இது.
படித்து முடிக்கையில் நாவல் படித்த நிறைவு தோன்றக்கூடும்.
விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.